written by | October 11, 2021

மசகு எண்ணெய் வணிகம்

×

Table of Content


வெற்றிகரமாக லூப்ரிகன்ட் பிசினஸ் தொடங்கி லாபகரமாக நடத்துவதற்கான நெறிமுறைகள்

உலகளாவிய தொழில் புரட்சி ஏற்பட்டதற்கு பின்னர் இயந்திரங்களின் உதவியால் தொழில்துறையின் உற்பத்தி பிரிவு மற்றும் போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றால் ஏராளமான மாற்றங்களும் முன்னேற்றங்களும் அன்றாட வாழ்வில் உருவாகியிருக்கின்றன. மனித உழைப்பின் அளவு எந்திரங்களின் வரவு காரணமாக பெருமளவு குறைந்து இருக்கிறது. ஒருவகையில் இது நன்மை அளிப்பதாக இருந்தாலும் இன்னொரு வகையில் வேறுவிதமான சிக்கல்களை உருவாக்கி இருக்கிறது. அதாவது எந்திரங்களின் முறையான பராமரிப்பு என்பது சரியான கால கட்டங்களில் செய்ய வேண்டிய அத்தியாவசியமான செயல்முறையாகும் எந்திர பராமரிப்பு என்பதில் அவற்றின் தீர்மானங்களை தடுப்பது அல்லது கட்டுப்படுத்துவது என்ற நிலையில் வெவ்வேறு வழிமுறைகள் அவசியமானதாக இருக்கின்றன. அவ்வாறு பராமரிப்புப்  பணிகளை மேற்கொள்வதில் ஒரு முக்கியமான முறை என்பது எந்திரங்களின் இயக்கம் காரணமாக ஏற்படும் உராய்வினால் உருவாகும் தேய்மானத்தை தடுப்பது ஆகும். இதை நடைமுறைப்படுத்துவதில் லூப்ரிகன்ட் என்ற உயவு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

எந்தவொரு எந்திரமாக இருந்தாலும் அதன் நீண்டகால செயல்பாட்டுக்கு ஏற்ற வகையில் துணையாக இருக்கக் கூடிய ஒரு தயாரிப்பு பொருள் லூப்ரிகன்ட் ஆயில் ஆகும். அந்த வகையில் லூப்ரிகன்ட் பிசினஸ் என்பது ஒரு நல்ல தொழில் முயற்சியாக இந்த காலகட்டத்தில் வளர்ந்து கொண்டுள்ளது. இந்த தொழில் பிரிவில் தனக்கான வர்த்தக வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள விரும்பும் தொழில் முனைவோர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. அவ்வாறு முயற்சி செய்யும் தொழில் முனைவோர்களுக்கு தொழிலை எவ்வாறு தொடங்குவது மற்றும் லாபகரமாக அதை எப்படி நடத்திச் செல்வது என்பதற்கான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

இரண்டு வகை பிரிவுகள்

இயந்திரங்கள் அல்லது வாகனங்களின் தொடர்ந்த இயக்கத்துக்கு துணையாக இருக்கும் லூப்ரிகன்ட் ஆயில் பிசினஸ் என்பது இரண்டு பெரும் பிரிவுகளாக இருக்கிறது. முதலாவது பிரிவு என்பது லூப்ரிகன்ட் ஆயிலை ஒரு தொழிற்சாலை மூலம் உற்பத்தி செய்வதாகும். இதன் இரண்டாவது பிரிவு என்பது அதன் தயாரிப்பாளர்களிடம் இருந்து பொருட்களை முதன்முதலாக பெற்று அதை வாடிக்கையாளர்களுக்கு சில்லரை விற்பனை செய்யும் முறையாகும். ஆக இந்த தொழில் பிரிவில் இந்த இரண்டு வகைகளில் ஏதாவது ஒரு பிரிவில் தொழில் முனைவோராக காலடி எடுத்து வைப்பதே ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும். இந்த தொழிலில் உள்ள இரண்டு பிரிவுகளையும் செய்து வருகின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகள், நெதர்லாந்து, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற சர்வதேச நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் நமது நாட்டிலும் தங்களுக்கான லூப்ரிகன்ட் பிசினஸ் சந்தையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஒரு  ஆரம்ப கட்ட தொழில் முனைவோர் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்வது அவசியமானது.

