written by | October 11, 2021

சோப்பு தயாரிக்கும் வணிகம்

×

Table of Content


சோப்பு தயாரிக்கும் தொழிலை எவ்வாறு தொடங்குவது

சோப்பு தயாரிப்பு தொழிலை பொழுதுபோக்காக பெரும்பாலான மக்கள் செய்தாலும் சற்று ஆழமாக வணிக ரீதியில் சிந்தித்து செயலாற்றும் போது நல்ல லாபம் தரக்கூடிய தொழிலாக இது அமைகிறது. வீட்டிலேயே தயாரிக்கப்படும் ஆர்கானிக் சோப்பு தயாரிப்புகளுக்கும் குழந்தைகள் நலனுக்காக தயாரிக்கப்படும் வேதியல் பொருட்கள் அற்ற சோப்புகளுக்கும் வித்தியாசமான வடிவமைப்பில் கொண்ட சோப்புகளுக்கும் நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. சோப்பு தயாரிக்கும் தொழிலை சில வழிமுறைகளை பின்பற்றி நடத்தும் பொழுது உங்களுக்கு நல்ல லாபம் தரக்கூடிய வணிகமாக அமைகிறது. 

சோப்பு தயாரிப்பின் நுணுக்கங்களை பற்றி அறியவேண்டும் 

சோப்பு விற்பனை தொழிலில் நீங்கள் சிறந்து விளங்க வேண்டுமென்றால் சிறந்த தரமான சோப்பு தயாரிப்புகளை உருவாக்குவது பற்றிய விவரங்கள் அனைத்தும் தெரிந்து சோப்பு தயாரிப்பின் நுணுக்கங்களை அறிந்த நிபுணராக இருத்தல் வேண்டும். ஹாட் ப்ராசசிங் முறையில் சோப் தயாரிப்பது பற்றிய விவரங்களும் கோல்ட் பிராசசிங் முறையில் சோப் தயாரிப்பது பற்றிய விவரங்களும் தெரிந்திருத்தல் அவசியம். என்ன வகையான சோப்பு எண்ணெய்களை பயன்படுத்துவது மற்றும் வாசனை பெறுவதற்காக எந்த நறுமண பொருட்களை சேர்ப்பது போன்ற சோப் தயாரிப்பின் சூத்திரங்களை தெரிந்து வைத்துக்கொண்டு சோப்பு தயாரிப்பில் ஈடுபட்டால் நல்ல தரமான சோப்புகளை உருவாக்கமுடியும். சோப்பு தயாரிப்பு பற்றி உங்களுக்கு தகுந்த அனுபவங்கள் இல்லையெனில் வணிகரீதியான சோப்புகளை உருவாக்குவதில் சிரமங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆதலால் நீங்கள் சொந்தமாக சோப்பு தயாரிக்கும் தொழிலை செய்வதற்கு முன்பு மற்ற சோப்பு தயாரிப்பு பணிகள் ஈடுபட்டவர்களிடம் பணிக்கு சேர்ந்து அல்லது சோப்பு தயாரிக்கும் பயிற்சி வகுப்பு நடக்கும் இடத்தில் சோப்பு தயாரிப்பின் நுணுக்கங்கள் பற்றிய தெரிந்தபிறகு ஆரம்பிப்பதே நல்ல பலனைத் தரும்.  

தனிப்பட்ட சூத்திரத்தை கொண்ட சோப்புகளை தயாரித்தல் 

சோப்பு தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் மிக குறைந்த அளவிலேயே தேவைப்பட்டாலும் அந்த மூலப்பொருட்கள் சேர்க்கும் விகிதாச்சார அளவை மாற்றி அமைத்து உங்கள் சோப்பு தயாரிப்புகளுக்கு என தனி சூத்திரத்தை உருவாக்குவதன் மூலம் சந்தையில் தனித்து விளங்கமுடியும். இத்தகைய தனிப்பட்ட சூத்திரத்தை கொண்ட சோப்புகள் மக்கள் விரும்பக்கூடிய தரமான சோப்புகள் தயாரிப்பதற்கு நீங்கள் பல்வேறு கட்ட சோதனை முயற்சிகளில் ஈடுபட்ட பிறகே கண்டறியமுடியும்.  

