written by | October 11, 2021

பீங்கான் ஓடுகள் வணிகம்

×

Table of Content


பீங்கான் ஓடுகள் விற்பனை வணிகத்தை எவ்வாறு தொடங்குவது 

செராமிக் டைல்ஸ் என்று பெரும்பாலான மக்களால் அறியப்பட்ட பீங்கான் ஓடுகளுக்கு  இன்றைய மார்க்கெட்டில் நல்லதொரு தேவை இருக்கிறது. குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் நடுத்தர மற்றும் உயர்தர பிரிவு மக்களால் கட்டப்படும் அனைத்து வீடுகளிலும் இத்தகைய செராமிக் டைல்ஸ் அதிகமான பயன்படுகிறது. தரையில் பதிக்கப்படும் பீங்கான் ஓடுகள், சுவற்றில் ஒட்டப்படும் பீங்கான் ஓடுகள், கிச்சன் ஸ்லாபில் ஒட்டப்படும் பீங்கான் ஓடுகள் எனப் பல்வேறு வகையான டைல்ஸ்கள் கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாதாரண சிமெண்ட் தளத்தோடு வீட்டை முடிக்காமல் இத்தகைய டைல்ஸ் டைல்ஸ்களை ஒட்டி வீட்டிற்கு அழகையும் தங்களது கௌரவத்தையும் சேர்க்கின்றனர். இவ்வாறாக அனைத்து விதமான செராமிக் டைல்ஸ் மக்களிடம் மிகவும் பிரபலமான அதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால் இதன் குறைந்த விலையும் நீடித்த நாட்களுக்கு புதிது போன்ற தோற்றத்தையும் கொடுப்பதே ஆகும். 

உலகளாவிய அளவில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3 முதல் 5 சதவீதம் அளவிலான அதிகப்படியான வளர்ச்சியை இந்த பீங்கான் ஓடுகள் சம்பந்தமான தொழில் செய்பவர்கள் மூலம் பெறப்படுகின்றது. இத்தகைய பொருளாதார வளர்ச்சி உடைய தொழிலை நீங்கள் செய்ய விரும்பினால் இதற்கு ஏற்ற அனுபவமும் பலதரப்பட்ட டைல்ஸ் மாடல்களை பற்றிய அறிவும் வாடிக்கையாளரை திருப்திபடுத்தும் அளவில் பேச்சும் இருக்க வேண்டும். இவை அனைத்தும் நீங்கள் சொந்தமாக தொழில் நடத்த மேம்படுத்திக் கொள்ள வேண்டிய பண்புகளாக இருந்தாலும் இத்தகைய பண்புகள் மட்டும் வைத்து வெற்றி பெற்றுவிட முடியாது ஏனென்றால் தொழில் தொடங்கும் இடம், உங்களிடம் வேலை செய்யும் வேலை ஆட்கள், மார்க்கட் நிலவிற்கு ஏற்ற புதுரக செராமிக் டைல்ஸ், உங்களது தொழில் போட்டியாளர்களின் எண்ண ஓட்டம் போன்ற பிற காரணங்களாலும் உங்களது வெற்றியின் அளவு தீர்மானிக்கப் படுகிறது. ஆகவே இத்தகைய உட்புற மற்றும் வெளிப்புற காரணிகள் அனைத்தும் ஆராய்ந்து அதற்கு ஏற்ற திட்ட நடைமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

சிறந்த திட்டங்களை வகுக்க வேண்டும் 

சிறந்த வடிவமைக்கப்பட்ட திட்டங்களை பின்னூட்டமாக கொண்டு ஆரம்பிக்கப்படும் அனைத்து வகையான தொழில்களும் வெற்றி அடைவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம். ஒவ்வொரு தொழிலின் வெற்றிக்கான அடித்தளம் அத்தகைய திட்டமிடுதல் விளங்குகிறது என்பது பெரும்பாலான தொழிலதிபர்களின் வாழ்க்கை முறையில் நாம் அறிய முடிகிறது. நீங்கள் செராமிக் டைல்ஸ் விற்பனை வணிகத்தை தொடங்குவதற்கு முன்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வகையான பாயிண்ட்க்கும் ஏற்றவாறு திட்டங்களை வடிவமைத்து இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும்.

