written by | October 11, 2021

இந்தியாவில் உரிமையாளர் வணிகம்

×

Table of Content


ஃப்ரான்சைஸ் பிசினஸ் இந்தியாவில் தொடங்குவது எப்படி 

இன்றைய காலகட்டத்தில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் ஒரு நிறுவனத்தில் கிடைக்கும் அலுவலகப் பணிகளை விட சொந்தமாக தொழில் செய்யும் வாய்ப்பு அதிகமாக எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் பல்வேறு காரணங்களால் இத்தகைய முடிவை எடுத்தாலும் மிக முக்கியமான காரணமாக விளங்குவது என்னவென்றால் வேலை உத்திரவாதம் இன்மை. அலுவலகப் பணியை செய்து கொண்டு வரும் நபர்களுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் தங்களது ஊதியத்தில் பெரிய அளவு வளர்ச்சி கிடைக்காத காரணத்தால் வளர்ந்து வரும் பொருளாதார மாற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் போய் விடுகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனா காலகட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் திறமைவாய்ந்த பணியாளர்களை ஆட்குறைப்பு நடவடிக்கை மூலமாக வேலையிலிருந்து நீக்கிய செய்திகளை நாம் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். ஆகவே வளர்ந்துவரும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவாறு பணம் சம்பாதிப்பதற்கு மற்றும் உத்திரவாதமான வேலையைச் செய்வதற்கும் சொந்தத் தொழிலை செய்ய பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். 

ஃப்ரான்சைஸ் பிசினஸ் என்றால் என்ன 

ஒரு குறிப்பிட்ட நிறுவனம் தங்களது சொந்த தயாரிப்புகளை பல்வேறு சோதனைகளுக்கு உட்பட்டு தயாரித்து மக்களிடத்தில் கொண்டு சென்று நல்லதொரு லாபம் அடைவதற்கு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாவது தேவை. அவ்வாறு பல ஆண்டுகள் தங்களது லாபத்திற்காக காத்திருக்காமல் ஆரம்பித்த முதலிலிருந்தே வணிக வளர்ச்சியை விரும்பும் நபர்கள் தேர்ந்தெடுக்க கூடியதுதான் இந்த ஃப்ரான்சைஸ் பிசினஸ். ஃப்ரான்சைஸ் பிசினஸ் என்னவென்றால் ஏற்கனவே மக்கள் மத்தியில் நன்கு பிரசித்தி பெற்ற நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி அந்த நிறுவனத்தின் கோட்பாடுகளுக்கு உட்பட்ட பொருட்களை தயாரித்து விற்பது ஆகும். அந்த நிறுவனத்தின் பெயரை பயன்படுத்துவதற்காக ஒரு குறிப்பிட்ட முதலீடு நீங்கள் அவர்களுக்கு செலுத்தி உடன்படிக்கை ஒப்பந்தத்தை செய்து விற்பனை உரிமத்திற்கான லைசன்ஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். பெரிய அளவில் தொழிலை வளர்ச்சி செய்வதற்கான சங்கடங்களுக்கு உட்படாமல் நன்கு பிரசித்தி பெற்ற நிறுவனத்தின் பொருளை விற்கக்கூடிய முதலாளியாக ஆவதற்கான வாய்ப்பு உங்களது முதலீட்டில் இருந்து பெறமுடியும். கேஎஃப்சி, சப்வே, மெக்டொனால்ட்ஸ் போன்ற பல்வேறு விதமான பிரான்சிஸ் பிசினஸ் இந்தியாவில் பெரு வளர்ச்சியுடன் நடைபெற்று வருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. 

ஃப்ரான்சைஸ் பிசினஸ் தொடங்குவதில் உள்ள நன்மைகள் 

1) ஒரு புதிய தொழிலை தொடங்கி நடத்துபவர்களின் வெற்றி விகிதாச்சாரத்தை விட ஃப்ரான்சைஸ் பிசினஸ் நடத்துபவர்களுக்கான வெற்றி விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது.

2) தொழிலைத் தொடங்கி நடத்துவதற்கான அனைத்து விதமான உதவிகள் மற்றும் பயிற்சிகளை பிரான்சைஸ் கொடுக்கும் நிறுவனம் உங்களுக்கு பயிற்சி வகுப்புகளை கொடுக்கும் என்பதால் எந்தவித ஐயப்பாடும் இன்றி தொழில் முன்னனுபவம் இல்லாதவர்களும் தொடங்க முடியும்.

