written by | October 11, 2021

கண்ணாடி தகடுகள் வணிகம்

×

Table of Content


சமையல் அறையில் பயன்படுத்தப்படும் கண்ணாடி பொருட்களை விற்கும் தொடர்பான வணிகத்தை செய்வதற்கான வழிமுறைகள் 

நம் வீட்டின் சமையலறை மற்றும் உணவு சார்ந்த இடங்களில் பெரும்பாலும் கண்ணாடி, பீங்கான், மண்பாண்டங்கள், உலோகத்தால் செய்யப்பட்ட பாத்திரங்கள் என  நான்கு வகையான பாத்திரங்களைப் பயன்படுத்துகிறோம். இவை அனைத்துமே, அனைத்து விதமான குடும்பங்களிலும் அன்றாட சமையல் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டாலும் கண்ணாடி பொருட்களுக்கு தனி சிறப்பு பெரும்பாலான மக்களிடம் உள்ளது. இத்தகைய கண்ணாடிப் பொருட்கள் மக்கள் அருந்தும் பழச்சாறு, பனிக்கூழ், குளிர்பானங்கள் போன்றவற்றிற்காக பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய கண்ணாடி பொருட்களை தயாரித்து விற்கும் தொழிலையோ அல்லது வேறு இடத்தில் தயாரிக்கப்பட்ட கண்ணாடி பொருட்களை வாங்கி விற்கும் தொழிலை செய்வதற்கான ஆர்வம் உங்களுக்கு இருந்தால் இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு பயன் தரும். இந்த தொழில் ஆரம்பிப்பதற்கு முன்னால் இந்த கண்ணாடி பற்றிய வரலாறு மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள் போன்ற தகவல்களை தெரிந்து கொண்டு செய்வது நல்லது. 

கண்ணாடி தயாரிப்பு முறை மற்றும் அதில் சேர்க்கப்படும் முறை பொருட்களை பொறுத்து பல்வேறு வகையான கண்ணாடி உருவாக்கப்படுகிறது. போரோசிலிகேட் , கொரில்லா கிளாஸ், மென்மையான சோடா சுண்ணாம்பு, சோடா சுண்ணாம்பு, வணிக கண்ணாடி, ஆல்காலி-பேரியம் சிலிக்கேட் கண்ணாடி, கண்ணாடி மட்பாண்டங்கள், ஆப்டிகல் கிளாஸ் இவ்வாறு பல்வேறுவிதமான பயன்பாட்டுக்கு தகுந்தவாறு கண்ணாடிகள் தயாரிக்கப்பட்டு விற்பனையில் உள்ளது. கிமு 7500 ஆண்டுகளுக்கு முன்னரே எரிமலையின் உருவாக்கப்பட்ட இயற்கை வடிவிலான கண்ணாடி பொருட்களை வேட்டையாடுவதற்கு அலங்கார பொருட்களாகவும் பயன்படுத்தினர் என்ற ஆராய்ச்சிக் குறிப்புகள் உள்ளன. 

கண்ணாடிப் பொருட்களின் பயன்கள் 

  1. a) பிளாஸ்டிக், அலுமினியம் கேன் போன்றவற்றை அடைக்கப்பட்ட உணவுகளைவிட கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்ட உணவுகளே உடல்நலம், சுவை மட்டுமல்லாது உலகத்திற்கே முக்கியமானதாக கருதப்படும்  சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் சிறந்தது என்று ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
  2. b) இயற்கையான மூலப்பொருட்களை கொண்டு கண்ணாடி தயாரிக்கப்படுவதால் அதிக வெப்பத்தையும் குளிரையும் பொறுத்துக்கொண்டு உணவில் எந்த வித ரசாயன கலப்பு ஏற்படாமல் அதிக நேரம் பாதுகாக்கிறது. 
  3. c) உயர்ந்த வெப்பத்தில் கண்ணாடி பொருட்கள் செய்யப்படுவதால் எந்த வடிவில் வேண்டுமானாலும் இதை நாம் தயாரித்து அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுமாறு செய்து கொள்ளலாம். 
  4. d) உணவு மற்றும் சமையல் சார்ந்த பொருட்களைத் தயாரிப்பதற்கு மட்டுமல்லாமல் அலங்காரப் பொருட்கள் மட்டும் அணிகலன்கள் தயாரிப்பதற்கும் கண்ணாடி பொருட்கள் பயன்படுகிறது.குவளைகள் குடங்கள் ஜாடிகள் பாட்டில்கள் தட்டுகள் போன்றவை வீட்டில் பயன்படுத்தக்கூடிய கண்ணாடி பொருட்கள். 
  5. e) கிளாஸ் பொருட்களின் மிகச்சிறந்த சிறப்பு என்னவென்றால் அனைத்துவிதமான கண்ணாடி பொருட்களையும் மறுசுழற்சிக்கு 100% உட்படுத்த முடியும்.  புத்த தத்துவத்தின்படி மறுசுழற்சி செய்யப்படும் அனைத்து பொருட்களையும் எந்த வடிவங்களிலும் நாம் மாற்றிக்கொண்டு காலத்திற்கு ஏற்ற பொருட்களை உருவாக்கி கொள்ள முடியும்.
  6. f) இவ்வாறு கண்ணாடி பொருட்களை மறுசுழற்சி செய்யப்படுவதால் இயற்கை மூலப் பொருட்கள் அழிவு மிகவும் பெரிதுமாக குறைக்கப்பட்டு பொருள்கள் தயாரிக்கும் செலவு குறைகின்றது. 

