எம்.எஸ்.எம்.இ பதிவு என்றால் என்ன? எம்.எஸ்.எம்.இ பதிவின் நன்மைகள் மற்றும் எம்.எஸ்.எம்.இ பதிவு சான்றிதழை எவ்வாறு பெறுவது?
எம்.எஸ்.எம்.இ பதிவு என்றால் என்ன?
இந்தியா போன்ற வளரும் நாடுகளின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கக்கூடிய குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய வகையில் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த எம்.எஸ்.எம்.இ பதிவு திட்டம். எம்.எஸ்.எம்.இ மைக்ரோ ஸ்மால் மீடியம் என்டர்பிரைசஸ் என்ற ஆங்கில சொற்களின் முதல் எழுத்துக்களை கொண்டு நாம் குறிப்பிட்டு வருகிறோம். இந்தியாவில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கையின் கணக்கின்படி ஏறத்தாழ 90 சதவீதமான நிறுவனங்கள் இந்த எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் ஆகவே இருக்கின்றன. 45 சதவிகிதத்திற்கும் மேலான இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு 50 சதவிகிதத்திற்கு மேலான ஏற்றுமதி பொருட்களை எம்.எஸ்.எம்.இ வரையிலுள்ள நிறுவனத்தின் மூலம் இந்திய நாட்டிற்கு கிடைக்கிறது. இந்திய அரசாங்கத்தால் இதற்கென தொடங்கப்பட்ட அரசாங்க வலைதள கணக்கின்படி ஏறத்தாழ 6 ஆயிரம் தொழிற்சாலை மற்றும் வர்த்தக பிரிவுகள் இந்த எம்.எஸ்.எம்.இ திட்டத்தின் கீழ் வரக்கூடிய தொழில்களாக கருதப்படுகிறது.
கட்டாயமான பதிவாக இந்தியா அரசு அறிவிக்காவிட்டாலும் இதில் சேரும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவதாக தொழில் ஆரம்பிக்கும் அனைவரும் இத்திட்டத்தில் உள்ள பலன்களை பயன்படுத்திக் கொள்வதற்காக சேர்ந்து விடுகிறார்கள். குறிப்பாக கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட இந்திய அரசின் வருடாந்திர பட்ஜெட் தாக்கலில் இத்திட்டத்தின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரையிலான மானியம் வழங்கப்படும் வாய்ப்புள்ளது என்பதையும் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் மட்டும்தான் வரும் என்ற பாகுபாடில்லாமல் சேவை சம்பந்தமான தொழில் நிறுவனங்களும் பங்கு வைக்கின்றது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் கீழ் உள்ள நிறுவனங்களை நடத்தி வரும் தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் வளர்ச்சியின் அடிப்படையிலேயே இந்தியாவின் வளர்ச்சியும் சார்ந்துள்ளது என்பதை இத்தகைய தரவுகள் மூலம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
எம்.எஸ்.எம்.இ திட்டத்தில் நிறுவனங்களை சேர்ப்பதற்கான அளவுகோல்
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு குறிப்பிட்ட முதலீட்டின் அடிப்படையிலும் சேவை சார்ந்த தொழில்களுக்கு ஒரு குறிப்பிட்ட முதலீட்டின் அடிப்படையிலும் இதன் பிரிவுகள் வகைப்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட 2019 பட்ஜெட்டின் படி உற்பத்தி சார்ந்த தொழில் மற்றும் சேவை சார்ந்த தொழில் என இரண்டிற்கும் வேறு வேறு அளவுகோல் நிர்ணயிக்காமல் ஒரே மாதிரியான வரையறையின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் வரையிலான முதலீட்டை கொண்டதாகவும் ஆண்டு டர்ன் ஓவர் ஐந்து கோடிக்கும் குறைவாக உள்ளதாகவும் இருந்தால் மைக்ரோ நிறுவனத்தின் கீழும், பத்து கோடி ரூபாய் வரையிலான முதலீட்டை கொண்டதாகவும் ஆண்டு டர்ன் ஓவர் ஐம்பது கோடிக்கும் குறைவாக உள்ளதாகவும் இருந்தால் ஸ்மால் நிறுவனத்தின் கீழும், இருபது கோடி ரூபாய் வரையிலான முதலீட்டை கொண்டதாகவும் ஆண்டு டர்ன் ஓவர் நூறு கோடிக்கும் குறைவாக உள்ளதாகவும் இருந்தால் மீடியம் நிறுவனத்தின் கீழும் வரையறை செய்யப்படுகிறது. வளரும் தொழிலாளர்களின் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்காகவே இத்தகைய அதிகப்படியான முதலீட்டு வரையறையை கொடுத்துள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. முதலீடு மற்றும் டர்ன் ஓவர் என இரண்டிலும் உங்களது நிறுவனம் பொருந்தும்படியாக இருந்தால் மட்டுமே எம்.எஸ்.எம்.இ திட்டத்தின் கீழ் உள்ள பலன்களை அனுபவிக்க முடியும்.
