written by | October 11, 2021

பேட்டரி வணிகம்

×

Table of Content


இந்தியாவில் பேட்டரி வணிகத்தை எவ்வாறு தொடங்குவது

ஒரு தொழிலை புதிதாக தொடங்க வேண்டும் என்றால் எந்த ஒரு தொழிலதிபருக்கும், வணிக நிறுவனருக்கும் அச்சமும் தயக்கமும் இருப்பது சாத்தியமே. ஆனால் இந்தியாவில் நீங்கள் புதிதாக பேட்டரி சார்ந்த தொழிலைத் தொடங்க, எந்தவித தயக்கமும் காட்ட தேவையில்லை. ஒரு சில அடிப்படை வியாபார உத்தியை பயன்படுத்தி உங்களது பேட்டரி தொழிலில் மிகச் சிறந்தவராக விளங்க முடியும். இந்தியாவில் பேட்டரி வணிகத்தை எவ்வாறு தொடங்குவது என்பது குறித்த விளக்கத்தை இந்தக் கட்டுரையில் நாம் இப்போது பார்ப்போம். A. பேட்டரி சில்லரை விற்பனை கடை B. பேட்டரி உற்பத்தி என இரண்டு விதமாக பேட்டரி சார்ந்த தொழிலை செய்யலாம்.

பேட்டரி உற்பத்தி வணிகத்தைத் தொடங்க வழிகள் மற்றும் சூழ்நிலைகள் 

உலகத்தில் உள்ள தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும் அதற்கு சம்பந்தமான முன்னேற்றங்களுக்கும் இணையாக ஒரு நாடு வளர்கிறது என்றால் அது இந்தியா மட்டும்தான். தற்போதைய சூழ்நிலையில் உள்ளூர் மற்றும் உலக அளவில் அதிகப்படியான உற்பத்தி மற்றும் வணிகம் செய்ய கூடிய நாடாக இந்தியா திகழ்கிறது. ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்க கூடிய நிறுவனத்தை விரிவுபடுத்த விரும்பினாலோ அல்லது புதிதான ஒரு நிறுவனத்தைத் தொடங்க விரும்பினாலோ இந்தியாவில் அதற்கு ஏற்ற இடம் கிடைக்கும்.

இவைகள் அல்லாமல் தொழில் தொடங்க மிக முக்கியமான காரணியாக கருதப்படுவது அதற்கான அடிப்படை முதலீடாகும். இத்தகைய முதலீட்டை பற்றியான சில பரிசீலனை குறிப்புகளை இங்கே காண்போம் 

  1. தேவைப்படும் முதலீடுகள்

இடத்திற்கான செலவு, உபகரணங்கள் வாங்கி நிறுவுவதற்கான செலவு, தயாரிப்பு செலவு, தர மேம்படுத்துதல் செலவு  போன்றவற்றை தோராயமாக கணக்கிட்டு பார்த்தால் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் தேவைப்படும். 10 ஆயிரம் அமெரிக்கா டாலர் போன்ற சிறு தொகையை வைத்துக் கொண்டு நீங்கள் இந்த பேட்டரி தொழிலை ஆரம்பிக்க இயலாது. ஆனால் வெளிநாட்டில் இருந்து பேட்டரிகளை இறக்குமதி செய்து பேட்டரி தொழில் செய்வதைவிட உள்ளூரில் சொந்தமாக தொழிற்சாலை அமைத்து இந்த தொழிலை செய்வது உசிதமாகும். எந்த மாதிரியான தொழில் நுட்பத்தை பயன்படுத்த போகிறோம் எவ்வளவு பெரிய அளவிலான தொழிற்சாலையை நிறுவ போகிறோம் என்பதைப் பொறுத்து இதற்கான முதலீட்டில் சிறிய அளவு மாற்றம் ஏற்படலாம்.

  1. பிற கவனிக்கப் படவேண்டிய காரணிகள்

தொழில் ஆரம்பிக்க வேண்டிய செலவுகளை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அந்த தொழில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் போது தேவைப்படக்கூடிய பராமரிப்பு செலவையும் சேர்த்து கணக்கிட வேண்டும். அப்போதுதான் அந்த நிறுவனம் அதிக நாட்களுக்கு எந்த வித சிரமமும் இன்றி சிறப்பாக செயல்பட முடியும். தொழிற்சாலை சிறப்பாக செயல்பட தேவையான நீர் ஆதாரம், அங்குள்ள பொருட்களை தூக்குவதற்கு தேவையான உபகரணங்கள், போக்குவரத்திற்கு தேவையான வாகனங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக அங்கு வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களின் ஊதியம் இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