தேவையான உபகரணங்களை பட்டியலிடுக 

உபகரணங்களின் பட்டியலில் நீங்கள் முதலில் தேர்ந்தெடுக்க வேண்டியது நீங்கள் எந்த மூலப் பொருட்களை எவ்வளவு சேர்க்கிறீர்கள் என்பதை தெரிந்து வைப்பதற்கான அளவுகோலாகும். சோப்பு கலவை தயாரிப்பதற்கான பாத்திரங்கள், கலப்பான், கையுறைகள், சோப்பு வடிவமைப்பை உண்டாக்குவதற்காக அச்சு பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட சோப்புகளை பேக்கிங் செய்வதற்கான உபகரணங்கள் போன்றவற்றை பட்டியலிட்டு குறைந்த விலையில் எங்கு கிடைக்கிறது என்பதை கண்டறிந்து வாங்கிக் கொள்ள வேண்டும். 

அரசாங்க அனுமதி மற்றும் பதிவு சான்றிதழை பெறவேண்டும் 

வணிகரீதியாக செய்யக்கூடிய எந்தவித தொழில்களுக்கும் நீங்கள் தொழில் தொடங்க கூடிய மாநில அரசின் சட்ட விதிமுறைக்கு உட்பட்ட அனைத்து விதமான பதிவுச் சான்றிதழையும் அனுமதி கடிதங்களையும் பெற்ற பிறகே ஆரம்பிக்கவேண்டும். தமிழ்நாட்டில் சோப்பு தயாரிப்பு மற்றும் விற்பனை தொழிலை நீங்கள் செய்வதற்காக பின்வரும் பதிவுகள் மற்றும் அனுமதி சான்றிதழ்கள் பெறுவது அவசியம்.

  • நகராட்சி அலுவலகத்திலிருந்து வர்த்தக உரிமை சான்றிதழ் பெற வேண்டும் 
  • சோப்பு தயாரிப்பில் வேதிப்பொருட்களால் எந்தவித சுற்றுப்புற பாதிப்பும் இல்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும்
  • உங்கள் பகுதியின் மின்சார வாரியத்திடம் இருந்து அனுமதிக் கடிதம் பெற வேண்டும்
  • சேவை மற்றும் விற்பனை வரி சட்டத்தின்கீழ் ஜிஎஸ்டி எண் பெறுவது அவசியம் 
  • எம்எஸ்எம்இ பதிவு மற்றும் உத்யோக் ஆதார் பதிவு போன்றவற்றை செய்து கொள்ளவும் 
  • உங்களது நிறுவன பெயரை வேறு யாரும் பயன்படுத்தாத வகையில் ட்ரேட்மார்க் லைசென்ஸ் பெறுவது அவசியம் 

உங்கள் சோப்புகளுக்கென தனி பிராண்டை உருவாக்குங்கள் 

ஆண்கள் பயன்படுத்தும் சோப், பெண்கள் பயன்படுத்தும் சோப், குழந்தைகளுக்கான சோப், விலங்குகளுக்கான சோப் மற்றும் ஆயுர்வேதிக் சோப் இவ்வாறாக பல்வேறு விதமான சோப்பு தயாரிப்புகள் சந்தையில் நிலவி வருவதால் நீங்கள் எந்த வகையான சோப்பு தயாரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். ஒரு குறிப்பிட்ட வகை சோப்பு தயாரிப்பை கையில் எடுத்து அதில் உங்களுக்கென்று தனி ஒரு ப்ராண்ட் நேமை மக்களிடத்தில் பதியவைக்க வேண்டும். எந்த வகையான சோப் தயாரிப்பில் ஈடுபட்டால் மக்களை எளிதில் கவரமுடியும் மற்றும் எந்த வகையான சோப்பிற்கு இன்றைய காலகட்ட மக்கள் அதிக ஆதரவு தருகிறார்கள் என்பதை பற்றியான சந்தை ஆராய்ச்சி செய்வதன் மூலம் உங்களுக்கான பிராண்டை தேர்ந்தெடுக்க முடியும். உங்கள் பிராண்ட் மக்கள் மனதில் பதிய வைப்பதற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறுவனத்தின் பெயர், வணிக முத்திரை, சோப்பு வடிவமைப்புகள், பேக்கேஜிங் செய்ய பயன்படுத்தும் அட்டை வடிவமைப்புகள் மற்றும் வணிக வாசகங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அறிந்து செயலாற்றுங்கள்.

