written by | October 11, 2021

கிரானா கடை உரிமங்கள்

×

Table of Content


மளிகை விற்பனைக் கடையை தொடங்குவதற்கான அனுமதிகள் என்னென்ன மற்றும் அவற்றை பெறுவது எப்படி?

சில்லரை விற்பனையில் மளிகை கடைகளில் பங்கு 

இந்தியா மட்டுமல்லாது உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் மிக முக்கியமான வணிகமாக கருதப்படுவது சில்லரை விற்பனை வணிகம் ஆகும். இந்த சில்லரை விற்பனை வணிகத்தின் மிக முக்கிய விற்பனைப் பொருளாக விளங்குவது என்னவென்றால் மளிகைக் கடை மற்றும் உணவகங்கள் ஆகும். சில்லரை விற்பனை வணிகர்கள் மூலமாகவே இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வளர்ந்து வரும் சில்லரை விற்பனை வணிகர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மளிகை கடைகளில் பல்வேறு வகையான உணவு சார்ந்த பொருட்களையும் உணவு சாராத சில பொருட்களையும் விற்கக்கூடிய மிகச்சிறந்த சில்லறை வணிகம் ஆக விளங்குகின்றது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மளிகைக் கடைகளில் விற்கும் பொருளின் மூலமாக மிகப்பெரிய பொருளாதார சுழற்சி ஏற்பட்டு கொண்டிருக்கிறது.

நீங்கள் ஒரு சிறிய மளிகை கடையை நடத்தி வந்தாலும் பெரிய நிறுவனங்களுக்கு ஈடான அனைத்து விதமான அரசாங்க விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த வேண்டியதாக இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆகவே நீங்கள் ஒரு மளிகைக் கடையை திறக்க விரும்பினால் அனைத்து விதமான சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட அனுமதி சான்றிதழ் பெற்று நடத்தி வந்தால் பல்வேறு விதமான அரசாங்க அபராத தொகையில் இருந்து தப்பிக்க முடியும். மளிகைக்கடை தொடங்கும் முடிவெடுத்த பின்னர் உங்களது நினைவிற்கு வர வேண்டிய மிக முக்கியமான சில தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

வாடகை ஒப்பந்தத்தை பெற வேண்டும்

முதலில் எடுக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உங்களது கடையை அமைக்கப் போகும் இடத்தின் நில உரிமையாளரிடம் இருந்து வாடகை அல்லது குத்தகைகாண ஒப்பந்தத்தை பெற்றுக் கொள்வதாகும். நீங்கள் நிலை ஒப்பந்தத்தை பெற்றுக் கொண்டால் மட்டுமே அந்த முகவரியை பயன்படுத்தி உங்களது மளிகை கடைக்கு சான்றிதழ் பெறுவதற்கு வசதியாக இருக்கும். இந்த ஒப்பந்தத்தில் வாடகை, முன்பணம், பராமரிப்பு செலவு, ஒப்பந்த காலத்தின் அளவு, உள் வாடகைக்கு விடக்கூடிய அனுமதி, கடைக்கு ஏற்றவாறு செய்யக்கூடிய கட்டிட மாற்ற அனுமதி, ஒப்பந்தத்தை மீறும் போது எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் போன்றவற்றை தெளிவாக எழுதி உங்களது நிரந்தர முகவரி மற்றும் நில உரிமையாளர்களின் நிரந்தர முகவரி போன்றவற்றையும் குறிப்பிட வேண்டும். 