எம்.எஸ்.எம்.இ பதிவை யார் செய்ய வேண்டும் மற்றும் பதிவு செய்ய தேவையான சான்றிதழ்கள் என்ன?
எம்.எஸ்.எம்.இ பதிவு செய்ய வேண்டுமென்றால் ஆதார் கார்டு கண்டிப்பாக இருக்க வேண்டும். இதில் பதிவு செய்யப்படும் அனைத்து விவரங்களையும் ஆன்லைன் மூலமாக மட்டுமே நீங்கள் செய்யவிருப்பதால் மற்ற படியான எந்தவித சான்றிதழ்களும் தேவை இருப்பதில்லை. உங்களது ஆதார் கார்டு பதிவு செய்வதன் மூலம் ஆதார் கார்டில் ஏற்கனவே இணைத்துள்ள பான் கார்டு மற்றும் ஜிஎஸ்டி எண்கள் போன்ற விவரங்களை தானாகவே எடுத்துக்கொள்ளும். இன்றைய சூழ்நிலையில் பான் கார்டு இல்லாமலேயே எம்.எஸ்.எம்.இ பதிவு செய்ய முடியும். ஆனால் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் உங்களது பான் கார்டு விவரங்களை சமர்ப்பித்தல் அவசியமாகும். 2021 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பதிவு செய்ய முற்படுவர்களுக்கு ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இரண்டும் அவசியமாக இருத்தல் வேண்டும்.
உத்யோக் ஆதார் திட்டம் மற்றும் என்டர்பர்னர் மேலாண்மை திட்டம் போன்றவற்றின் மூலமாக பதிவு செய்து இருப்பவர்களும் 2021 ஏப்ரல் மாதத்திற்குள் உங்களது டேட்டாக்களை மறு பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே நடத்திக்கொண்டிருக்கும் நிறுவனங்களை இதுவரை பதிவு செய்யாமல் இருந்தாலும், இப்பொழுது நீங்கள் இந்த வலை தளத்தில் சென்று எம்.எஸ்.எம்.இ பதிவு செய்து கொள்வது நல்லது. உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு மட்டுமே இதில் பதிவு செய்ய முடியும் என்பதால் டிரேடிங் தொழில் செய்யக்கூடிய நபர்களுக்கு இதில் எந்தவித சம்பந்தமும் இல்லை. உங்களது நிறுவனத்தை ஒருமுறை பதிவு செய்துவிட்டால் மற்ற ஊர்களில் நீங்கள் தொடங்க இருக்கும் கிளைகளுக்கு அல்லது துணை நிறுவனங்களுக்கு பதிவு செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை. இந்த எம்.எஸ்.எம்.இ பதிவை ஒருமுறை உங்கள் நிறுவனத்திற்கு செய்து விட்டால், ஆண்டு ஆண்டுக்கு புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
எம்.எஸ்.எம்.இ பதிவு செய்யும் முறை
udyamregistration.gov.in என்ற அரசாங்க இணையதளத்தின் மூலமாக மட்டுமே எம்.எஸ்.எம்.இ பதிவை உங்களது நிறுவனத்திற்கு பெற முடியும். பான் கார்டு வைத்து பதிவு செய்யும் முறை மற்றும் பான் கார்டு இல்லாமல் பதிவு செய்யும் முறை என இரண்டு விதமான பதிவு முறையிலும் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
1) பான் கார்டு பயன்படுத்தி பதிவு செய்யும் முறைக்கான விளக்கம்
