சிறந்த தொழில் வாய்ப்புகளை பெறுவதற்காக ஒரு பில்டர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
மனித வாழ்க்கைக்கு மிக அவசியமான மூன்று விஷயங்கள் உணவு உடை மற்றும் இருப்பிடம் என்று சொல்லப்படும் குடியிருக்கும் வீடு ஆகியவையாகும். உலகமெங்கும் சுற்றி வந்தாலும் நிம்மதியாக ஓய்வெடுக்க கூடிய ஒரு இடம் ஒருவரது சொந்த வீடு ஆகும். அதனால்தான் எலி வளையானாலும் தனி வளை என்ற சொல் வழக்கு ஏற்பட்டது. இன்றைய சூழலில் ஏராளமான தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளதால் வீடுகள் கட்டமைப்பு என்பது குறுகிய காலத்தில் முடிக்கப்பட கூடிய ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. கட்டுமான தொழில் துறையில் ஈடுபட்டுள்ள பில்டர்கள் என்ற தொழில் முனைவோர்களுக்கு வாடிக்கையாளர்களுடன் நேரடியான தொடர்பு இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் பிசினஸ் ஐடியாஸ் ஃபார் பில்டர்ஸ் என்ற வகையில் பில்டர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பல்வேறு வியாபார ரீதியான மற்றும் மனோ தத்துவ அடிப்படையிலான விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
சொந்த வீடு என்ற நிலையில் சம்பந்தப்பட்ட குடும்ப அங்கத்தினர்கள் அனைவரது ஆலோசனைகள் மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றுடன் கொண்டு வீட்டின் கட்டுமான பணியை செய்வது அல்லது கட்டி முடிக்கப்பட்ட வீட்டை வாங்குவது என்ற தீர்மானமான முடிவை தனி மனிதர்கள் எடுப்பதாக தெரியவந்துள்ளது. இந்த அடிப்படை மனோநிலையை பில்டர்கள் மனதில் கொள்ள வேண்டும். ஒரு பொருளை யார் அதிகம் பயன்படுத்துகிறார்களோ, அவர்களுக்கு தகுந்தபடிதான் அது வடிவமைக்கப்பட வேண்டும். இதுதான் உற்பத்தி வடிவமைப்பு மேலாண்மையின் அடிப்படை நோக்கமாக வரையறுக்கப்படுகிறது. இதன்படி பார்த்தால், வீட்டை அதிகம் பயன்படுத்துவது பெண்களும், குழந்தைகளும் என்ற நிலையில் ஒரு வீட்டின் கட்டமைப்பு அவர்களுக்கு ஏற்றதாக இருப்பது அவசியம்.
இந்திய சமூக சூழலைப் பொறுத்தவரை, அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் சமூக, பொருளாதார மாற்றங்களின் காரணமாக, கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று வருவாய் ஈட்டுகின்றனர். அதனால், பெண்களின் பெயரில் வீடு வாங்கும் பழக்கம் வளர்ந்து வருகிறது. பொதுவாகவே, வீடுகள் கட்டமைப்பு என்பது பெண்கள், குழந்தைகளின் வசதிக்கு ஏற்ப அமைந்தால், அதில் ஆண்களும் நிம்மதியாக வசிக்க இயலும் என்பது கட்டிட அமைப்பியல் வல்லுனர்கள் கருத்து என்பதை பிசினஸ் ஐடியாஸ் ஃபார் பில்டர்ஸ் என்று கவனத்தில் கொள்ள வேண்டும்.
பில்டர் மற்றும் வாடிக்கையாளருக்கான சட்டம்
வாடிக்கையாளர்கள் மற்றும் பில்டர்கள் மத்தியில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ரியல் எஸ்டேட் ரெகுலேட்டரி அத்தாரிட்டி அதாவது ரெரா என்ற சட்ட நடைமுறையை மத்திய அரசு உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகின்றது. அதன் அடிப்படையில், அனைத்து மாநில அரசுகளும் கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தை அமைத்து செயல்படுத்தி வருகின்றன. அதனால் ஒரு மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட பட்ஜெட் மதிப்பிற்கு மேற்பட்ட அனைத்து கட்டுமான பணிகளும் அந்த அமைப்பில் முறையாக பதிவு செய்து அதற்கான பதிவு எண்ணை பெற்றாக வேண்டும். அதனடிப்படையில் பில்டர்கள் தங்களுடைய கட்டுமான திட்டத்திற்கு ரெரா பதிவு எண் மற்றும் நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பெற்ற கட்டுமான அனுமதி ஆகியவற்றை முறைப்படி வாடிக்கையாளர்களுக்கு தெரிவிப்பது அவசியமானது.
