written by | October 11, 2021

போக்குவரத்து வர்த்தகம்

×

Table of Content


டிரான்ஸ்போர்ட் தொழிலை ஆரம்பித்து நடத்துவதற்கான செயல்திட்டம்

தேசிய அளவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் சுமார் முப்பது கிலோ மீட்டர் அளவிலான சாலைகள் அமைக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் வளர்ந்து வரும் சாலை போக்குவரத்து அவசியம் பற்றி எளிதாக அறிந்துகொள்ள முடியும். சிறு கிராமங்கள் முதல் பெரு நகரங்கள் வரை அனைத்து பகுதிகளுமே தகுந்த சாலை வசதிகள் மூலம் ஒன்றிணைக்கப்பட்டு இருப்பதால் போக்குவரத்து என்பது தினசரி வாழ்க்கையை சுலபமாக ஆக்கியிருக்கிறது. ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு தொழில் மற்றும் வர்த்தக வாய்ப்புகளை நாடி அன்றாடம் பயணம் செய்பவர்கள் மொத்த ஜனத்தொகையில் சுமார் 20 முதல் 30 சதவிகிதம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் வேளாண் விலை பொருட்கள், முட்டை, கால்நடைகள் ஆகியவற்றை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லக்கூடிய வர்த்தக ரீதியான போக்குவரத்தும் மிக அவசியமாக இருக்கிறது. போக்குவரத்து துறையில் தனியார் பங்களிப்பு என்பது கிட்டத்தட்ட சரி பாதிக்கும் மேல் இருப்பதாகவே குறிப்பிடலாம். 

டிரான்ஸ்போர்ட் பிசினஸ் என்பது எல்லா காலகட்டங்களிலும் வர்த்தக வாய்ப்புகளை கொண்டுள்ள துறைகளில் ஒன்றாகும். சிறிய அளவில் ஆரம்பித்து பெரும் தொழில் அதிபர்களாக வளர்ந்த பல்வேறு நபர்கள் எல்லா நகரங்களிலும் இருப்பதை காண இயலும். அவர்களுடைய வளர்ச்சிக்கான அடிப்படை என்பது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப திட்டமிட்டு செயல்படுவதே ஆகும். அதன் அடிப்படையில் இந்த பிசினஸ் செய்ய விரும்பும் தொழில் முனைவோர்கள் அல்லது முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமான விஷயங்கள் பற்றி இங்கே பார்க்கலாம். 

இரண்டு பெரும் பிரிவுகள்

போக்குவரத்து தொழில் என்பது இரண்டு பிரிவுகளாக உள்ளது. முதலாவது பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய பாசஞ்சர்ஸ் டிரான்ஸ்போர்ட் பிரிவு  ஆகும். இரண்டாவது உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றிச் செல்லக்கூடிய கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் பிரிவு ஆகும். இந்த இரண்டு பிரிவுகளில் எந்த வகையான பிரிவில் தன்னுடைய தொழில் முயற்சியை தொடங்க வேண்டும் என்பதை முதலில் தீர்மானம் செய்து கொள்வது அவசியம். இந்த இரண்டு போக்குவரத்து தொழில் பிரிவுகளுமே ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு, ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்திற்கு, ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு என்ற நிலைகளில் வர்த்தக வாய்ப்புகளை பெற்றிருக்கின்றன. காலப்போக்கில் இந்த தொழில் பிரிவில் வளர்ச்சி பெற்றவர்கள் நாடு விட்டு நாட்டுக்கு போக்குவரத்து வசதிகளை அளிக்கும் சர்வதேச அளவிலான வர்த்தக வாய்ப்புகளை பெற்று, தொழிலை விரிவு படுத்திக் கொள்ளலாம். 

இதர தொழில் பிரிவுகளை போன்று இந்த தொழிலிலும் கால் வைப்பதற்கு முன்னதாக தொழிலை செய்வதற்கு கிடைக்கக்கூடிய வங்கிக்கடன், ரூட் லைசென்ஸ் முறைகள், பிரபலமான வழித்தடங்கள்,  மாநிலங்களுக்கு இடையேயான நுழைவு வரிகள், தொழில் லாபம் உள்ளிட்ட பல்வேறு வகைகளை கவனித்து, சரியான திட்டமிட்டு கொள்வது அவசியம். குறிப்பாக சொல்வதென்றால், இந்த துறையில் இருப்பவர்களிடம் நல்ல ஆலோசனை பெற்ற பிறகு தொழிலில் இறங்குவது பல்வேறு சிரமங்களை குறைக்கக்கூடிய வழியாக அமையும். 