உற்பத்தியாளர்களுக்கான நான்கு விஷயங்கள்

லூப்ரிகன்ட் பிசினஸ் துறையில் தயாரிப்பு பிரிவை ஆரம்பித்து தொழிலில் காலடி எடுத்து வைக்க திட்டமிடும் தொழில் முனைவோர்கள் நான்கு விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். முதலாவது, தேவையான முதலீடு. இரண்டாவது, கச்சாப் பொருள்களை எங்கிருந்து பெறுவது என்ற திட்டம். மூன்றாவது, உற்பத்தியை மேற்கொள்வதற்கான எந்திர வகைகள். நான்காவது, தேவையான மேலாண்மை மற்றும் உற்பத்தி பிரிவு தொழிலாளர்கள் நியமனம் ஆகியவையாகும்.

மேற்கண்ட நான்கு விஷயங்களிலும் சரியான திட்ட வரையறையை உருவாக்கிய பின்னரே தயாரிப்புக்கான பெயர் மற்றும் ஜி.எஸ்.டி வரி எண் ஆகியவற்றுக்கான பதிவை செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் தேர்ந்தெடுக்க பகுதியில் தொழிற்சாலை கட்டிடத்தை அமைப்பு, எந்திரங்களை நிறுவ வேண்டும். மேலும், மேலாண்மை அலுவலர்கள் மற்றும் தயாரிப்பு பிரிவு தொழிலாளர்கள் என்ற நிலைகளில் ஆட்களை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் குறிப்பிட்ட காலம் வரையில் உற்பத்தியை குறைந்த அளவில் செய்ய வேண்டியதாக இருக்கும். குறிப்பிட்ட அளவு சந்தை மதிப்பை சம்பந்தப்பட்ட தொழில் முனைவோர் அது தயாரிப்பு பெற்றபின்னர் முழுமையான உற்பத்தியை தொடங்கிக் கொள்ளலாம். 

இன்றைய லூப்ரிகன்ட் பிசினஸ் சந்தை நிலவரத்தில் குறிப்பிட்ட ஒரு தொழிற்சாலையில்  பிரதான உற்பத்தி பொருளாக பிரண்ட் ஆயில் தயார் செய்யப்பட்டாலும் கூட கூடுதலாக கிரீஸ் வகைகளையும் தயார் செய்வது லாபகரமான முயற்சியாக இருக்கும். ஏனென்றால் வெவ்வேறு தர நிலைகள் கொண்ட லூப்ரிகன்ட் ஆயில் தயாரிப்பில் கூடுதலாக கிரீஸ் உற்பத்தி செய்வதற்கு அதிக சிரமங்கள் எதுவும் இருக்காது. அதே சமயம் இரண்டு பொருட்களையும் ஒரே நேரத்தில் தயார் செய்யவும் முடியும்.

சந்தையில் உள்ள தேவைகள்

லூப்ரிகன்ட் ஆயில் என்பது இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றுக்கான தேவையில் 30 முதல் 40 சதவிகிதம் வரை பயன்படுகிறது. மீதமுள்ள 60 முதல் 70 சதவிகிதம் வரை பல்வேறு வகையான டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின்கள், எந்திரங்கள் மற்றும் பெரிய அளவிலான வாகனங்களின் பயன்பாட்டில் செலவிடப்படுகிறது. 

லூப்ரிகன்ட் ஆயில் தயாரிப்பு தொழிற்சாலை, இண்டஸ்ட்ரியல் ஜோன் எனப்படும் தொழிற்சாலை பகுதி என்று வகைப்படுத்தப்பட்ட ஏரியாவில் அமைவதே பலவித நன்மை தருவதாக இருக்கும். ஏனென்றால், அங்கே மின்சார வசதி, தண்ணீர் வசதி மற்றும் மூலப்பொருள்கள் வருவதற்கும், தயாரித்த பொருட்களை வெளியில் அனுப்புவதற்கும் உரிய உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் கச்சிதமாக செய்யப்பட்டிருக்கும். அவ்வாறு இல்லாமல் நகர்ப்புறங்களில் அல்லது புறநகர் பகுதிகளில் லூப்ரிகன்ட் ஆயில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினால் அடிப்படையான சில விஷயங்களில் கூடுதலான சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கலாம். தொழிற்சாலைகளுக்கான பகுதியாக அறிவிக்கப்பட்ட ஏரியாவில் தொழில் தொடங்கும் முதலீட்டாளர்கள் சிறு தொழில் நிறுவனங்களுக்கான லைசன்ஸ் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பெறக்கூடிய தடையில்லா சான்று உள்ளிட்ட அரசு அனுமதிகளை எளிதாக பெற முடியும். 