பில்டரின் சமூக பொறுப்பு
நிலத்தின் பெரும்பாலான பகுதியு கட்டுமானத்துக்கு பயன்பட்டால்தான் அது பில்டருக்கு ஆதாயம். அதுதான், வாடிக்கையாளருக்கும் பயன் தரும். அதனால், நிலத்தை தகுந்த செட்பேக் விட்டு, கட்டுமான பணிக்கு பயன்படுத்தும் வகையில் ஸ்ட்ரக்சுரல் என்ஜினியர் மூலம் பிளான் அமைக்க வேண்டும். புராஜெக்ட் நடைபெறும் இடங்களில் கான்கிரீட் போடும் இடத்தில், தொழிலாளர்கள், தங்கள் இஷ்டத்துக்கு கான்கிரீட்டை கொட்டி வீணாக்குவதை கண் காணித்து தடுப்பதும் அவசியம். ஒரு கட்டிடத்தில் தேவைக்கு அதிகமாக கம்பிகளை வைப்பதோ, தேவைக்கு அதிகமாக சிமெண்ட் போடுவதால் கட்டுமானச் செலவுகள் கூடிக்கொண்டே போகும் என்பதை ஒவ்வொரு பில்டரும் அறிந்திருப்பது அவசியம்.
சிறிய கட்டுமான திட்டமாக இருந்தாலும் அல்லது பெரிய கட்டுமான திட்டமாக இருந்தாலும் பில்டர்கள், ஆர்க்கிடெக்ட் மூலம் தக்க ஆலோசனைகளை கேட்டுக் கொள்ள வேண்டும். ஒரு கட்டிடம் என்பது பல்வேறு வகையான தொழில்நுட்ப வல்லுநர்களின் ஒட்டு மொத்த உழைப்பு என்பது பிசினஸ் ஐடியாஸ் ஃபார் பில்டர்ஸ் என்ற நிலையில் கவனிக்கப்பட வேண்டும். இன்றைய சூழலில் அஸ்திவார முறைகளில் காலம் ஸ்ட்ரக்சர் முறை பயன்படுத்தப்படுவதால் செலவில் பெருமளவு குறையும் என்பதை வாடிக்கையாளரிடம், பில்டர்கள் தெரிவித்து அதற்கேற்ற தொழில்நுட்ப முறைகளையும் பயன்படுத்தி கட்டிடப் பணிகளை முடித்து நல்ல மதிப்பை பெற முடியும் .
தற்போதைய சிக்கலான பொருளாதார சூழலில் வீடு கட்டுபவர்கள் குறிப்பிட்ட ஒரு பில்டர் உடைய பான் கார்டு நம்பர் சேல்ஸ் டாக்ஸ் நம்பர் சர்வீஸ் டாக்ஸ் நம்பர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தேடிப்பிடித்து அவரது வரி செலுத்தும் முறைகள் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் இருக்கிறதா என்பதை பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கட்டுமான பணியை செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பில்டரின் சிபில் அளவையும் கவனிக்கக்கூடிய வாடிக்கையாளர்களும் தற்போது இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு பில்டரை பொறுத்தவரையில் வாடிக்கையாளரிடம் நேர்மறையான அணுகுமுறைகளை மேற்கொள்வதே தொழில் வெற்றிக்கான அடிப்படையாகும்.
