written by | October 11, 2021

ஜிம் அல்லது உடற்தகுதி மையம்

×

Table of Content


ஜிம் அல்லது உடற்தகுதி மையத்தை எவ்வாறு தொடங்குவது

அனைவருக்கும் வலிமையான உடலமைப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றின் மீது நிச்சயம் ஆர்வம் இருக்கும். இன்றைய நகர்ப்புற அவசர வாழ்க்கை சூழல்களில் வேலைப்பளு அல்லது தொழில் நிலவரம் பற்றிய கவலைகள் காரணமாக பலரும் தங்களுடைய உடல்நலம் குறித்து சிந்திப்பதற்கு தகுந்த நேரம் கிடைப்பதில்லை. ஆனால், உடல் என்பது ஒரு எந்திரம் போல் அதன் இயல்புக்கேற்ப செயல்பட்டு வருகிறது. தனிமனிதர்களுடைய அன்றாட வாழ்க்கை முறைக்கு ஏற்ப அவர்களது உடல் தன்னுடைய செயல்பாடுகளை இயன்றவரையில் சீராக அமைத்துக் கொள்கிறது. அந்த நடவடிக்கைகளில் ஏதேனும் சீர் குலைவு ஏற்படும் நிலையில்தான் உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. அதனால், இயன்றவரை அனைவருமே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. 

உடலை மிகவும் கட்டுமஸ்தான தோற்றத்துடன் வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஏற்ப உடலின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பதை மருத்துவ வல்லுனர்களும் வலியுறுத்தி இருக்கிறார்கள். அதனால் உருவான விழிப்புணர்வு காரணமாக உடற்பயிற்சி உள்ளிட்ட யோகா முறைகளின்மீது தற்போது மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதனால், ஜிம் அல்லது ஃபிட்னெஸ் சென்டர் சென்று, தங்களுடைய உடலுக்கான பயிற்சிகளை மேற்கொண்டு ஆரோக்கியத்தை பேணும் மனோபாவம் தற்பொழுது நகர்ப்புறங்களில் வளர்ந்து வருகிறது. இந்த முறை விரைவில் கிராமப்புறங்களிலும் பரவி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த தொழிலில் ஈடுபட விரும்புபவர்கள் ஊர் அல்லது நகரத்தில் சென்டர் அமைய உள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறையை கணக்கில் கொண்டு, கச்சிதமாக திட்டமிட வேண்டும். சிறிய ஊரில் தொடங்குவதாக இருந்தால் பளு தூக்கும் பயிற்சிகளை அளிக்கும் வழக்கமான கருவிகளோடு, ஸ்கிப்பிங் கயிறு, தம்புள்ஸ் போன்ற எளிமையான உபகரணங்களுடன் தொடங்கி பின்னர் விரிவு செய்து கொள்லலாம். இதற்கு அதிகபட்ச முதலீடு ரூ.50 ஆயிரம் போதும். அப்படிப்பட்ட ஊர்களில் குறைந்தபட்சம் மாதம் ரூ. 100 என்று கட்டணம் வைத்தால்தான் பலரும் விரும்பித் தேடி வருவார்கள். ஆரம்பத்திலேயே பெரிய அளவில் முதலீடு செய்வது சரியான முடிவல்ல. பெரிய நகரங்களில் மாதம் ரூ. 250 முதல் கட்டணம் வசூலிக்க முடியும். ஆனால், அதற்கு ஏற்ப சுமார் ரூ. 3 முதல் ரூ. 4 லட்சம் வரை முதலீடு செய்யவேண்டும். மேலும், ஜிம் அல்லது ஃபிட்னெஸ் சென்டர்  கண் கவரும் வகையில் இருக்கும்படி உள்கட்டமைப்பும் செய்ய வேண்டும். அங்கு குறைந்தபட்சமாக 100 வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு வந்து செல்வது போல தகுந்த விளம்பரங்களையும் செய்தாக வேண்டும்.

