written by | October 11, 2021

ஆன்லைன் பயிற்சி

×

Table of Content


ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் மூலம் வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி?

ஆசிரியர் பயிற்சி வகுப்புகள் முடித்து பல்வேறு காலமாக வேலைக்கான காத்திருப்பு பட்டியலில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் சமீபத்திய கோவிட் – 19 நோய் தொற்றால் வேலையிழந்த ஆசிரியர்களுக்கும், வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தி பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் கடந்த சில வருடங்களாக சில ஆசிரியர்கள் நடத்தி வந்தாலும் பெற்றோர்களிடையே பெரிய வரவேற்பு இல்லாத காரணத்தால் நல்லதொரு தொழில் வாய்ப்பாக அமையவில்லை. ஆனால் கொரோனா காலகட்டத்தில் போட்ட தடை காரணமாகவும் சமூக இடைவெளியை பின்பற்றவேண்டிய கடமை கலந்த அச்சம் அனைவருக்கும் இருப்பதாலும் நேரடி வகுப்புகள் மற்றும் தனி வகுப்புகளை ஆசிரியர்கள் பெற்றோர்கள் என இரு தரப்பினரும் தவிர்த்து வந்தனர். பள்ளிகள் திறப்பு பற்றிய உறுதியான தகவல்கள் வெளிவராத காரணத்தினாலும், தனி பயிற்சி வகுப்புகளை நடத்தி தங்களது மாத வருமானத்தை சம்பாதித்து வந்த பல்வேறு ஆசிரியர்களும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டுள்ளனர். தங்களது பாடப்பிரிவில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் எடுப்பது பற்றிய பல்வேறு சந்தேகங்கள் மற்றும் தயக்கங்கள் உள்ளது. ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிப்பது பற்றிய உங்கள் தயக்கங்களை போக்கி அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் விளக்கம் தரும் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு ஆசிரியர் ஆவதற்கான தகுதிகள் என்ன 

நேரடி வகுப்புகள் ஆன்லைன் வகுப்புகள் இரண்டிற்கும் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்பதனால் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கான அடிப்படை தகுதி இரண்டு வகுப்பும் முறைகளுக்கும் ஒன்றுதான். பாடத்திட்டத்தை பற்றிய முழுமையான அறிவு திறமை, எந்த வகுப்பு மாணவர்களுக்கு எந்த வகையான பாடத்திட்டங்கள் என்பதைப் பற்றிய புரிதல், பல்வேறு எடுத்துக்காட்டுடன் உற்சாகமாக பாடமெடுக்கும் முறைகள், மாணவர்களின் கருத்துக்களை கேட்டு நல்ல கலந்துரையாடல் செய்வது, மாணவர்களின் ஆர்வம் மற்றும் அறிவுத் திறனுக்கு ஏற்றவாறு பாடம் எடுக்கும் முறைகளை மாற்றுவது போன்றவை இருத்தல் அவசியம். 

அடிப்படை திறன்கள் இரண்டு விதமான வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு ஒன்றாக இருந்தாலும், ஆன்லைன் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியருக்கு சில கூடுதல் திறன்கள் இருந்தால் மட்டுமே மிகச் சிறந்த வெற்றியை அடைய முடியும். கணினியை கையாளுவதற்கான திறமை, ஜியோ மீட், ஜூம், கூகுள் மீட் போன்ற நவீன வீடியோகால் வசதிகளை கையாளும் திறமை போன்றவையும், தனி வலைதளங்கள் மற்றும் செயலிகளை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு உருவாக்குவதற்கான எண்ணமும் இருந்தால் கூடுதல் சிறப்பாக அமையும். ஆன்லைன் வகுப்பில் உங்களது மாணவர்கள் வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதால் பயிற்சி கட்டணத்தை இணையவழியில் செலுத்துவதற்கான கட்டமைப்பையும், இமெயில், வாட்ஸ்அப் போன்றவற்றின் மூலம் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதால் அவற்றை சுலபமாக பயன்படுத்தும் பழக்கமும், பாடத்திட்டங்கள் சம்பந்தப்பட்ட டாக்குமெண்டை மாணவர்களுக்கு எழுதாத பகிரும் முறையும்  தெரிந்திருத்தல் அவசியம்.

ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதில் உள்ள நன்மைகள் 

ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதில் உள்ள மிகப்பெரிய நன்மை என்னவென்றால் உங்களுக்குள் புதைந்து கிடக்கும் கற்பித்தல் திறனை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டும் அடைக்காமல் உலகம் முழுவதும் உள்ள மாணவர்களை சென்றடையவதற்கான வாய்ப்பு இருக்கிறது. 

நீங்கள் ஒரு கல்வி நிறுவனத்தை நம்பி இருக்காமல் சொந்தமாக ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதன் காரணமாக உங்களுக்கான கட்டணத்தை நீங்களே நிர்ணயித்துக் கொள்வதற்கான சுதந்திரம் இருக்கிறது. 

ஏழை மாணவர்களுக்கு கட்டணமில்லா வகுப்புகள் அல்லது குறைந்த கட்டணத்தில் வகுப்புகள் எடுக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதால் ஆசிரியர் துறையைத் தேர்ந்தெடுத்த உங்களுக்கான உங்களுக்கான முழு மனநிறைவையும் பெறும் சூழ்நிலை உள்ளது.

எந்த நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்க வேண்டும் எந்த நாட்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்பதை பற்றிய முடிவு எடுக்கும் உரிமை உங்களுக்கு இருப்பதால் மற்ற காரியங்களுக்கு ஏற்றவாறு உங்களது கால அட்டவணையை சரிசெய்து கொள்ளலாம்.

ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதில் உள்ள அசௌகரியங்கள் 

இன்றைய காலகட்டத்திலும் பல்வேறு மாணவர்கள் கணினி வசதி, ஸ்மார்ட் போன் வசதி, மற்றும் இணையதள இணைப்பு வசதி இல்லாமல் இருப்பதால் அனைத்து மாணவர்களுக்குமான கல்வியை சேவையாக ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் இருப்பதில்லை. 

நேரடி வகுப்புகளில் சற்று கவனச்சிதறல் உடன் இருக்கும் மாணவர்கள் அருகில் சென்று அவர்களை பாடத் திட்டத்தில் கவனம் செலுத்தும் படியான அறிவுரை வழங்குதல், பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது மாணவர்கள் உடனடியாக கேட்கக்கூடிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பது போன்ற வாய்ப்புகள் குறைவு.

நீங்கள் தனி வலைதளம் மூலமாக உங்கள் ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதைப் பற்றிய சிந்தனைகளை கொண்டவராக இருந்தால் உங்களது போட்டியாளராக இருக்கக்கூடிய பெரு நிறுவனங்களை சமாளித்து வெற்றி பெறுவது என்பது கடினம். 

எந்த பாடத்திட்டத்தை எடுக்கப் போகிறீர்கள் என்பதை தேர்ந்தெடுங்கள் 

மாநில அரசின் சமச்சீர் கல்வி திட்டம், மத்திய அரசின் கல்வித்திட்டம், ஆங்கில வழிக் கல்வி, தாய்மொழிக் கல்வி என பல்வேறு வகையான பாடத்திட்ட முறைகள் ஒரே வயதை உடைய, ஒரே வகுப்பு படிக்கக்கூடிய மாணவருக்கு இருப்பதால் நீங்கள் எந்த வகையான பாடத்திட்டத்தை தேர்ந்தெடுத்து நடத்தப் போகிறீர்கள் என்பதை முடிவு எடுக்கவும்.  

