written by | October 11, 2021

ஜூஸ் பார் வணிகம்

×

Table of Content


ஜூஸ் பார் வணிகத்தை எவ்வாறு தொடங்குவது

இன்றைய நவீன கால வாழ்க்கை என்பது ஒவ்வொரு விஷயத்தையும் அவசர கதியில் அணுகுகிறது என்பதை பல்வேறு அனுபவங்கள் மூலமாக அனைவரும் உணர்ந்து இருக்கலாம். அதற்கு சிறந்த உதாரணமாக, உடனடி உணவு வகை என்ற ஃபாஸ்ட் புட் வகைகளை குறிப்பிடலாம் கால மாற்றத்திற்கேற்ப பொருத்தமான முறையாக ஃபாஸ்ட் ஃபுட் இருந்தாலும் கூட, உடல்நலனுக்கு ஏற்ற வகையில் அவற்றை தயார் செய்கிறார்களா என்பதை பெரும்பாலானோர் கவனிக்க கூடிய நிலையில் இருப்பதில்லை. அதன் காரணமாக உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டு விடுகின்றன. இந்த சூழ்நிலையை அனைவரும் மெதுவாக உணர்ந்து வருகிறார்கள். அதன் விளைவாக உணவு முறைகளில் ஆர்கானிக் என்று சொல்லப்படக்கூடிய இயற்கை முறைகளை நாடும் மனோபாவம் மக்களிடையே  அதிகரித்துக் கொண்டுள்ளது.

மூலிகை ஜூஸ் வகைகள்

அந்த தேடலின் அடுத்தகட்ட நீட்சியாக  மூலிகைகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஜூஸ் வகைகளை பலரும் அருந்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சுகாதாரமான வழிமுறைகளை பயன்படுத்தி பழச்சாறு மற்றும் பல்வேறு மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட ஜூஸ் ஆகியவற்றை தயாரிப்பவர்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக இந்த வகையிலான ஜூஸ் ஐட்டங்கள் பெரும்பாலும் சாலையோரத்தில் செயல்பட்டு வரக்கூடிய சிறிய தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யப்படுவதை பலரும் கவனித்திருக்கலாம். அவ்வாறு சாலையோர கடைகளில் ஜூஸ் ஐட்டங்களை  அருந்துவதற்கு பலரும் விரும்புவதில்லை. அதே விஷயத்தை ஜூஸ் பார் பிசினஸ் முறையில் ஒரு சுகாதாரமான சூழ்நிலையில் தயாரித்துக் கொடுத்தால்  அனைத்து வயதினரும் தங்களுக்கு வேண்டிய பழச்சாறு வகைகளை அருந்தி மகிழ்வார்கள் என்பது  நிச்சயம். மேலும், கடையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கண்டிப்பாக தலை மற்றும் கைகளுக்கு கிளவுஸ் அணிந்து இருப்பது மிகவும் முக்கியமானது. அவர்கள், அணிந்திருக்கும் ஆடைகளும் சுத்தமாக இருக்கவேண்டும்.

ஜூஸ் பார் பிசினஸ் என்றால்  அது நிச்சயமாக காலை முதல் இரவு வரை செயல்பட வேண்டும். குறிப்பாக, இயற்கை முறையிலான சோற்றுக்கற்றாழை, அருகம்புல், பாகற்காய், வாழைத்தண்டு, நெல்லிக்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான ஜூஸ் வகைகளை காலை நேரத்தில்தான் மக்கள் அருந்துவதற்கு விரும்புவார்கள், பெரும்பாலும் மார்னிங் வாக்கிங் அல்லது ஜாக்கிங் செல்பவர்கள் இந்த ஜூஸ் வகைகளை வெறும் வயிற்றில் விரும்பி அருந்துவதாக தெரியவந்துள்ளது. இந்த வகை ஜூஸ் தயாரிக்க தேவையான மூலப் பொருட்கள் நகர்ப்புறங்களில் அமைந்துள்ள பெரிய மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றன. அவற்றை அன்றன்றைக்கு கொள்முதல் செய்து, அந்த நாளிலேயே அவற்றை ஜூஸாக தயார் செய்து விற்பனை செய்வது நிச்சயம் மக்கள் விரும்பும் தொழில் முயற்சியாக அமையும். 

