written by | October 11, 2021

நிறுவனம் வெர்சஸ் கம்பெனி வெர்சஸ் பார்ட்னர்ஷிப் வெர்சஸ் எல்.எல்.பி.

×

Table of Content


ஃபர்ம் – கம்பெனி, பார்ட்னர்ஷிப் – கம்பெனி மற்றும் பார்ட்னர்ஷிப் – எல்.எல்.பி ஆகியவற்றுக்கிடையில் உள்ள வித்தியாசங்கள்

விவசாயம் என்பதே முக்கிய தொழிலாக இந்தியாவில் இருந்து வருகிறது. இண்டஸ்ட்ரியலிசேஷன் என்ற தொழில் புரட்சிக்குப் பின்னர் பல்வேறு வகையான தொழில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் போக்குவரத்து, உற்பத்தி மற்றும் விற்பனை, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, இயற்கை சக்திகளை பயன்படுத்துவது, கட்டுமான பணிகள், சாலைகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வகையான பிரிவுகளில் அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மக்களுக்கு சேவைகளை அளித்து வருகின்றன. குறிப்பாக, நாட்டின் மொத்த உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் இதர நாடுகளுக்கான ஏற்றுமதி ஆகிய நிலைகளில் தனியார் துறையின் பங்களிப்பு மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. அதன் அடிப்படையில், தனிநபர் நிறுவனம் முதல் பல்வேறு நபர்கள் ஒன்றிணைந்த கூட்டு நிறுவனம் வரை அரசின் அனுமதி பெற்று உற்பத்தி, விற்பனை, சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி ஆகிய பல்வேறு பிரிவுகளில் சேவைகளை வழங்கி வருகின்றன. 

நிறுவனங்களின் வகைகள்

அப்படிப்பட்ட தனியார் நிறுவனங்கள் தனி ஒரு உரிமையாளரை கொண்ட சோல் புரோபிரைடர்ஷிப் என்ற வகையிலும், லிமிட்டட் லையபிலிட்டி பார்ட்னர்ஷிப் என்று குறிப்பிடப்படும் வரையறுக்கப்பட்ட கூட்டு நிறுவனம், லிமிடெட் கம்பெனி என்று சொல்லப்படும் வரையறுக்கப்பட்ட நிறுவனம், ஃபர்ம் என்று சொல்லப்படக் கூடிய கூட்டு அமைப்பு ஆகிய பல்வேறு விதங்களில் செயல்பட்டு வருகின்றன. தனியார் துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள், சரக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் கான சாலை வசதிகள், தொழில் உரிமம் பெறுவதற்கு ஆன்லைன் முறையிலான விண்ணப்பம் அளிப்பது மற்றும் விரைவில் அதற்கான உரிமம் கிடைப்பது போன்ற பல்வேறு சலுகைகளை தொழில் முனைவோர்களுக்கு அளித்து வருகிறது. 

சமீபத்திய ஒரு புள்ளி விவரத்தின்படி இந்திய அளவில் 19,89,777 பதிவு பெற்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. அவை தவிரவும் சிறுதொழில் நிறுவனங்கள் என்ற வகையில் லட்சக்கணக்கான அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் தங்களுடைய அன்றாட தேவைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அளிக்கக்கூடிய வேலை வாய்ப்பு மற்றும் சேவை அடிப்படையில் பூர்த்தி செய்து கொள்கிறார்கள். சொந்த தொழில் தொடங்கி செய்ய விரும்பும் ஒரு முதலீட்டாளர் இந்திய அளவில் நடைமுறையிலுள்ள வணிக நிறுவனங்களுக்கான வரையறைகளை அறிந்து வைத்திருப்பது அவசியம். அதன் அடிப்படையில் பல்வேறு வகையான தனியார் நிறுவனங்களுக்கான வரையறைகளை இங்கு பார்க்கலாம். 

ஃபர்ம் மற்றும் கம்பெனி ஆகியற்றின் வித்தியாசங்கள்

ஃபர்ம் என்ற கூட்டமைப்பு மற்றும் கம்பெனி என்ற நிறுவனம் ஆகிய இரண்டுக்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கின்றன. அவை பற்றிய தகவல்களை கீழே காணலாம். 