கல்லூரி மாணவர்களுக்கு பாடம் எடுக்க கூடிய ஆசிரியராக இருப்பின் எந்த பாடத்திட்டத்தில் யுனிவர்சிட்டிக்குத் தகுந்தவாறு மாற்றங்கள் உள்ளதால் இந்தப் பாடத்திட்டத்தில் நீங்கள் சிறப்பு வாய்ந்தவரோ அதை மட்டும் நடத்துவது நல்லது.

ஆன்லைன் வகுப்பு எடுப்பதற்கான நடவடிக்கைகள் 

சிறந்த நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய கணினி, தடையற்ற இணையதள வசதி, தெளிவாக படம் பிடிக்கக்கூடிய கேமரா மற்றும் நல்ல தரமான மைக் வசதி போன்றவை ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்கான அடிப்படை தேவைகள் ஆகும். வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப் போகிறீர்கள் என்பதால் உங்கள் அறையில் குடும்ப உறுப்பினர்கள் உங்கள் அனுமதியின்றி வராதவாறு பார்த்துக் கொள்வது பல்வேறு சங்கடங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உதவும். உங்கள் படிப்பு, உங்களது சுய விவரம், எந்தப் பாடத்தை திட்டத்தை நீங்கள் எடுக்க விரும்புகிறீர்கள் போன்ற தகவல்களை ஆன்லைன் பயிற்சி வகுப்புகளுக்காக தொடங்கப்பட்டு இருக்கும் பல்வேறு வலைதள பிளாட்பார்மில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதற்கு முன்பு உங்களை நன்றாக தயார்படுத்தி, உங்களுக்கு தேவையான அனைத்து ரெவரன்ஸ் தகவல்களையும் உங்கள் அருகில் வைத்துக்கொண்டு, போர்டில் எழுதுவதற்கான பேனாக்கள் மற்றும் அளிப்பான் போன்றவை அருகில் வைக்க வேண்டும்.

உங்களது பயோடேட்டாவை மட்டும் பார்த்து உங்களது கல்வி கற்பிக்கும் திறனை எடை போடுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பதால் இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி சமூக வலைதளங்கள் அல்லது இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் அளிக்கும் தளங்களில் பதிவேற்றம் செய்யும்போது உங்களைப்பற்றிய புரிதல் பல்வேறு பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் சென்று அடைவதற்கான வாய்ப்பு உள்ளது. தனி வலைதளம் மூலமாக பயிற்சி வகுப்புகளை எடுப்பதற்கான திட்டம் ஏதும் இருந்தால், நல்லதொரு வலைதள பெயரை தேர்ந்தெடுத்து உங்களுக்குத் தேவையான மாதிரி வலைதள உள்கட்டமைப்பை செய்து உங்கள் பயிற்சி வகுப்புகளை அதில் விற்பனை செய்வதற்கான முயற்சியை மேற்கொள்ளலாம். 

ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் அதிக மாணவர்களை ஈர்ப்பது எப்படி 

தனி வலைதளம் மூலமாக ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் செய்யப் போகிறீர்கள் என்றால் உங்களுக்கான ஒரு பிராண்ட் அவார்னஸ் உருவாக்குவதற்கு நல்ல வண்ணங்களால் டிசைன் செய்யப்பட்ட லோகோ போன்றவைகளை பயன்படுத்த வேண்டும். உங்கள் வலைதளத்தில் நீங்கள் இடக்கூடிய ஆன்லைன் வகுப்புகளின் வீடியோக்கள் மற்றும் டாக்குமென்ட்களை காலதாமதமின்றி சரியான இடைவெளியில் தொடர்ந்து பதிவேற்றம் செய்து கொண்டே இருக்க வேண்டும். பெரும்பாலான ஆசிரியர்கள் காலம் காலமாக கரும்பலகையை பயன்படுத்தி எழுதி வரும் பயிற்சியை பெற்றிருந்தாலும் டிஜிட்டல் பேனாவை சிரமம் இன்றி பயன்படுத்தும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வது அவசியம். ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கும்போது புதுப்புது தொழில்நுட்பங்களை கொண்ட பொருட்களை உதாரணமாக வைத்து விளக்குவதன் மூலம் பாடத் திட்டங்கள் பற்றிய புரிதலும் புதுப்புது தொழில்நுட்பங்களை பற்றிய புரிதலும் சேர்ந்து கிடைப்பதால் அதிகப்படியான மாணவர்கள் உங்களது வகுப்பை விரும்புவார்கள். சிறு வயது குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் தங்களது ஆசிரியர் மாணவர்கள் உறவு எவ்வளவு நல்லவிதமான கலந்துரையாடல் நடைபெறுகிறதோ அதே அளவு ஆசிரியர் பெற்றோர்கள் இடையே கலந்துரையாடலை முன்னெடுக்க வேண்டும்.

