written by | October 11, 2021

ஓட்டுநர் பள்ளி வணிகம்

×

Table of Content


ஒரு ஓட்டுனர் பயிற்சி பள்ளி தொழிலை எவ்வாறு தொடங்குவது..?

டிரைவிங் ஸ்கூல் பிசினஸ் ஆரம்பிப்பது என்று திட்டமிடும் தொழில் முனைவோர்கள் டூவீலர் மற்றும் ஃபோர் வீலர் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு கற்றுத் தர தயாராக இருக்க வேண்டும். டிரைவிங் ஸ்கூல் என்றாலே கண்டிப்பாக பெண்களுக்கான ஸ்கூட்டர் மற்றும் கார் ஆகியவற்றை கற்றுத் தருவதற்கான பெண் ஓட்டுநர் பயிற்சியாளர்கள் நிச்சயம் தேவைப்படுவார்கள். இன்றைய கார்ப்பரேட் நாகரீக உலகில் பெண்கள் டூவீலர் மற்றும் ஃபோர் வீலர் ஆகியவற்றை ஓட்டுவதற்கு தயார் நிலையில் இருக்கிறார்கள்.  பொருளாதார சுதந்திரம் பெற்ற பெண்கள் நிச்சயம் காரோட்ட கற்றுக்கொள்ள  நிச்சயம் விரும்புகிறார்கள். மேலும், பெண்கள் டூவீலர் ஓட்டுவதற்கான பயிற்சியையும் பெறவும் விரும்புகிறார்கள். ஆண்கள் பெரும்பாலும் சொந்த கார் வாங்க முயற்சிக்கும் முன்னதாகவே அதை ஓட்டக்கூடிய தகுதி பெற்றவர்களாக ஆகவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒரு சிலர் தொழில் ரீதியான  ஓட்டுனராக வேண்டுமென்ற நோக்கத்தில் டிரைவிங் பயிற்சி பெற வருகிறார்கள். வெவ்வேறு தொழில் மற்றும் வாழ்க்கை சூழலில் உள்ள மனிதர்கள் வாகனங்களை இயக்கும் பயிற்சி பெற வருவார்கள். அவர்களின் விருப்பத்தை தொழில் ரீதியாக அணுகுவது மட்டுமல்லாமல், டிரைவிங் தொழிலில் உணர்வுபூர்வமாகவும் இருக்க வேண்டியதாக இருக்கும். காரணம் பயிற்சியாளர் நேரடியாகவே ஒருவருக்கு வாகனங்களை எவ்வாறு ஓட்டுவது என்பதை செயல்முறை  விளக்கமாகவே செய்து காட்டுவார். அதனால் பயிற்சியாளருக்கு டென்ஷன் ஆகாத சுபாவமும், இனிமையான பேச்சும் அவசியமானது.

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் மோட்டார் வாகன விதிகள் மற்றும்  டிராபிக் ரூல்ஸ் ஆகியவற்றை கண்டிப்பாக வாடிக்கையாளர்களுக்கு சொல்லித்தர வேண்டும். ஸ்கூட்டர் போன்ற டூவீலர்  வகைகளை  ஓட்டுவதற்கு பயிற்சி பெற பெண்கள் பெரும்பாலும் வருவார்கள். ஆண்கள் அவ்வளவாக டூவீலர் பயிற்சிபெற வருவதற்கு வாய்ப்பில்லை. அதனால்,  நல்ல கண்டிஷனில் இருக்கக்கூடிய  இரண்டு அல்லது மூன்று ஸ்கூட்டர்கள் நிச்சயம் தேவைப்படும். ஃபோர் வீலர் ட்ரெய்னிங் என்ற நிலையில் கார் ஓட்டும் பயிற்சி பெறுவதற்காகவே பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியை தேடி வருகிறார்கள். பயிற்சி தருவதற்காக ஹாட்ச்பேக் வகை கார்களை நல்ல கண்டிஷனாக பராமரித்து வைத்திருந்து அதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு கற்றுத்தர வேண்டும். ஹாட்ச்பேக் வகை கார்கள் எளிமையான கட்டமைப்பு கொண்டவையாக இருப்பதுடன், தொடக்கத்தில் ஓட்டி பழகுவதற்கு எளிமையாகவும் அமைந்திருக்கும். மேலும், ஹெவி லைசென்ஸ் வாகனங்கள் என்ற வகையில் பஸ் மற்றும் லாரிகள் ஓட்டவும் கற்றுத் தர  விரும்பும் தொழில் முனைவோர்கள்  அதற்கு ஏற்ப பஸ் ஒன்றை நிச்சயம் நல்ல கண்டிஷன் உடன் கூடியதாக வாங்கி பயன்படுத்தலாம்.