மூலப் பொருட்களை வாங்குவதற்கான சரியான நபரை தேர்ந்தெடுங்கள்

நீங்கள் சோப்பு தயாரிப்பது ஈடுபடும் வேண்டுமென்றால் சோப்பு தயாரிப்பதற்கான உபகரணங்கள், மூலப்பொருட்கள், பேக்கேஜிங் பொருட்கள் என அனைத்திற்குமான தட்டுப்பாடு அவ்வப்போது நிலவும். சோப்பு தயாரிப்பில் ஈடுபடும் போது எந்தவித கட்டுப்பாடும் இன்றி மூலப்பொருட்களை உங்களுக்கு தேவையான நேரத்தில் வழங்கக்கூடிய நம்பிக்கை வாய்ந்த, அதேசமயத்தில் குறைந்த விலையில் வழங்கக்கூடிய சரியான சப்ளையர் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். 

தகுதியான நபர்களை பணியமர்த்தல் 

பொழுதுபோக்காக அல்லாமல் வர்த்தக ரீதியாக நீங்கள் சோப்பு தயாரிப்பில் ஈடுபடும் பொழுது உங்கள் உதவிக்கு என சில நபர்களை பணி அமைப்பது அவசியமாகிறது. உங்களது உதவிக்காக நீங்கள் பணியமர்த்த கூடிய அவர்கள் உங்களது உறவினர்களாகவோ நண்பர்களாகவோ தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்றால் சற்று சிந்தித்து செயல்படுவது அவசியம். வர்த்தக ரீதியில் ஒவ்வொரு பணியை செய்யும் பொழுது நடக்கக்கூடிய தவறுகளை கண்டிப்புடன் திருத்த முயலும் போது நண்பர்கள் மற்றும் உறவினர் ஆக இருந்தால் தேவையற்ற மனக்கசப்புகள் உண்டாக நேரிடலாம். ஆதலால் உங்கள் தொழில் முறைக்கு ஏதுவான தகுந்த கணக்காளர்கள் உதவியாளர்கள் மற்றும் பாட்னர்களை தேர்ந்தெடுத்து தொழிலில் இறங்குவது நல்லது. 

ஆர்டர்களுக்கு ஏற்றவாறு சோப்பு தயாரிப்பில் ஈடுபடுங்கள்

பெரும்பாலான தொழில்முனைவோர்கள் ஆரம்ப காலகட்டத்தில் செய்யக்கூடிய மிகப் பெரிய தவறு என்னவென்றால் விற்பனை குறைவாக உள்ள பொருட்களுக்கு அதிகமான தயாரிப்புகளும் அதிக விற்பனை உள்ள பொருட்களுக்கு குறைவான தயாரிப்பிலும் ஈடுபட்டு விடுவதாகும். சந்தைப்படுத்துதலில் மிகுந்த சிரத்தை எடுத்து ஆர்டர்களை பெறும்போது உங்களது டெலிவரி செய்வதற்கான கால அளவையும் சரியாக நிர்ணயித்து கூறுவதன் மூலம் அதிக ஸ்டாக்குகளை நீங்கள் தயாரித்து வைத்திருக்கத் தேவையில்லை. கிடைக்கக்கூடிய ஆர்டர்களுக்கு ஏற்றவாறு அவ்வப்போது சோப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வருவதன் மூலம் பண சுழற்சியில் எந்தவித சிக்கலும் இருக்காது. அதேபோல் கிடைக்கக்கூடிய ஆர்டர்களுக்கு ஏற்ற மூலப்பொருட்களை உடனடியாக பெறக்கூடிய சப்ளையர் தேர்ந்தெடுப்பதன் மூலம் அதிகமான சோப்புகளை ஸ்டாக் வைத்திருக்கத் தேவையில்லை. 

சோப்புகளுக்கான சரியான விலையை நிர்ணயித்தல் 

சோப்பு தயாரிப்பில் பல்வேறுவிதமான முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதால் மக்கள் மனதில் உங்களது பிராண்டை பதிய வைப்பதற்கான முக்கிய ஆயுதமாக உங்கள் சோப்புகளின் விலை நிர்ணயத்தை அமைக்க வேண்டும். பெரிய நிறுவனங்கள் தங்களது பங்குதாரர்களின் லாபம் மற்றும் விளம்பர செலவுகளுக்கு அதிக தொகை செலவிடுவதால் அதிக விலைக்கு சோப்புகளை விற்கின்றார்கள். இதைப் பயன்படுத்தி உங்களது சோப்பு தயாரிப்புகளுக்கு குறைந்த விலையை நிர்ணயம் செய்தாலும் சிறிய அளவிலாவது லாபம் உங்களுக்கு தரக்கூடிய வகையில் இருக்க வேண்டும். இரண்டு சோப்பு வாங்கினால் ஒரு சோப்பு இலவசம் மற்றும் எம்ஆர்பி விலையிலிருந்து 50% தள்ளுபடி போன்ற மக்களை கவரக்கூடிய வகையில் விலை நிர்ணயம் செய்வது அவசியம். ஒரு சோப்பை விற்று அதிக லாபம் அடைவதை விட பத்து சோப்பை விற்று அதே லாபத்தை அடையக்கூடிய முயற்சியில் நீங்கள் ஈடுபடும் போது மக்கள் மனதில் உங்களுக்கான பிராண்ட் எளிதாக பிரபலம் அடைவதற்கான வாய்ப்பு உள்ளது.