நிறுவனத்திற்கான பதிவு

வழக்கமான நடைமுறையான தொழிலுக்கான பெயர் தேர்வு என்பது இந்த தொழிலுக்கும் மிக அவசியமான ஒன்றாகும். தேர்வு செய்த பெயரை ரெஜிஸ்டர் டிரேட் மார்க் என்ற வகையில் பதிவு செய்து கொள்வதும் அவசியம். அப்போதுதான் தேவையற்ற தொழில் சிக்கல்களை தவிர்க்க முடியும். அத்துடன் சிங்கிள் ஓனர் அல்லது தொழில் கூட்டு நிறுவனம் என்ற வகையில் தொழில் உரிமம் பெற வேண்டும். அரசின் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் அல்லது சிறு, குறு மற்றும் மத்திய தர நிறுவனங்களுக்கான தொழில் அமைப்பு ஆகியவற்றின் உரிமங்களை பெற்றிருப்பதும் பல்வேறு அரசு சலுகைகளுக்கு ஏற்றதாக இருக்கும். மேலும், டிரான்ஸ்போர்ட் பிசினஸ் நடத்துவதற்காக தேர்வு செய்யப்பட்ட பகுதியில் உள்ள மண்டல போக்குவரத்து அதிகாரி அலுவலகத்தில் இருந்து தகுந்த அனுமதி மற்றும் உரிமை பதிவுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் தேசிய அளவிலான வர்த்தக நடவடிக்கைகளுக்கான அனுமதியையும் சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்று கொள்ள வேண்டும். இந்த அரசு அனுமதிகளுடன் சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கான இன்ஷ்யூரன்ஸ் வகைகளையும் முறையாக பதிவு செய்து கொள்வது முக்கியமானது. அதன்மூலம் தொழில் ரீதியாக ஏற்படக்கூடிய எதிர்பாராத சங்கடங்களுக்கு தக்க நிதி உதவி கிடைக்கும். 

தேவையான பணியாளர்கள்

கூட்டு முயற்சியாக செய்யப்படவேண்டிய டிரான்ஸ்போர்ட் பிசினஸ் என்பது அர்ப்பணிப்பு மனோபாவம் கொண்ட பணியாளர்கள் மூலமே வாடிக்கையாளர்களிடம் நல்ல மதிப்பு பெற்றதாக இருக்கிறது. அதனால், பணியாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட தொழில் முனைவோர் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். குறிப்பாக, பயணிகள் போக்குவரத்து என்ற நிலையில் சம்பந்தப்பட்ட வாகனத்தை ஓட்டிச் செல்லக்கூடிய ஓட்டுநர்கள் வாடிக்கையாளர்களிடம் மிகவும் மரியாதையுடன் நடந்து கொள்வது அவசியமானது. அதுமட்டுமல்லாமல் பொருத்தமான ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களாக இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நிறுவனத்தின் தயாரிப்புகள் அல்லது வேளாண் விளை பொருள்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றை ஏற்றிச் செல்லும் போக்குவரத்து வாகனங்களை ஓட்டுபவர்கள் தகுந்த ஹெவி லைசன்ஸ் பெற்று இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

அலுவலகம் என்ற நிலையில் ஒரு ரிசப்ஷனிஸ்ட், ஒரு அக்கவுன்டன்ட் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகிய நிலையில் நான்கு அல்லது 5 பேர் இருந்தால் போதுமானது. அத்துடன் புதிய வர்த்தக வாய்ப்புகளை பெறுவதற்கும், தகுந்த விளம்பரங்களை மேற்கொள்வதற்கும் பொருத்தமான நபர்களை தேர்வு செய்து பணியில் அமர்த்துவது மிக முக்கியமானது. 

தேசிய அளவில் பொது போக்குவரத்து என்பது அரசாங்கம் மற்றும் தனிநபர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. தனியார் பிரிவு டிரான்ஸ்போர்ட் பிசினஸ் என்று எடுத்துக் கொண்டால் ஆட்டோ ரிக்‌ஷா, டாக்ஸிகள், பேருந்துகள் மற்றும் டிரக் மற்றும் லாரி வகைகள் ஆகியவற்றின் மூலம் பொது மக்களுக்கான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தனியார் போக்குவரத்து தொழில் முனைவோர் மேற்கொள்ளும் வாடிக்கையாளர் சேவை வகைகளை இங்கு பார்க்கலாம்.

