written by | October 11, 2021

பிளாஸ்டிக் உற்பத்தி வணிகம்

×

Table of Content


பிளாஸ்டிக் தயாரிப்பு தொழிலை தொடங்குவதற்கான வழிமுறைகள் 

காலமாற்றம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகிய தவிர்க்க இயலாத வாழ்க்கையின் பாதையில் அனைவருடனும் பயணம் செய்யும் ஒரு பொருளாக பிளாஸ்டிக் மாறி இருக்கிறது. அதன் பயன்பாட்டை நமது அன்றாட வாழ்வில் இருந்து எந்த வகையிலும் நீக்க முடியாது என்பதை அனைவரும் உணர்ந்திருக்கிறோம். எப்போதும் வர்த்தக ரீதியான தேவைகளை கொண்ட ஒரு தொழில் பிரிவாகவே பிளாஸ்டிக் மேனுஃபாக்சரிங் என்ற பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு துறை அமைந்திருக்கிறது. பொதுவாக பிளாஸ்டிக் என்று சொல்லப்பட்டாலும் கூட அது பாலிமர் மற்றும் ரெசின்ஸ், பாலிபுரோபைலீன், பாலிஸ்டரின், அக்ரிலோநைட்ரில் புட்டாடின் ஸ்டிரீன், பெட் என்ற பாலியெத்திலீன் டெரப்தலேட், பாலியெஸ்டர், பி.வி.சி என்ற பாலிவினைல் குளோரைடு, எச்.டி.பி.இ என்ற ஹைடென்சிட்டி பாலியெத்திலின், பாலியூரித்தேன், பாலிகார்பனேட், பாலியெத்திலீன் ஆகிய பல்வேறு வகைகளில் அன்றாட வாழ்க்கையில் நீக்கமற கலந்துள்ள ஒரு பொருள் பிளாஸ்டிக் ஆகும். 

உலக நாடுகளின் பொருளாதார கட்டமைப்பில் தவிர்க்க இயலாத ஒரு தொழில் துறையாக பிளாஸ்டிக் தயாரிப்பு பிரிவு அமைந்திருக்கிறது. சர்வதேச அளவில் தனி மனிதருடைய பிளாஸ்டிக் பயன்பாடு எவ்வளவு என்பது கணக்கிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்தியாவில் ஒரு தனிமனிதர் 11 கிலோ அளவு கொண்ட பிளாஸ்டிக்கை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. சீனாவை கணக்கிடும் பொழுது இந்த அளவானது ஒரு தனி மனிதருக்கு 38 கிலோவாக இருக்கிறது. பிரேசில் நாட்டில் 32 கிலோவாகவும், மற்ற அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை கணக்கிடும் பொழுது சுமாராக 100 கிலோவுக்கும் மேற்பட்ட அளவில் தனிமனித பிளாஸ்டிக் பயன்பாடு இருப்பதாக தெரியவந்துள்ளது. 

மாறாத சந்தை மதிப்பு

உலக அளவில் ஒரு தனி மனிதருடைய அன்றாட பிளாஸ்டிக் பயன்பாடு அளவு என்பது சுமார் 11 கிலோ என்று பார்த்தோம். இந்த அளவு அடுத்து வரக்கூடிய பத்து ஆண்டுகளில் 20 கிலோவாக அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. ஏனென்றால், இந்திய அளவில் வசிக்கக்கூடிய பெரும்பாலான மத்திய தர மக்களுக்கான அன்றாட வாழ்க்கை பயன்பாடுகளுக்கு உபயோகமாக இருக்கும் வகையிலும், எளிய விலை கொண்டதாகவும் பிளாஸ்டிக் பொருட்கள் அமைந்திருக்கின்றன. அதன் அடிப்படையில் சுலபமாக பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான சந்தை மற்றும் வர்த்தக மதிப்பு என்பது எப்போதும் மாறாத நிலைப்பாட்டிலேயே அமைந்திருக்கிறது. 

