written by | October 11, 2021

சாயல் நகை வணிகம்

×

Table of Content


இமிடேஷன் ஜூவல்லரி தொழிலை ஆரம்பித்து செய்வதற்கான வழிமுறைகள் 

அலங்காரம் என்பது மனித நாகரிகத்தில் தொடக்க காலம் முதலே இருந்து வரும் ஒரு பழக்கமாகும். நாகரிகத்தின் வளர்ச்சிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் பிரதிபலிப்புகள் விதவிதமாக மனித சமூகத்தில் இருந்து வந்துள்ளது. அலங்காரம் என்ற விஷயம் பெரும்பாலும் பெண்களை சார்ந்து தான் அமைந்திருக்கிறது. ஆண்களுக்கான அலங்காரம் என்பது குறைந்த அளவில் தான் கவனிக்கப்படுகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிபெற்ற நாகரீக உலகில் காலத்திற்கேற்ப அலங்கார முறைகள் மாற்றம் பெற்றிருக்கின்றன. அதற்கு ஏற்ப இன்றைய காலகட்ட பெண்மணிகளுக்கு அவர்களது விருப்பப்படி தேர்வு செய்து அணியக்கூடிய விதவிதமான நகைகள் ஏராளமாக சந்தையில் உள்ளன. ஆபரணம் அதாவது நகைகளை அணிவது என்பது பெரும்பாலும் தங்கம், வைரம் அல்லது வெள்ளி நகைகளை அணிவது என்பது சமூக பழக்க வழக்கமாகும். பல தரப்பு மக்களையும் உள்ளடக்கிய சமூக வாழ்வில் அனைவராலும் தங்கம் மற்றும் வைரம் போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கி அணிவது என்பது எல்லா நேரங்களிலும் நடைமுறைக்கு சாத்தியப்படுவதில்லை. அதன் அடிப்படையில், இமிடேஷன் ஜூவல்லரி பிசினஸ் என்பது ஒரு தனிப்பட்ட அலங்கார நகைகளுக்கான வர்த்தக பிரிவாக ஏற்படுத்தப்பட்டது. இந்த முறை நீண்ட காலமாகவே மனித சமூகத்தில் இருந்து வருகிறது. இமிடேஷன் ஜுவல்லரி அதாவது கவரிங் நகைகள் என்று சொல்லப்படக்கூடிய இந்த தொழில் பிரிவில் ஈடுபட விருப்பமுள்ள தொழில் முனைவோருக்கான பல்வேறு தகவல்களை இங்கே காணலாம். 

தேசிய அளவில் இமிடேஷன் ஜூவல்லரி பிசினஸ் என்பது ஆண்டுதோறும் வளர்ந்து வரக்கூடிய பொருள் வர்த்தக பிரிவாக உள்ளது. இந்தியாவின் வருடாந்திர உற்பத்தி மதிப்பில் இந்த தொழில் சுமார் 6 சதவிகிதம் அளவுக்கு பொருளாதார பங்களிப்பு செய்து வருகிறது. இந்த அளவு படிப்படியாக அதிகரிக்கக்கூடும். ஏனென்றால், பொருளாதார மற்றும் சமூக ரீதியான காரணங்களின் அடிப்படையில் விலை உயர்ந்த தங்க நகைகளை எல்லா காலங்களிலும் அணிந்துகொண்டு குடும்ப மற்றும் சமூக விசேஷ நிகழ்ச்சிகளுக்கு செல்லுவது சிரமமான விஷயம். அதன் அடிப்படையில் தங்க நகைகளுக்கு மாற்றாகவும், விதவிதமான டிசைன்கள் கொண்டதாகவும், விரும்பிய மாடல்களில் வாங்கி அணிந்து கொள்ள எளிமையான விலை கொண்ட இமிடேஷன் ஜுவல்லரி என்ற மாற்றுமுறை பலருக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது.

தொழில் முனைவோருக்கான பிசினஸ் மாடல்கள்

இமிடேஷன் ஜூவல்லரி பிசினஸ் செய்ய விரும்பும் தொழில் முனைவோர் தாங்கள் எந்த வகையான வர்த்தக பிரிவில் ஈடுபட போகிறோம் என்பதை தெளிவாக முடிவு செய்து கொள்ள வேண்டும். அதாவது, வீட்டிலிருந்தபடியே மொத்த விற்பனை அல்லது சில்லறை விற்பனை செய்யக்கூடிய பிஸினஸ் மாடலை தேர்வு செய்வதா அல்லது தனிப்பட்ட ஷாப் ஆரம்பித்து அதன் மூலம் விற்பனை செய்வதா அல்லது ஆன்லைன் முறையில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதா என்பதில் தீர்மானம் செய்து கொண்டு இந்த தொழில் பிரிவில் காலடி வைப்பது அவசியம். 

மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை

இந்த இரண்டு பிரிவுகளில் மொத்த விற்பனை என்பது அதிகப்படியான தொழில் முதலீடு மற்றும் இடவசதி ஆகிய நிலைகளை மனதில் கொண்டு செயல்படவேண்டிய ஒன்றாகும். அதாவது, நடப்பு சந்தை நிலவரம் மற்றும் வாடிக்கையாளர்கள் உடைய தற்போதைய விருப்பத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இமிடேஷன் ஜூவல்லரி பிசினஸ் வர்த்தக வியூகங்களை அமைத்துக் கொள்வது அவசியம். மேலும், எல்லா காலங்களிலும் குறிப்பிட்ட அளவு வர்த்தக வாய்ப்புகள் கொண்ட பொதுவான மாடல்களை துல்லியமாக கண்டறிந்து அவற்றை தேசிய அளவிலான பெரிய வர்த்தகர்களிடம் இருந்து நேரடியாகவே வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளலாம். சந்தை நடைமுறைகளுக்கு ஏற்ப அவற்றின் விலையை கூடுதலாகி விற்பனையும் செய்து கொள்ளலாம். இந்த மொத்த விற்பனை என்ற தொழில் பிரிவுக்கு பெரிய அளவிலான முதலீடு மட்டுமல்லாமல் பணியாளர்கள் மற்றும் மார்க்கெட்டிங் திறமை ஆகியவற்றிலும் நடைமுறைச் செலவுகள் ஏற்படும். அதாவது வீட்டிலிருந்தே செய்யப்படுவது என்றால் வாடகை உள்ளிட்ட இதர செலவுகள் இருக்காது. 

சில்லறை விற்பனை பிரிவில் வீட்டிலிருந்தே செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள், முதலீடு குறைவாக இருந்தாலும் கூட ஆரம்ப நிலையில் சற்று கூடுதலான வர்த்தக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட ஏரியாவில் நீங்கள் இந்த தொழிலை செய்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் அறியச் செய்வது அவசியம். அத்துடன் என்னென்ன மாடல்களில் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான விலை ஆகிய தகவல்களை சமூக வலைதளங்கள் மூலமாகவும் அல்லது நோட்டீஸ் வினியோகம் மூலமாகவும் தெரியப்படுத்த வேண்டும்.  விதவிதமான நகைகளை அலங்காரமாக அடுக்கி காட்சிப்படுத்தும் வகையில், வீட்டின் ஒரு தனி அறையை உள்கட்டமைப்பு செய்து வைத்திருக்க வேண்டும். இந்த முறையில் உள்ள ஒரு வர்த்தக அணுகுமுறை என்னவென்றால், வாடிக்கையாளரிடம் ஹோம் பிசினஸ் என்ற முறையில் தொடர்பு கொள்வதால் அவரிடம் ஆர்டர் பெற்ற பின்னர் சம்பந்தப்பட்ட இமிடேஷன் நகையை மொத்த விற்பனை வியாபாரியிடம் இருந்து பெற்றும் கூட டோர் டெலிவரி செய்ய முடியும். 

இமிடேஷன் ஜூவல்லரி ஷாப்

இந்த தொழில் பிரிவை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய கடைக்கான பெயர் பதிவு, அரசு உரிமம் மற்றும் உள்ளாட்சி அனுமதி உள்ளிட்ட லைசன்ஸ் வகைகளை பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஏரியாவில் தொழிலை தொடங்க வேண்டும். இந்த தொழில் பிரிவில் உள்ள ஒரு வர்த்தக நிலை என்னவென்றால் சுயமாகவே சம்பந்தப்பட்ட தொழில் முனைவோர் பல்வேறு மாடல்களை டிசைன் செய்து அவற்றை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய இயலும். அதன் மூலம் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் தனது பிராண்ட் என்பதை நிலை நிறுத்திக் கொண்டு வர்த்தகத்தை வளர்க்க இயலும். இந்த தொழில் பிரிவிலும் சிறப்பான வளர்ச்சி பெறுவதற்கு குறிப்பிட்ட காலகட்டம் ஆகத்தான் செய்யும். பெண்களே பெரும்பாலும் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள் என்ற நிலையில் உள் அலங்காரம் என்பதும் விதவிதமான டிசைன்கள் என்பதும் நிச்சயம் அவர்களை கவரும் விதத்தில் இருப்பது முக்கியம். அந்த விதத்தில் உள்கட்டமைப்புக்கான  செலவு என்பதை ஒரு முதலீடு என்ற வகையிலேயே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆன்லைன் விற்பனை

