written by | October 11, 2021

வைர வர்த்தக வணிகம்

×

Table of Content


இந்திய அளவில் டைமண்ட் டிரேடிங் பிசினஸ் தொடங்கி நடத்துவதற்கான வழிமுறைகள்

ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்கள் புதிய தொழில் முயற்சிகளை தொடங்கி நடத்தி வருகிறார்கள். தற்போதைய சூழலில் வர்த்தகம் மற்றும் வியாபாரம் ஆகிய நிலைகளில் ஆயிரக்கணக்கான தொழில் வாய்ப்புகள் வாய்ப்புகள்  ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவை  அரசாங்கம் சம்பந்தப்பட்ட துறையாகவோ  அல்லது தனியார் அமைப்புகள் சார்ந்ததாகவோ அமைந்து ஏராளமான தொழில் முனைவோர்களுக்கு வாய்ப்புகளை அளித்து வருகின்றன. அதன் அடிப்படையில் டைமண்ட் டிரேடிங் பிசினஸ் என்ற வைர வர்த்தகமும் முக்கியமான இடத்தில் இருந்து வருகிறது. இந்தத் தொழில் மிகவும் பழமையான தொழிலாக இருந்தாலும் கூட நாகரீக வளர்ச்சி மற்றும் கால மாற்றம் ஆகிய நிலைகளுக்கு ஏற்ப அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வர்த்தகத்தை வளர்த்துக்கொள்ளும் மதிப்பு மிக்க மற்றும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற தொழிலாக மாறியிருக்கிறது. வர்த்தக ரீதியாக வைர விற்பனை செய்ய விரும்பும் தொழில் முனைவோர்கள் நிச்சயம் இந்த துறையில் குறைந்தபட்ச முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம். அல்லது ஜெம்மாலஜி துறையில் பட்டயப் படிப்பையாவது முடித்து இருப்பது அவசியம்.

இந்தத் தொழிலில் முதலீடு மற்றும் அனுபவம் ஆகியவற்றிற்கு மட்டுமே முக்கியத்துவம் இருப்பதாக குறிப்பிடலாம்.  காரணம் என்னவென்றால் மற்ற தொழில்களை போல இதில் பிரான்சைஸி முறை நிச்சயம் இருக்காது. காரணம் ஒவ்வொரு தனிப்பட்ட நிறுவனத்துக்கும், வாடிக்கையாளருக்கும் உள்ள வர்த்தக தொடர்பு என்பது பண மதிப்பை மட்டும் சார்ந்ததாக இருப்பதில்லை. மேலும், வாடிக்கையாளர்கள் நம்பிக்கையை பெறக்கூடிய நிலையில்தான் தொழில் வெற்றியும் உண்டாகிறது. எனவே டைமண்ட் டிரேடிங் பிசினஸ் தொழில் முனைவோர் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது இன்னொரு அனுபவம் பெற்ற வைர வர்த்தக துறை சார்ந்த தொழில் முனைவோரிடம் நடைமுறை நுட்பங்களை நேரடியாக கற்று அறிவது அவசியமானது. 

வர்த்தகத்தின் மூன்று பிரிவுகள்

டைமண்ட் டிரேடிங் பிசினஸ் செய்ய விரும்புபவர்கள் அதன் மூன்று முக்கியமான பிரிவுகளை மனதில் கொள்ள வேண்டும். முதலாவது, மேனுஃபேக்சரர் அதாவது தயாரிப்பாளர் என்ற நிலையில் தொழிலை  மேற்கொள்ளலாம். இரண்டாவது, டிரேடர் அல்லது ரீ-செல்லர் அதாவது வியாபார ரீதியாக சில்லறை விற்பனை செய்து வரலாம். மூன்றாவதாக, ஏஜென்ட் அதாவது புரோக்கர் என்ற முறையில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த மூன்று அடிப்படை தொழில் முயற்சிகள் பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

டைமண்ட் மேனுஃபேக்சரர்

இந்த வகை தொழில் முயற்சியானது அனுபவமும் தொழில் திறமையும் கொண்டவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். உயர்தரமான தொழில்நுட்ப அறிவு பெற்றவர்களுகளே இந்தத் துறையில் உற்பத்தி சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஏனென்றால், ரா மெட்டீரியல் ஆக கிடைக்கக்கூடிய வைர படிமங்களை வாங்கி அவற்றை சரியான முறையில் பாலிஷ் செய்து, தேவையான அளவுகளில் கச்சிதமாக கட்டிங் செய்து வைரங்களாக மாற்ற வேண்டும். அதற்கு, தகுந்த தொழில்நுட்ப அறிவு மற்றும் தயாரிப்பு தொழில் கூடம் ஆகியவை அவசியமானது.