  • லூப்ரிகன்ட் ஆயில் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க குறைந்தபட்சமாக ஐந்தாயிரம் சதுர அடி நிலம் தேவைப்படக்கூடும். இந்த அளவு என்பது சிறுதொழில் நிறுவனங்களுக்கான வரையறையாகும். 
  • மேலும், தகுந்த அளவுகளில் நீளம், அகலம் மற்றும் உயரம் கொண்ட வகையில் தொழிற்சாலை கட்டிடத்தை அமைக்க வேண்டும். சொந்த இடமாக இருந்தால் இவ்விதமான வாடகை உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்காது. நீண்டகால குத்தகை நிலமாக இருக்கும் பட்சத்தில் அதற்கேற்ப கட்டிடங்களை மெட்டல் சீட் கொண்டு அமைக்க வேண்டியதாக இருக்கலாம். 
  • அதன் பின்னர் தகுந்த எந்திரங்களை இறக்குமதி செய்து அவற்றை கச்சிதமாக நிலை நிறுத்த வேண்டும். 
  • உற்பத்திக்கான இதர வசதிகளை மற்றும் உள்கட்டமைப்பு ஏற்பாடுகளை கச்சிதமாக செய்ய வேண்டும்.
  • முதலீடு என்ற நிலையில் ஒர்க்கிங் கேப்பிட்டல் மற்றும் பிரிஆப்பரேட்டிங் எக்ஸ்பென்சஸ் என்ற வகையில் ஏற்படக்கூடிய செலவினங்களை கணக்கில் கொள்ள வேண்டும்.

லூப்ரிகன்ட் ஆயில் தயாரிப்பு தொழிற்சாலைக்கு பல்வேறு வகையான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் தேவைப்படுகின்றன அது பற்றிய தகவலை இங்கே பார்க்கலாம்.

  • டின் ஃபில்லிங் மெஷின்
  • பிளெண்டர் டேங்க்
  • செண்ட்ரிபியூகல்
  • குக்கிங் கெட்டில்
  • மோல்டிங் மெஷின்
  • எம்.ஆர்.பி மெஷின்
  • ஜெனரேட்டர்
  • ஸ்டோரேஜ் டேங்க்
  • ஃபாயிலிங் மெஷின்
  • கிரீஸ் ஃபில்லிங் மெஷின்
  • ஏர் கம்ப்ரஸர்

போன்ற எந்திரங்களை லுப்ரிகண்ட் உற்பத்தி அலகில் நிர்மாணிப்பது அவசியமாகும்.

தேவையான மூலப்பொருட்கள்

தேசிய அளவில் மற்றும் சர்வதேச அளவில் லூப்ரிகன்ட் தயாரிப்பதற்கான அடிப்படை எண்ணெய் வகைகள் மற்றும் சேர்க்கை பொருள்களை சப்ளை செய்யக்கூடிய நிறுவனங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவர்களை வர்த்தக ரீதியாக தொடர்புகொண்டு தேவையான பொருட்களை பெறமுடியும். மேலும், லித்தியம் மற்றும் எச்.சி. என்ற ஹைட்ரோஜெனரேட்டடு கேஸ்டர் ஆயில் என்ற கிரீஸ் தயாரிப்புக்கான மூலப் பொருள்களையும் தகுந்த சப்ளையர்கள் இடமிருந்து பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்வது அவசியம். அவ்வாறு பெறப்பட்ட மூலப்பொருள்களை கச்சிதமாக ஸ்டோரேஜ் டேங்க் மூலம் சேமித்து வைத்துக்கொள்வது அவசியம்.

உற்பத்தியான லூப்ரிகன்ட் ஆயில் வகைகளை ஒரு லிட்டர், ஐந்து லிட்டர் மற்றும் 20 லிட்டர் அளவுகள் கொண்ட உலோக பின் அதில் அழகாக பேக்கிங் செய்யப்பட்டு சில்லறை விற்பனையாளர்களுக்கு அனுப்பப்பட வேண்டும். சந்தை நிலவரத்திற்கு ஏற்ப டீலர்கள் அல்லது சில்லறை விற்பனையாளர்கள் ஆர்டர்களுக்கு ஏற்ப எந்த வகையான பேக்கிங் அதிகமாக தேவைப்படும் என்பதை அறிந்து அதற்கேற்ப ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். மேலும், தற்போது அதிகமாக பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை பயன்படுத்துவதற்கு ஏற்ப புளோ இன்ஜெக்ஷன் மெஷின் என்ற கருவியின் மூலம் கிரீஸ் தயாரிப்புக்கான பிளாஸ்டிக் பேக்கேஜிங் முறையை கச்சிதமாக செய்து கொள்ளலாம். 