தேசிய அளவில் வளர்ந்து வரக்கூடிய பிளாஸ்டிக் மேனுஃபாக்சரிங் தொழில் பிரிவில் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 30ஆயிரம் நிறுவனங்களுக்கும் மேல் செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. அந்த நிறுவனங்களில் கிட்டத்தட்ட 40 லட்சம் பேர்களுக்கும் மேலாக பணியாற்றுவதாக அறியப்பட்டுள்ளது. ஏற்றுமதி தரம் கொண்ட பொருட்கள் தயாரிப்பு, லேமினேட் செய்வதற்கான மூலப்பொருட்கள்,  எலக்ட்ரானிக் ஆக்சஸரீஸ், மருத்துவ உபகரணங்கள் மற்றும் நுகர்வோருக்கான பல்வேறு வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயார் செய்து கிட்டத்தட்ட 150 நாடுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் ஆகியவற்றுக்கு இந்தியாவிலிருந்து பிளாஸ்டிக் தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் வாகன உற்பத்தி துறை, நுகர் பொருட்களுக்கான பேக்கேஜிங் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஆகிய துறைகளுக்கு பிளாஸ்டிக் மேனுபேக்ச்சரிங் பொருட்கள் மிகவும் அத்தியாவசியமானதாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய அளவிலான பிளாஸ்டிக் வர்த்தகமானது ஆண்டு தோறும் சுமார் 13 சதவிகிதம் அளவுக்கு வளர்ந்து வருவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிளாஸ்டிக் மேனுஃபாக்சரிங் செய்யும் தொழில் பிரிவை அமைக்க திட்டமிட்டுள்ள தொழில் முனைவோர்களுக்கு ஆலோசனை தருவதற்காக பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் செயல்பட்டு வருகிறார்கள். மேலும், சிறு தொழில் முனைவு என்ற வகையில் அரசாங்கத்தின் சலுகைகளை பெற்று தொழில் நிறுவனத்தை தொடங்கி செய்யக்கூடிய வர்த்தக மதிப்பு கொண்டதாக இந்தத் தொழில் இருக்கிறது. தொழிலில் இறங்குவதற்கு முன்னதாக முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய தொழில்நுட்ப  மற்றும் வர்த்தக கட்டமைப்பு சம்பந்தப்பட்ட ஒரு அடிப்படையான தகவல் இருக்கிறது. அதாவது, பிளாஸ்டிக் மேனுஃபாக்சரிங் தொழில் கூடங்களில் எந்த வகையில் பொருட்களை தயார் செய்கிறார்கள் என்பது நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

முதலாவது, வகை இன்ஜெக்ன் மோல்டிங் என்பதாகும். இந்த முறையானது ஒட்டுமொத்த பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பில் சுமார் 58 சதவிகிதம் அளவுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது முறை என்பது எக்ஸ்ட்ருஷன் எனப்படுகிறது. இந்த முறையானது மற்ற பிளாஸ்டிக் உற்பத்தியில் சுமார் 30 சதவிகிதமாக இருக்கிறது. மூன்றாவது முறை என்பது புளோ மோல்டிங் என்று சொல்லப்படுகிறது. இந்த முறைப்படி மொத்த பிளாஸ்டிக் உற்பத்தியில் சுமார் 10 சதவிகித பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன. மீதமுள்ள இரண்டு சதவிகித பிளாஸ்டிக் பொருட்கள் வேறு முறைசாரா தயாரிப்பு தொழில் நுட்பங்கள் மூலம் தயார் செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. ஒரு, பிளாஸ்டிக் மேனுஃபாக்சரிங் தொழில் முனைவோர் இந்த தகவல்களை கவனத்தில் கொள்வது அவசியமானது.

பிளாஸ்டிக் இன்ஜெக்ன் மோல்டிங் மெஷின்

இந்த வகை இயந்திரமானது தானியங்கி முறையிலான மைக்ரோ புராசஸ் கட்டுப்பாட்டு செயல்முறையில் இயங்க கூடியதாகும். இதில், ஆட்டோமேட்டிக் மற்றும் செமி ஆட்டோமேட்டிக் முறைகளில் இயங்கக்கூடிய எந்திரங்களும் தயார் செய்யப்படுகின்றன. இந்த வகை இயந்திரம்தான் பெரும்பாலான தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உற்பத்தி செய்யும் முறையில் இன்ஜக்சன் ஸ்பீடு மற்றும் ஹைட்ராலிக் கன்ட்ரோல் முறையில் அதன் அழுத்தங்களை கட்டுப்படுத்துவது, குறைந்த அழுத்தங்களில் செயல்படுவது, கண்ட்ரோல் பேனல் முறையில் உற்பத்தியை நிர்வகிப்பது ஆகிய தொழில்நுட்ப அணுகுமுறைகளில் இந்த இயந்திரம் மூலம் பிளாஸ்டிக் மேனுஃபாக்சரிங் தொழிலை செய்ய இயலும்.  இவ்வகை எந்திரம் மூலம் சிறிய அளவுள்ள பொருட்களிலிருந்து பெரிய அளவுள்ள பொருட்கள் வரை எளிதாக மோல்டிங் முறையில் தனிப்பட்ட ஒவ்வொரு பொருளாகவும் தயார் செய்ய முடியும்.