இந்தத் தொழிலைப் பொறுத்த அளவில் காற்றோட்டமான இடத்தைத் தேர்வு செய்யவேண்டியது முக்கியம். இளைஞர்கள் அதிக அளவில் வந்து செல்லக்கூடிய கல்லூரிகள் இருக்கும் இடத்தில் அமைப்பது நல்லது. அதேபோல,  பெரிய அளவிலான  குடியிருப்புகள் அமைந்துள்ள இடங்களிலும் ஜிம் அல்லது பிட்னெஸ் சென்டர் தொடங்கலாம். உடற்பயிற்சிக் கூடத்துக்கு அடிப்படையான தேவை, நல்ல பயிற்சியாளர்கள். அவர்களின் ஈடுபாட்டை வைத்துதான் அந்த உடற்பயிற்சிக் கூடத்துக்கே மரியாதை. அதனால், தெளிவான, திறமையான  பணியாளர்கள் தேர்வு என்பது மிகவும் அவசியமானது.

இரண்டு வகைகள்

இந்த தொழிலை தொடங்க விரும்பும் தொழில்  முனைவோர் இதில் உள்ள இரண்டு விதமான வித்தியாசங்களை அறிந்து கொள்வது அவசியம். முதலாவது, லக்ஸரி ஃபிட்னெஸ் சென்டர் ஆகும்.  இரண்டாவது, நார்மல் ஜிம் அதாவது பவர் ஜிம் ஆகும். பொதுவான  நடைமுறையாக லக்ஸரி ஃபிட்னெஸ் சென்டர் கட்டணம் என்பது மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பெறக்கூடியதாக இருக்கும். நார்மல் ஜிம் ஃபிட்னெஸ் சென்டர் கட்டணம் என்பது மாதாமாதம் பெறக்கூடியதாக இருக்கும்.

மேலும், லக்ஸரி ஃபிட்னெஸ் மையம் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 3 ஆயிரம் சதுர அடி இடம் தேவைப்படும்.  இதுவே, நார்மல் சென்டர் தொடங்குவதற்கு குறைந்தபட்ச அளவாக 500 சதுர அடி இடம் இருந்தாலும் கூட போதுமானது. கருவிகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை பொறுத்தவரையில் லக்ஸரி சென்டரில் ஆயிரம் சதுர அடிக்கு ரூ.9 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையில் மதிப்புள்ள உபகரணங்களை அமைக்க வேண்டியதாக இருக்கும். ஆனால், நார்மல் சென்டருக்கு நிச்சயமாக  அதில் பாதி அளவு செலவு கூட ஏற்படாது. இந்த இருவகையான பயிற்சி மையங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்பொழுது கட்டண சலுகைகளை தருவதும் அவசியமானதாகும். 

 சட்ட நடைமுறைகள்

ஜிம் அல்லது ஃபிட்னெஸ் சென்டர் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட ஏரியா நகராட்சி அல்லது முனிசிபாலிட்டி அனுமதி, நிறுவன பதிவு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு எண், பிட்னெஸ் பயிற்சி அளிப்பதற்கான தகுதிச் சான்றிதழ் ஆகிய சட்டரீதியான அங்கீகாரங்கள் பெறுவது பொதுவானதாகும். சரியான திட்ட நடவடிக்கைகளை தயார் செய்துகொண்டு தனியார் வங்கிகளை அணுகக்கூடிய தொழில் முனைவோர்களுக்கு வங்கி கடனும் அளிக்கப்படுகிறது. 

தகுதியுள்ள பணியாளர்கள்

ஜிம் அல்லது ஃபிட்னெஸ் சென்டர் நடத்துவதற்கு  கண்டிப்பாக ஒரு ரிசப்ஷனிஸ்ட் தேவை.  மேலும் காலை மாலை ஆகிய நேரங்களில்  வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டும் கோச் ஒருவர் அல்லது இருவர் தேவை.  கூடுதலாக ஒரு அலுவலக உதவியாளர் கூட தேவைப்படலாம். மேலும் இன்றைய காலகட்டத்தில் பிரபலமாக உள்ள யோகா பயிற்சி மற்றும் ஏரோபிக்ஸ் போன்ற பயிற்சிகளை அளிப்பதற்கு சான்றிதழ் பெற்ற நிபுணர்களும் நிச்சயம் தேவைப்படுவார்கள். 