டாக்ஸி மற்றும் பஸ் சர்வீஸ்

தனியார் போக்குவரத்து என்று சொன்னாலே வாடகை கார்கள் என்பதே உடனடியாக நினைவுக்கு வரும். இந்த பிரிவில் தனிநபர்கள் அல்லது குடும்பங்களை ஏற்றிச்செல்லும் வாடகை, அலுவலகம் செல்லக்கூடிய பணியாளர்களை ஏற்றிச் செல்லக்கூடிய வாடகை, பள்ளி செல்லக்கூடிய குழந்தைகளை ஏற்றிச் செல்லக்கூடிய வாடகை, ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்திற்கு செல்லக்கூடிய வாடகை போன்ற வெவ்வேறு வகைகளில் அன்றாடம் பரபரப்பாக செயல்படக்கூடியதாக டாக்ஸி பிசினஸ் நடந்து வருகிறது. 

பேருந்துகளும் இதே நிலையில் ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்திற்கும், ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு பயணியர்களை அவர்களுக்கு உரிய வசதி வாய்ப்புகளுடன் அழைத்துச் செல்லும் சேவைகளை அளித்து வருகின்றன. இந்த பேருந்து சேவை என்பதில் சாதாரண கட்டணம் மற்றும் டீலக்ஸ் கட்டணம் என்ற விகிதங்களை அனுசரித்து வாடிக்கையாளர்களிடம் கட்டணங்கள் பெறப்படுகின்றன. ஒரு தொழில் முனைவோர் பயணிகளுக்கான போக்குவரத்து கட்டணம் என்றாலும் சரி, வர்த்தக ரீதியான பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான கட்டணம் என்றாலும் சரி அவற்றில் வாடிக்கையாளர் திருப்தி என்பது அவசியம்.

வாடகை மோட்டார் சைக்கிள் 

இந்த தொழில் பிரிவு பெருநகரங்கள் மற்றும் மலை வாசஸ்தலங்கள் ஆகிய நகரங்களில் பொதுவாக இருக்க கூடிய ஒன்றாகும். போக்குவரத்து சேவை என்ற நிலையில் இந்த முறை வாடிக்கையாளர்களை கவரக்கூடிய ஒன்றாகும். இந்த தொழில் பிரிவில் அடுத்த கட்டம் என்பது வாடகை மிதிவண்டிகள் மூலம் குறிப்பிட்ட ஒரு நகர் பகுதியை பார்வையிட ஏற்பாடு செய்வது என்பதாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற நிலையில் இந்த முறை தற்போது ஆங்காங்கே பரவலாக ஆகிவருகிறது. 

சரக்கு மற்றும் தளவாடங்கள் போக்குவரத்து

சரக்குகள் மற்றும் தளவாட பொருட்களை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்வது என்ற தொழில் பிரிவு நீண்ட காலமாக உலக நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டிரான்ஸ்போர்ட் பிசினஸ் என்ற வகையில் நீண்ட காலம் அனுபவம் பெற்ற தொழில் முனைவோர் தங்களுடைய வர்த்தகத்தை சர்வதேச அளவில் விரிவுபடுத்திக் கொள்ளும் வாய்ப்பை இந்த தொழில் பிரிவு அமைத்துத் தருகிறது. உள்நாட்டு சேவைகளை அளித்ததில் பெற்றுள்ள அனுபவத்தின் அடிப்படையில் நாடு விட்டு நாடு பொருட்களை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்வதற்கான வர்த்தக ரீதியான அனுமதிகளை பெற்று இந்தத் துறையிலும் ஒரு தொழில் முனைவோர் நல்ல லாபம் பெற இயலும். இந்த வகை தொழில் பிரிவு வான்வெளி போக்குவரத்து மற்றும் நீர்வழி போக்குவரத்து ஆகிய நிலைகளில் செயல்படக் கூடியது என்பதால் அதற்கு தக்க மத்திய அரசு அமைச்சகங்களின் தகுந்த அனுமதிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