குறிப்பிடப்பட்ட அரசாங்க வலைதளத்தில் சென்று புதிய நிறுவனங்களுக்கான பதிவு செய்ய முற்படும்போது உங்களது ஆதார் கார்டு மற்றும் பெயர் விவரங்களை இட வேண்டும். ஆதார் கார்டு உடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு கடவுச்சொல்லை அனுப்ப சம்மதிக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் உங்களது தொலைபேசி எண்ணுக்கு வரும் கடவுச்சொல்லை அதில் பதிவு செய்ய வேண்டும். உங்களது ஆதார் கார்டு உடன் ஏற்கனவே பான் கார்டு இணைக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில் உங்களது பான் கார்ட் விவரங்கள் சரி பார்க்க வேண்டும் என்ற அனுமதி கேட்கும். அதில் உள்ள பான் கார்டு விவரங்கள் சரியாக ஒத்துப் போகும் பட்சத்தில் பான் கார்டு தகவல்கள் உண்மை என்ற அனுமதி அளிக்க வேண்டும். பான் கார்டு தகவல்களை சரி என்று அனுமதி அளித்த பிறகு உதயம் ரெஜிஸ்ட்ரேஷன் வலைதள பக்கம் திறக்கும். இந்த வலைதள பக்கத்தில் உங்களது நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் சரியான முறையில் பதிவிட்ட பிறகு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு இறுதியாக சமர்ப்பிக்கும் போது உங்களது தொலைபேசி எண்ணுக்கு மற்றொரு முறை கடவுச்சொல் அனுப்பப்படும். இந்தக் கடவுள் சுல்தான் உங்களது நிறுவனம் பதிவு செய்ததற்கான ஆதாரமாகும். இதன் பிறகு ஓரிரு நாட்களில் உங்களது நிறுவனத் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு உத்யோக் ரெஜிஸ்ட்ரேஷன் சான்றிதழ் வழங்கப்படும்.
2) பான் கார்டு இல்லாமல் பதிவு செய்யும் முறை
பான் கார்டு இல்லாமல் பதிவுசெய்யவும் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து செய்த முறையையும் கொண்டுள்ளது. உங்களது பான் கார்டு இல்லாதபடியால் ஆதார் கார்டுடன் இணைக்க படாமல் இருப்பதாலும் தொலைப்பேசிக்கு அனுப்பப்பட்ட கடவுச்சொல்லை இட்ட பிறகு பான் கார்டு சரிபார்க்கும் வலைதள பக்கத்திற்கு செல்லாமல் உங்களுக்கு பேன்கார்டு இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி உடைய பக்கம் காட்சியளிக்கும். இதில் நோ என்ற விருப்பத்தை தேர்வு செய்து அடுத்த பக்கத்திற்கு செல்வதற்கான அனுமதி அளிக்க வேண்டும். இதன் பிறகு மேலே குறிப்பிட்டபடி உங்களது நிறுவனம் சார்ந்த தகவல்களை தெரிவித்த பிறகு சமர்ப்பிக்கும் பொழுது தொலைபேசிக்கு அனுப்பப்படும் பதிவு என்னை பத்திரமாக குறித்து வைத்துக் கொள்ளவும். இப்போதைய நிலைமையில் பான் கார்டு அவசியம் இல்லாமல் இருந்தாலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பான் கார்டு பதிவு செய்ய வேண்டும் என்ற அரசாணை இருப்பதால் அதற்குள் உங்களது பான் கார்டு பெற்று இவ்வலைதளத்தில் சமர்ப்பிப்பது நல்லதாகும்.