உடற்பயிற்சியைப் பொறுத்தவரையில், யாரும் சுயமாக செய்யக் கூடாது என்பதால், வரக்கூடிய வாடிக்கையாளர்கள் உடைய வயதுக்கு தக்கவாறு ஆலோசனை அளிக்கக்கூடிய உடற்பயிற்சி நிபுணர் ஒருவர் ஜிம் அல்லது ஃபிட்னெஸ் சென்டர் தொழிலுக்கு மிகவும் அவசியம். அவர் பரிந்துரைக்கும் பயிற்சிகளை முதலில் கற்ற பிறகுதான்,  உடற்பயிற்சி மையத்தில் அவற்றை தனிப்பட்ட முறையில் பயிற்சி செய்ய வேண்டும்.  பயிற்சியின்போது முதலில் கார்டியோ பயிற்சிகளில் தொடங்கி, உடலை வலுப்படுத்தும் பயிற்சிகள் வரை எந்த உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும், வார்ம் அப் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்  ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டும்.

பயிற்சி முறைகள்

உடற்பயிற்சிக்கான நேரங்களை டைம் டேபிள் போட்டு பிரித்துக் கொள்ளவேண்டும். அலுவலகம் செல்பவர்கள், மாணவர்கள் போன்றோருக்கு காலை 4.30 முதல் 9.30 மணிவரை மணிக்கு ஒரு செட் என்ற கணக்கில் அனுமதிக்கலாம். ஒரு செட்டுக்கு சராசரியாக 20 பேர்வரை பயிற்சி கொடுக்கலாம். அதேபோல மாலை 5.30 முதல் 9.30 வரை 4 செட்களுக்கும் நேரம் ஒதுக்கவேண்டும். மதிய வேளையில் பெண்களுக்கு நேரம் ஒதுக்கலாம். இதற்காக, ஒரு பெண் பயிற்சியாளரை பணியமர்த்தலாம்.

ஜிம் அல்லது ஃபிட்னெஸ் சென்டர் ஒன்றை அமைத்து தொழில் ரீதியாக அதை நடத்தி வரவேண்டுமென்று விரும்புபவர்கள் முதலில் அவர்களுடைய உடலை கச்சிதமாக பராமரித்து வரவேண்டும் மேலும் அந்த சென்டரில் பணியாற்றுபவர்களும் கச்சிதமான உடல் அமைப்புடன் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதிமுறையாகும். பொதுவாக ஒரு பிட்னெஸ் சென்டரில் இருக்க வேண்டிய அடிப்படையான உபகரணங்களாவன :

மல்டி ஜிம் ஸ்டேஷன்

இந்த உபகரணம் மூலமாக ஒரே சமயத்தில் பல நபர்கள் பயிற்சி செய்ய இயலும். இந்த வகை உபகரணத்தை மையங்களில் பொருத்துவதற்கு அதிக இடம் தேவைப்படாது. குறைவான இடத்திலேயே இவற்றை அழகாக பொருத்திக் கொள்ளலாம். நகர்புறங்களில் உள்ள இடப்பற்றாக்குறைக்கு இவ்வகை கருவிகள் மிகவும் அவசியமானவை.. மேலும், மல்டி பர்ப்பஸ் பெஞ்ச் உபகரணத்தை தேவைக்கு தகுந்தாற் போல  அமைத்துக்கொள்ள வேண்டும். இதிலும் ஒருவர் பல்வேறு வகையான பயிற்சிகளை எளிதாக செய்ய முடியும்.

புல்  அப் பார்

ஜிம்மில் பொதுவாக காணப்படும்  உபகரணம் இதுவாகும். இதில் ஆண்கள் பயிற்சி செய்து அவர்களுடைய வயிற்றுப் பகுதியில் சேரக்கூடிய கொழுப்பை குறைப்பதற்கு உதவும்.

 ஸ்கிப்பிங் கயிறு

ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர்களின் தொடை மற்றும் பின்பகுதி ஆகியவற்றில் உருவாகக்கூடிய கொழுப்பை குறைப்பதற்கு இதன் மூலம் தினமும் பயிற்சி எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

 எக்ஸர்சைஸ் பால் அல்லது ஏரோபிக் பால் 

காற்று அடைக்கப்பட்ட ஒரு பெரிய பந்து வடிவிலுள்ள இதனை வெவ்வேறு வகைகளில் பயன்படுத்தி, பயிற்சி செய்து முழு உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும். டிரெட்மில் பயிற்சி செய்வதற்கு முன்பாக இந்த பால் மூலம் பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

 எக்சர்சைஸ் மேட்

ஜிம் அல்லது ஃபிட்னெஸ் சென்டர் தரையில் அமர்ந்து அல்லது படுத்த நிலையில் செய்யக்கூடிய அனைத்து பயிற்சிகளுக்கும் இந்த மேட் அவசியமானது. கண்டிப்பாக மேட் இல்லாமல் தரை மீது நின்று அல்லது அமர்ந்து செய்யக்கூடிய பயிற்சிகளை செய்வது உசிதமல்ல.