சிறப்பு போக்குவரத்து பிரிவு

இந்த பிரிவு தனிநபர்கள் அல்லது தனிப்பட்ட நிறுவனங்களுக்காக வாடகை அடிப்படையில் போக்குவரத்து சேவைகளை அளிக்கக் கூடிய ஒன்றாகும். ஆண்டு முழுவதும் இருக்கக்கூடிய வாடகை அடிப்படையில் இந்தப் பிரிவு செயல்பட்டு வருகிறது. அதாவது சம்பந்தப்பட்ட தனி நபர்களுக்கான வாடகை கார் என்பதாக இருக்கலாம். அல்லது குறிப்பிட்ட ஒரு நிறுவனம் சார்ந்த இயந்திரங்களை அல்லது தயாரிப்புகளை மாநிலங்களுக்கு மத்தியில் கொண்டு செல்வது என்ற நிலையிலும் இருக்கலாம். காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான எந்திரங்கள், விமானங்களுக்கான பாகங்கள், பெரும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான சாதனங்கள் போன்ற தொழில் பிரிவுகளுக்கு அவசியமான போக்குவரத்து வசதியை கான்ட்ராக்ட் அடிப்படையில் ஆண்டு முழுவதும் தொழில் முனைவோர்கள் செய்து தரலாம். 

கால்நடை ஏற்றிச்செல்லும் போக்குவரத்து

உணவு பொருட்களுக்கான போக்குவரத்து என்ற நிலையில் நகரங்களுக்கு இடையே அல்லது மாநிலங்களுக்கு இடையே முட்டைகளை ஏற்றிச் செல்வது, ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை ஏற்றிச் செல்வது மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை குளிர் சாதனம் செய்யப்பட்ட வாகனங்களில் ஏற்றி செல்வது ஆகிய நிலைகளில் இந்த தொழில் பிரிவு செயல்பட்டு வருகிறது. இதர பொருட்களை ஏற்றிச் செல்லக்கூடிய வாகனங்களை இயக்குவதை விடவும் இந்த தொழில் பிரிவுக்கான வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மிகுந்த கவனமாக செயல்பட வேண்டும். 

அவசர சிகிச்சை போக்குவரத்து

டிரான்ஸ்போர்ட் பிசினஸ் என்ற நிலையில் பொது மக்கள் சேவையில் நேரடியாக ஈடுபடக்கூடிய வாய்ப்பை இந்த பிரிவு தொழில் முனைவோர்களுக்கு அளிக்கிறது. பெரும்பாலும், சேவை அடிப்படையில் அளிக்கக்கூடிய இந்த வர்த்தகப் பிரிவில் திறமையான டிரைவர்களின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாகும். அதாவது, அவசர அறுவை சிகிச்சைக்கு தேவையான உறுப்புகளை குறிப்பிட்ட இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மிக குறுகிய காலத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நிலையில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் ஓட்டுனர் மிகவும் வேகமாகவும் அதே சமயம் பொறுப்புடனும் செயல்படவேண்டியது அவசியம். இந்தத் துறையில் வழக்கமான சேவை என்பது ஆம்புலன்ஸ் சேவை என்பதாகும். 

டிரான்ஸ்போர்ட் பிசினஸ் என்பது அத்தியாவசியமான சேவை என்ற நிலையில் முக்கியத்துவம் பெறும் அதே சமயத்தில், பல்வேறு சிக்கல்களுக்கும் உள்ளாகும் என்பதை தொழில் முனைவோர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநில அளவிலும் செயல்பட்டு வரக்கூடிய அசோசியேஷன் ஆப் ரோடு டிரான்ஸ்போர்ட் ஆப்பரேட்டர் என்ற அமைப்பில் உறுப்பினராக பங்கு கொள்வதன் மூலமாக பல்வேறு சிக்கல்களை சுலபமாக தீர்த்துக் கொள்ள இயலும். அதாவது, மாநிலங்களுக்கு இடையேயான சுங்க வரி வசூல் மற்றும் பொருட்களுக்கான ஏற்றி இறக்குவதற்கான கூலி மற்றும் தொழிலாளர்கள் ஆகிய நிலைகளில் சுமுகமாக தொழிலை மேற்கொள்வதற்கு அந்த அமைப்புகள் துணையாக செயல்படுகின்றன. அதன் மூலம் குறிப்பிடப்பட்ட சரியான நேரத்திற்கு பொருட்களை வாடிக்கையாளருக்கு டெலிவரி தரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.