மேலே கண்ட அனைத்து தொழில் பிரிவுகளிலும் ஆன்லைன் முறையிலான வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு இன்றைய காலகட்டத்தில் ஏராளமான வசதி வாய்ப்புகள் அமைந்திருக்கின்றன. சுயமாக விதவிதமான இமிடேஷன் ஜூவல்லரி பிசினஸ் மாடல் சம்பந்தப்பட்ட நகைகளை டிசைன் செய்யக்கூடிய திறமை வாய்ந்த தொழில் முனைவோர் எப்போதுமே தொடர்ச்சியான வர்த்தக வாய்ப்புகளை பெறக்கூடிய நிலையில் உள்ளார். ஏனென்றால், தேசிய அளவிலான ஆபரணங்கள் விற்பனை என்பது இந்த தொழில் பிரிவில் தான் அதிகமாக இருக்கிறது. ஆன்லைன் விற்பனையில் ஈடுபடக்கூடிய தொழில்முனைவோர் தங்களுக்கென்று சுயமாக ஒரு வலைத்தளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதில் அழகாக படம் பிடிக்கப்பட்ட விதவிதமான இமிடேஷன் ஜூவல்லரி வகைகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். அவற்றின் மூலம் தான் வாடிக்கையாளர்கள் உடைய கவனத்தை கவர இயலும். ஒரு போட்டோகிராபி என்பது ஆயிரம் வார்த்தைகளை விடவும் வலிமையானது. 

குறிப்பாக, வாடிக்கையாளர்கள் தங்களுடைய விலையை எளிதாக செலுத்தும் வகையில் பேமெண்ட் மெத்தட் விஷயங்களை கச்சிதமாக செய்திருக்க வேண்டும். இந்தப் பிரிவில்  கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால் ஜுவல்லரி ரிட்டர்ன் என்பதாகும். அதாவது, வாடிக்கையாளர்களிடம் நேருக்கு நேர் தொடர்பு கொள்ளாமல் நடக்கும் விற்பனைகளில் திருப்தியற்ற வாடிக்கையாளர்கள் பொருட்களை திருப்பி அனுப்புவது நடைமுறையில் வழக்கமான ஒன்றாகும். தனிப்பட்ட முறையில் இணையதள வர்த்தகத்தை மேற்கொள்ள இயலாத நிலையில் இன்றைய சூழலில் செயல்பட்டு வரக்கூடிய பிரபலமான ஆன் லைன் சேல்ஸ் பிளாட்பார்ம் கொண்ட நிறுவனங்கள் மூலம் விற்பனை வாய்ப்புகளை பெறலாம்.

மூலப்பொருட்கள் கொள்முதல் 

இமிடேஷன் ஜூவல்லரி பிசினஸ் என்பது கண்கவரும் பலவித வண்ணங்கள் கொண்ட நகைகளை விதவிதமான டிசைன்களில் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு தொழில் பிரிவு ஆகும். அதன் அடிப்படையில் இந்த துறையில் ஈடுபடக்கூடிய முதலீட்டாளர் அல்லது தொழில் முனைவோர் இந்த பிரிவில் ஓரளவாவது முன் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். தேசிய அளவில் ஒரு நிலையான வர்த்தக மதிப்பீடு கொண்ட இந்த தொழிலுக்கான மூலப்பொருட்கள் மாநில அளவில் விதவிதமாக இருக்கின்றன. ஒரு தொழில் முனைவோரின் வர்த்தக நடவடிக்கை என்பது கால மாற்றத்திற்கு ஏற்ப விதவிதமான வடிவங்களை விரைவில் உருவாக்கி விற்பனைக்கு அளிப்பதாக இருக்க வேண்டும். அதனால் பல்வேறு மாநிலங்களுக்கு நேரடியாகவே சென்று சம்பந்தப்பட்ட இமிடேஷன் ஜூவல்லரி பிசினஸ் சம்பந்தமான  விதவிதமான நவரத்தின சாயல்கள் கொண்ட கற்கள், சில்க் நூல்கள், கத்தரி வகைகள், பல்வேறு ஊசிகள், தகுந்த அளவுள்ள சுத்தியல்கள் மற்றும் காஸ்டிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வரவேண்டும். 