  1. a) எந்த துறை சம்பந்தப்பட்டது மட்டும் எந்த மாதிரியான சட்டதிட்டங்கள் கீழ் உங்களது தொழில் வரையறுக்கப்பட்டுள்ளது போன்றவற்றை ஆராய்ந்து அதற்கான வழி திட்டங்கள் வகுத்து வைக்க வேண்டும்.
  2. b) உங்கள் தொழில் நடைமுறையின் போது எந்த வகையான விற்பனை சந்தைபடுத்துதல் முறையை கையாள போகிறது என்பதைப் போன்ற திட்டமிடுதலும் உங்களது தொழில் இருக்கும் இடத்தில் எவ்வாறு நீங்கள் அலுவலகத்தை வடிவமைக்கப் போகிறீர்கள் என்பதைப் பற்றிய திட்டமிடுதல் இருக்க வேண்டும்.
  3. c) எந்த வகையான பீங்கான் ஓடுகளை வாங்கி அதற்கு எத்தகைய சதவிகிதத்தில் லாபத்தை வைத்து விற்க வேண்டும் என்பதை பற்றிய திட்டங்கள் செய்ய வேண்டும்.
  4. d) உங்கள் செராமிக் டைல்ஸ் விற்பனை தொழிலில் சிறந்து விளங்க எந்த மாதிரியான வேலையாட்களை தேர்ந்தெடுப்பது மற்றும் அவருக்கு எந்தெந்த வகையில் சம்பளங்கள் வழங்குவது போன்ற திட்ட மாதிரிகளும் இருக்கவேண்டும்.
  5. e) இந்த உலகத்தின் அன்றாட நடவடிக்கையில் ஏற்படக்கூடிய மாறுதலுக்கு ஏற்றவாறு உங்களது செராமிக் டைல்ஸ் விற்பனையில் மாற்றத்தை எளிதாக கொண்டு வரும் வகையில் திட்டம் அமைய வேண்டும்.
  6. f) உங்கள் தொழில் தொடங்குவதற்கு எவ்வளவு தொகையை முதலீடு செய்யப் போகிறீர்கள் என்பதைப் பொருத்தும் உங்களது தொழில் நடத்துவதற்கு எந்தெந்த துறையில் எவ்வளவு பணத்தை பிரித்துக் கொடுக்கப் போகிறது என்பதை பொருத்தும் திட்டங்கள் அமையப் பெறுவது முக்கியமாகும்.
  7. g) உங்கள் தொழிலுக்கு தேவையான அனைத்து பீங்கான் ஓடுகளையும் சீனா மற்றும் இதர நாடுகளில் இருந்து எத்தகைய முறையில் இறக்குமதி செய்ய போகிறீர்கள் என்பதைப் பற்றிய திட்டமிடுதல் மிக முக்கியமானதாகும்.

தொழில் போட்டியாளர்கள் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும்  

பீங்கான் ஓடுகள் விற்பனை நீங்கள் இறங்குவதற்கு முன்னால் நீங்கள் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் ஒன்று என்னவென்றால் உங்களது டைல்ஸ் சம்பந்தமான தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் எந்தெந்த மாதிரியான தொழில் உத்திகளை எடுக்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். உங்களது தொழில் போட்டியாளர்களின் நடவடிக்கைகள் உங்களுக்கு தெரிந்தால் மட்டுமே அதற்கு ஏற்ற வகையில் அவர்களை மிஞ்சும் அளவிற்கான புது திட்டங்களை உருவாக்கி, செயல்படுத்தி வெற்றி அடைய முடியும். உங்களுக்கு சரியான போட்டியாளராக யார்யார் இருக்கக்கூடும் என்பதை நிர்ணயித்து அவர்களை குறிவைத்து இந்த வகையான பரிசோதனை செய்யப்பட வேண்டும். உங்களது வாடிக்கையாளர் உங்களிடம் நேரே வந்து, அவர்களது திட்டத்தை பற்றி கூறப்போவதில்லை. நீங்களாகவே முயற்சி எடுத்து உங்களது தொழில் போட்டியாளர்கள் எங்கு இருந்து பொருட்களை வாங்குகிறார்கள் எந்த மாதிரியான மார்க்கெட் உத்திகளை கையாள்கிறார்கள் என்பது பற்றி தகவல்களை பெற்று உங்களது திட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். 