பிசினஸ் ஐடியாஸ் ஃபார் பில்டர்ஸ் என்ற நிலையில் வாடிக்கையாளரிடம் இருந்து பணம் பெறக்கூடிய பில்டர்கள் செக் அல்லது வங்கிக்கணக்கில் டிரான்ஸ்பர் ஆகிய முறைகளில் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலமும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை சுலபமாக பெறமுடியும். மேலும், ஃபிளாட் விற்பனை சமயத்தில் செலுத்த வேண்டிய பல்வேறு கட்டணங்கள், மின் இணைப்பு, தண்ணீர் மற்றும் கழிவு நீர் இணைப்பு, முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம், கார் பார்க்கிங் கட்டணம் போன்றவை பற்றிய கணக்குகளை ஆரம்பத்திலேயே மிகச்சரியாக அளிக்க வேண்டும். அதன் காரணமாக பின்னால் வரக்கூடிய தேவையற்ற மனச்சங்கடங்கள் தவிர்க்கப்படும். கார் பார்க்கிங் வசதி இருக்கும் பட்சத்தில் அதனை பத்திரத்தில் பில்டர் அவசியம் குறிப்பிட்டு, அதற்குரிய ஃபிளாட் எண் மற்றும் அதன் நான்கு எல்லைகளையும் தெளிவாக காட்டுவதுடன், சம்பந்தப்பட்ட இடம் கார் பார்க்கிங் செய்வதற்காகவே ஒதுக்கப்பட்ட இடம் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
கட்டுமான ஒப்பந்தம்
ஒரு பில்டர் என்பவர் கன்ஸ்ட்ரக்ஷன் அக்ரிமென்டில் எல்லா விவரங்களையும் தெளிவாகச் சொல்ல வேண்டும். மெயின் டோர், குளியல் அறையின் கதவு நீள அகலம், கதவு என்ன மெட்டீரியல், டைல்ஸ் வகைகளுக்கான தரம், பிராண்டடு வாஷ்பேசின், மாடுலர் கிச்சன், எக்ஸ்ட்ரா பாத்ரூம், பெயிண்டிங், காம்பவுண்டு வால் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தெளிவாக அக்ரிமென்டில் குறிப்பிட வேண்டும். பிளாட் டைப் கட்டிடங்கள் என்றால் கட்டிடம் கட்டப்போகும் சொத்திற்கும், பில்டருக்கும் இடையில் உள்ள ஜாயிண்ட் வென்ஜர் ஒப்பந்தங்கள் அல்லது பில்டரின் சொந்த சொத்தாக இருந்தால் அவருடைய பத்திரங்களின் விவரங்களையும் தெளிவாக குறிப்பிட வேண்டும். அடுக்குமாடி வீடு வாங்குபவர் பில்டரிடம் கொடுத்த அட்வான்ஸ், ஃபவுண்டேஷன் ஸ்டேஜில் கொடுக்க வேண்டிய தொகை, ஃபர்ஸ்ட் புளோர் ஸ்லாப் அமைக்கும்போது கொடுக்க வேண்டிய தொகை, இரண்டு, மூன்று, நான்கு ஃப்ளோர் ஸ்லாப் கட்டமைப்புக்கு கொடுக்க வேண்டிய தொகை, பிரிக் ஒர்க் மற்றும் பிளாஸ்டரிங் பணிகளுக்கு கொடுக்க வேண்டிய தொகை ஆகியவை தெளிவாக இருக்க வேண்டும். மேலும், பணத்தைப்பற்றி எங்கெல்லாம் குறிப்பிடப்படுகிறதோ அங்கெல்லாம் எண்ணாலும், எழுத்தாலும் அந்த மதிப்பை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இது தவிர அரசின் கட்டிட அனுமதி மின்வாரியத்தின் கழிவுநீர் வாரியத்தின் மற்றும் பிற அரசுத்துறைகளில் அனுமதிகள் முறையாக வாங்கப்பட்டுள்ளதையும் அக்ரிமென்ட்டில் குறிப்பிடுவதும் பிசினஸ் ஐடியாஸ் ஃபார் பில்டர்ஸ் என்ற வகைக்குள் உட்பட்டதாகும்.
- புதிய புராஜக்ட் தொடங்குவதற்காக நிலம் வாங்கும்போது சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள காலியான இடங்களை கவனமாக பார்க்கவேண்டும். அதன் சொந்தக்காரர்கள் யார், அந்த காலியிடங்களில் என்ன வகையான விஷயங்கள் செய்யப்பட உள்ளன என்பதை கவனமாக விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும்.
- குறிப்பிட்ட ஒரு ஏரியாவில் புதிய ப்ராஜக்ட் தொடங்கலாம் என்று திட்டமிடும் போது அந்த பகுதிகளில் ஏதாவது அரசாங்கத்தின் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் அதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை சரியான தகவல் தரும் நபர்களிடமிருந்து விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும்.