இந்த தொழில் முயற்சிக்கு, முதலாவது, சம்பந்தப்பட்ட நிறுவனம் கூட்டு நிறுவனமா அல்லது தனிப்பட்ட நிறுவனமா என்பதை குறிப்பிட்டு நிறுவனத்தின் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் வணிக உரிமைக்கான லைசென்ஸ் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். அடுத்த கட்டமாக நிறுவனத்திற்கான பான் கார்டு மற்றும் தொழில் வரி விதிப்புக்கான பதிவை செய்து கொள்ள வேண்டும். அத்துடன் நிறுவனத்தின் சார்பாக வங்கி கணக்கு, ஏற்றுமதி செய்வதாக இருந்தால் அதற்காக டைரக்டரேட் ஜெனரல் ஆப் ஃபாரின் டிரேடு என்ற அரசு அமைப்பிடம் இருந்து சான்றிதழ் ஆகியவற்றைப் பெறவேண்டும். மேலும், ஜெம்ஸ் அண்ட் ஜுவல்லரி எக்ஸ்போர்ட் புரோமோஷன் கவுன்ஸில் என்ற அமைப்பில் உறுப்பினராகவும் இணைய வேண்டும். அதன் பின்னரே தொழில் ரீதியான ஏற்றுமதியாளராக செயல்பட முடியும்.

வைரம் பட்டை தீட்ட கூடிய தொழிற்சாலைகளுக்கு கமர்சியல் மின் இணைப்பு, தேவையான உள்கட்டமைப்பு, எந்திரங்கள், தகுதி பெற்ற பணியாளர்கள் ஆகிய நிலைகளில் தகுந்த வல்லுனர் ஆலோசனைகளைப் பெற்று செயல்பட வேண்டும். 

டைமண்ட் டிரேடர் அல்லது ரீ-செல்லர்

வைரம் வர்த்தகத்தில் இந்தப் பிரிவானது பெரு நகரங்களில் மட்டுமே செய்யக்கூடிய தொழிலாக அமைந்துள்ளது. ஏனென்றால், தேசிய அளவில் வெவ்வேறு நகரங்களில் இருந்து சுலபமாக சம்பந்தப்பட்ட நகரத்திற்கு வந்து செல்லும் வகையில் போக்குவரத்து வசதிகள் அமைந்திருக்க வேண்டும். ஆபரண வகை சார்ந்த மதிப்புமிக்க பொருளாக வைரம் இருப்பதால் அதற்கான வர்த்தக மதிப்பை உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதன் ஒரு நிலையாக பெருநகரங்களில் வர்த்தகம் செய்யும் முயற்சி அமைகிறது. அதுமட்டுமல்லாமல் வைரத்தையும் மதிப்பீடு செய்வது மற்றும் தொழில் அனுபவம் பெற்ற டயமண்ட் கட்டர்ஸ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவைகளை அளிப்பது ஆகியவற்றுக்கு பெருநகரங்கள்தான் வசதியாக இருக்கும்.

டைமண்ட் புரோக்கிங்

வைர வர்த்தகத்தில் இந்தப் பிரிவானது பெரும் முதலீடு இல்லாமல் செய்யக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. இந்த துறைக்கான முதலீடு என்பது வாடிக்கையாளர்கள் உடைய நம்பிக்கையே ஆகும். வைரம் மட்டுமல்லாமல் பல்வேறு வகையான நவரத்தினங்கள் பற்றியும் இந்த பிரிவில் ஈடுபடும் தொழில் முனைவோர்கள் நிச்சயம் அறிந்திருப்பது அவசியம். ஏனென்றால் வாடிக்கையாளர்கள் எந்த வகையில் தங்களுடைய விருப்பத்தை தெரிவிப்பார்கள் என்பதை கண்டறிவது சிரமமான விஷயம். அதன் காரணமாக வைரம் புரோக்கிங் என்பது நவரத்தினங்கள் பற்றிய அறிவை உள்ளடக்கிய தொழில் பிரிவாகவே அறியப்பட்டுள்ளது.