  • ஃபர்ம் என்பது இந்திய அளவில் பார்ட்னர்ஷிப் சட்டம் 1932 என்பதன் அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது. கம்பெனி என்பது நிறுவனங்களுக்கான சட்டம் 2013 என்பதன் அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது. 
  • ஃபர்ம் என்ற கூட்டமைப்பை விருப்பப்பட்டால் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், கம்பெனி என்ற நிறுவனம் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.
  • வருடாந்திர கணக்குத் தணிக்கை அதாவது ஆடிட்டிங் என்பது ஃபர்ம் என்ற கூட்டமைப்புக்கு தேவையில்லை. ஆனால், கம்பெனி என்ற நிறுவனத்துக்கு கணக்குத் தணிக்கை கட்டாயம் அவசியம்.
  • ஃபர்ம் அமைப்பின் உரிமை அதன் பங்குதாரர்களுக்கு இருக்கிறது. நிறுவனங்களில் உரிமையானது அதன் டைரக்டர்ஸ் என்ற இயக்குனர்களுக்கு உள்ளது. 
  • ஃபர்ம் என்ற கூட்டமைப்பு என்பது அதன் பங்குதாரர்களுடன் ஒன்றிணைந்ததாக சட்டப்படி கருதப்படும். ஆனால், நிறுவனம் என்பது அதன் இயக்குனர்களில் இருந்து வேறுபட்டதாக பார்க்கப்படும்.
  • ஃபர்ம் என்பது அதன் பங்குதாரர்களில் ஒருவரது அல்லது மரணத்திற்கு பின்பு கலைக்கப்படலாம். ஆனால், கம்பெனி என்பதை சட்டப்படியாக மட்டுமே கலைக்க இயலும்.
  • ஃபர்ம் என்பது மூன்றாம் நபர்களுடன் தன்னிச்சையான ஒப்பந்தங்களை செய்வதில்லை. அதனால், வழக்குகளுக்கு உட்படக்கூடிய நிலை உருவாவதில்லை. ஆனால், ஒரு கம்பெனி என்ற நிலையில் அது நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் அல்லது இன்னொரு மூன்றாம் நபர் மூலம் கம்பெனியின் மீது வழக்கு தொடரவும் வாய்ப்பு உண்டு. 
  • ஃபர்ம் என்ற கூட்டமைப்புக்கு குறைந்தபட்ச முதலீடு என்ற அளவு நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் ஒரு தனியார் நிறுவனம் என்பதற்கு குறைந்தபட்ச முதலீடு ஒரு லட்சம் என்பதாகவும், பொது நிறுவனம் என்பதற்கு குறைந்தபட்ச முதலீடு 5 லட்சம் ஆகும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • ஃபர்ம்  என்ற நிலையில் அதிகபட்சமாக 100 பங்குதாரர்கள் அல்லது உறுப்பினர்கள் இருக்கலாம். ஆனால், தனியார் நிறுவனம் என்றால் அதிகபட்சம் 200 உறுப்பினர்கள் என்ற அளவிலும், பொது நிறுவனம் என்றால் அதற்கு அதிகபட்ச உறுப்பினர் வரையறை இல்லை என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பார்ட்னர்ஷிப் மற்றும் கம்பெனி என்பதன் வித்தியாசங்கள்