தனி உரிமையாளர் வணிகமாக தொடங்குங்கள் 

மளிகை கடைக்கு சம்பந்தமான வணிக முடிவுகளையும் பிற முடிவுகளையும் எடுக்க தகுதியான நபர் யார் என்ற உரிமத்தை பெறுவது. பெரும்பாலான மளிகை கடைகள் சோல் ப்ராப்பர்ட்டீஸ்ஷிப் எனப்படும் தனி உரிமையாளர் வணிகமாகவே இருக்கும். ஏனென்றால் இத்தகைய தனி உரிமையாளர் வணிகத்தை நடத்துவதன் மூலமாக பெரிய அளவில் அனுமதி சான்றிதழ்கள் பெற தேவையில்லை. இவ்வாறு தனி உரிமையாளர் வணிகமாக இல்லாமல் நீங்கள் வேறு யாரேனும் ஒருவருடன் கூட்டு சேர்ந்து செய்யும்படியாக இருந்தால் அரசாங்கம் மற்றும் வங்கிகளுக்கு தேவையான சான்றிதழ் பெற இருவரின் அனுமதி கையொப்பமும் தேவைப்படும். ஆகவே இத்தகைய சிக்கல்களை தவிர்ப்பதற்காகவும் மளிகைக் கடை திறப்பதற்கு மிகப்பெரிய அளவிலான முதலீடு தேவை இல்லாமல் இருப்பதாலும் தனி உரிமையாளர் வணிகத்தின் கீழ் உங்களது கடையை பதிவு செய்து கொள்வது நல்லது. 

நகராட்சி அலுவலகத்தில் அனுமதி பெறுங்கள் 

அடுத்த கட்ட நடவடிக்கையாக உங்களது கடை நடத்துவதற்கான அனுமதியை உங்கள் ஊரின் நகராட்சி அலுவலகத்தை தொடர்புகொண்டு அவர்களிடம் உங்களது கடை பற்றிய விவரங்களை தெரிவித்து சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். உங்களது மளிகை கடையை ஆரம்பித்த 30 நாட்களுக்குள் நகராட்சி உரிமத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏதேனும் காரணங்களால் உங்களது வணிகத்தை மூட நேர்ந்தாலோ அல்லது வேறு இடத்திற்கு மாற்ற நேர்ந்தாலோ உங்களது நகராட்சி அலுவலகத்தை அடுத்த 15 நாட்களுக்குள் தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு கடைகள் மற்றும் வணிக ஸ்தாபன சட்டப்பிரிவு 1947 பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 

ஒரு மளிகைக் கடையை நடத்துவதற்கு ஒரு சில குறிப்பிட்ட பணியாளர்களை அமர்த்தி வேண்டியது கட்டாயமாக இருக்கின்ற காரணத்தால்  தமிழ்நாடு கடைகள் மற்றும் வணிக ஸ்தாபன சட்டங்கள், 1947 பிரிவின்கீழ் உங்களது கடையை லேபர் ஆபீஸில் பதிவு செய்வது அவசியமாகும். சம்பளம் இல்லாமல் உங்களுடைய குடும்ப உறுப்பினர்களை வைத்து நீங்கள் மளிகைக் கடையை நடத்துவதாக இருந்தாலும் இதில் உள்ள விதிகளை பின்பற்றுவது மிக முக்கியமாகும். குழந்தைப் பணியாளர்களை பயன்படுத்தக்கூடாது, பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும், பெண்களுக்கு குழந்தை பேறு காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும், பணியாளர்களுக்கு அதிக பணி நேரம் சுமையை வழங்கக்கூடாது போன்ற நிபந்தனைகளை உள்ளடக்கியதாக இந்த சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள சட்டத்தை மீறி குழந்தை பணியாளர்களை நீங்கள் வேலைக்கு அமர்த்தினால் உங்களது கடை உரிமத்தை ரத்து செய்வதற்கு லேபர் ஆபிஸ் அலுவலகத்திற்கு முழு உரிமையும் இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்க.  

இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையத்தின் பதிவு பெற வேண்டும் 

எந்த ஒரு மளிகைக் கடையை எடுத்தாலும் அங்கு விற்பனை செய்யக்கூடிய பொருள்களில் பெரும்பாலானவை நேரடியாகவோ அல்லது சமைத்து உண்ணக் கூடிய உணவு சம்பந்தப்பட்ட பொருளாகவே இருப்பதால் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ என அழைக்கப்படும் இந்திய அரசின் உணவு மற்றும் பாதுகாப்பு தர கட்டுப்பாடு ஆணையத்திடம் இருந்து அனுமதி சான்றிதழ் பெற வேண்டும். மளிகைக்கடை மட்டுமல்லாது உணவு சார்ந்த எந்த ஒரு தொழிலை இந்தியாவில் செய்து வந்தாலும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சான்றிதழைப் பெறவும்.

எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சான்றிதழ் இல்லாமல் மளிகை கடையை தொடங்குவது உங்களது கடையை எந்த நேரத்திலும் நிரந்தரமாக மூடுவதற்கு அல்லது அதிகமான அபராத தொகையை செலுத்த நேரிடும் வாய்ப்புக்கு வழிவகுக்கும். எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ பெறுவதற்கு அனுமதி கேட்பதற்கு முன்னர் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய விவரங்களை நீங்கள் அறிந்து கொள்வது மிக முக்கியம். 

உங்களது கடையில் எவ்வளவு வணிகம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் என்ற தகவல்களையும் சில்லரை விற்பனை செய்யப் போகிறீர்களா அல்லது மொத்த விற்பனை செய்யப் போகிறீர்களா என்ற தகவல்களையும் தெரிவிக்க வேண்டும். இதில் நீங்கள் தெரிவிக்கும் தகவலின் அடிப்படையில் தான் உங்களது எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத் தொகையை நிர்ணயிப்பார்கள். சில்லரை விற்பனை செய்பவராக இருந்தால் ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் அளவிலான தொகையும் மொத்த விற்பனையாளர் ஆக இருப்பின் ஆண்டுக்கு சுமார் 5 ஆயிரம் அளவிலான தொகையும் வசூலிப்பார்கள். 

நீங்கள் இந்த உரிமத்தை ஒவ்வொரு ஆண்டுக்கு ஒரு முறையும் அல்லது 5 ஆண்டுக்கு ஒரு முறையும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. உங்கள் உரிமத்தின் கால அளவு முடிவதற்கு முன்னரே இதை புதுப்பித்துக் கொள்ளுவதால் பல்வேறு வகையான சிக்கல்கள் மற்றும் அபராதங்கள் இருந்து தப்ப முடியும். 

இந்த உரிமத்தை நீங்கள் நேரடியாக இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலகத்தை தொடர்பு கொண்டு அல்லது ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. ஆன்லைன் மூலமாக நீங்கள் விண்ணப்பிக்கும் போது அதிகப்படியான தொகை செலுத்த வேண்டி இருப்பதால் நேரடியாக சென்று விண்ணப்பிக்கும் முறையை உங்களுக்கு சிறந்தது.

நீங்கள் விண்ணப்பித்த பிறகு உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் உங்கள் கடைக்கு நேரடியாக வந்து சோதனையிட்டு அதன் பிறகு பதினைந்து நாட்களுக்குள் உங்களுக்கான சான்றிதழ்களை வழங்குவார்கள். பெரும்பாலான நேரங்களில் உணவுக் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேரடியாக பார்வை இடாவிட்டாலும் உங்களது மளிகைக் கடையை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும் எக்ஸ்பைரி தேதி முடிந்த பொருட்களை உடனடியாக வெளியேற்றவும் மறக்காதீர்கள்.