நான்கு முக்கியமான குறிப்புகள்

முதலாவதாக, டைமண்ட் டிரேடிங் பிசினஸ் என்பது மற்ற தொழில்துறை போல உடனடியான விளைவுகளை எதிர்பார்க்கும் விதத்தில் இருக்காது. காலம் மற்றும் முயற்சி ஆகியவற்றுடன் குறிப்பிட்ட முதலீட்டையும் செய்துகொண்டு பொறுமையாக செயல்படவேண்டிய துறை இதுவாகும்.

இரண்டாவது, தொழில் முனைவோர் தாங்கள் எந்த வகையான உயர் மதிப்புள்ள நவரத்தினங்களை தேர்வு செய்து வர்த்தகம் செய்வது என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதாவது வைரங்களை மட்டுமே விற்பனை செய்வதா அல்லது அத்துடன் இதர நவரத்தினங்களை விற்பனை செய்வதா என்று முடிவெடுக்க வேண்டும்.

மூன்றாவதாக, வர்த்தகம் மற்றும் தொழில் ரீதியாக நிறைய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். அவை தனி மனிதர்களாக, நிறுவனங்களாகவோ அல்லது அரசு துறையாகவும் இருக்கலாம். மேலும் தொழில் துறையில் உள்ள அனுபவம் பெற்ற கட்டிங் செய்யும் வல்லுனர்களுடன் நேரடி தொடர்பு கொள்வதும் அவசியமானது.

நான்காவதாக, ஒரு தொழில் முனைவோர் மேற்கொள்ள வேண்டிய விஷயம் வாடிக்கையாளர்களை உருவாக்குவது அல்லது தேடிச் செல்வது என்ற நிலையில் ஒரு வலுவான கிளையன்ட் பேஸ் அமைத்துக்கொள்ள வேண்டும். பெருநகரங்களில் அதற்கான வாய்ப்புகள் பல்வேறு வகைகளில் இருக்கும். 

ஒரு தொழில் முனைவோர் எப்போதும் செலவினங்களை கட்டுப் படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் டைமண்ட் டிரேடிங் பிசினஸ் செய்பவர்கள் மியான்மர், ஸ்ரீலங்கா, மடகாஸ்கர் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள வைர வர்த்தகர்களோடு நேரடி தொடர்பில் இருக்க வேண்டும். அதன் மூலம் வர்த்தக ரீதியான கூடுதலான செலவினங்களை தவிர்ப்பதுடன், தரமான வைரங்கள் அல்லது நவரத்தினங்களை அவர்களிடமிருந்து நேரடியாகவே இறக்குமதி செய்துகொள்ள முடியும்.

தேவையான கூடுதல் தகுதிகள்

தேசிய அளவில் நடைபெறக்கூடிய வர்த்தக கண்காட்சிகள் மற்றும் பொருட்காட்சிகள் ஆகியவற்றில் பங்குபெற்று வாடிக்கையாளர்களுக்கு வைரம் உள்ளிட்ட உயர்தர நவரத்தின கற்கள் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தலாம். சில சலுகைகளை அளித்து விற்பனையும் செய்யலாம்.

எப்போதும் வாடிக்கையாளர்கள் மனோநிலையை சரியாக கணிக்க கூடிய திறமையை ஒரு தொழில் முனைவோர் வளர்த்துக் கொள்ளவேண்டும். குறிப்பாக உயர் மதிப்பிலான வைரங்கள் குறித்து சந்தையில் நிலவக்கூடிய பொதுவான நம்பிக்கைகள் பற்றியும், அவற்றுக்கான தற்போதைய வர்த்தக வாய்ப்புகள் பற்றியும் தொழில் முனைவோர் புள்ளி விபரங்களுடன் அறிந்திருக்கவேண்டும்.