விளம்பர யுக்திகளை கையாளுங்கள் 

விதவிதமான தரமான சோப்பு தயாரிப்பில் நல்ல அனுபவமும் திறமையும் இருந்தால் மட்டும் உங்களது தொழிலில் வெற்றி அடைந்து விட முடியாது என்பதால் சிறந்த விளம்பர யுத்திகளை பயன்படுத்தி அதிகமான சோப்பு விற்பனை செய்வதில் முனைப்பு காட்ட வேண்டும். வாடிக்கையாளர்களை சேர்த்து விடுபவர்களுக்கு விற்பனையில் சிறப்பு சலுகை, அதிக சோப்பு வாங்குபவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை இலவச சுற்றுலா வசதி, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசு போன்ற பாரம்பரிய விளம்பர நடைமுறைகளை செயல்படுத்தலாம். இன்றைய காலகட்டத்தில் மிக முக்கிய விளம்பர தளங்களாக உள்ள சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி வானொலி மற்றும் பத்திரிக்கை விளம்பரங்கள் போன்றவற்றின் மூலம் உங்களது சோப்பு தயாரிப்பு நிறுவனத்தின் சிறப்பம்சங்களை மக்களுக்கு தெரிவிக்கலாம். 

சேல்ஸ் டிபார்ட்மென்ட் உங்கள் கட்டுப்பாட்டில் நிறுவுங்கள் 

உங்கள் சோப்பு தயாரிப்பு நிறுவனத்தை வணிகரீதியாக வெற்றி அடைய செய்ய வேண்டுமென்றால் நீங்கள் எடுக்க வேண்டிய இறுதிக் கட்ட நடவடிக்கை சேல்ஸ் டிபார்ட்மென்ட் என தனி அமைப்பை உருவாக்கி பணியாளர்களை அமர்த்தி உங்கள் கட்டுப்பாட்டில் நிர்வகிக்க வேண்டும். இந்த சேல்ஸ் டிபார்ட்மென்ட் பணியாளர்களின் முக்கிய பொறுப்பு என்னவாக இருக்க வேண்டும் என்றால் பெரு நகரத்திலுள்ள பல்வேறு சில்லறை விற்பனை கடைகளுக்கு நேரடியாக சென்று உங்களது சோப் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி ஆர்டர்களை பெற வைப்பதாகும். இந்தியாவில் பெரும்பாலான மக்களின் அன்றாட வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் சில்லறை விற்பனை கடைகளில் நேரடியாக டார்கெட் செய்வதன் மூலம் எளிய வகையில் மக்களை சென்றடைவதற்கான வாய்ப்பு உள்ளது. 

ஆன்லைனில் சோப்புகளை விற்பனை செய்யுங்கள் 

ஆன்லைன் விற்பனை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் உங்களது சோப்பு தயாரிப்பை இந்தியாவிலுள்ள அனைத்து நகரங்களிலும் பிரபலம் அடையச் செய்ய முடியும். ஆகவே பிளிப்கார்ட் அமேசான் போன்ற ஆன்லைன் விற்பனை தளங்களில் உங்களது சோப்பு தயாரிப்புகளை எவ்வாறு பட்டியலிட்டு விற்பனை செய்வது என்ற தகவல்களை தெரிந்துகொண்டு அத்திட்டத்தை, விரைவாக செயல்படுத்துவது நல்லதாகும். இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வகையான நிறுவனத்தின் தயாரிப்புகள் நேரடி வர்த்தகத்தில் ஈடுபடாமல் ஆன்லைன் வர்த்தகத்தில் மட்டுமே ஈடுபட்டு மிகப்பெரிய லாபம் அடைவதால் நீங்களும் உங்களது சோப்பு தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் விற்று அதிகப்படியான லாபத்தை அடைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளமுடியும்.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.