  1. மூலதன நிதி

நீங்கள் ஒரு பரம்பரை பணக்காரர் ஆக இல்லாமல் இருந்தால் இதற்கான தொகையை எவ்வாறு பெறப் போகிறீர்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இதற்கான பொதுவான மற்றும் சிறந்த தீர்வாக வங்கிக் கடன் முறை உள்ளது. இந்திய அரசாங்கம் புதிதாக தொழில் தொடங்க முனைவோருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி இந்தத் தொழிலுக்கான வட்டி விகிதம் மற்றும் கடன் பெறத் தேவையான சான்றிதழ்களை பற்றி கேட்டு அறிந்து கொள்ள முடியும். உங்கள் தொழிற்சாலையை சிறந்த ஆட்டோமேஷன் முறையை நிறுவுவதன் மூலம் செலவைப் பாதியாகக் குறைப்பது உடல் இல்லாமல் அதிகப்படியான நாட்களுக்கு உங்களது நிறுவனம் சிறந்த முறையில் செயல்பட உதவும் (அனைத்து வகையான தொழிற்சாலைகளுக்கும் இது பொருந்தும்). இப்போது நடைமுறையில் உள்ள மேனுவல் முறைப்படி அதிகப்படியான தவறுகள் நிகழ வாய்ப்புகள் உள்ளது.   

லித்தியம் அயன் தொழில்நுட்ப பேட்டரிகள் மற்றும் சூரிய தொழில்நுட்ப பேட்டரிகள் இந்திய பேட்டரி உற்பத்தி மற்றும் தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய புள்ளியாக இருக்கிறது. 

  • லித்தியம் அயன் தொழில்நுட்பம்

லித்தியம் அயன் தொழில்நுட்பத்தின் வாய்ப்பும் தொடர்ச்சியான முன்னேற்றமும் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளாவிய முன்னேற்றமாகும். டிஜிட்டல் கேமரா, மடிக்கணினி, மற்றும் கைபேசி போன்ற  போன்ற குறைந்தபட்ச பேட்டரி சக்தியில் இயங்கக்கூடிய உபகரணங்களில் இந்த லித்தியம் அயன் தொழில்நுட்ப பேட்டரிகள் பயன்படுத்தப் படுகிறது. இந்தியாவின் பொருளாதாரம் சீரான பாதையில் உலக நாடுகளுடன் செல்வதற்கும் உள்ளூர் இறக்குமதிக்கும் உலகளாவிய ஏற்றுமதிக்கும் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி முக்கியமானது.

  • சூரிய தொழில்நுட்பம்

பெரும்பாலான இந்திய மக்களின் வாழ்க்கை முறையில் சூரிய தொழில் நுட்பத்தில் இருக்கக் கூடிய பேட்டரிகள் இருக்கின்றன. எதிர்காலத்தில் மிக முக்கிய எரிபொருள் சக்தியாக சூரிய தொழில்நுட்பம் விளங்கும் என்று கருதுவதால் இத்தகைய பேட்டரிகளுக்கு அதிகப்படியான வரவேற்பு இருக்கின்றது. இத்தகைய பேட்டரிகள் சூரிய சக்தியின் காரணமாக இயங்குவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கு மிக குறைகிறது. இந்திய மக்களில் பெரும்பாலானோர் மின்சார கார் மற்றும் மின்சார இருசக்கர வாகனங்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இத்தகைய காரணிகளே இந்தியா மற்றும் அமெரிக்க உறவுகளை மேம்படுத்தக்கூடிய பாலமாக விளங்குகிறது.

பேட்டரி விற்பனை கடை தொடங்க வழிகள் மற்றும் சூழ்நிலைகள் 

இந்திய பேட்டரி உற்பத்தியாளர்கள் பேட்டரி டீலர்ஷிப் வணிகத்தில் ஆர்வம் செலுத்தி அதை விற்பனை படுத்துவதன் மூலம் மிக சிறந்த லாபம் அடையலாம். 

பேட்டரி ஒரு முக்கிய வணிகப் பொருளாக விளங்குகின்றது. செல்போனின் செயல்பாட்டிற்கு தேவையான லித்தியம் அயன் பேட்டரிகள் இல்லையென்றால் சாதாரண மக்கள் என்ன செய்வார்கள்?

நிச்சயமாக, அவர்கள் பேட்டரிகளை வாங்க சில்லறை விற்பனை கடைக்கு சென்று வாங்குவார்கள். இந்த கடைகளில் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப ஏராளமான சப்ளை உள்ளது. நீங்களும் ஒரு தொழிலதிபராக, அத்தகைய வணிக வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேற வாய்ப்பு உள்ளது. பேட்டரி சில்லறை வர்த்தக கடை வணிகத்தை எவ்வாறு தொடங்குவது என்பதைப் பற்றி நாம் இங்கு பார்ப்போம். 

