written by | October 11, 2021

எல்.எல்.பி ஒப்பந்தம்

×

Table of Content


எல்.எல்.பி ஒப்பந்தத்தின் அத்தியாவசியங்கள்

ஒரு வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை (எல்.எல்.பி) என்பது பார்ட்னர்ஷிப் முறைப்படியான வணிகத்தில் உள்ள நன்மைகளையும் கார்ப்பரேட் நிறுவனத்தில் உள்ள நன்மைகளையும் ஒருங்கே இணைத்து உருவாக்கப்பட்ட தொழில் அமைப்பாகும். எல்எல்பி நிறுவனத்தில் பங்குபெறும் கூட்டாளர்கள்க்கு பல்வேறு வகையான நன்மைகள் கிடைக்கப் பெறுவதற்கான காரணம் என்னவென்றால் பல்வேறுவிதமான வரிச்சலுகையையும் முதலீட்டாளர்களை சேர்ப்பதில் உள்ள நெகிழ்வுத் தன்மையும் ஆகும். அது மட்டுமல்லாது ஒரு எல்எல்பி நிறுவனத்தில் உள்ள உறுப்பினர், மற்ற உறுப்பினர்களின் அஜாக்கிரதை மற்றும் பொறுப்பற்ற தன்மையால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு பொறுப்பு ஏற்கத் தேவையில்லை என்பதால் தங்களது தனிப்பட்ட சொத்துக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும். எந்த ஒரு வணிக கட்டமைப்பின் கீழ் உங்களது தொழிலை நடத்த வேண்டும் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் போன்ற முடிவுகளை எடுக்கும் முழு உரிமையும் உங்களுக்கு இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தொழிலை இந்த கட்டமைப்பின் கீழ் தான் செயலாற்ற வேண்டும் என்ற எந்த ஒரு நிபந்தனையும் இந்திய அரசாங்கத்தால் வலியுறுத்தப்படவில்லை. அரசாங்கத்தால் வலியுறுத்தப்படவில்லை என்றாலும் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் எல்எல்பி திட்டத்தின்கீழ் தங்களது நிறுவனத்தை அமைக்க பெறுவதற்கான காரணம் இதில் உள்ள பல்வேறு நன்மைகள் தான். 

இத்தகைய எல்எல்பி நிறுவனத்தைத் தொடங்க நீங்கள் முதலில் செய்ய வேண்டிய நடவடிக்கை என்னவென்றால் உங்களுக்கான எல்எல்பி ஒப்பந்தத்தை தயார் செய்வதாகும். தொழில் தொடங்கும்போது உள்ள கட்டமைப்பிற்கும் தொழில் தொடங்கிய பிறகு ஏற்படுத்தக்கூடிய முதலீடுகள், லாப பகிர்வுகள் மற்றும் பல்வேறு முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த ஒப்பந்தத்தை தயார் செய்து தாக்கல் செய்யப்பட வேண்டும். ஒரு எல்எல்பி நிறுவனம் தொடங்க வேண்டும் என்றால் டெசிகனெடட் பார்ட்னராக பொறுப்பேற்கக் கூடிய குறைந்தபட்சம் இரண்டு நபரையும் அந்த இருவரில் குறைந்தபட்சம் ஒருவர் இந்தியாவில் வசிக்கக்கூடிய கூடியவராகவும் இருந்தாக வேண்டும். இதன் பின்னர் எம்சிஏ போர்ட்டல் மூலமாக டி.எஸ்.சி மற்றும் டி.ஐ.என் இரண்டு டெசிகனெடட் பார்ட்னருக்கும் பெற்ற பிறகே எல்எல்பி ஒப்பந்தம் தாக்கல் செய்யப்படும். ஒவ்வொரு கூட்டாளிகளும் எவ்வளவு முதலீடு இடுகிறார்கள், ஒவ்வொரு கூட்டாளிகளும் லாப விகிதத்தில் இருந்து எவ்வளவு பங்கு வழங்கப்படுகிறது, கூட்டாளர்கள்க்கான சந்திப்பு திட்டங்கள், தொழிலில் இழப்பீடு ஏற்பட நேரிட்டால் என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற அனைத்து விதமான தகவல்களும் இந்த ஒப்பந்தத்தில் இருந்தால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பல்வேறு வகையான சிக்கல்களில் இருந்து தப்பிக்க முடியும். 

வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை சட்டம் 2008 இன் படி அனைத்து விதமான எல்எல்பி சட்ட விதிமுறைகளையும் வரையறுக்கப்பட்டுள்ளது. இது பொதுவான ஒரு வரையறை என்பதால் ஒவ்வொரு குறிப்பிட்ட தொழில்களுக்கும் உள்ள வித்தியாசம், வேறுபாடு காரணமாக தனித்தனியான ஒப்பந்தத்திற்கான தேவை ஏற்படுகிறது. ஒரு வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை அமைக்கும் போது எழுத்துப்பூர்வ எல்.எல்.பி ஒப்பந்தத்தில் எல்.எல்.பி ஒப்பந்தம் தொடர்பான அத்தியாவசிய தகவல்களை உள்ளடக்கி இருத்தல் வேண்டும். எல்.எல்.பி ஒப்பந்தங்கள் சட்டப்பூர்வ தேவை இல்லாமல் இருந்தாலும் ஒவ்வொரு கூட்டாளியும் பாதுகாப்பிற்கான ஒப்பந்தத்தின் நகலை வைத்திருக்க வேண்டும்.   

பெயர்கள் மற்றும் நோக்கம்

எல்.எல்.பி ஒப்பந்தத்தில் உங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் நிறுவனம் நிறுவியதற்கான குறிக்கோள் உங்கள் நிறுவனத்தின் மூலம் எந்த மாதிரியான தயாரிப்பு பொருட்கள், சேவைகள் செய்யப் போகிறீர்கள் என்பதைப் பற்றிய முழுமையான விளக்கமும் இருக்கவேண்டும். கூட்டாளர்களின் முழு பெயரும் இருக்க வேண்டும். உங்கள் நிறுவனத்தில் இணைந்துள்ள அனைத்து பார்ட்னரின் முழுமையான பெயர்களையும் குறிப்பிடுவது மிகவும் முக்கியமானது. 

கூட்டாளர்களின் முதலீடு பங்களிப்பு 

உங்களது எல்எல்பி நிறுவனத்தில் பங்குபெறும் அனைத்து கூட்டாளர்களும் எவ்வளவு முதலீட்டை எந்த மாதிரியான வகையில் தரப் போகிறார்கள் என்பதை பற்றிய முழுமையான விளக்கமும் இருத்தல் வேண்டும். ஒரு சில கூட்டாளர்கள் பணமாகவும், ஒருசில கூட்டாளர்கள் கட்டிடம் போன்ற அசையா சொத்து வழங்கியும், ஒருசில கூட்டாளர்கள் வாகனம் போன்ற அசையும் சொத்துக்கள் வழங்கியும், ஒரு சில கூட அவர்கள் தங்களது உடல் உழைப்பை அளித்தும் தங்களது நிறுவனத்திற்கான முதலீட்டில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த மாதிரியான தகவல்களை எந்தவித பிழையும் இல்லாமல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட வேண்டும். 

முதலீட்டாளர்களுக்கு உள்ள உரிமைகள் மற்றும் கடமைகள் 

எல்.எல்.பி என்பது ஒரு தனி பொறுப்புகளை கொண்ட கட்டமைப்பை கொண்ட நிறுவனமாக இருப்பதால் இதில் உள்ள அனைத்து விதமான முதலீட்டாளர்களுக்கும் ஒவ்வொரு விதமான பொறுப்புகளும் கடமைகளும் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான தகவல்கள் இடம் பெற வேண்டும். வணிக வளர்ச்சியில் ஒவ்வொருவரும் தங்களது அன்றாட வாழ்வில் எந்த மாதிரியான பங்களிப்பை வழங்க வேண்டும் பங்களிப்பை வழங்க தவறியவர்களுக்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் முதலியவற்றின் கருத்துக்களை பதிவு செய்தல் நல்லது. முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான உரிமையும் அதிகாரமும் யாருக்கு வழங்கப்படுகிறது, எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது போன்ற தகவல்களை தெளிவாக இடம் பெறச் செய்வதன் மூலம் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய போட்டிகளை தவிர்க்க உதவும். பிற்காலத்தில் ஏதேனும் உரிமைகள் பற்றிய கருத்து மோதல்கள் ஏற்படும் போது இருதரப்பிலும் உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் சட்ட தீர்ப்புகள் வழங்கப்படும். ஒருவேளை உரிமைகள் மற்றும் கருத்து மோதல் உள்ள இரு தரப்பினரிடையே உடன்படிக்கை ஒப்பந்தங்கள் தொடர்பான எந்த ஆவணங்களும் இல்லை என்றால், வரையறுக்கப்பட்ட பொறுப்புச் சட்டம், 2008 இன் அட்டவணை – I விதி, சட்டபிரிவு 23 (4) எந்த மாதிரியான வரையறைகள் கொடுக்கப்பட்டதோ அதற்கு உட்பட்டு நடக்க வேண்டும்.