பிளாஸ்டிக் எக்ஸ்ட்ருஷன் மெஷின்

இந்த இயந்திரம் மூலம் நீளமாக தயாரிக்கக்கூடிய பிளாஸ்டிக் பைப் அல்லது கேபிள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயார் செய்ய இயலும். அதாவது தனிப்பட்ட பொருட்களாக இல்லாமல் தொடர்ந்து நீளமாகவோ அல்லது குறிப்பிட்ட அளவு நீளம் கொண்டதாகவோ உள்ள பொருட்களின் தயாரிப்புக்கு இந்த வகை இயந்திரமே பொருத்தமானது. மேலும், தொடர்ச்சியான நீளமாக உள்ள ஒட்டக்கூடிய டேப் வகைகள்,  நீளமான ஒயர்கள் மற்றும் கேபிள்கள், ஃபிலிம் வகைகள், உலோகங்களின் மீது பிளாஸ்டிக் கோட்டிங் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இந்த வகை எந்திரம் பொருத்தமாக இருக்கும்.

பிளாஸ்டிக் புளோ மோல்டிங் மெஷின்

இந்தவகை எந்திரம் மூலமாக விளையாட்டுப் பொருட்களை எளிதாக தயார் செய்ய முடியும். அதாவது குழாய் போன்ற வடிவங்களின் ஒரு முனையை அடைப்பது அல்லது வேறு ஒரு பொருளை இணைப்பது, ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களின் இணைப்பாக ஒரு பொருளை தயாரிப்பது ஆகிய நிலைகளில் இந்த இயந்திரம் செயல்படுகிறது. பெரிய அளவிலான தண்ணீர் தொட்டிகளை தயார் செய்வதுகூட  இவ்வகை எந்திரம்தான். இந்த இயந்திரம் ஆட்டோமேட்டிக் முறையிலும், செமி ஆட்டோமேட்டிக் முறையிலும், நியூ மேட்டிக் முறையிலும் செயல்படக் கூடியதாக இருக்கிறது. பிளாஸ்டிக் மேனுஃபாக்சரிங் தொழில்துறையில் இந்த பிரிவு எந்திரங்கள் குறைந்த அளவில் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மேற்கண்ட மூன்று விதமான இயந்திரங்களை பயன்படுத்தியே சுமார் 90 சதவிகிதம் பிளாஸ்டிக் மேனுஃபாக்சரிங் செய்யப்பட்டு வருகிறது. ஒரு தொழில் முனைவோர் நடை முறையில் செயல்பட்டு வரக்கூடிய ஒரு தொழிற்சாலைக்கு சென்று சம்பந்தப்பட்ட எந்திரங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை நேரடியாக பார்வையிட்டு வருவது மிகவும் அவசியம். அதன் இயக்கங்கள் பற்றிய தகவல்கள் தேவைப்படும் போது சம்பந்தப்பட்ட பணியாளர்களிடம் நேரடியாகவே கேட்க வேண்டும். பெட்ரோலியம் கெமிக்கல் மூலம் கிடைக்கக்கூடிய பிளாஸ்டிக் மூலப்பொருளை அந்த எந்திரங்கள் எவ்வாறு அழகிய பொருட்களாக வடிவமைக்கின்றன என்பது குறித்து நேரடியாக பார்த்து அறிய வேண்டுவது மிகவும் முக்கியம்.

முக்கியமான அடிப்படை விஷயங்கள்

தொழில் தொடங்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் செயல்பட்டு வரும் எம்.எஸ்.எம்.இ என்ற சிறு, குறு மற்றும் மத்திய வகை தொழில் ஆகியவற்றுக்கான அமைப்பின் சிறுதொழில் நிறுவனமாக பதிவு செய்து கொள்வது அவசியமானது. அதன் மூலம் ஏற்றுமதி செய்வதற்கான வழிமுறைகளையும் அரசின் இதர துறைகள் மூலமாக அறிந்து கொண்டு செயல்படலாம். ஒரு தனியார் நிறுவனம் என்ற வகையில் அவசியமாக இருக்கக்கூடிய ஜி.எஸ்.டி வரிக்கான பதிவு எண், உள்ளாட்சி மன்றங்கள் அளிக்கும் அனுமதி, சுற்றுச்சூழல் துறை அளிக்கும் தடையில்லா சான்று உள்ளிட்ட அரசாங்க அனுமதிகளையும் பெற்றுக் கொள்வது அவசியமானது.