டைல்ஸ் விற்பனைத் தொழிலில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள்

உலகத்தில் உள்ள அனைத்து தொழில்களிலும் உள்ள நன்மைகள் தீமைகள் போல இந்த செராமிக் டைல்ஸ் விற்பனை தொழிலிலும் பல்வேறு வகையான நல்ல முன்னேற்றம் தரக்கூடிய விஷயங்களும் சில சிக்கல்களும் இருக்கின்றன.  

நன்மைகள்:

நாளுக்கு நாள் செராமிக் டைல்ஸ்கான வரவேற்பு மக்களிடம் அதிகரித்துக் கொண்டே வருகிறபடியால் உங்கள் தொழில் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.  

சிக்கல்கள்:

செராமிக் டைல்ஸ் பல்வேறு வகையான வடிவங்களில் பல்வேறு வகையான வண்ணங்களில் பல்வேறு விதமான மூலப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. ஒரு சில மாடல்களை மட்டும் காட்சிப்படுத்தி ஷோரூம் திறந்தால் மக்களிடம் பெரும் வரவேற்பு இருக்காது ஆனால் அனைத்து விதமான மாடல்களில் உள்ள டைல்ஸ் வைத்து ஷோரூம் திறக்க கடுமையானால் மக்களிடம் பெரும் வரவேற்பு பெறும். இத்தகைய பெரிய ஷோரூம்ற்கான வாடகை மிக அதிகமாக இருக்கும் என்பது மிகப் பெரிய பிரச்சினையாகவே உள்ளது. ஷோரூம் போலவே இவ்வளவு அதிகமான மாடலுக்கும் ஸ்டாக் வைத்திருப்பது முக்கியமாகும். இதனால் நீங்கள் குடோன் மற்றும் ஷோரூம் இற்காக செலவிடும் தொகை மிகப்பெரியதாக இருக்கும். அதிகரிக்கும் தேவைக்கு ஏற்ப தொழில் போட்டியாளர்களும் தினந்தோறும் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள். இவர்களை சமாளித்து தொழிலில் வெற்றி நடை போட வேண்டுமானால் நீங்கள் அதிகமான முதலீடு செலவிட தேவை இருப்பதால் குறைந்த முதலீடு வைத்து தொழில் செய்ய விரும்பும் நபர்களுக்கான தொழிலாக இந்த செராமிக் டைல்ஸ் விற்பனைத் தொழில் இருப்பதில்லை.

எந்த வகையான டைல்ஸ்கள் விற்பதில் எவ்வளவு லாபம் என்பதை பற்றிய தரவு வேண்டும

நாம் முன்பே பார்த்த வகையில் வால் டைல்ஸ், புளோர் டைல்ஸ், பாத்ரூம் டைல்ஸ், கிச்சன் டைல்ஸ், எனப் பல்வேறு விதமான டைல்ஸ் இருந்தாலும் இதன் விற்பனை அளவு மற்றும் லாபத்தின் அளவு ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. ஆகவே நீங்கள் இதில் ஒரு வித டைல்ஸ் மட்டும் தேர்ந்தெடுத்து அதற்கான விற்பனை திட்டங்களை வடிவமைத்து செயலாற்றும் போது உங்கள் செலவினங்களை விட அதிகமான வருவாயை நீங்கள் உருவாக்க முடியும். சர்வதேச சந்தை பகுப்பாய்வு ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை (IMARC) தனது சமீபத்திய செராமிக் டைல்ஸ் பற்றிய ஆய்வில் தரைத்தளத்தில் பதிக்கப்படும் பீங்கான் ஓடுகள் விற்பனை உலகளாவிய அளவில் அதிகரித்திருக்கிறது என்று  குறிப்பிடுகிறது. டைல்ஸ்கள் இறுதி கட்ட வாடிக்கையாளர்களின் விலையை நிர்ணயிக்கும் போது இடைத்தரகர்கள், போக்குவரத்து, வரி போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்கு ஏற்றவாறு விலையை ஒவ்வொரு பீங்கான் ஓடுகள் மீது நிர்ணயிக்க வேண்டும். எந்த டைல்ஸ் மக்களிடம் அதிகம் காணப்படுகிறது என்பதை அறிந்து அந்த டைல்ஸ் கணக்கை மட்டும் அதிகமாக வைத்துக் கொண்டு மற்றவைகளில் இருப்பை குறைத்து வைத்துக் கொள்ளவும்.