  • பார்ட்னர்ஷிப் அமைப்பின் உறுப்பினர்கள் பங்குதாரர்கள் என்று குறிப்பிடப் படுவார்கள். கம்பெனி என்ற நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஷேர் ஹோல்டர் என்று குறிப்பிடப் படுவார்கள்.
  • பார்ட்னர்ஷிப் என்பது இந்திய கூட்டு நிறுவனம் சட்டம் 1932 என்பதன் கீழ் பதிவு செய்யப்படுகிறது. கம்பெனி என்ற நிறுவனம் இந்திய நிறுவனங்கள் சட்டம் 2013 என்பதன் கீழ் பதிவு செய்யப்படுகிறது.
  • பார்ட்னர்ஷிப் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு மத்தியில் ஒப்பந்த அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது. நிறுவனம் என்பது சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது.
  • பார்ட்னர்ஷிப் என்பதை மாநில அரசின் சட்டப்படி தீர்மானம் செய்யப்படுகிறது. ஆனால் கம்பெனி என்பது மத்திய அரசின் சட்ட நெறிமுறைகள் மூலம் தீர்மானம் செய்யப்படுகிறது.
  • பார்ட்னர்ஷிப் என்பது அதன் பங்குதாரர்கள் இருந்து தனிப்பட்ட முறையில் பிரித்து பார்க்கப்பட மாட்டாது. அதாவது பங்குதாரர்களும், பார்ட்னர்ஷிப் அமைப்பும் ஒன்றே என்பது சட்டத்தின் பார்வையாகும். ஆனால் கம்பெனி என்பது அதன் உறுப்பினர்களில் இருந்து தனிப்பட்ட ஒன்றாக பார்க்கப்படும்.
  • பார்ட்னர்ஷிப்  அமைப்பின் பங்குதாரர்கள் அந்த அமைப்புடன் எவ்விதமான ஒப்பந்தமும் செய்து கொள்ள இயலாது. ஆனால் ஒரு கம்பெனி உறுப்பினர் என்பவர் அந்த கம்பெனியுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள முடியும்.
  • ஒரு பார்ட்னர்ஷிப் அமைப்பை சார்ந்த பங்குதாரர் அந்த அமைப்பின் சார்பாக இதர நிறுவனங்களிடம் ஒரு ஏஜென்ட் என்ற நிலையில் வர்த்தகத்தை செய்யலாம். ஆனால், ஒரு கம்பெனியின் ஷேர் ஹோல்டர் அது போன்ற வர்த்தக நடவடிக்கைகளில் தன்னிச்சையாக செயல்பட இயலாது. 
  • பார்ட்னர்ஷிப் என்பது அன்லிமிட்டட் லையாபிலிடி கொண்டதாக இருக்கும். ஆனால், நிறுவனத்தின்  ஷேர் ஹோல்டர்களுக்கு லிமிடெட் லையபிலிட்டி கொண்டதாக இருக்கும்.
  • பார்ட்னர்ஷிப் என்பதற்கு சட்டப்படி முத்திரை அதாவது, சீல் வேண்டியதில்லை. ஆனால், நிறுவனத்துக்கு அதன் முத்திரை என்ற சீல் அவசியமானது. 
  • பார்ட்னர்ஷிப் என்பதன் நிர்வாகத்தை அதன் பங்குதாரர்கள் மேற்கொள்வார்கள். ஆனால், நிறுவனம் என்ற நிலையில் அதன் இயக்குனர்கள் குழு நிர்வாகத்தை கவனிக்கும். 
  • பார்ட்னர்ஷிப் அமைப்பில் பார்ப்பனர்களுக்கு எதிராக தீர்ப்பாணை சட்டப்படி வழங்க முடியும். ஆனால், கம்பெனியின் ஷேர் ஹோல்டர்களுக்கு எதிராக தீர்ப்பாணை வழங்க இயலாது.
  • தனியார் நிறுவனங்கள் பிரைவேட் லிமிடெட் என்றும், பொது நிறுவனங்கள் லிமிட்டட் என்றும் குறிப்பிடப்படும். ஆனால் பார்ட்னர்ஷிப் என்பதற்கு அதுபோன்ற குறிப்புகள் ஏதும் கடைபிடிக்கப்படுவதில்லை.
  • பார்ட்னர்ஷிப் அமைப்புகளில் அவற்றிற்கான கணக்கு வழக்குகள் கூட்டாண்மை ஒப்பந்தத்தின் அடிப்படையில் செய்யப்படும். ஆனால் கம்பெனி என்ற நிலையில் அதன் கணக்கு வழக்குகளை ஒரு பதிவு பெற்ற சார்ட்டட் அக்கவுன்டன்ட் மட்டுமே பார்த்து ஒப்புதல் அளிக்க முடியும். 
  • ஒரு பார்ட்னர்ஷிப் அமைப்புக்கான பெயர் மாற்றம் என்பது பங்குதாரர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தி முடித்து பெயர் மாற்றத்தை எளிதாக மேற்கொள்ள முடியும். ஆனால், கம்பெனி என்ற நிறுவனத்தின் பெயர் மாற்றம் என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதற்கு மத்திய அரசாங்கத்தின் ஒப்புதலை முறைப்படி பெற்றாக வேண்டியது அவசியம்.

பார்ட்னர்ஷிப் அமைப்பு மற்றும் எல்.எல்.பி என்பதற்கான வித்தியாசங்கள்

தொழில் கூட்டமைப்பு என்ற பார்ட்னர்ஷிப் என்பது பழமையான ஒன்றாகும். ஆனால், எல்.எல்.பி அதாவது லிமிட்டெடு லையபிலிட்டி பார்ட்னர்ஷி என்பது நவீன கருத்தாக்கங்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் சமீப காலங்களில் உருவாக்கப்பட்ட வர்த்தக மற்றும் தொழில் நடைமுறையாகும்.