இவ்வாறு பல காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் கண்ணாடி பொருட்களின் விற்பனை மற்றும் அதன் பயன்படுத்தும் அளவு இயற்கைக்கு கேடு தரும் பிளாஸ்டிக் பொருட்கள் வந்தபிறகு குறைந்துவிட்டது. பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை அதிகமாக இருப்பது அது மிகக் குறைந்த விலையில் விற்கப்படுவதாக இருந்தாலும் அதனை எளிதில் எடுத்துச் செல்வதற்கு இணங்க இருப்பதால் மக்கள் அதிகமாக விரும்புகின்றனர். ஆனாலும் இத்தகைய பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பு முறையில் உருவாகக்கூடிய பாதிப்புகளையும் இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை கடல் மற்றும் தரை தளத்தில் தூக்கி வீசப்படும் போது ஏற்படக்கூடிய அபாயங்களை மக்களிடத்தில் எடுத்துக்கூறி கண்ணாடி பொருட்கள் பயன்படுத்தும் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். 

கண்ணாடி பொருட்கள் தயாரிப்பு ஈடுபடுவதற்கான வழிமுறைகள் 

உடனடி விற்பனை மற்றும் அதிக லாபம் அடையக் கூடிய தொழில் முறையில் ஒன்றாக கண்ணாடி பொருட்கள் தயாரிப்பு தொழில் முறையும் அடங்கியுள்ளது. அதிக வெப்பம் அடைய வைத்து கண்ணாடி பொருட்கள் செய்ய வேண்டும் என்பதால் இதற்கு தேவையான இயந்திரங்களின் விலை பல லட்சங்கள் இருக்கிறது என்பதால், உங்களிடம் அவ்வளவு பெரிய தொகையை முதலீடாக செய்ய முடியும் என்றால் மட்டுமே இத்தகைய தொழிலில் இறங்க வேண்டும். தொழிற் சாலை கட்டமைப்பின் அடிப்படை வெற்றி காரணியாக விளங்குவது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடம் அருகே தகுந்த வேலையாட்கள் மூலப்பொருட்கள் சந்தைப்படுத்துதல் போக்குவரத்து போன்றவை நல்லபடியாக இருக்க வேண்டும் என்பதாகும். கண்ணாடி தயாரிக்க தேவைப்படும் முக்கிய மூலப்பொருளான சுண்ணாம்புக்கல், சோடா துகள்கள் மற்றும் மண் வளம் போன்றவை பெரும் காலத்திற்கு உங்களுக்கு கிடைக்கக்கூடிய இடமாக பார்த்து கண்ணாடி பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பது சிறந்தது. 