3) ஏற்கனவே நன்கு பிரசித்தி பெற்ற நிறுவனத்தின் உரிமத்தை நீங்கள் பெற இருப்பதால் தொழிலை விளம்பரப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றிய கவலை கொள்ள தேவையில்லை. 

4) எந்த மாதிரியான இடத்தை தேர்வு செய்வது, கடை வடிவமைப்பை எவ்வாறு அமைப்பது, எவ்வளவு பணியாளர்களை நியமிப்பது போன்ற அனைத்து விவரங்களுக்கும் உங்களுக்கு ஆரம்பத்திலேயே கொடுக்கப்பட்டு விடுவதால் எந்தவித ஐயப்பாடும் இல்லாமல் ஆரம்பிக்க முடியும்.

5) ஒரு புதிய தயாரிப்பு தொழிலை நடத்துபவர்களை விட ஃப்ரான்சைஸ் பிசினஸ் நடத்துவதற்கான கடன் சலுகை மிக எளிதாக கிடைத்துவிடும்.

6) முதலீடு செய்வது முதல் தொழிலை நடத்துவதற்கு வரையிலான அனைத்து விதமான செலவுகளும் உங்களுக்கு ஆரம்ப காலகட்டத்திலேயே தெரிந்து விடுவதால் பாதி நிலையில் தொழிலை கைவிடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

7) புகழ்பெற்ற ஒரு நிறுவனத்தின் ஃப்ரான்சைஸ் எடுத்து நீங்கள் தொழில் செய்யும் போது அவர்கள் எந்த மாதிரியான திட்டங்களை வகுக்கிறார்கள் மக்களை கவருவதற்காக செய்யும் முயற்சிகள் என்ன அவர்கள் தயாரிக்கும் பொருட்களில் உள்ள சூத்திரங்கள் என்ன போன்ற தொழில் ரகசியங்களை தெரிந்து கொள்ள முடியும்.  

ஃப்ரான்சைஸ் பிசினஸ் தொடங்குவதில் உள்ள சிக்கல்கள் 

1) ஃப்ரான்சைஸ் கொடுக்கும் நிறுவனத்தின் கோட்பாடுகளுக்கு உட்பட்டு அனைத்து விதமான தயாரிப்பு பொருட்களையும் விற்க வேண்டும் என்பதால் உங்களது சொந்த முயற்சியில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பதற்கான வாய்ப்புகள் இல்லை.

2) புகழ்பெற்ற நிறுவனங்களின் ஃப்ரான்சைஸ் பெறுவதற்கு மிகப்பெரிய போட்டிகள் இருப்பதனால் முதலீட்டு தொகையாக மிகப்பெரிய தொகை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். 

3) முதலீட்டு தொகை மட்டுமல்லாது நீங்கள் நடத்தும் வியாபாரம் அனைத்திற்கும் ராயல்டி தொகையாக அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பகுதியை செலுத்த வேண்டியிருப்பதால் உங்களுக்கான லாப அளவு மிகவும் குறைந்த அளவில் போய்விடும்.

4) நீங்கள் தொழில் நடத்தும் இடத்திற்கு அருகிலேயே வேறு ஒரு நபர்களுக்கு ஃப்ரான்சைஸ் உரிமம் கொடுப்பதற்கான வாய்ப்பு இருப்பதனால் உங்களது நடப்பு வியாபாரம் செய்வதற்கான சூழ்நிலை உள்ளது.

5) நீங்கள் ஃப்ரான்சைஸ் பிசினஸ் தொடங்கப்பட்டபோது செய்யப்பட்ட உடன்படிக்கையின் கால அளவு முடியுமானால் உங்களிடம் இருந்து வேறு ஒருவருக்கு அந்த பிசினஸ் கொடுப்பதற்கான அதிகாரம் ஃப்ரான்சைஸ் நிறுவனங்களுக்கு உண்டு.