  • பார்ட்னர்ஷிப் என்பது 1932 ஆண்டுக்கான கூட்டாண்மை என்ற பார்ட்னர்ஷிப் சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது. ஆனால், எல்.எல்.பி அதாவது லிமிட்டெடு லையபிலிட்டி பார்ட்னர்ஷி என்பது 2008 ஆண்டு சட்டத்தின்படி பதிவு செய்யப்படுகிறது. 
  • பார்ட்னர்ஷிப் நிறுவனத்துக்கான பதிவு என்பது சம்பந்தப்பட்ட மாநில பதிவுத்துறை சட்டங்களின்படி மேற்கொள்ளப்படும். ஆனால், எல்.எல்.பி அதாவது லிமிட்டெடு லையபிலிட்டி பார்ட்னர்ஷிப் என்பதற்கான பதிவு என்பது மத்திய தொழில்துறை அமைச்சகத்தின்கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். 
  • பார்ட்னர்ஷிப் நிறுவனங்கள் அதன் பங்குதாரர்களிடமிருந்து வேறாக பார்க்கப்படுவதில்லை. அதனால் அவர்களுக்கு வரையறை இல்லாத பொறுப்புகள் இருப்பதாக கணக்கில் கொள்ளப்படுகிறது. ஆனால், லிமிட்டெடு லையபிலிட்டி பார்ட்னர்ஷிப் என்பதில் அந்த நிறுவனமும் அதன் பங்குதாரர்களும் தனிப்பட்ட நிலையில் பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் பங்குதாரர்களுக்கு வரையறை செய்யப்பட்ட பொறுப்புகள் மற்றும் முதலீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் தொடர்பு கொள்கிறார்கள். 
  • ஒரு பார்ட்னர்ஷிப் நிறுவனம் என்பது குறைந்தபட்சமாக இரண்டு நபர்களையும், அதிகபட்சமாக 20 நபர்களையும் கொண்ட ஒரு கூட்டாண்மை நிறுவனமாக செயல்படும்.  அந்த பங்குதாரர்களில் மைனர் பார்ட்னர்களும் பங்கு பெறுவதற்கு அனுமதி உண்டு. ஆனால், லிமிட்டெடு லையபிலிட்டி பார்ட்னர்ஷிப் என்ற நிலையில் குறைந்தபட்சம் இரண்டு நபர்களையும் அதிகபட்சமாக எவ்வளவு நபர்களை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். மேலும், பார்ட்னர்களில் மைனர் பார்ட்னர்ஷிப் என்பது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அதிலும் குறிப்பாக, நிர்வாக நடைமுறைகளுக்காக டெசிக்னேட்டடு பார்ட்னர்ஸ் என்று குறிப்பிடப்படும் நியமன பங்குதாரர் என்ற நிலையில் இரண்டு நபர்களை தேர்வு செய்வது அவசியம். 
  • பார்ட்னர்ஷிப் நிறுவனத்தின் பங்குகள் அதன் பங்குதாரர்கள் உடைய முறையான அனுமதியைப் பெற்று இன்னொருவருக்கு மாற்றம் செய்ய இயலும். அதுமட்டுமல்லாமல் பங்குகளை இன்னொருவர் பெயருக்கு மாற்றம் செய்வது என்பது நீளமான செயல்திட்டம் கொண்டதாகவும் இருக்கும். மேலும், ஒரு பார்ட்னர்ஷிப் நிறுவனத்தை லிமிட்டெடு லையபிலிட்டி பார்ட்னர்ஷிப் அல்லது பிரைவேட் லிமிட்டட் நிறுவனமாக மாற்றி அமைப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகும்.  அதே சமயம், லிமிட்டெடு லையபிலிட்டி பார்ட்னர்ஷிப் நிறுவனத்தின் பங்குகளை இன்னொரு நபருக்கு பங்குதாரர்கள் உடைய அனுமதி பெற்று எளிதாக மாற்றம் செய்ய முடியும். ஆனால் அவ்வாறு பங்குகளை பெற்றவர் தாமாக ஒரு பங்குதாரர் என்ற நிலையை பெற முடியாது. மேலும். லிமிட்டெடு லையபிலிட்டி பார்ட்னர்ஷிப் நிறுவனம் என்பதை பிரைவேட் லிமிடெட் கம்பெனி அல்லது லிமிடெட் கம்பெனி என்ற இன்னொரு நிறுவனமாக எளிதாக மாற்றம் செய்து கொள்ள முடியும். 
  • பார்ட்னர்ஷிப் நிறுவனம் என்பதற்கு வருடாந்திர கணக்கு வழக்கு அறிக்கைகளை ஃபைல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால்,லிமிட்டெடு லையபிலிட்டி பார்ட்னர்ஷிப் அமைப்பில் தொழில் துறை அமைச்சகத்திடம் வருடாந்திர கணக்கு வழக்குகளை ஃபைல் செய்யவேண்டியது மிக அவசியமானது.
  • பார்ட்னர்ஷிப் நிறுவனம் என்பதில் வங்கி சார்ந்த சேவைகளை அழிப்பதற்கு அதிகபட்சம் பத்து நபர்களும், இதர சேவைகளை அளிப்பதற்கு அதிகபட்சம் 20 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால்,லிமிட்டெடு லையபிலிட்டி பார்ட்னர்ஷிப் என்ற நிலையில் இது போன்ற வரையறைகள் இல்லை. 
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.