 மென்மையான டவல் வகைகள்

வாடிக்கையாளர்கள் தங்களுடைய உடற்பயிற்சிகளை முடித்த பின்னர் உடலை துடைத்துக் கொள்வதற்கு மென்மையான டவல் வகைகள்  உடற்பயிற்சி மையத்தில் நிச்சயம் வைக்கப்பட வேண்டும்.

ஸ்டாப் வாட்ச்

பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் அவர்களாகவே ஸ்டாப் வாட்ச் கொண்டுவரும் வழக்கம் இருந்தாலும் கூட ஜிம் அல்லது ஃபிட்னெஸ் சென்டரில் சில ஸ்டாப் வாட்ச் வகைகளை வைத்திருப்பது நல்லது. அது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த உபயோகமாக இருக்கும்.

டிரெட்மில்

இதன் முக்கியத்துவம் பற்றி அதிகமாக சொல்ல வேண்டியது இருக்காது. இதயம் மற்றும் கால்களுக்கான பயிற்சிகளை அளிக்க இந்த கருவி அடிப்படையான ஒன்றாகும். இதை கவனத்தில் கொண்டு, பயிற்சி மையத்தின் குறிப்பிட்ட பகுதியில் இந்த கருவியை அமைத்து விருப்பப்பட்ட வாடிக்கையாளர்கள் பயிற்சி செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

 ஸ்டீரியோ சிஸ்டம்

வாடிக்கையாளர்கள் உற்சாகமாக பயிற்சியை மேற்கொள்வதற்கு ஜிம் அல்லது ஃபிட்னெஸ் சென்டர் சிறந்த உட்புற சூழ்நிலை கொண்டதாக இருக்க வேண்டும். அதற்கு மிகவும் சிறந்த வழி இனிமையான இசையை அளிக்கக்கூடிய ஸ்டீரியோ சிஸ்டம் அமைப்பாகும். கச்சிதமான சவுண்ட் எபெக்ட் கொண்ட ஸ்பீக்கர்கள் ஆங்காங்கே சுவர்களின் மேல்புறமாக பொருத்தப்பட்டு மென்மையான இசை அங்கு கேட்டுக்கொண்டிருப்பது அவசியம்.

 காற்றோட்டமான சூழல்

குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்தாலும் கூட நல்ல காற்றோட்டமான சூழல் ஏற்படுவதற்கு தகுந்த வகையில் நிறைய ஜன்னல்கள் கொண்ட கட்டிடத்தை தேர்வு செய்ய வேண்டும். காரணம் ஒரு பலரும் காற்றோட்டமான சூழலில் பயிற்சிகளை மேற்கொள்ள விரும்புவார்கள். 

பயிற்சி செய்ய வருபவர்களுக்கு உடல் ஆரோக்கியம் தரக்கூடிய சத்து மாவு வகைகள் மற்றும் சிறிய உடற்பயிற்சி கருவிகள் ஆகியவற்றை விற்பனை செய்யலாம். மேலும், அவை பற்றிய கூடுதல் தகவல்களை அளித்து அவர்கள் அவற்றை வாங்கும்படி செய்வதும் வர்த்தக ரீதியாக லாபத்தை அளிக்கும். மேலும்,  பயிற்சி மையத்தில் வாடிக்கையாளர்கள் உடைய வயதுக்கு தகுந்த சரிவிகித உணவு குறித்த அட்டவணையை மாட்டி இருக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்களில் பயிற்சிக்கு வராத வாடிக்கையாளர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரிக்க வேண்டும். இவ்வாறு, படிப்படியாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று, நிறுவனத்தின் பெயரையும் பிரபலப்படுத்துவதன் மூலமாக பல்வேறு ஊர்களில் ஜிம் அல்லது ஃபிட்னெஸ் சென்டர் மையங்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்த முடியும். 

 

 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.