டிரைவிங் ஸ்கூல் பிசினஸ் என்பது பெரும்பாலும் மூன்று வகைகளில் வாடிக்கையாளர்களுக்கான ஓட்டுநர் பயிற்சியை அளிக்கிறது. அதில் முதலாவது, கமர்சியல் டிரைவிங்  பயிற்சி ஆகும்.  இரண்டாவது, பிரைவேட் டிரைவிங் பயிற்சி அளிப்பதாகும். மூன்றாவது மாற்றுத் திறனாளிகளுக்கான டிரைவிங் பயிற்சி ஆகும்.

டிரைவிங் ஸ்கூல் பிசினஸ் தொடங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

  • குறிப்பிட்ட ஒரு நகரத்தில் எந்த ஏரியாவில்  தொழிலை தொடங்க வேண்டும் என்பதில் தெளிவான முடிவு அவசியம்.
  • ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி  தொடங்குவதற்கான முதலீடு ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பங்குதாரர்கள் அல்லது தொழிலில் முன்னதாகவே அனுபவம் பெற்றவர்களை சேர்த்துக்கொண்டும் தொழிலை தொடங்கலாம்.
  • பயிற்சி பள்ளி ஆரம்பிக்கக் கூடிய ஏரியாவில் வேறு டிரைவிங் ஸ்கூல் இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • அவ்வாறு இருந்தால் அவர்கள் எந்த வகையான பயிற்சியை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.
  • தொடங்கப்படும் பயிற்சி பள்ளிக்கு எந்தந்த வகையிலான வாகனங்கள்  கொள்முதல் என்ற நிலையில் வாங்க வேண்டும்  என்ற தெளிவான முடிவும் அவசியம்.

மேற்கண்ட விஷயங்களில் சரியான முடிவு எடுக்கப்பட்ட பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

போட்டியாளர்களை கவனத்தில் கொள்ள வேண்டும்

எந்த ஒரு தொழிலிலும் போட்டியாளர்கள் இல்லாமல் களத்தில் செயல்பட இயலாது. அந்த அடிப்படையில்  டிரைவிங் ஸ்கூல் பிசினஸ் தொழில் முனைவோர் போட்டியாளர்களை கருத்தில்கொண்டு  வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி மற்றும் கட்டண முறைகளில் தேவையான ஆக்கபூர்வமான மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும்.

கச்சிதமான இடம் அவசியம் 

ஓட்டுனர் பயிற்சி பள்ளி என்றாலே வாகனங்கள் நிறுத்துவதற்கு  நல்ல இடவசதி  உள்ள இடம்  தேவைப்படும்.  எப்போதும் குறிப்பிட்ட ஒரு இடத்தில் தொடங்கப்பட்ட டிரைவிங் ஸ்கூல் பிசினஸ் குறைந்தபட்சம் மூன்று வருடங்களுக்கு அவது அந்த இடத்தில் செயல்படவேண்டும். அதன் பின்னர் தேவையான வாகனங்கள் நிறுத்துவதற்காக அல்லது பயிற்சி மேற்கொள்வதற்காக அருகில் உள்ள  இடத்தை வாடகைக்குக் கூட எடுத்துக் கொள்ளலாம். 

குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் அல்லது மார்க்கெட் பகுதி ஆகியவற்றில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி அலுவலகம் இருப்பது வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்வதற்கு வசதியாக இருக்கும்.  அலுவலகம் என்ற நிலையில் ஒரு கிளாஸ் ரூம் மற்றும்  ஒரு ஆபீஸ் ரூம் என்ற இரு அறைகள் நிச்சயம் தேவைப்படும். 

பதிவு  செய்வது முக்கியம்

எப்போதும் அரசாங்க உரிமம் பெற்ற ஓட்டுனர் பயிற்சி பள்ளி என்பது  வாடிக்கையாளர்களை  கவரும் அம்சமாக இருக்கும்.  பயிற்சி அளிப்பதற்கான அனுமதியை மினிஸ்ட்ரி ஆப் கார்ப்பரேட் அஃபைர்ஸ்  என்ற அரசு அமைப்பின் மூலம் பெற வேண்டும்.  இந்த அமைப்பானது நிறுவனங்களுக்கன  மேலாண்மை சட்டம் -2013 மூலம்  தொழில்முனைவோர்கள் அது நிறுவனங்கள் அளிக்கக்கூடிய சேவைகளுக்கு வழிகாட்டுதல்கள் மற்றும் வரையறைகளை அளிக்கிறது. 