- பிசினஸ் ஐடியாஸ் ஃபார் பில்டர்ஸ் என்ற நிலையில் மண் பரிசோதனை என்பது மிக அவசியமானது. அதாவது இந்த சோதனை லோடு பேரிங் டெஸ்ட் என்று சொல்லப்படும். இதன்மூலம் அஸ்திவாரம் அமைப்பதில் ஏற்படக்கூடிய வீணான செலவுகளை நிச்சயம் தொழில் நுட்ப முறைகளை பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும். அத்துடன் பெஸ்ட் கண்ட்ரோல் என்று சொல்லப்படக்கூடிய கரையான் மற்றும் இதர பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த கூடிய மருந்துகளையும் அஸ்திவாரம் அமைப்பில் பயன்படுத்த வேண்டும்.
- ஒன்றரை அல்லது இரண்டு வருடகாலம் குறிப்பிட்ட ஒரு கட்டுமானத் திட்டம் நடைபெறும் என்ற நிலையில் சரியான இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வர வேண்டும். கட்டுமான திட்டம் முடிவடையும் சமயத்தில் அந்த மரக்கன்றுகள் ஓரளவு பெரிதாக வளர்ந்து இருப்பது அந்த இடத்தின் மதிப்பை உயர்த்தி காட்டுவதாக இருக்கும்.
- எந்த ஒரு பில்டரும் கட்டுமான பணிகளுக்கான மெட்டீரியல் வகைகளை சப்ளை செய்யும் டீலர்கள் போன் நம்பர் மற்றும் முகவரி பற்றி தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களை வர்த்தக ரீதியாக மட்டும் அணுகாமல் தனிப்பட்ட நட்புறவு கொள்ள வேண்டியதும் மிக அவசியமானது. அதன் நன்மைகளை உடனடியாக தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் காலப்போக்கில் அதனால் நிச்சயம் நன்மைகள் உண்டாகலாம்.
- மார்க்கெட்டிங் ஏஜெண்டுகள் மூலம் ஃபிளாட் விற்பனை செய்வதை விட அலுவலகத்திற்கு நேரடியாக வரும் தொலைபேசி அழைப்புகளை பிசினஸாக கன்வர்ஷன் செய்வதே வாடிக்கையாளரின் திருப்தி மற்றும் நம்பிக்கையை பெற்றுத் தருவதாக இருக்கும். அதனடிப்படையில் பில்டர் உடைய அலுவலகத்தில் பிளாட் பற்றிய விசாரணைகளுக்கு பதில் சொல்வதற்காக தகவல் தொடர்பில் நன்றாக அனுபவம் கொண்டவர்களையும், ஒரே சமயத்தில் வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்களையும் இப்பணியில் வைத்திருக்க வேண்டும்.
- பிசினஸ் ஐடியாஸ் ஃபார் பில்டர்ஸ் என்ற நிலையில் பில்டர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு அம்சம் என்னவென்றால் பல்வேறு சூழல்களில் புதிய தொழில் ஏதாவது தொடங்குவதாக இருந்தால் அந்த தொழிலும் கட்டுமானத்துறை சார்ந்ததாகவே இருப்பது மிகவும் நல்லது. உதாரணமாக இன்டீரியர் டெக்கரேஷன், மாடுலர் கிச்சன் அமைப்பு அல்லது ஒரு ரெடிமேடு கான்கிரீட் பிளான்ட் உள்ளிட்ட கட்டுமான துறை சம்பந்தமான உப தொழில்கள் பொருத்தமாக இருக்கும்.
- ஒரு கட்டுமான நிறுவனத்தின் லோகோ அல்லது அலுவலக முகவரி மற்றும் போன் நம்பர் ஆகியவற்றை மாற்றம் செய்வது உசிதமான வழி அல்ல. அதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படக்கூடிய குழப்பமான மனநிலை என்பது தொழிலில் பிரதிபலிக்கக் கூடிய சூழலை ஏற்படுத்தி விடலாம்.
- குறிப்பிட்ட ஒரு கட்டுமானத் திட்டத்தில் உள்ள வீடுகள் விற்பனை செய்யப்பட்ட பிறகு ஒரு பில்டர் ஆக அங்கு சென்று வாடிக்கையாளர்களை நேரடியாக சந்திக்க வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் உடைய மனதில் ஏற்படக்கூடிய நம்பிக்கையை வார்த்தைகளால் விளக்க முடியாது. பல பில்டர்கள் ஆப்டர் சேல்ஸ் சர்வீஸ் என்ற வகையில் அங்கு ஏற்படக்கூடிய சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு கட்டுமான நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் சேவைகளை இலவசமாக அளிக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.