written by | October 11, 2021

அழகு பார்லர் வணிகம்

×

Table of Content


தோல் தொழிலை எவ்வாறு தொடங்குவது

இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் தோல் மற்றும் தோல் பொருட்கள் முக்கிய இடம் வகிக்கிறது. அந்நியச் செலாவணி ஈட்டும் முக்கிய 10 தொழில்களில் லெதர் பிசினஸ் என்பதும் ஒன்றாகும். தோல் தொழிற்சாலை வர்த்தகம் மூலம் ஈட்டப்படும் அந்நியச் செலாவணி இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. உலக அளவில் தோல் தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் மூலப் பொருட்களுக்கான தோல் தேவையில் மாட்டுத்தோல் 20 சதவீதமும், ஆட்டுத்தோல் 11 சதவீதமும் இந்தியாவிலிருந்து உற்பத்தியாகின்றது.

இந்தியாவில் ஆண்டுக்கு 3 பில்லியன் சதுர அடி தோல் மூலப்பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. லெதர் பிசினஸ் மூலம் சுமார் 4.42 மில்லியன் நபர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடடைக்கிறது. இந்தியாவில் சுமார் 3,500 தோல் பதனிடும், ஷூ, ஷூ உதிரி பாகங்கள் உள்ளிட்ட தோல் தொழிலுக்கு சம்பந்தப்பட்ட தொழில் செய்யும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் தோல் ஏற்றுமதி தொழிலில் செய்யும் தொழிற்சாலைகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவை இயங்கி வருகின்றன.

தோல் மூலம் செய்யப்பட்ட ஆடைகள் மற்றும் காலணிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தியாவில் தயாரிக்கப்படும் காலணிகளில் கிட்டத்தட்ட 85 சதவிகிதம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது என்றும் ஒரு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு கிட்டத்தட்ட 5 சதவிகிதம் என்று தெரியவந்துள்ளது. 

தோல் தொழிலில் ஏற்றுமதிக்காக பதப்படுத்தப்பட்ட தோல்கள் ஆயத்த ஆடைகள் அதற்கான துணைப் பொருள்கள் காலணிகள் ஆகியவற்றின் தயாரிப்பில் இந்திய நகரங்களான ஆக்ரா கொல்கத்தா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள வாணியம்பாடி ஆம்பூர் ஆகியவை  முக்கியத்துவம் பெற்றுள்ளன  மேலும் தேசிய அளவிலான ஏற்றுமதி மையங்களை அமைப்பதன் மூலம் தோல் தொழிலில் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன 

தமிழ்நாட்டில் வேலூர், ஈரோடு, திண்டுக்கல், வேலூர்  ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி, பேர்ணாம்பட்டு, மேல்விஷாரம், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 200–க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் மற்றும் ஷூ தொழிற்சாலைகளில் ஒன்றரை இலட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.  ஷூ தொழிற்சாலைகளில் படிக்காத பெண்களுக்கு கூட எளிதில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

லெதர் பிசினஸ் என்ற ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளின் தோலை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முறை மட்டுமே கடந்த 70 ஆண்டுகளாக இருந்து வந்தது. கடந்த பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் காலணிகள் தயாரிப்பு, காலணிகளுக்கான உதிரிபாகங்கள், தோலால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் தோல் ஆடைகள் ஆகியவற்றை உருவாக்கி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு ஏற்ப அரசாங்கம் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை தொழில் முனைவோர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அவற்றை தொழில் முனைவோர் அறிந்த பின்னரே இந்த தொழிலில் இறங்க வேண்டும்.

இந்திய அளவில் லெதர் பிசினஸ் என்பது பொதுவான நான்கு வகைகளில் உள்ளன. அவை,

  1. டேனிங் செக்டார்  எனப்படும் தோல் பதனிடுதல் பிரிவு இந்தத் துறையில் ஒரு வருடத்திற்கு இந்திய அளவில் 3 பில்லியன் சதுர அடிகள் கொண்ட தோல் உற்பத்தி செய்யப்படுகிறது இது உலக அளவில் பதிமூன்று சதவிகிதமாகும் இந்தியாவில் தயாரிக்கப்படும் தோலுக்கு ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக தெரியவந்துள்ளது
  2. அடுத்தது, புட்வேர் செக்டார் என்ற தோல் காலணிகள் தயாரிப்பு ஆகும் இந்தப் பிரிவில் சீனாவுக்கு அடுத்தபடியாக  உலக அளவில் நமது நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது  தோல் பொருட்களுக்கான காலணி தயாரிப்பில் சுமார் 45 முதல் 48 சதவிகிதம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது அவற்றில் ஆண்களுக்கான காலணி வகைகள் 58% பெண்களுக்கான காலணிகள் 30 சதவிகிதம் குழந்தைகளுக்கான காலணிகள் 9% இதர வகைகள் சுமார் 3 சதவிகிதம் என்ற அளவில் உள்ளன.
  3. லெதர் கார்மெண்ட்ஸ் செக்டார் என்பது தோல் ஆடைகள் உற்பத்தி செய்யும் பிரிவாகும். இந்த பிரிவிலும் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தோல் ஏற்றுமதியில் மொத்தம் இந்த பிரிவில் சுமார் 18-லிருந்து 20 சதவிகிதம் வரையில்  ஏற்றுமதி ஆகிறது.
  4. லெதர் கூட்ஸ் அண்ட் ஆக்சஸரீஸ் செக்டார் என்ற  நான்காவது பிரிவில் உலக அளவில்  இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. 