ஆர்.டி.ஓ அலுவலக பதிவு

குறிப்பிட்ட ஒரு ஏரியாவில் டிரைவிங் ஸ்கூல் பிசினஸ்  ஆரம்பிக்கும் தொழில் முனைவர்கள் அந்த ஏரியாவில் அமைந்துள்ள  ரீஜனல் ட்ரான்ஸ்போர்ட் ஆபீஸ் மூலம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.  அதாவது டிரைவிங் ஸ்கூல் சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கான பதிவு,  மோட்டார் வாகனங்களுக்கான  வரி செலுத்தபட்டதற்கான அத்தாட்சி,  போக்குவரத்து உரிமம்,  மோட்டார் வாகனங்களுக்கான இன்ஸ்யூரன்ஸ்  உள்ளிட்ட அடிப்படையான உரிமங்களை முறைப்படி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

டிரைவிங் இன்ட்ரக்டர்  லைசன்ஸ் 

ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு நிச்சயம் ஆர்டிஓ அலுவலகம் அங்கீகாரம் அளித்த பயிற்சியாளர் நிச்சயம் தேவை. அவர் மூலம்தான் வாடிக்கையாளர்களுக்கு பயிற்சியை அளிக்க வேண்டும். நிறுவனத்தின் உரிமையாளர் பெரும்பாலும் அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளராக இருப்பதே பெரும்பாலான நிறுவனங்களுக்கு நடைமுறையாக இருக்கிறது.  டிரைவிங் இன்ஸ்பெக்டர் லைசென்ஸ் பெற  விரும்புபவருக்கு 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.  தேவையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் கண்பார்வையில் எவ்விதமான குறைகளும் இல்லாமல் குறிப்பாக கலர் பிளைன்ட்னெஸ்  இருப்பது கூடாது.  கண் பார்வையில் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு நிச்சயம் பயிற்சியாளர் உரிமம் அளிக்கப்படுவதில்லை. மேலும், உடற்கூறு  மற்றும் மனோரீதியான தகுதி சோதனையிலும் அவர்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  மிக முக்கியமாக, சட்ட விரோதமான நடவடிக்கைகளில் அவருக்கு எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதற்கான ஆதாரங்களை நிச்சயம் சமர்ப்பிக்க வேண்டும்.  நிறைவாக அவர் தன்னுடைய ஓட்டுநர் உரிமத்தின் அடிப்படையில் எந்தவிதமான போக்குவரத்து விதிமீறல்களிலும் ஈடுபட்டு தண்டனை பெறவில்லை  என்பதற்கான சான்றையும்  அளிப்பது முக்கியமானது. மேற்குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தையும் பூர்த்தி செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்கான உரிமம் வழங்கப்படும்.

திட்டமிட்ட செலவுகள்

தொழில்ரீதியாக ஒரு நிறுவனத்தின் வருமானம் மற்றும் செலவுகள் ஆகியவற்றில் சரியான திட்டம் அவசியமானது.  தொழில் மூலம் ஒரு நிலையான வருமானம் வருகிறது என்ற நிலையில் செலவுகளை சமாளிப்பது எளிதாக இருக்கும்.  ஆனால் ஆரம்ப கட்டத்தில் அந்த நிலையை நிச்சயம் எதிர்பார்க்க முடியாது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான எரிபொருள் செலவு  மற்றும் பராமரிப்பு செலவுகள்,  நியமனம் செய்யப்பட்ட  பயிற்சியாளருக்கான  சம்பளம்,  வாடகை இடமாக இருந்தால் அதற்கான மாதாந்திர வாடகை உள்ளிட்ட பல  செலவினங்களை சமாளிக்க வேண்டும். அதனால் வங்கிகள் மூலம் கடன் பெற்று செலவினங்களை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும். ஒரு சிலர் தங்கள் கைகளில் உள்ள சேமிப்பு அல்லது இதர வகைகளில் செய்யப்பட்ட முதலீடு ஆகியவற்றின் மூலம் செலவினங்களை சமாளிக்க முயற்சி செய்வார்கள்.  தொழில் முனைவோர் இதுபோன்ற நிதி சார்ந்த விஷயங்களில்  தகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

நிறுவன இன்ஷ்யூரன்ஸ்

டிரைவிங் ஸ்கூல் பிசினஸ்  தொழில்முனைவோர்கள் நிறுவனத்தின் வாகனங்களுக்கு மட்டும் இன்ஷூரன்ஸ் எடுப்பது போதுமானதாக இருக்காது.  அந்த நிறுவனத்துக்கும்  இன்ஷூரன்ஸ்  செய்யப்பட்டிருக்க வேண்டும்.  இது வெறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே.  அரசாங்க விதிமுறைகளின்படி மோட்டார் வாகனங்களுக்கு இன்ஷூரன்ஸ் என்பது மிக அவசியம்.  அதன் அடிப்படையில் பயிற்சி  நிறுவனத்தில் உள்ள  அனைத்து வாகனங்கள்  மட்டுமல்லாமல் பயிற்சி அளிக்கும் இன்ஷ்யூரன்ஸ் மிகவும் அவசியம்.