எந்த வகையான கண்ணாடி பொருட்களுக்கு அதிக தேவை இருக்கிறது, மக்களைக் கவரும் வகையில் எந்த மாதிரியான வடிவங்களில் இத்தகைய பொருட்களை தயாரிப்பது போன்றவற்றை சிந்தித்து செயல்பட வேண்டும். உங்களது தொழில் போட்டியாளர்கள் எங்கே இருக்கிறார்கள் அவர்கள் எந்த மாதிரியான கண்ணாடி பொருள் தயாரிப்பு செய்கிறார்கள் என்ற ஆய்வு மேற்கொண்டு, அதற்கேற்ற வகையில் உங்களது கண்ணாடி தொழிற்சாலையின் உற்பத்தி கூட்டியோ குறைத்தோ செயல்பட வேண்டும். சரியான பண வரவு செலவுகளை சமாளிப்பது, தொழிற்சாலை உற்பத்தி செயல்பாடுகள், ஊழியர்களை தேர்ந்தெடுத்து தேவையானவற்றை வழங்குவது, மூலப்பொருட்கள் தட்டுப்பாடு அற்ற நிலைமையில் வைத்திருப்பது, இயந்திரங்கள் வாங்குவதற்கு மற்றும் பராமரிப்பதற்கான முறைகளை தெரிந்து கொள்வது, தொழிற்சாலை கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றுவது, சரியான நீர் மேலான்மை கொண்ட திட்டத்தை செயல்படுத்துவது, சரியான வாடிக்கையாளர்களை தேர்ந்தெடுத்து பொருள்களை சந்தைப்படுத்துவது, தொழிற்சாலை அடங்கியுள்ள இடத்தை சுகாதாரம் உள்ள சூழ்நிலையாக வைத்திருப்பது, தடையற்ற மின்சாரத்தை தொழிற்சாலைக்கு பெறுவது என பல்வேறு தரப்பட்ட முயற்சிகள் மேற்கொண்டால் மட்டுமே ஒரு தொழிற்சாலையை அமைப்பது சாத்தியமாகும்.

இந்த கண்ணாடித் தொழிற்சாலை தொடங்குவதற்கு மேலே குறிப்பிட்ட பல்வேறு தரப்பட்ட பிரிவுகளில் அதிகப்படியான முயற்சிகளும், செயல்பாடுகளும், திட்டமிடுதலும் தேவைப்படுவதால் நீங்கள் இதை தனியாக செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். ஆதலால் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கக்கூடிய நபர்களை தேர்ந்தெடுத்து அந்தந்த துறைக்கு அவர்களை மேலாளர்களாக நியமித்து அவர்களின் கீழ் இந்த பொறுப்புகளை ஒப்படைத்து தொழிற்சாலையை வழிநடத்துவது சிறந்த யோசனை ஆகும். இந்த தொழிற்சாலை தொடங்குவதற்கு முதலீடு உங்கள் கையில் இல்லை என்றால் உங்களது உடன் கூட்டு சேர்ந்து தொழிற்சாலை தொடங்க விருப்பம் உள்ள மனிதர்களை தேடி அல்லது வங்கியின் மூலமாக கடன் தொகை பெற்று தொழிற்சாலை நிறுவுவதற்கான முழு பணத்தையும் திரட்டி கொள்ள வேண்டும்.  தொழிற்சாலை தொடர்பான அனைத்து அறிவுகளும் திட்டமிடுதலும் உங்களிடம் இருந்தால் மட்டுமே உங்களை நம்பி இந்தத் தொழிலில் மற்றவர்கள் பணத்தை விட விரும்புவார்கள் என்பதை கருத்தில் வைத்துக் கொண்டு அதற்கேற்ற தயார் கோட்பாடுகளுடன் சென்று அவர்களை சந்திக்க வேண்டும். இத்தகைய இக்கட்டான சூழ்நிலை புரிந்துகொண்டே தொழிற்சாலை கட்டுமானத்திற்கு தேவையான முதலீட்டை திரட்டி தொழிற்சாலையை உற்பத்தியைத் தொடங்கிய பின்னர் வெளிவரும் கண்ணாடி பொருட்களை விற்பனை செய்வதில் உங்களது இறுதிக்கட்ட வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. 

கண்ணாடிப் பொருட்கள் விற்பனைக்கான வழிமுறைகள் 

மார்க்கெட்டிங் என்பது வாங்க தேடி வரும் ஆட்களுக்கு பொருட்களை கொடுப்பதல்ல பொருட்கள் தேவை இல்லாதவர்களுக்கும் அதை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி அவர்களுக்கு விற்பது என்பதே ஆகும். அத்தகைய மார்க்கெட்டிங்கில் ஈடுபட்டு தொழில் முனைவோர் மட்டுமே இந்த உலகத்தில் அதிக வெற்றியை அடைகிறார்கள் என்பதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம். இத்தகைய மார்க்கெட்டிங் முறையில் கண்ணாடி பொருட்கள் விற்பனை தொழில் வெற்றி அடைவதற்கு  படிநிலைகளை நாம் இங்கு பார்ப்போம்.