சீசனல் பிசினஸ்

இந்தியா வெப்ப மண்டல பகுதியில் அமைந்து உள்ள நாடாக இருப்பதால் வெயில் காலங்களில் ஜூஸ் விற்பனை என்பது நல்ல லாபகரமாக இருக்கும். குளிர்காலங்களில் மூலிகைச்சாறு உள்ளிட்ட குளிர்ச்சி இல்லாத பழச்சாறு வகைகளை  தயாரித்து விற்பனை செய்வதுடன், ஹோம் டெலிவரி  வசதியையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கலாம்.  வெயில் காலங்களில் கரும்பு ஜூஸ், நன்னாரி சர்பத், இளநீர், சாத்துக்குடி ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், மாதுளை ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், திராட்சை ஜூஸ், வெள்ளரி மற்றும் தர்பூசணி ஜூஸ் ஆகிய குளிர்ச்சியான ஜூஸ் வகைகள் நன்றாக வியாபாரம் ஆகும். கூடுதலாக, வாடிக்கையாளர்கள் விரும்பக்கூடிய லஸ்ஸி மற்றும் கம்பங்கூழ் ஆகியவற்றையும் சுகாதாரமான முறையில் தயார் செய்து விற்பனை செய்யலாம். 

சரி இந்த ஜூஸ் பார் பிசினஸ் தொடங்க விரும்பினால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்கும் தொழில் முனைவோர்களுக்கு தேவையான தகவல்களை இங்கே பார்க்கலாம். 

  • பொதுமக்களுக்கு சேவை அளிக்கக் கூடிய ஒரு வியாபார நிறுவனமாக தொடங்க வேண்டும் என்பதால் இந்த தொழிலில் ஈடுபட விரும்புபவர்கள் அவர்களது நிறுவனத்துக்கு டிரேட்மார்க் லைசென்ஸ் பெறுவது அவசியமானது. இந்த லைசென்ஸ் ஏன் பெற வேண்டுமென்றால், வெற்றிகரமாக ஒரு குறிப்பிட்ட பெயரில் ஜூஸ் பார் பிசினஸ் தொடங்கி நடத்தி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரில் மற்ற நபர்கள் அதே பெயரில் தொழில் நடத்துவது சட்டப்படி தடுக்கப்படும். 
  • சேவை சம்பந்தமான தொழில் என்பதால் ஜி.எஸ்.டி பதிவு எண்ணை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரில் நிச்சயம் பெற்றிருக்க வேண்டும். அதற்கான பதிவுகளை ஆன்லைன் மூலமாகவே சுலபமாக செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஜூஸ் வகைகள் என்பது உணவு  பொருட்கள் சார்ந்த தொழிலாக இருப்பதால்  அரசாங்கத்தின்  உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம்  அதாவது ஃபுட் சேப்டி அண்ட் ஸ்டாண்டர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா (எஃப்.எஸ்.எஸ்..) என்ற அமைப்பிடம் இருந்து  அங்கீகாரத்தை பெறுவது அத்தியாவசியமானது. 

பிரான்ஸைசி வாய்ப்புகள்

தேசிய அளவில் முன்னணியில் இருக்கக்கூடிய ஜூஸ் தயாரிப்பு நிறுவனங்கள் எஃப்.எஸ்.எஸ்.. அங்கீகாரத்தை அடிப்படையாக கொண்டு, பிரான்சைஸி வாய்ப்புகளை அளிக்க முன்வருகின்றன. அப்பொழுது அவற்றை ஏற்றுக்கொண்டு அவர்களுடைய தயாரிப்புகளையும் கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்யலாம். அப்படிப்பட்ட பிரான்சைஸி கிடைப்பதற்கு சம்பந்தப்பட்ட கடை ஓரளவுக்காவது நல்ல பெயருடனும் பொது மக்களிடையே மதிப்பும் பெற்றதாகவும் இருக்கிறதா என்பதை பெரிய நிறுவனங்கள் கவனத்தில் கொள்கின்றன.