6) நீங்கள் நடத்தும் நிறுவனத்தில் உள்ள அனைத்து விற்பனை தகவல்களையும் ஃப்ரான்சைஸ் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதால் உங்களது அனைத்து வணிக தகவல்களையும் அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

ஃப்ரான்சைஸ் தேர்ந்தெடுக்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் 

  • புகழ்பெற்ற நிறுவனங்களின் ஃப்ரான்சைஸ் பெறுவதற்கு பல்வேறு தொழில்முனைவோர்கள் காத்திருக்கும் நிலையில் உங்களது முதலீடு அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
  • இந்திய அளவில் புகழ்பெற்ற நிறுவனத்தின் ஃப்ரான்சைஸ் உரிமம் பெறுவதற்கான தகுதி உங்களிடம் இருக்கிறதா என்பதையும் நீங்கள் ஃப்ரான்சைஸ் எடுக்கும் நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை பற்றிய ஆர்வம் உங்களுக்கு இருக்கிறதா என்பதையும் யோசித்து முடிவெடுங்கள்.
  • ஒரு தொழிலை செய்ய வேண்டும் என்றால் அனைத்து நேரங்களிலும் உங்களது பங்களிப்பு மற்றும் மேற்பார்வை இருக்க வேண்டும் என்பதால் உங்களுக்கான நேரத்தை இதில் செலவிட முடியுமா என்பதை முடிவெடுக்க வேண்டும்.
  • ஃப்ரான்சைஸ் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் அவர்களுக்கு ஏற்றவாறு தனித்தனி கோட்பாடுகளை வகுத்து உரிமத்தை வழங்குவதால் அந்நிறுவன கோட்பாடுகளைப் பற்றி நன்கு அறிந்து உங்களுக்கு ஏற்ற வகையில் இருக்குமேயானால் மட்டுமே ஒப்பந்தம் செய்ய வேண்டும்.
  • ஃப்ரான்சைஸ் நிறுவனங்களிடமிருந்து தகுந்த பயிற்சியும் ஆதரவும் கிடைத்தால்கூட உங்கள் தரப்பிலிருந்து எந்தெந்த வணிக வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ளவேண்டும். நிறுவனத்தைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் போது எந்தெந்த மாதிரியான சங்கடங்களை சந்திக்க நேரிடும் போன்ற ஆராய்ச்சி செய்வது அதற்கு ஏற்ற திட்டங்களை வகுக்க வேண்டும்.
  • உங்களது தொழில் நன்றாக வளர்வதற்கு எந்த மாதிரியான உதவிகளை ஃப்ரான்சைஸ் நிறுவனம் செய்து கொடுக்கும் என்பதனையும் வணிகம் சரியாக போகாத நிலைமையில் எந்த மாதிரியான இழப்பீடுகளையும் தருவார்கள் என்பதைப்பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
  • நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஃப்ரான்சைஸ் நிறுவனம் குறைந்த பட்சம் பத்து ஆண்டுகளாவது பழமையானதாகவும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு வளர்ச்சியை அடையக் கூடியதாகவும் இருத்தல் அவசியம்.

இந்தியாவைப் பொருத்தவரை எந்தெந்த துறைகளின் ஃப்ரான்சைஸ் வாய்ப்புள்ளது 

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஃப்ரான்சைஸ் பிசினஸில் முதன்மையாக விளங்குவது பிரபல உணவகங்களின் உரிமங்களை பெற முயல்வதாகவும். உணவகங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வளர்ச்சி குறைந்த பட்சம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு நன்றாக இருக்கும் என்பதால் இந்தத் துறை சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்தின் உரிமத்தை பெற்று உங்களது தொழிலை தொடங்கலாம். அடையார் ஆனந்த பவன், சரவண பவன் போன்ற பிரசித்தி பெற்ற உணவு நிறுவனங்களின் கிளைகள் உலகமெங்கும் இருப்பதால், அத்தகைய உணவு நிறுவனங்களின் ஃப்ரான்சைஸ் தேர்ந்தெடுத்து நடத்தினால் நல்ல வணிக வளர்ச்சி அடைய முடியும். 