லாப பங்கீடு பற்றிய தகவல்கள் 

உங்களது எல்எல்பி நிறுவனம் மூலம் கிடைக்கும் வருமானத்தை உங்களது கூட்டாளிகளுடன் எவ்வளவு பங்கிட்டுக் கொள்வது பற்றிய தகவல்கள் தெளிவாக இடம்பெறுவது அவசியம். நிறுவனத்தில் ஏதேனும் பதவி வகித்து வருவதாக இருந்தால் அவர்களுக்கு எந்த மாதிரியான லாப பங்கீடும், முதலீட்டை மட்டும் செலுத்தி இருப்பவருக்கு என்னமாதிரியான லாப பங்கீடும் இருக்கும் என்பதை தெளிவாக வரையறை செய்து ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும். அதே போல் ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கக்கூடிய லாபத்தில் இருந்து எவ்வளவு தொகையை மறு முதலீடாக நிறுவனத்திற்கு செலுத்தப் போகிறீர்கள் என்பதை பற்றியான விகிதாச்சார கணக்குகளும் இடம் பெறுவது அவசியம். உங்கள் எல்எல்பி நிறுவனத்தில் ஒருவேளை நஷ்டத்தை சந்திக்க நேரிட்டால் ஒவ்வொரு பங்கீடு உள்ள நபர்களும் எவ்வளவு தொகைக்கு பொறுப்பேற்க வேண்டும் போன்ற தகவல்கள் இடம்பெறுதல் வேண்டும்.

தொழில் பிரிவு பற்றிய தகவல்கள் 

இங்கு செய்யக்கூடிய தொழில் எந்த தொழிலுக்கு இணக்கமான விற்பனையை கொண்டுள்ளது, உங்கள் நிறுவனத்திற்கு இருக்கக்கூடிய கிளைகள், எந்தெந்த சேவைகளை கருத்தில் கொண்டு உங்கள் தொழில் நிறுவனம் உருவாக்கப்பட்டது போன்ற தகவல்கள் இருப்பது அவசியம். உங்களுக்கு பல்வேறு கிளை நிறுவனங்கள் இருப்பின் அந்த கிளை நிறுவனங்களின் முழு முகவரியும் அந்த கிளை நிறுவனங்களை நிர்வகிக்கக்கூடிய பொறுப்பாளர்கள் பற்றிய விவரமும் குறிப்பிடப்பட வேண்டும்.

பரஸ்பர சம்மதத்துடன் தொழில் மூடுவது தொடர்பான குறிப்புகள்  

உங்கள் தொழில் ஒரு குறிப்பிட்ட கால வரையறை மட்டுமே கொண்டபடியாக இருந்தால் உங்கள் தொழில் ஆரம்பித்த தேதி, எவ்வளவு நாளில் உங்கள் தொழில் ஒப்பந்தம் முடிவடையும் போன்ற தகவல்கள் இடம் பெறுதல் வேண்டும். ஒருவேளை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு உங்களது நிறுவனம் மூடும்படி ஆக இருந்தால் அந்த பொறுப்புகளை யார் எடுத்துக்கொண்டு செய்வது போன்ற தகவல்கள் இடம்பெற வேண்டும்.

கலந்துரையாடல் மற்றும் விவாதங்கள் பற்றிய தகவல் 

ஒரு எல்எல்பி நிறுவனத்தின் சிறந்த ஒப்பந்தத்தை தயார் செய்ய வேண்டும் என்றால் கூட்டாளர்கள் இடையே உள்ள மாதாந்திர அல்லது வருடாந்திர கலந்துரையாடல் நடைபெற வேண்டிய இடைவெளி மற்றும் அதில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் போன்றவற்றை குறிப்பிட வேண்டும். கூட்டாளர்கள் இடையே விவாதம் முற்றும்போது முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் யாருக்கு இருக்கிறது போன்றவற்றையும் குறிப்பிடுதல் வேண்டும். ஒருவேளை எல்எல்பி கூட்டாளிகளிடையே விவாதம் முற்றி வேறு ஒருவரிடம் மத்தியஸ்தம் தேவைப்படும் நிலைமை ஏற்படும் போது எல்.எல்.பி நடுவர் மற்றும் சமரசச் சட்டம், 1996 இல் கூறியுள்ள சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு சர்ச்சை தீர்க்கும் பணியை மேற்கொள்ளப்படும்.