3) இ.எம்-ll, யு.ஏ.எம் வைத்திருப்பவர்கள் நிறுவனத்தை பதிவு செய்யும் முறை
உங்களது நிறுவனத்தை ஏற்கனவே இ.எம்-ll, யு.ஏ.எம் பதிவு செய்திருக்கும் பட்சத்தில் உங்களது நிறுவனத்தை எம்.எஸ்.எம்.இ பதிவு செய்ய வேண்டும் என்றால் வலை தளத்தின் முகப்பு பக்கத்தில் உங்களுக்கென்று கொடுக்கப்பட்ட தனி பதிவு செய்யும் பக்கத்தை திறக்க வேண்டும். அதில் திறக்கும் பக்கத்தில் உங்களது உத்யோக ஆதார் எண்ணை பதிவு செய்த பிறகு கடவுச்சொல்லை தொலைபேசி வாயிலாகவோ அல்லது ஈமெயில் முகவரி வாயிலாகவோ பெறுவதற்கான விருப்பத்தை தேர்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த விருப்பத்தின்படி வந்த கடவுச்சொல்லை சமர்ப்பித்து உங்களது நிறுவனத்தின் தகவல்களை இட்டு உங்களது ரெஜிஸ்ட்ரேஷன் முடித்துக் கொள்ளலாம்.
எம்.எஸ்.எம்.இ பதிவு செய்வதன் மூலம் கிடைக்கப்பெறும் நன்மைகள்
- எம்.எஸ்.எம்.இ பதிவு செய்வதன் மூலமாக வங்கிகளில் மற்ற பயன்பாடுகளுக்கு கிடைக்கக் கூடிய வட்டி விகிதத்தை விட மிகவும் குறைந்த வட்டி விகிதமான 1% to 10% அளவில் கடன்களை பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
- இத்திட்டத்தின் மூலம் கடன் பெரும் நிறுவனங்களுக்கு திருப்பி செலுத்தும் கால அளவின் நிர்ணயமும் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அதிகமாக வழங்கப்படுகிறது
- அரசாங்கத்தால் வழங்கப்படும் டெண்டர்களை நீங்கள் எடுக்க வேண்டுமென்றால் இந்த வகையான எம்.எஸ்.எம்.இ பதிவு செய்த நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
- பிற்காலத்தில் வழங்கப்படும் அரசாங்க சலுகைகளை பெறுவதற்காகவும், தள்ளுபடி காப்புரிமை போன்ற திட்டங்களில் பயன் பெறுவதற்காக இத்தகைய எம்.எஸ்.எம்.இ பதிவுசெய்தல் இருத்தல் வேண்டும்.
- ஒரு கோடி ரூபாய் அளவிலான மானியத் தொகைகளை பெறுவதற்கான வாய்ப்பு இதில் பதிவு செய்த நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன.
- எம்.எஸ்.எம்.இ பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு விதமான மின்சார கட்டண சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
- உங்களுக்கு வர வேண்டிய பணத்தில் ஏதேனும் நிலுவை ஏற்பட்டால் வட்டியுடன் சேர்த்து வசூலிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
- காப்புரிமை பெறுவதற்காக நீங்கள் செலவழிக்கும் தொகையில் 50 சதவீதத்தை மானியமாக பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
- உங்களது நிறுவனங்களுக்கு ஐஎஸ்ஓ சர்டிபிகேட் பெறுவதற்காக நீங்கள் செலவழிக்கும் முழு தொகையை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
- எந்த ஒரு செலவும் இல்லாமல் இந்திய அரசாங்கத்தின் கீழ் உங்களது நிறுவனத்தை பதிவு செய்வதன் மூலமாக இந்திய அளவில் உங்களது நிறுவனத்திற்கான அங்கீகாரம் கிடைக்கப் பெறும்.