குளிர் பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் கடைகள் சம்பந்தப்பட்ட ஃப்ரான்சைஸ் எடுத்து நடத்துவது உணவகங்களுக்கு அடுத்தபடியான பிரதான தொழில் முயற்சியாக இந்தியாவில் இருக்கிறது. அழகு கலை மற்றும் ஸ்பா நிறுவனங்கள் தொடர்பான ஆர்வம் உங்களுக்கு இருந்தால் அது சம்பந்தப்பட்ட பெரிய நிறுவனங்களின் ஃபிரான்சிஸ் எடுத்து நடத்துவதற்கான வாய்ப்பு இந்தியாவில் அதிகம் உள்ளது. உங்களுக்கு கோடிக்கணக்கில் முதலீடு இடுவதற்கான வாய்ப்பு இருந்தால் மருத்துவத் துறை சம்பந்தப்பட்ட மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஃப்ரான்சைஸ் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட துறையிலும் ஃப்ரான்சைஸ் உரிமங்களை பெற்று நீங்கள் கட்டும் வணிக வளாகங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்திற்கு பிரபலமான நிறுவனத்தின் பெயரில் விற்பதற்கான வாய்ப்பு உள்ளது.

டிராவல் மற்றும் சுற்றுலா சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஃப்ரான்சைஸ் எடுத்து நடத்துவதற்கான ஆர்வம் பெரும்பாலான தொழில்முனைவோர்கள் இடையே கடந்த 10 ஆண்டுகளாக நிலவி வருவதால் தாங்களும் இந்தத் துறையில் ஃப்ரான்சைஸ் எடுத்து நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். குழந்தைகளுக்கான கல்வி வழங்கும் பயிற்சி மையங்களின் தேவை அதிகமாக இருப்பதால் இதனுடைய ஃப்ரான்சைஸ் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற ஒரு முக்கிய தொழில் முயற்சியாக அமையும். ஒரு சில நன்கு பிரசித்திபெற்ற பிரீஸ்கூல் ஃபிரான்சிஸ் எடுத்து நீங்களும் ஒரு கல்வி நிறுவனத்தை உங்கள் பகுதியில் அமைக்கலாம். ஒவ்வொரு ஊரிலும் நன்கு பிரசித்தி பெற்ற ஒரு காப்பி கடை இருக்கும் என்பதால் அந்த ஊரைச் சுற்றி உள்ள மற்ற பகுதிகளில் அந்த காப்பிக் கடையில் ஃப்ரான்சைஸ் எடுத்து நடத்துவது மிகக் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க ஆர்வமுள்ளோருக்கு உதவியாக இருக்கும்.

இவைகள் மட்டுமல்லாது ஆட்டோமொபைல் துறை சம்பந்தமான தொழில்களின் ஃப்ரான்சைஸ் உரிமைகளுக்கும் அதிக வரவேற்பு உள்ளதால் அதையும் நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் அல்லாமல் இன்சூரன்ஸ் நிறுவனங்களின், இன்டர்நெட் சென்டர், மருந்தகம், ரீடெய்ல் கடைகள், வாட்ச் விற்பனை கடைகள், பால் பொருட்கள் விற்பனை கடைகள், துணி விற்பனை கடைகள், கொரியர் சர்வீஸ், செல்லப் பிராணிகளுக்கான கடைகள், புகைப்படக்கலை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், நகை விற்பனை சம்பந்தப்பட்ட கடைகள் போன்ற அனைத்து துறைகளிலுமே பல்வேறு விதமான ஃப்ரான்சைஸ் பிசினஸ் வாய்ப்பு இந்தியாவில் இருக்கிறது.

உங்கள் மனதில் உள்ள அனைத்து விதமான கேள்விகளையும் முன்பே கேட்டறிந்து உங்களுக்கு திருப்தி அளிக்கக்கூடிய வகையில் ஃப்ரான்சைஸ் நிறுவனம் அளித்த பிறகு ஒப்பந்தம் செய்ய வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஃப்ரான்சைஸ் நிறுவனத்துடன் நல்ல உறவை மேம்படுத்திக் செயல்பட்டு வந்தால் கண்டிப்பாக உங்களுக்கான அனைத்து உதவிகளையும் அவர்கள் செய்வார்கள். ஏனென்றால் பல்வேறு ஆண்டுகளாக அவர்கள் நிறுவனத்திற்கு பெற்றிருக்கும் நல்ல பெயரை காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள். அதே சமயத்தில் நீங்களும் அவர்களது நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் ஏதும் விளைவிக்காத வகையில் செயல்பட்டு வருவீர்களானால் இருவருக்கும் வெற்றி வாய்ப்பு என்பது பிரகாசமாக இருக்கிறது. 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.