பிசினஸ் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் முதலாவது  தயாரிப்பில் உள்ள பிரிவுக்கு ஏற்றவாறு இடவசதி ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். இரண்டாவதாக  நிறுவன பதிவு  மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு எண் பதிவு செய்து கொள்வது அவசியம்.  மூன்றாவதாக உள்ளூர் அனுமதி,  மாநில மற்றும் மத்திய அரசு நிறுவனங்களில் தரக்கூடிய உரிமங்கள் ஆகியவற்றை பெற வேண்டும். மிக முக்கியமாக சுற்றுச்சூழல் துறையிடமிருந்து தடையில்லா சான்று பெறுவது அவசியமானது. ஏற்றுமதி செய்ய விரும்புபவர்கள் அதற்கேற்ப அரசுத் துறைகளிடம் இருந்து தகுந்த சான்றுகளை மற்றும் உரிமங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். 

பொதுவாக லெதர் பிசினஸ் என்ற வகையில் என்னென்ன வகையான தோல் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது பற்றி பார்க்கலாம்

  1. பெண்களுக்கான காலணி உற்பத்தி
  2. லெதர் ஆக்சஸரீஸ் ஸ்டோர்
  3. லெதர் பேக் தயாரிப்பு
  4. லெதர் கிராப்ட்ஸ் ஐட்டம் தயாரிப்பு
  5. தோல் ஏற்றுமதி
  6. லெதர் பர்னிச்சர்
  7. லெதர் கார்மெண்ட் தயாரிப்பு
  8. தோல் கையுறைகள்  தயாரிப்பு
  9. தோல் பதனிடுதல் தொழிற்சாலை
  10. சேஃப்டி ஷூ மற்றும் லெதர் ஷூ தயாரிப்பு
  11. லெதர் வாட்ச் பேண்ட் தயாரிப்பு  

போன்ற பல்வேறு வகையான முறைகளில் லெதர் பிஸ்னஸ் தொழில் முனைவோர்கள் தங்களுக்கான ஒரு பிரிவை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உற்பத்தி பிரிவுகளை தேர்வு செய்து அவற்றை தயாரித்து உள்நாட்டு சந்தை விற்பனை அல்லது ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். 

இந்திய அளவில் தோல் தயாரிப்பில் அரசாங்கம் பல்வேறு உதவிகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை அளித்து வருகிறது.. அவற்றில் முக்கியமானவற்றை இங்கே பார்க்கலாம்.

  1. இன்டெக்ரேட்டடு டெவலப்மென்ட் ஆப் லெதர் செக்டார்  என்ற அரசு அமைப்பு சிறு தொழில் நிறுவனம் என்ற முறையில் தோல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு மெஷின்கள் கொள்முதல் செய்ய 30% மானியம் அளிக்கிறது.
  2. மெகா லெதர் புட்வேர் அண்ட் ஆக்சஸரீஸ் கிளஸ்டர்  என்ற அரசு அமைப்பானது தோல் மற்றும் தோல் பொருள்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு அதன் உள்கட்டமைப்பு வசதிகளில் பல்வேறு சலுகைகள் அளிக்கிறது மேலும் அந்த உள்கட்டமைப்பு வசதிகளில் குறிப்பிட்ட நிலைகளில் சுமார் 50 சதவிகித அளவுக்கு மானியமும் அளிக்கப்படுகிறது.
  3. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ்  தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் நபர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிப்பதுடன், அது பற்றிய கல்வி பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் அளிக்கிறது. நாடுமுழுவதும் ஆயிரக்கணக்கான நபர்கள் மற்றும் மாணவர்கள் தோல் பொருள்கள் உற்பத்தியில் பயிற்சிகளை பெற்று வருகிறார்கள்.
  4. லெதர் டெக்னாலஜி இன்னோவேஷன் அண்ட் என்விரான்மென்டல் சப்-ஸ்கீம் என்ற திட்டத்தின் கீழ் காமன் எஃப்லூயண்ட் ட்ரீட்மெண்ட் பிளான்ட்  அமைப்பதற்காக அதன் திட்ட மதிப்பில் சுமார் 70 சதவிகித நிதி உதவியை செய்கிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
  5. புரோமோஷன் ஆப் இந்தியன் பிராண்ட்ஸ் இன் லெதர் புட்வேர் அண்ட் ஆக்சஸரீஸ் செக்டார் சப் ஸ்கீம் என்ற திட்டத்தின் கீழ்  குறிப்பிட்ட நிறுவனத்தின் தோல் பொருள் தயாரிப்பு தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு  குறிப்பிட்ட அளவு விற்பனையை எட்டும் பொழுது  அந்த தயாரிப்புக்கான சிறப்பு சலுகைகளை அளிக்கிறது.
  6. அடிஷனல் எம்பிளாய்மெண்ட்  இன்சென்டிவ் லெதர் புட்வேர் அண்ட் ஆக்சஸரீஸ் செக்டார் ஸ்கீம்  திட்டதின் கீழ் தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியில் குறிப்பிட்ட அளவு அரசு பங்களிப்பு எடுத்துக்கொள்கிறது. 