பேட்டரி சில்லரை விற்பனை கடை தொடங்குவதற்கான முதல்படி என்னவென்றால் அதற்கான (franchise) உரிமத்தை அரசிடம் இருந்து பெறுவது ஆகும். அதிர்ஷ்டவசமாக, பேட்டரி நிறுவனங்கள் அதிகமாக உள்ளதால், நீங்கள் இந்த விற்பனை உரிமத்தை பெறுவது மிகவும் எளிதான காரியமாகவே கருதப்படுகின்றது. இவ்வாறு ஒரு கம்பெனி பொருளின் விற்பனை உரிமத்தை பெறும் போது, உங்களுக்கு விற்பனையில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் வியாபார உத்தி  போன்ற நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுவதற்கு அவர்களே தாங்களாகவே முன்னே வந்து உதவி செய்வார்கள். இத்தகைய பேட்டரி விற்பனை உரிமத்தை பெற்ற பிறகு நீங்கள் அடுத்து செய்யக்கூடிய வேலை அதற்கு தகுந்தார்போல் ஒரு இடத்தை தெரிவு செய்து கடையைத் திறப்பது ஆகும்.  உங்கள் பேட்டரி பிராண்டின் மகத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்ல பல்வேறு வகையான விளம்பர யுக்திகளை பயன்படுத்தி பிரபலப் படுத்த வேண்டும்.  இவ்வாறு பேட்டரி தொழிலின் விஸ்தரிப்புகாக திறக்கக்கூடிய கடைகளுக்காக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நாம் இங்கு பார்ப்போம். AA மற்றும் AAA போன்ற வெவ்வேறு விதமான வடிவங்கள் மற்றும் செயல்திறன் கொண்ட பேட்டரிகள் உள்ளன. கார்கள், இன்வெர்ட்டர்கள், ஜெனரேட்டர்கள் போன்றவற்றில் பயன்படுத்தக்கூடிய சில பெரிய அளவு பேட்டரிகளை விற்பதன் மூலம் அதிக அளவிலான லாபத்தை பெற முடியும். 

  1. உங்கள் வணிகத்தைப் பதிவுசெய்க

பேட்டரி பிராண்டின் விற்பனை உரிமம் பெற்ற பிறகு விற்பனை கடையை திறக்க வேண்டிய அனைத்து அரசு நிறுவனங்களில் பதிவுசெய்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.  இது அரசாங்கத்துடன் ஏற்படக் கூடிய தேவையற்ற சட்ட சிக்கலைத் தவிர்க்க உதவுவதோடு மட்டுமல்லாமல் ஆபத்துக் காலங்களில் உங்களுக்கு தேவையான நிதி ஏற்பாடுகளை பெறவும் உதவும். 

இவ்வாறு சட்டரீதியான சிக்கல்களை சமாளித்த பிறகு விற்பனையை அதிகப்படுத்துவதற்காக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி யோசிக்க வேண்டும். நேரடி வாடிக்கையாளர்களை அதிகமாக சார்ந்து கடைகள் இருப்பதால் பிரபலமான ஒரு இடத்தில் கடையை நிறுவி வாடிக்கையாளரின் கவனத்தை பெற வேண்டும். உங்கள் பேட்டரி கடையில் வேலை செய்பவர்களோ  அல்லது மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்யும் நபர்களோ வாடிக்கையாளர்களிடம்  நேரடியாக பேசுவார்கள். ஆகவே, அத்தகைய இடத்தில் மிகவும் நம்பகத்தன்மை திறமை உடைய வேலையாட்களை வைப்பது முக்கியமாகும். அத்தகைய வேலையாட்களை தேர்வு செய்யும் போது அவர்களுக்கு பேட்டரியும் மீதான அனைத்து விதமான அறிவும் வாடிக்கையாளர்களிடம் இதயம் கனிந்து பேசும் திறமையும் இருந்தால் உங்களுடைய வணிகம் சிறந்து செயல்படும்.  

  1. ஒழுங்குமுறைகளை விதிகளைப் பற்றி அறியவேண்டும் 

லித்தியம் அயன் பேட்டரிகளை பாதுகாப்பான கப்பல் மற்றும் பேக்கேஜிங் உடன் மட்டுமே இடம் மாற்றம் செய்ய முடியும் என்பது DOT உடைய HM-224F விதியின் கீழ் இருக்கக் கூடியதாகும். இதற்குத் தேவையான சட்ட விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை சரியாக புரிந்துகொண்டு செயல்படுவது அவருடைய வணிகத்தை சிறப்பாக செயல்படுத்த உதவும். 