இழப்பீடு பற்றிய தகவல்கள் 

உங்களது எல்.எல்.பி உடன்படிக்கை ஒப்பந்தத்தில் ஏதேனும் ஒரு விபத்தினால் அல்லது தவறினால் ஏற்படும் இழப்பீடுகள் தொடர்பான தகவல்களும் காப்புரிமை தொடர்பான தகவல்களும் இடம் பெற்றிருப்பது அவசியம். கூட்டாளர்களின் ஒருவர் மூலமாக ஏற்பட்ட இழப்புகளை எவ்வாறு சரி செய்வது மற்றும் கூட்டாளர்களின் உரிமை மீறப்படும் போது ஏற்படக்கூடிய இழப்புகளை எவ்வாறு சரிசெய்வது போன்றவற்றிற்கான திட்டங்களை வகுத்து ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும்.  

கட்டுப்பாட்டு நிபந்தனைகள்

எல்.எல்.பி நிறுவனத்தில் பங்கு வைக்கக்கூடிய ஒரு கூட்டாளர் தனியாக பிரிந்து சென்று தனது சொந்த முயற்சியில் புதிய நிறுவனத்தை உருவாக்கினால் பல்வேறு கட்ட வணிக சிக்கல்களை உங்களது தற்போதைய நிறுவனம் சந்திக்க நேரிடும். ஆகவே உங்கள் நிறுவனத்தில் எல்எல்பி கூட்டாளிகளாக சேரும் அனைவரும் ஏதேனும் காரணத்தால் வெறியேற வேண்டி இருந்தாலும் உங்களது நிறுவனம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு தொழிலையும் செய்யக் கூடாது போன்ற நிபந்தனைகளை குறிப்பிட வேண்டும். உங்களது நிறுவனத்திலேயே கூட்டாக சேர்ந்து கொண்டு உங்களது நிறுவனத்தில் உள்ள வாடிக்கையாளர்களை வேறு நிறுவனத்திற்கு திசை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபரின் மீது எடுக்கப்பட வேண்டிய ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் சட்டபூர்வ நடவடிக்கைகள் பற்றி குறிப்புகள் இருத்தல் அவசியம். 

மற்ற முக்கிய விவரங்கள் 

எல்.எல்.பி ஒப்பந்தத்தை உருவாக்கும் போது, புதுப்புது உறுப்பினர்களை சேர்க்கும்போது என்னென்ன தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுத்தல் ஒரு உறுப்பினர் ஓய்வு பெற விரும்பினாலோ வெளியேற விரும்பினாலோ அவர்களுக்கு என்னென்ன தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் போன்றவை குறிப்பிட வேண்டும். உங்களது எல்எல்பி நிறுவனத்தின் கூட்டாளிகள் எவரேனும் இறந்துவிட்டால் அவர்களுக்கான பங்குகளை யாருக்கு வழங்குவது மற்றும் அவர்கள் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு எந்த வகையில் பணம் சென்றடைவதற்கான உதவி செய்வது போன்ற குறிப்புகளை ஏற்படுத்துதல் நல்லது. எந்த ஒரு ஒப்பந்தமாக இருந்தாலும் அது ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் மட்டும் செல்லுபடியாகும் வகையில் இருந்தால் வணிக வளர்ச்சியின் எதிர்கால மாற்றங்களுக்கு உட்பட்டு புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். எல்எல்பி சட்ட விதிமுறைகளை நன்கு தெரிந்த வழக்கறிஞரின் உதவிகள் மூலம் உங்களது உடன்படிக்கை ஒப்பந்தத்தை தயார் செய்வது நல்லது. ஒவ்வொரு பெரிய நிறுவனங்களின் வெற்றியும் அவர்களது கூட்டாளர்களின் ஒத்துழைப்பைப் பொறுத்து அமைவதால் உங்கள் கூட்டாளர்கள் இடம் நீங்கள் செய்யும் ஒப்பந்தத்தில் காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ற நெகிழ்வுத் தன்மை வாய்ந்த முடிவுகளை எடுக்கக் கூடிய வகையிலும் அமைதல் அவசியம்.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.