தொழில் முனைவோர் நிச்சயம் அறிந்து வைத்திருக்கவேண்டிய அரசின் அமைப்புகளாவன :

  1.  கவுன்சில் ஃபார் லெதர் எக்ஸ்போர்ட்ஸ் (இந்த கவுன்சிலில் உறுப்பினராக இருக்கக்கூடிய ஏற்றுமதியாளர்கள் அரசு அளிக்கக்கூடிய பல்வேறு சலுகைகளை பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது) 
  2. சென்ட்ரல் லெதர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்
  3. புட்வேர் டிசைன் அண்ட் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட்
  4. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி
  5. சென்ட்ரல் புட்வேர் ட்ரைனிங் இன்ஸ்டிட்யூட்    ஆகியவையாகும்.

மேற்கண்ட வகைகளில்  இந்திய அளவில் தோல் மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் இப்பகுதிகளில் மாநில அளவிலான பல்வேறு தனியார் மற்றும் அரசு அமைப்புகள் ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் அமைப்பது போன்ற நிலைகளில் நவீன ஆலோசனைகளையும் அளித்து வருகின்றன. 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

லெதர் பிசினஸ் தொடங்க விரும்பும் தொழில்முனைவோர்கள் நிச்சயம் சுற்றுப்புற சூழல் அலுவலகத்திலிருந்து முறையான அனுமதி பெற்ற பின்னரே செயல்பட முடியும். மேலும்,  சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் நலன் ஆகிய நிலைகளில் பல்வேறு உத்தரவாதங்களையும் அரசுக்கு அளிக்க வேண்டும். 

  1. தோல் பதப்படுத்துதலில் பிக்கிள் பிரீ டானிங்,  
  2. தோலில் உள்ள முடிகளை அகற்றுவது லோ சல்பைடு என்சைம் பயன்பாடு,  
  3. தோல் கழிவுகள் வெளியேறாமல் தடுப்பதற்காக எலக்ட்ரோ ஆக்சிடேஷன் முறை, 
  4. தோல் ஆலையில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதை தடுக்கும் வகையில் பைக்கோ ரிமெடியேஷன் பைலட் என்ற முறை  மற்றும் 
  5. தொழிலாளர்கள் நலனுக்காக  ஆரோக்கியமான சூழல் மற்றும் முதலுதவி  சம்பந்தப்பட்ட உபகரணங்களை அமைப்பது 

ஆகிய பல்வேறு வகைகளில் நவீன முறைகளை கையாளுவது முக்கியமானது.

இந்தியாவில் தோல் ஆடை மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 37 சதவீதம் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் இருந்து செல்கிறது. தோல் ஆடைகள், ஷூக்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், இத்தாலி, ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  இந்திய அளவில் அமைந்துள்ள தோல் தொழிற்சாலைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வர்த்தகம் நடக்கிறது. ஏற்றுமதியால் ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி கிடைக்கிறது . சர்வதேச அளவில் பொருள்களுக்கு இருந்து வரும் போட்டியில் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டுமானால் உற்பத்தியில் சிறப்பான தரம் இருக்க வேண்டும் என்பது அவசியம். 

தோல் தொழில் கண்காட்சி

இந்தியாவின் தோல் ஏற்றுமதியை மேம்படுத்தவும், லெதர் பிசினஸ் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் தோல் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவை முதலீடு மற்றும் உற்பத்திக்கு உகந்த இடமாக மாற்றுவதோடு வடிவமைப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மையமாக மாற்றும் நோக்கத்தில் இக்கண்காட்சிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இதில், இந்தியா மற்றும் பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தோல் பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் இக்கண்காட்சியில் வைக்கப்படும். மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம், இந்திய காலணி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, இந்திய தோல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் இந்திய காலணி உதிரிப்பாகங்கள் உற்பத்தியாளர் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் இக்கண்காட்சியை ஒருங்கிணைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.