புதிய அணுகுமுறைகள் தேவை

சரி.. மேற்கண்ட அடிப்படையான விஷயங்களை செய்தாகிவிட்டது. அதன்பின் எப்படி திட்டமிடுவது என்ற கேள்விக்கு இந்த தொழிலை எவ்வகையான பிசினஸ் மாடலில் செயல்படுத்த வேண்டும் என்பதை தீர்மானம் செய்யலாம்.  பொதுவாக இந்திய அளவிலான மனோபாவம் என்னவென்றால் எந்த ஒரு தொழிலையும் குறிப்பிட்ட ஒரு இடத்தில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் செய்ய வேண்டும் என்பதாகவே இருக்கும். ஆனால், மேலை நாடுகளைப் பொறுத்தவரையில் அவர்களது தொழில் முயற்சிக்கு ஏற்ற இடம் அல்லது வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அவர்கள் மாற்று சிந்தனைகள் இறங்கி அவர்களுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.  அந்த வித்தியாசமான சிந்தனையின் காரணமாக  மேலை நாடுகளில் மொபைல் சர்வீஸ் என்ற முறையில் நான்கு சக்கர வாகனங்களில் மக்களுக்கான  தொழில் ரீதியான சேவைகளை அளிப்பது நடைமுறையில் இருந்து வருகிறது. அதாவது நம்முடைய தள்ளுவண்டி ஜூஸ் கடை போல மேலைநாட்டு நாகரிக பாணியில் அது மொபைல் ஜூஸ் ஷாப் என்ற வகையில் மோட்டார் வண்டிகளில் செயல்படும்.

இந்த மாடல் தொழில் முயற்சியில் கடை வாடகை என்பது இருக்காது குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பகுதியில் இந்த மொபைல் ஜூஸ் ஷாப் மக்களுக்கு சேவைகளை வழங்கும் என்ற தகவலை தெரிவித்துவிட்டு தொழிலில் இறங்கலாம்.  மக்களை பொறுத்தவரையில் தரமான மற்றும் சுகாதாரமான உணவு மற்றும் உணவு சார்ந்த பொருட்கள் எங்கு கிடைத்தாலும் நிச்சயம் அவர்கள் தேடிச் செல்வார்கள். அதனால், மொபைல் முறையில் ஜூஸ் பார் பிசினஸ் செய்வது புதிய அணுகு முறையாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் என்பதால்  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று குறிப்பிடலாம். 

மாற்று சிந்தனைகள்

நிறுவனத்திற்கு அருகில் அமைந்துள்ள கல்யாண மண்டபங்கள், கோவில் மண்டபங்கள்,  குடும்பத்தின் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்ப அமைந்துள்ள சிறிய வகை  ஹால்கள்  மற்றும் தனிநபர் வீடுகளில் நடக்கக்கூடிய சுப நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் அவர்களுக்கு தேவையான ஜூஸ் ஐட்டங்களை சப்ளை செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளலாம். அதற்கேற்ப சம்பந்தப்பட்ட ஏரியாவில் ஆங்காங்கே விளம்பர தட்டிகள் அமைக்கலாம். தினசரி பத்திரிக்கைகளில் அதற்கேற்ப விளம்பரங்களை அளிக்கலாம். தொலைபேசி அல்லது இணையதளம் வாயிலாக எளிதாக வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்வதற்கு ஏற்ப ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.  குறிப்பாக, அருகிலுள்ள  உணவக நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஏதாவது அவசர தேவையாக ஜூஸ் ஐட்டங்கள் தேவைப்படும் பட்சத்தில் அவற்றை சப்ளை செய்ய  தயாராக இருப்பதாக தகவல் தெரிவிக்கலாம்.

கோவில் திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் வர்த்தக ரீதியாக மொபைல் ஜூஸ்  ஐட்டங்களின் விற்பனையை  செய்வது நல்ல வியாபார யுக்தியாக இருக்கும். இதுபோன்ற புதுமைகளை செய்யும் தொழில் முனைவோர்கள் பொதுமக்களிடையே எளிதாக பெயர்பெற்று வியாபார ரீதியாக வெற்றி அடைகிறார்கள்.  பொதுவாக, ஒரு வருடத்தின் பெரும்பாலான மாதங்களில்  மதரீதியான பண்டிகைகள் மற்றும் விழாக்கள் மக்களால் கொண்டாடப்படுகின்றன.  குறிப்பிட்ட, பண்டிகை அல்லது மதரீதியான திருவிழாவுக்கு ஏற்ப ஜூஸ் ஐட்டங்களை தயார் செய்து அறிமுகப்படுத்துவது ஒரு சிறந்த தொழில் முயற்சியாக இருக்கும்.