  1. முழு வணிக திட்டத்தை எழுதி செயல்படுத்துங்கள் 

ஒரு நல்ல வணிகத் திட்டத்தில் விரிவான, துல்லியமான நிதித் தகவல், விற்கப்படும் பொருட்களின் விளக்கம் மற்றும் சாத்தியமான வாடிக்கையாளர்கள், போட்டியாளர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றிய தகவல்கள் இருக்க வேண்டும். பெரும்பாலான வணிகத் திட்டங்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: வாய்ப்பு, செயல்படுத்தல், நிறுவனத்தின் கண்ணோட்டம் மற்றும் நிதித் திட்டம்.

வாகனங்களில் பயன் படுத்தக்கூடிய மற்றும் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய பேட்டரி விற்பனை தொழிலை திறப்பது ஒரு லாபகரமான முயற்சியாகும். பிரபலமான பேட்டரிகளை வாங்கி விற்பது மிகச் சிறந்த நாளில் தொழில் ஆரம்பிப்பது போன்ற காரணிகளை அல்லாமல் கவனிக்க வேண்டிய மிக அதிகமான காரணிகள் உள்ளது.

  1. போட்டியாளர்கள் மற்றும் தொழில் துவங்கும் இடம் பற்றிய மதிப்பாய்வு செய்தல் 

ஏற்கனவே ஏராளமான போட்டிகளைக் கொண்ட ஒரு சிறிய நகரத்தில் ஆட்டோ பேட்டரி வணிகத்தைத் தொடங்குவதில் அர்த்தமில்லை. எதிர்கால வணிக உரிமையாளர்கள் தங்கள் பேட்டரி விற்பனை தொழிலை எவ்விடத்தில் செய்யவேண்டும் என்பதை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும். வணிக உரிமையாளர்கள் தங்கள் தயாரிப்புகளுக்கான சரியான சந்தையை தீர்மானித்தவுடன், அவர்கள் தங்கள் வணிகங்களின் இருப்பிடத்தையும் முக்கிய சாலைகள் அல்லது ஷாப்பிங் பிளாசாக்கள் போன்ற இடங்களில் எளிதாக அணுகக்கூடிய இடங்களில் தரை தளங்களில் அமைப்பது மிகவும் முக்கியமாகும். பேட்டரி கடையை திறப்பதற்கு முன், வணிக உரிமையாளர்கள் தங்கள் உள்ளூர் வாடிக்கையாளர்கள் எந்தவிதமான பேட்டரி வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள் என்பது பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.

  1. சந்தைப்படுத்தல் பற்றிய ஆராய்ச்சி தேவை

உங்களது பேட்டரி விற்பனைக் கடையை திறந்த பிறகு உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு உங்கள் பேட்டரி கடையைப் பற்றி தெரிந்திராவிட்டால் உங்களது  வணிகம் தோல்வியடையும் வாய்ப்புகள் உள்ளன. உங்களிடம் இருக்கக்கூடிய பேட்டரி வகைகள் மற்றும் அதன் அம்சங்கள் பற்றி முன்கூட்டியே மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். உள்ளூர் மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் குறித்தும் அதிக வசதியான வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை தெரிந்து கொண்டும் இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு விளம்பரம் செய்ய வேண்டும். பேட்டரி தொழில் நிறுவனத்தின் பார்வையாளர்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கும், பயனுள்ள டிஜிட்டல் மார்க்கெட்டிங் உத்திகளைக் கொண்டு வருவதற்கும், ஒரு வலைத்தளத்தை வடிவமைப்பதற்கும், இத்தகைய மார்க்கெட்டிங் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

முடிவுரை 

பேட்டரி தொழிற்சாலை அமைத்து இருப்பவராக இருந்தாலும், பேட்டரி வணிக உரிமையாளர்கள் இருந்தாலும் தங்கள் புதிய நிறுவனங்கள் வெற்றிபெற விரும்பினால், தங்களது முழு வெற்றியை அடையும் வரை ஒரு சில வருடங்கள் பொறுமையாக காத்திருந்து தங்களது திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பேட்டரி தொழில் வணிகத்தை தொடங்குவதற்கு முன்னர் ஏற்படக்கூடிய சிக்கல்களை துல்லியமாக ஆராய்ந்து அதற்கேற்ற போது சிறந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வெற்றி பெற வேண்டும்.

 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.