1)    முதலாவதாக கண்ணாடி பொருட்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட அனைத்து விதமான வணிக நடவடிக்கைகளில் உலகத்தர ஆய்வுகள் பற்றிய அனுபவ அறிவு இருக்க வேண்டும். இத்தகைய பொருட்கள் பயன்படுத்துவதால் வாடிக்கையாளருக்கு என்ன சிறப்பு, எங்கே இந்த கண்ணாடி பொருள் அதிகமாக பயன்படுத்தப்படும், ஏன் இது மற்ற பொருட்களை விட அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று வாடிக்கையாளர்களுக்கு சரியான வகையில் விளக்கக்கூடிய அளவு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

2)   வாடிக்கையாளர்களை தகுந்த அளவு உபசரிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய இளைஞர்களிடம் பெரிதும் குறைபாடாக இருக்கும் இந்த பழக்கம் மட்டுமே பெரும்பாலான பாரம்பரிய தொழிற்சாலைகள் இன்றளவும் வெற்றியுடன் நடைபெறுவதற்கு காரணம் ஆகும். வாடிக்கையாளர்கள் நீங்கள் விற்கும் பொருட்களில் ஏதேனும் சிறு குறைபாடுகள் இருந்தாலும் நீங்கள் அவர்களிடம் நல்ல மதிப்புடனும் மரியாதையுடன் நடந்து கொள்ளும் விதத்தில் கவரப்பட்டு உங்களிடம் வியாபாரம் செய்யும் வகையில் உங்களது நடவடிக்கை இருக்க வேண்டும். 

3)   தொழிற்சாலை உற்பத்தி செய்தாலும் அல்லது வேறு தொழிற்சாலை இடமிருந்து வாங்கி விற்கும் தொழிலை செய்தாலும் நீங்கள் பார்க்க வேண்டிய மிக முக்கிய அம்சம் என்னவென்றால் உங்களிடம் உள்ள இருப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவை இரண்டையும் கணக்கில் கொண்டு எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று துரிதமாக முடிவு எடுப்பதாகும்.

4)      உங்களிடம் வரும் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்து விற்பனை செய்வதோடு மட்டுமல்லாது அவர்களது போக்குவரத்திற்கு உதவி செய்வது மற்றும் அவர்கள் பொருட்களை பயன்படுத்தும் போது அவர்கள் எந்த மாதிரி உணருகிறார்கள் என்ற விருப்பத்தை கேட்டு அறிவது போன்ற நடவடிக்கைகள் மூலம் மீண்டும் அவர்கள் உங்களது பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. உங்களிடம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளருக்கு ஊக்கப்பரிசு மற்றும் குலுக்கல் முறை பரிசு போன்ற பரிசுத் திட்டத்தை வழங்கி உற்சாகப்படுத்துவது நல்லதாகும்

5)     டிஜிட்டல் முறையில் உங்களது கண்ணாடி பொருட்கள் விற்பனை பற்றிய தகவல்களை வலைதளம் மற்றும் சமூக ஊடகம் போன்றவற்றின் மூலம் பிரபலப்படுத்துவது இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவையாக மாறிவிட்டது. இவ்வாறு விளம்பரப்படுத்துவது அது மட்டும் இல்லாமல் ஆன்லைன் மூலமாகவே டோர் டெலிவரி செய்யும் விற்பனையை பிளிப்கார்ட் அமேசான் போன்ற நிறுவனங்களின் வலைதளங்களில் பதிவு செய்து விற்கும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

எந்த ஒரு தொழில்முனைவோராக நீங்கள் இருந்தாலும் சாதகமான சூழ்நிலையை மட்டுமே ஆராய்ந்து கொண்டு அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மட்டும் எடுத்துக்கொண்டால் உங்களால் இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் தொழிலை கைவிட்டு செல்லவேண்டிய நிலைமை வந்துவிடும்.  இந்த கண்ணாடி தொழில்நுட்பத்தின் சாதக பாதக அம்சங்களை புரிந்து கொண்டு அதற்கேற்ப திட்டங்களை வகுத்து நீங்கள் வெற்றி அடைவது மட்டுமல்லாமல் உங்களைப் போன்ற இளைஞர் வருங்காலத்தில் இத்தகைய தொழிலை எடுத்து நடத்துவதற்கு வழிகாட்டியாகவும் இருக்கும்.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.