நெக்லஸ் வடிவத்திற்கு பயன்படும் கிட், காதுகளில் அணிவதற்கான தொங்கட்டான் உருவாக்கும் கிட், கழுத்தில் அணிவதற்கான மாலை வகைகளை உருவாக்குவதற்கான கிட் மற்றும் கைகளில் அணிவதற்கான வளையல் தயாரிக்கும் கிட், கால்களிலும் அணிவதற்கான கொலுசுகள் தயாரிக்கும் கிட் போன்ற உபகரணங்களை பயன்படுத்தி புதுமையான பல டிசைன்களை உருவாக்கலாம். கவரிங் நகைகளை அதாவது இமிடேஷன் நகைகளை தயார் செய்வதில் அனுபவம் இல்லாத நிலையில் தொழில்நுட்பம் அறிந்த பணியாளர்களை சரியாக தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தொழிலில் வெற்றி பெறுவதற்கு கூட்டு முயற்சி என்பது அவசியம். அதனடிப்படையில் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களுடைய திறமையை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது அவசியம்.

மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ்

இமிடேஷன் ஜூவல்லரி பிசினஸ் தொழில் வாய்ப்புகளில் மேலே கண்ட அனைத்து பிரிவுகளுக்கும் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் என்ற வர்த்தகத்தின் இரண்டு முக்கியமான அடிப்படைகளை சரியாக வடிவமைத்து செயல்படுத்த வேண்டும். அதாவது, ஒரு வருடத்தின் எந்தெந்த காலக்கட்டங்களில் எந்தவிதமான மாடல்கள் அதிகமாக விற்பனையாகின்றன என்பதை அறிந்திருக்க வேண்டும். பொதுவான நாகரீக டிரென்டிங் என்ற வகையில் இளம் வாடிக்கையாளர்கள் எவற்றை விரும்புகிறார்கள் என்பதை விரல் நுனியில் தகவலாக வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் மதரீதியான பண்டிகைகள் மற்றும் சடங்குகள் ஆகியவற்றுக்கு ஏற்ற டிசைன்களை ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்பவும் புதிய விதத்தில் அறிமுகம் செய்ய வேண்டும். மற்ற மாநிலங்களில் இருக்கக்கூடிய விதவிதமான டிசைன்களை அறிமுகம் செய்வதும் புதுமையான முயற்சியாக இருக்கும். மேலும், இந்த தொழில் பிரிவில் டார்கெட் ஆடியன்ஸ் என்ற வகையில் வாடிக்கையாளர்களை கச்சிதமாக கணக்கெடுத்து வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த வாய்ப்பு என்பது சம்பந்தப்பட்ட ஏரியாவுக்கு ஏற்றதாகவும் அல்லது மக்களின் பொதுவான வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்றதாகவோ இருக்கலாம். 

புதிய புதிய டிசைன்களை அறிமுகப்படுத்த விரும்பும்  இமிடேஷன் ஜூவல்லரி பிசினஸ் தொழில் முனைவோர்கள் சர்வதேச அளவில் கிடைக்கக்கூடிய புத்தகங்களின் மூலமாகவும், ஆன்லைன் பயிற்சிகள் மூலமாகவும் அல்லது இந்த துறையில் அனுபவம் மிக்க நபர்கள் மூலமாகவும் புதிய நுட்பங்களை கற்றுக் கொள்ளலாம். மேலும், இந்தத் துறையில் முன்னதாகவே செயல்பட்டு வரும் மற்ற தொழில் முனைவோர்கள் மூலமாக உற்பத்தி மற்றும் விற்பனையில் கூடுதலான தகவல்களை அறிந்துகொள்ளவும் முயற்சி மேற்கொள்வது தொழில் வெற்றிக்கு நல்ல அடிப்படையாக அமையும்.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.