தரம் என்றும் நிரந்தரம் என்ற அடிப்படையில் எல்லா பொருட்களுக்கும் தரச்சான்றிதழ் பெற்றிருப்பதுடன், உயர்தரமான வகைகளையே எப்போதும் சந்தைப்படுத்துவது அவசியமானது. முடிந்த வரையில் ஐ.ஜி.ஐ என்ற இன்டர்நேஷனல் ஜெம்மாலஜி இன்ஸ்டிட்யூட் என்ற சர்வதேச அமைப்பிடம் இருந்து தரச் சான்றிதழை பெற்றிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். ஏனென்றால் இந்த சர்வதேச அமைப்பு அளிக்கக்கூடிய சான்றிதழ் உலக அளவில் வர்த்தக மதிப்பு பெற்றதாக இருப்பதால் இந்த அமைப்பிடம் இருந்து சான்றிதழ் பெறுவதற்கு கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

வைரங்கள் குறித்த அடிப்படை தகவல்கள்

மூன்று பிரிவுகளாக வைரங்கள் தொழில்நுட்ப ரீதியில் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் முதலாவது கலர்லெஸ் டைமண்ட் அதாவது வெண்மை நிறம் கொண்ட வைரங்கள் ஆகும். இவை, பொதுவாக எல்லா பகுதிகளிலும் கிடைக்கக்கூடியவையாகும். இரண்டாவது, கலர்டு டைமண்ட். அதாவது, லைட் ப்ளூ, பிங்க், மஞ்சள் ஆகிய மெல்லிய வண்ணங்களில் தோற்றம் அளிக்கக்கூடிய வைரங்கள் ஆகும். இவை சுலபமாக கிடைப்பதில்லை. சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்படும் வைரங்களில் மெல்லிய வண்ணங்கள் கொண்ட இந்த வகை வைரங்களுக்கு நல்ல சந்தை மதிப்பு அளிக்கப்படுகிறது. மூன்றாவதாக உள்ள வகையானது, சிவப்பு, ப்ளூ, கருப்பு உள்ளிட்ட முழுமையான நிறங்களில் கிடைப்பவை ஆகும். இவை, மிக, மிக அரிதாகவே கிடைப்பதால் விலை மதிப்பற்றவையாக குறிப்பிடப்படுகின்றன. 

வைரத்தின் தரத்தை நிர்ணயம் செய்வதற்கு நான்கு அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றில் முதலாவது கட்டிங் ஆகும். அதாவது எந்த அளவுக்கு துல்லியத் தன்மையுடன், தகுந்த வடிவத்தில் வெட்டப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடுவதாகும். இரண்டாவது, கேரட் வெயிட் அதாவது அதன் எடை என்ன என்பதை குறிப்பிடுவதாகும். மூன்றாவது, கலர் அதாவது அந்த வைரத்தின் நிறம் என்ன என்பதை சுட்டிக்காட்டுவதாகும். நான்காவதாக, கிளாரிட்டி அதாவது அதன் துல்லியமான தோற்றம் பற்றிய தகவலை குறிப்பிடுவதாகும். இவற்றை ஆங்கிலத்தில் நான்கு சி என்று குறிப்பிடுவார்கள். டைமண்ட் டிரேடிங் பிசினஸ் தொழில் முனைவோர் மேற்கண்ட அடிப்படை தகவல்களுடன், கூடுதலான வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய கண்ணோட்டமும் கொண்டவராக இருக்கவேண்டும். 

அரசு சான்றிதழ்

ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியா அதாவது ஜி.எஸ்.ஐ என்ற அரசின் துறையானது ஜெம்ஸ்டோன் ஸ்டடீஸ் என்ற நவரத்தின கற்களுக்கான பயிற்சியை விரும்புபவர்களுக்கு அளித்து வருகிறது. ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் இந்த பயிற்சியை பெறுவதுடன் அதற்கான தகுதிச் சான்றிதழையும் பெற்றுக் கொள்வது இந்த தொழிலில் கூடுதலான தகுதியாக கருதப்படுகிறது. அரசின் இந்தத் துறையானது வைரம் உள்ளிட்ட உயர் மதிப்பிலான நவரத்தின கற்களை பரிசோதனை செய்து அவற்றிற்கான தரச் சான்றிதழ்களையும் வழங்கி வருகிறது. வைரம் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் அரசின் இந்த துறை மூலம் தேவையான சான்றிதழ்களை பெறுவதன் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை எளிதாக பெற இயலும். அரசின் இந்தத் துறையானது கொல்கத்தா, நாக்பூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஷில்லாங் ஆகிய மாநிலங்களில் அதன் கிளைகளை அமைத்து பயிற்சி மற்றும் பரிசோதனை ஆகிய சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.