உள்கட்டமைப்பு வசதிகள் 

நிறுவன ரீதியாக செயல்படும் பொழுது நிச்சயமாக சிறப்பான உள்கட்டமைப்பு, குளுகுளு வசதி, கவர்ச்சிகரமான லைட் செட்டிங், மனதை கவரக்கூடிய உள் அலங்காரம், அமர்வதற்கு சுகமான சேர் வகைகள் மற்றும் அழகிய டேபிள்கள் ஆகியவற்றை அமைத்து வாடிக்கையாளர்களை எளிதாக கவரலாம். மேலும், எப்பொழுதும் இனிமையான இசை அல்லது சங்கீதம் மென்மையாக தவழும்படி ஏற்பாடு செய்யலாம். அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இனிய அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாம். மேலும், கடைக்கு வரக்கூடிய சிறு குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப சுவையான ஜூஸ் வகைகளை தயாரிப்பு கொடுப்பதும் நிச்சயம் வாடிக்கையாளர்களின் மனதை கவர்வதாக அமையும்.

மாலை நேரங்களில் நிறுவனத்தின் வெளிப்புறத்தில் மிகச்சிறப்பான லைட் செட்டிங் செய்து வைத்திருக்க வேண்டும். சற்று செலவு பிடிக்கக் கூடிய விஷயமாக இருந்தாலும் கூட ஜூஸ் பார் பிசினஸ் விளம்பரப் பலகை மற்றும் அதற்கான லைட் செட்டிங் என்பது  நல்ல பளிச்சென்று தெரியக்கூடிய விதத்தில் கண்களை கவரும்படி இருக்க வேண்டும்.  குறிப்பிட்ட ஒரு தெருவில் அமைந்துள்ள நிறுவனமானது அந்த தெருவில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியக் கூடிய விதத்தில் அலங்காரமான ஒளி விளக்குகளை பொருத்தப்பட்ட போர்டுகள் கொண்டதாக இருக்க வேண்டும்.  குறிப்பாக பகலிலும் நல்ல பளபளப்பான விளம்பர போர்டுகள் கண்களுக்கு தெரிய வேண்டும்.  அதன் மூலம்தான் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள்  என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

அடிப்படையான வசதிகள்

உள்கட்டமைப்பு போர்டுகள் மற்றும் இசை ஆகியவை தவிர  ஜூஸ் பார் பிசினஸ்  நிறுவனத்தில் கீழ்க்கண்ட வசதிகள் மற்றும் உபகரணங்கள் அவசியம் இருக்க வேண்டும்.

  1. ஜூஸ் வகைகளை குறிப்பிடும் மெனு கார்டு 
  2. ரெப்ரிஜிரேட்டர்
  3. ஐஸ் சேமிக்கும் பெட்டி
  4. குழந்தைகளுக்கான  இருக்கைகள்
  5. ஜூஸ் தயாரிக்கும் மிஷின்
  6. அளப்பதற்கான பாத்திரங்கள்
  7. நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட பேப்பர் கப்
  8. கைகளைத் துடைத்துக் கொள்ள நாப்கின்கள்
  9. பழங்களின் தோலை உரிக்கும் கருவி
  10. டிஷ் வாஷர்

உள்ளிட்ட வெவ்வேறு வகையான கருவிகள் மற்றும் உபகரணங்கள் அவசியம் தேவைப்படும்.

நிறைவாக என்னதான் தரமான சேவையை அளித்தாலும் கூட குறிப்பிட்ட ஒரு பொருள் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை மக்கள் கவனத்தில் கொள்கிறார்கள். அதன் அடிப்படையில் ஜூஸ் விலையை நிர்ணயம் செய்வதில்  கவனமாக செயல்பட வேண்டும்.  இடத்துக்கான வாடகை, பணியாளர்கள் சம்பளம், விளம்பர செலவுகள், உபகரணங்களுக்கான பராமரிப்பு செலவு, மின்சார செலவு உள்ளிட்ட பல்வேறு செலவினங்களை  கச்சிதமாக கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.  அவற்றின் அடிப்படையில் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.  விலையில் சமரசம் இருந்தாலும்கூட  தரம் மற்றும் சுவை என்ற நிலையில் நிச்சயம் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என்பது தான் வெற்றியின் முதல் படி ஆகும்.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.