ஆன்லைன் வகுப்புகள் உலகமயமாக்கலின் கீழ் வருவதால் ஏற்கனவே பல ஆயிரக்கணக்கான வலைதளங்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை விரும்பக்கூடிய பல்வேறு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே பிரபலமாக உள்ளது. இத்தகைய பிரபலமான வலைதளங்களில் உங்கள் ஆன்லைன் வகுப்புகள் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் மற்றும் டாக்குமென்ட்களை பதிவேற்றம் செய்து கல்வி கற்பிக்கும் திறனில் உங்களது தனித் திறமையை வெளிப்படுத்த வேண்டும். தனி வலைதளங்கள் மூலம் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க முயற்சி செய்பவராக நீங்கள் இருந்தால் உலக அளவில் உள்ள மிகப்பெரிய ஆசிரியரின் வகுப்புகளைக் கொண்ட வலைதளங்கள் உடன் போட்டி போடக்கூடிய சந்தைப்படுத்துதல் திட்டங்களை முன்னெடுப்பது அவசியம். வலைதள பக்கங்களில் அடிக்கடி உங்கள் விருப்ப படத்தின் பாடங்களின் அரிய தகவல்களுடன் கட்டுரை எழுதுவது அந்த கட்டுரையை சமூக வலைதள பக்கங்களில் பரப்புவது போன்ற நடவடிக்கைகள் மூலம் உங்களது கல்வி கற்பிக்கும் திறனை வெளி உலக மக்கள் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.

உங்களைப் பற்றிய முழு விவரங்களை தெரிவிக்க கூடிய இன்போகிராஃபிக் எனப்படும் படத்தின் மூலமாக விளக்கங்கள் தரக்கூடிய வகையில் உள்ள டாக்குமெண்டை தயார் செய்து பல்வேறு வலைத்தளங்களில் பகிரும் போது உங்களைப்பற்றிய தகவல் பெரும்பாலான நபர்களுக்கு சென்றடைவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்களுக்கான வலைதளங்களில் நீங்கள் பதிவிட்ட ப்ரொபைல் மற்றும் செயலிகள் மற்றும் இதர வாய்ப்புள்ள இடங்களில் உங்களது அதிக ரேட்டிங்கை கொண்ட ரிவ்யூ பெறுவதற்கான முயற்சிகள் அனைத்தையும் செய்ய வேண்டும். நீங்கள் இருக்கக்கூடிய நாட்டை பொருட்படுத்தாமல் நீங்கள் எந்த நாட்டு மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பாடத்தை வழங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்களது கால அட்டவணை இருக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கேட்கக் கூடிய சந்தேகங்கள் எந்த நேரம் ஆயினும் பொருட்படுத்தாமல் பதில் கூறவேண்டும். ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சியடைந்து வந்தாலும் பிற்காலத்தில் முழு கல்வி முறையும் ஆன்லைன் பயிற்சி வகுப்பு சார்ந்து இருக்கும் என்பதால் உங்களுக்கான தகுந்த நேரத்தை எடுத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து சரியான திட்டங்களுடன் முயற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும்.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.