தயாரிக்கும் பொருள்

பிளாஸ்டிக் மேனுஃபாக்சரிங் செய்யக்கூடிய தொழில் முனைவோர் எந்த வகையிலான பொருட்களை தயாரிப்பது என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, வாட்டர் டேங்க், ஃபைபர் ரி-இன்ஃபோர்ஸ்டு பிளாஸ்டிக், பி வி சி கதவுகள், எக்ஸ்பேண்டடு பாலியூரித்தேன் ஃபோம், பாலியூரித்தேன் ஷீட் மற்றும் பைப்புகள், பெட் பாட்டில்கள், டிஸ்போசபிள் பிளாஸ்டிக் கப் மற்றும் பிளேட்டுகள், மருத்துவமனைகளுக்கு தேவையான இன்ஃபியூஷன் செட் மற்றும் பிளட் டிரான்ஸ்ஃபியூஷன் செட், எச்.டி.பி,இ பைகள், கேபிள்கள், ஒயர்கள், பி.வி.சி வாட்டர் ஃப்ரூப் ஷீட்ஸ், சிமெண்டு பைகள், பி.வி.சி மற்றும் யு.பி.வி.சி கதவு மற்றும் ஜன்னல்கள், வாட்டர் கேன்கள் உள்ளிட்ட ஏராளமான நுகர் பொருள்களை தயாரிக்கும் வர்த்தக வாய்ப்பை இந்த தொழிலில் பெற முடியும்.

தொழில் ரீதியாக கவனிக்க வேண்டியவை 

தகுந்த ஆலோசகர்கள் மூலம், தயாரிப்பினை மேற்கொள்ளத்தேசம் செய்யப்பட்ட பொருட்களுக்கான இயந்திரங்கள், இடவசதி, உள்கட்டமைப்பு, தொழிலாளர் தேவை, கச்சாப் பொருள்கள் பெறுவது, உற்பத்தி மற்றும் விற்பனை ஆகிய நிலைகளில் ஏற்படக்கூடிய செலவினங்களை மிகச் சரியாக கணக்கிட்டு திட்ட வரையறை செய்து கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் சுயமாகவும் அல்லது தொழில் கூட்டாளிகள் மூலமாகவோ தகுந்த முதலீட்டை திரட்டிக் கொள்ள வேண்டும்.

தயாரிக்கும் பணிகளை தொடங்கியவுடன் அதை விற்பனை செய்வதற்கான தகவல் தொடர்புகளை பல்வேறு விதங்களில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நிறைய பொருட்களை தயார் செய்யக்கூடிய வகையில் உற்பத்தி அலகு கட்டமைக்கப்பட்டு இருந்தாலும் கூட, சந்தையின்  தேவை நிலவரத்திற்கு ஏற்ப சில பொருட்கள் மட்டுமே அதிகப்படியாக தயாரிக்கக்கூடிய சூழல் உருவாகலாம். அந்த நிலையில் சம்பந்தப்பட்ட பொருளுக்கான வடிவம், அளவுகள், அதன் எடை உள்ளிட்ட அடிப்படையான தொழில்நுட்ப விஷயங்களை நன்றாக கணக்கிட்டு உற்பத்தியை மேற்கொள்வதன் மூலம் சிறந்த அனுபவத்தை பெற இயலும். 

உற்பத்தி செய்யும் தொழில் கூடம் சொந்த கட்டிடமாக இருந்தால் ரொம்பவும் நல்லது. வாடகை அல்லது குத்தகை என்னும் நிலையில் சில உள் கட்டமைப்புகளை முழுமையாக அமைத்துக் கொள்வது சிரமம். மேலும், பிளாஸ்டிக் மெட்டீரியல் சப்ளையர் பற்றிய தகவலை அறிந்து கொண்டு அவர்களுடைய தேவையை குறிப்பிட்ட காலத்திற்குள் பூர்த்தி செய்யக்கூடிய தொழில் திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் சந்தையில் நீடித்து செயல்பட்டு, பிளாஸ்டிக் மேனுஃபாக்சரிங் தொழில் பிரிவில் வெற்றி நடை போட முடியும்.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.