ஜிஎஸ்டி பதிவு செய்தல் அவசியம் 

ஜிஎஸ்டி என்பது சரக்கு மற்றும் சேவை சார்ந்த வணிகங்கள் இடையே நடைபெறும் தொகைக்கு ஏற்ற வரியை வசூலிக்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டமாகும். இந்திய அரசியல் சட்டத்தின் படி நிறுவனத்தின் மொத்த விற்பனை 20 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் ஜிஎஸ்டி எண் பெறுவது கட்டாயம் ஆகும். இந்த நிபந்தனை மளிகைக்கடை உட்பட அனைத்து விதமான வணிகர்களுக்கும் பொருந்தும் என்பதால் உங்கள் மளிகை கடைக்கு ஜிஎஸ்டி எண் பெறுவது முக்கியம். கடையை நடைபெறக்கூடிய அனைத்துவிதமான பொருளுக்கும் வரிவிதிப்பு இருக்கும் என்பதால் உங்களது ஜிஎஸ்டி எண் அவசியம் ஆகிறது. ஜிஎஸ்டி பதிவு செய்து சரியான வரிச்சலுகையை பெறுவதன் மூலமாக அதிகப்படியான வரிச் சுமைகள் மற்றும் வரிஏய்ப்பு நடவடிக்கையில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

விளம்பரப் பதாகைகள் வைப்பதற்கான அனுமதி பெற வேண்டும் 

உங்கள் மளிகைக்கடையில் ஏதேனும் சிறப்பு சலுகையை அறிவித்து மக்களை கவர முற்படுவதற்காக ஏதேனும் பொது இடத்தில் விளம்பரப் பதாகைகளை நிறுவுவதற்கு நீங்கள் நினைத்தால் அதற்கான சரியான உரிமத்தை நகராட்சி அலுவலகத்திடம் இருந்து பெற்றபிறகே வைக்கவேண்டும். கண்கவர் விளக்குகள் மற்றும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தி விளம்பரம் செய்யும் போது மக்களுக்கு எந்தவித தொந்தரவும் தகாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். மளிகை கடைக்கு அருகில் இருந்த மக்கள் உங்களது கடையின் மீது ஏதேனும் சுகாதார கேடு சம்மந்தமான புகார் தெரிவிக்காத வகையில் நடந்து கொள்ளுங்கள்.

வாகன பதிவு செய்வதில் கவனம் அவசியம் 

உங்கள் மளிகை கடைக்கு தேவையான பொருட்களை வாங்க செல்லும்போதோ அல்லது டெலிவரி செய்வதற்கோ தனிநபர் பயன்பாட்டிற்காக பதிவுசெய்யப்பட்ட எண்ணைக் கொண்ட வாகனங்களை பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு நீங்கள் உங்களது கமர்சியல் வேலைக்காக உங்களது பணியாளர்களிடம் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பதிவுசெய்யப்பட்ட வாகனத்தை கொடுத்து அனுப்பும்போது ஏதேனும் போக்குவரத்து போலீசாரால் பிடிக்கப் பட்டால் வாகனத்தை கைப்பற்றக்கூடிய அனுமதி அவர்களுக்கு இருக்கிறது.

உங்களது மளிகைக் கடை வணிகத்தை பல்வேறு வகையான கிளை நிறுவனங்களுடன் பெரிய அளவில் தொடங்க விருப்பப்பட்டால் டிரேட்மார்க் லைசென்ஸ் பெற்று கொள்வதன் மூலம் உங்களது நிறுவனத்தின் பெயரை உங்களுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய தனிப்பட்ட அடையாளமாக அரசாங்கத்தால் அனுமதி அளிக்கப்படுகிறது. மேகம் நேரடி வணிகம் மட்டுமல்லாது ஆன்லைன் வணிகம் மூலமாகவும் நீங்கள் மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய முற்பட்டால் இதே சான்றிதழ்களை பயன்படுத்தி ஆரம்பிக்க முடியும். மேலே குறிப்பிட்டபடி உள்ள அனைத்து விதமான சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு உங்களது மளிகைக் கடையை நடத்தும் போது எந்தவித ஐயப்பாடும் இன்றி முழு சுதந்திரத்துடன் வணிகம் செய்து தொழிலில் வெற்றி அடைந்து வாழ்க்கையிலும் வெற்றி பெற முடியும். 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.