ஷோரூமை வடிவமைத்து செயல்படுத்தும் முறை

நீங்கள் இந்த பயிற்சிப் பண்ணை தொழிலில் ஈடுபடுவது என்று முடிவு செய்த பிறகு செய்ய வேண்டிய காரியங்களில் மிக முக்கியமான ஒன்று ஒரு நல்ல இடத்தைத் ஷோரூம் வைப்பதற்காக தேர்வு செய்து அதற்கேற்ற சட்ட விதிமுறை கீழ் பதிவு செய்வதாகும். உங்களது ஷோரூம் நகரத்திற்கு மிக அருகாமையிலும், மிகப் பெரிய விசாலமான இடம் உள்ளதாகவும், அனைத்து வகையான டைல்ஸ்கள் இன் முன்னணி பிராண்டுகளை கொண்டதாகவும், அமைக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் கலாச்சார முறை வீட்டு அமைப்பு முறை போன்றவற்றை தெரிந்து அவர்களின் ரசனைக்கேற்ற டைல்ஸில் மாடல்களை காண்பித்து வியாபாரம் செய்ய வேண்டும். உங்கள் ஷோரூமில் முக்கியமாக பல அலங்கார விளக்குகளில் மூலமாக டைல்ஸ்கள் மின்னொளியில் ஒளிரும் படி அமைக்க வேண்டும். ஷோரூமில் அழகிய சீருடை அணிந்த வேலையாட்களை பணியமர்த்தி வரும் வாடிக்கையாளர்கள் தக்கவாறு பேசி விற்பனையில் ஈடுபடவேண்டும். உங்கள் டைல்ஸ்களை பயன்படுத்தி அமைக்கப்பட்ட வீடுகளின் மாடல் தொகுப்புகளை ஆங்காங்கே வாடிக்கையாளர் கண்களில் படும்படி வைக்க வேண்டும். உங்களுக்கு இந்த பீங்கான் ஓடுகள் விற்பனை மற்றும் அது சம்பந்தப்பட்ட துறைகளில் அதிக அனுபவம் உள்ளது என்பதை வாடிக்கையாளர்கள் நம்பும் படி நடந்து கொள்ள வேண்டும். அனைத்து விதமான போக்குவரத்து வாகனங்கள் மற்றும் பளுதூக்கும் கருவிகளை உங்களது ஷோரூமில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து செராமிக் டைல்ஸ் இறக்குமதி செய்யும் முறை 

இந்தியாவில் இத்தகைய செராமிக் ஓடுகள் தயாரிப்பதற்கான வளங்கள் அதிகமாக இல்லாதிருப்பதால் ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து இங்கே விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக சைனா உலகளவில் செராமிக் டைல்ஸ் உற்பத்தியில் முதன்மையாக இருப்பதால் இங்கு கிடைக்கக்கூடிய பீங்கான் ஓடுகளின் விலை மிகவும் மலிவானதாகவும் தயாராக தரமானதாகவும் இருக்கின்றது. அதுமட்டுமல்லாது சைனா இந்தியாவுக்கு மிக அருகில் இருப்பதால் சாலைப்போக்குவரத்து வழியாகவே இந்தியாவிற்குள் விரைவாக செராமிக் டைல்ஸ் கொண்டு வந்து விட முடியும். இதற்காக ஆன்லைனில் பலதரப்பட்ட வியாபாரிகள் இருந்தாலும் நீங்கள் நேரில் ஒருமுறை சைனா சென்று அங்கு உள்ள தொழிற்சாலைகளில் உங்களது வியாபார நோக்கத்தை பற்றி கலந்து ஆலோசித்து மிக குறைந்த விலையில் பெறுவதன் மூலம் இடைத்தரகர்களுக்கு கொடுக்க வேண்டிய பெரும் தொகையை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு இறக்குமதி செய்வதற்கு தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து செய்தால் வரிச் சலுகைகள் பெற வாய்ப்பு உள்ளது. சோதனை முறையில் சில தொழிற்சாலைகளில் இடமிருந்து பொருட்களை வாங்கி அதை உள்ள அனைத்து செலவுகளையும் ஒப்பிட்டு எந்த தொழிற்சாலையில் வாங்குவது சிறந்தது என்ற முடிவு எடுக்க வேண்டும். மேலும் அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் போக்குவரத்திற்கு ஆகும் நாட்கள் செலவுகள் ஏற்றவாறு உங்களது வாடிக்கையாளர்களுக்கு வாக்குறுதி அளிக்க வேண்டும்.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.