தேவயான பணியாளர்கள்

எந்த ஒரு தொழிற்சாலைக்கும் திறன் பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அனுபவமிக்க மேலாண்மை பணியாளர்கள் ஆகியோர் அவசியம். அப்போதுதான் உற்பத்தி மிக சிறப்பான முறையில் நடந்து வரும். லூப்ரிகன்ட் பிசினஸ் மூலமாக லூப்ரிகன்ட் ஆயில் மற்றும் கிரீஸ் உற்பத்தி செய்யும் தொழில் முனைவோர்கள் இந்த விஷயத்தில் இரண்டு வகையான பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டியதாக இருக்கும். முதலாவது உற்பத்தி பிரிவில் பணியில் ஈடுபடக் கூடிய திறன் பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அனுபவம் இல்லாத தொழிலாளர்கள் ஆகியோர்கள் தேவைப்படுவார்கள். அலுவலக மேலாண்மை என்ற நிலையில் உற்பத்தி பிரிவுக்கான மேலாளர் மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிபுணர் ஆகியோர் தேவைப்படுவார்கள்.

மார்க்கெட்டிங் பிரிவுக்கு அனுபவமிக்க பணியாளர்கள் நிச்சயம் அவசியம். இந்தத் துறையில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்களாக இருந்தால் நல்லது. அவர்கள்தான் வினியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் இடம் நல்ல முறையில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு விரிவு படுத்துவார்கள்.

விநியோகம் செய்யும் தொழில் பிரிவு

இதுவரையில் நாம் பார்த்தது லூப்ரிகன்ட் பிசினஸ் என்ற வகையில் அதன் தயாரிப்பு பிரிவில் ஈடுபடக்கூடிய தொழில் முனைவோருக்கான தகவல்கள் ஆகும். இந்தப் பிரிவு அதிகப்படியான முதலீட்டை செய்யவேண்டிய தொழிலாகும். குறைந்த முதலீட்டில் இந்த தொழிலை செய்வதற்கு உள்ள இரண்டாவது வாய்ப்பு லூப்ரிகன்ட் டிஸ்ட்ரிபியூட்டர் என்ற விநியோகஸ்தராக செயல்படலாம். அல்லது அதைவிட குறைந்த முதலீட்டில் சில்லரை விற்பனையாளராகவும் இந்த தொழில் துறையில் கால் பதிக்கலாம்.

விநியோகஸ்தராக செயல்படும் பொழுது வாடிக்கையாளர்கள் உடைய தேவைகளை கச்சிதமாக அறிந்திருக்கவேண்டும். குறிப்பாக எந்த ஒரு பிராண்ட் அதிகமாக சந்தையில் விற்பனை ஆகிறது என்பதை கவனிக்க வேண்டும். தொடர்ச்சியான விளம்பரங்கள் மூலம் விற்பனையை அதிகரிக்கும் நுட்பத்தை அறிந்திருப்பது அவசியம். குறிப்பிட்ட விற்பனை இலக்கை முடிவு செய்து கொண்டு அதன்படி செயல்பட்டு ஒரு டிஸ்ட்ரிபியூட்டர் ஆக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மதிப்பை பெறுவது அவசியமானது. 

முன்னணியில் இருக்கக்கூடிய ஒரு நிறுவனத்தின் தயாரிப்பை சந்தையில் விற்பனை செய்வது எளிதான விஷயமாக இருக்கும். இருந்தாலும் வர்த்தக அடிப்படையில் வெவ்வேறு விதமான வியாபார நுணுக்கங்களை பயன்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் உடைய தேவைகளை உணர்ந்து வெவ்வேறு நிலைகளில் சேவைகளை அளிக்க வேண்டும். அதாவது கார் மற்றும் பைக் ஆகியவற்றிற்கான உபயோகம் மட்டுமல்லாமல் விவசாய விளைநிலங்களில் பயன்படுத்தப்படக் கூடிய இயந்திரங்களுக்கும் இவை அவசியம் என்பதால் அதற்கான சந்தை மதிப்பை கவனத்தில் கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட நகரம் அல்லது ஏரியாவை பொருத்து வாடிக்கையாளர்கள் தேவையை உடனுக்குடன் பூர்த்தி செய்யக்கூடிய விநியோகஸ்தர் வெற்றிகரமான தொழில் முனைவோராக மாறுகிறார். 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.