விளம்பரங்கள் அவசியம்

ஒரு தொழில் நிறுவனம் வாடிக்கையாளர் மத்தியில் பிரபலம் அடைய வேண்டுமானால் அதற்கான எளிய வழி விளம்பரம் செய்வதுதான். ஆனால் விளம்பரம் என்பது பொதுமக்களிடம் எளிதாக சென்று சேரும் வகையில் இருக்க வேண்டும்.  ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கான விளம்பரம் என்பது  சம்பந்தப்பட்ட ஏரியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று சேர்வது போல் இருக்க வேண்டும்.  அதன் அடிப்படையில் அவ்வப்போது நடைபெறும் திருவிழா காலங்களில்  நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதற்கான விளம்பர செலவுகளை ஏற்றுக் கொள்ளலாம்.  முக்கியமான சாலை சந்திப்புகளில் நிறுவனத்திற்கான விளம்பர போர்டுகளை தக்க அனுமதி பெற்று வைக்கலாம் . முக்கியமாக பயிற்சி அளிக்கும் வாகனங்களில் நிறுவனத்தின் விளம்பர போர்டு கண்டிப்பாக இடம் பெற்று இருக்க வேண்டும். அதில் தகவல் தொடர்புக்கான தொலைபேசி எண் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருப்பது அவசியம்.

வாடிக்கையாளர்களின் கருத்து

வெற்றி பெற்ற தொழில்முனைவோர்கள் அனைவரிடமும் உள்ள கூறு வழக்கம் என்னவென்றால் வாடிக்கையாளர்கள் உடைய கருத்துக்களை அவர்கள் ஒவ்வொரு முறையும் கேட்டுப் பெறுகிறார்கள் என்பதே.  அதனால் டிரைவிங் ஸ்கூல் பிசினஸ் செய்பவர்கள் எல்லா வாடிக்கையாளர்கள் இடமும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது தொழிலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லக்கூடிய பிரதான விஷயமாக இருக்கும். 

அதிநவீன தொழில்நுட்பம்

சமீபத்தில் சென்னையில் உள்ள மோட்டார் வாகன அமைப்பு  ஒன்று ஓட்டுனர் பயிற்சி முறைகளில் அதிநவீனமான ஒரு முறையை ஆசியாவிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் அமைந்த அட்வான்ஸ் டிரைவிங் சிமுலேட்டர் மெத்தட் ஆகும்.  அதாவது, இருந்த இடத்தில் இருந்தபடியே விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் ஒரு காரை  ஓட்டுவதற்கு பயிற்சி பெறலாம். இந்த முறையில் டிராபிக் சிக்னல், பாதசாரிகளுக்கான இடம், பாதுகாப்பு விதிமுறைகள், போக்குவரத்து குறியீடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ரோடு டிரைவிங் தொழில்நுட்ப விஷயங்களை ஒரு அறைக்குள் இருந்து கற்றுக்கொள்ள முடியும். 

இந்தப் பயிற்சியில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் விர்ச்சுவல் ரியாலிட்டி ஆக பயிற்சி பெற்றாலும்கூட சம்பந்தப்பட்ட வாகனத்தை எவ்வாறு ஓட்டினோம், பின்னால் வரக்கூடிய ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விட்டோமா, எதிரே வரக்கூடிய வாகனத்தை அனுசரித்து வண்டியை சரியாக ஓட்டினோமா, ஹார்ன் அடித்த வாகனத்திற்கு வழி விட்டோமா ஆகிய விஷயங்களை எவ்வாறு செய்தோம் என்பதை பதிவாக வைத்திருப்பார்கள். பின்னர், அதை வாடிக்கையாளர் கவனித்து அவரது தவறுகள் என்ன என்பதை தெரிந்துகொண்டு அதை சுலபமாக சரி செய்து கொள்ள முடியும்.  இந்த முறையானது நிச்சயம் கார் அல்லது கனரக வாகனம் ஓட்டிப்பழகும் வாடிக்கையாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும். 

 

 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.