written by | October 11, 2021

ஆன்லைன் செல்லப்பிராணி கடை

×

Table of Content


ஆன்லைன் பெட் ஸ்டோர் எவ்வாறு தொடங்குவது? அதன் வழிமுறைகள் என்ன?

செல்லப்பிராணிகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் பற்றிய அளவில்லாத ஆர்வமும் அக்கறையும் உடையவராக நீங்கள் இருந்தால், செல்லப்பிராணி நல்ல முறையில் வளர்க்க தேவைப்படும் பொருட்களை விற்பனை செய்யக்கூடிய தொழிலை தேர்ந்தெடுக்கலாம். செல்லப்பிராணிகள் கடை அதாவது பெட் ஸ்டோரை ஆரம்பிக்க முடிவு செய்த பிறகு நீங்கள் எடுக்க வேண்டிய முதல் முடிவு என்னவென்றால் ஆன்லைன் பெட் ஸ்டோரை உருவாக்க போகிறீர்களா அல்லது வணிக வளாகத்தில் கடை வைக்க போகிறீர்களா என்பதேயாகும். உங்களது முடிவு ஆன்லைன் பெட் ஸ்டோரை உருவாக்கி நடத்துவது என்ற முடிவாக இருந்தால் நீங்கள் சரியானதொரு திசையை நோக்கி நகர இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் உள்ள மக்கள் தங்களது வளர்ப்பு பிராணிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் நேரில் சென்று வாங்குவதைவிட ஆன்லைன் மூலமாகவே வாங்குவதற்கு பலர் விரும்புகிறார்கள். இந்தியாவில் பெட் ஸ்டோர்களில் வணிக  வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக 17% க்கு மேல் அதிகரித்து வருவதே இதற்கு சரியான எடுத்துக்காட்டாக அமைகிறது. இத்தகைய புள்ளி விவரங்களை கருத்திற்கொண்டு நீங்களும் ஆன்லைன் செல்லப்பிராணி கடையை துவங்கினால் அடுத்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வணிக வளர்ச்சிகள் பெறுவது உறுதி. 

ஒரு வலைத்தளம் மூலமாகவோ அல்லது மொபைல் செயலிகள் மூலமாகவோ நீங்கள் செல்லப் பிராணிகளுக்கான பொருளை விற்கும்போது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் இருப்பதால் இத்தகைய ஆன்லைன் செல்லப்பிராணிகள் கடையை மிகவும் நம்பகத் தன்மையோடு ஏற்றுக்கொள்கிறார்கள். மேலும் நீங்கள் சாதாரண வணிக வளாகத்தில் கடை வைத்து நடத்துவதை விட ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதால் உங்களுக்கான வணிகத்தின் பிராண்டை மிக குறைந்த செலவில் மக்களிடம் பிரபலப்படுத்த வாய்ப்புள்ளது. உங்களுக்கு முதலீட்டின் மீது எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றால் வணிக வளாகத்தில் செல்லப்பிராணி கடையையும், ஆன்லைனில் செல்லப்பிராணி கடையையும் நடத்தினால் இரண்டுவிதமான வாடிக்கையாளர்களையும் திருப்திப்படுத்தி இரண்டு விதமான வியாபாரத்தையும் ஒருங்கிணைக்க முடியும். ஆன்லைனில் பெட் ஸ்டோரை உருவாக்கி அதன் மூலம் வணிகம் செய்வது எவ்வாறு என்பதை பற்றிய உங்களது அனைத்து விதமான சந்தேகங்களையும் இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் தீர்த்து வைக்கும். ஆன்லைன் பெட் ஸ்டோரில் உருவாக்கி வணிகம் நடத்துவதற்கான பல்வேறு கட்ட 10 படிநிலையை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

  1. எந்த பொருட்களை ஆன்லைனில் விற்கப் போகிறீர்கள் என்ற முடிவு செய்யுங்கள்

மனிதர்களைப் போலவே செல்லப் பிராணிகளுக்கும் பல்வேறு விதமான பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆகவே அனைத்து செல்ல பிராணிகளுக்கும் பொதுவான பொருட்களை விற்க போகிறீர்களா அல்லது ஒரு குறிப்பிட்ட வகை செல்லப்பிராணிகளுக்கு மட்டும் தேவையான பொருட்களை விற்க போகிறீர்களா என்பதை பற்றி ஆராய்ந்து அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆன்லைன் பெற்றோர் மூலமாக இன்றளவில் அதிகப்படியான விற்பனை அடையக்கூடிய பொருட்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  

  • படுக்கைகள்
  • போர்வைகள் மற்றும் படுக்கை விரிப்புகள்
  • துண்டுகள்
  • சோஃபாக்கள் மற்றும் நாற்காலிகள்
  • பொம்மைகள்
  • காலர்கள்
  • ஷாம்புகள் & கண்டிஷனர்கள்
  • வாசனை திரவியங்கள் மற்றும் கட்டிகள் 
  • முடி அகற்றும் கருவிகள்
  • கருத்தடை கருவிகள்
  • சீப்புகள்
  • நக வெட்டிகள்
  • சாதாரண உணவு பொருட்கள் 
  • வைட்டமின் உணவு பொருட்கள் 
  • சத்து மாவுகள் 
  • மசாஜ் எண்ணெய்கள்
  • காது சுத்தம் செய்யும் கருவிகள்

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் செல்லப்பிராணிகளுக்கு தகுந்த வகையில் பல்வேறு வகைகளாகவும் குழுக்களாகவும் பிரித்து, என்னென்ன பொருட்களை நீங்கள் விற்பனை செய்யப் போகிறீர்கள் என்ற பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள். எந்தெந்த பொருட்களை நீங்கள் உங்களது ஆன்லைன் செல்லப்பிராணி விற்பனை கடையில் விற்கப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அடுத்த கட்ட முடிவுகளை எடுக்க முடியும்.  

  1. ஆன்லைன் பெட் ஸ்டோருக்கான சப்ளையர்களைக் கண்டறியவும்

எந்தெந்த பொருட்களை நீங்கள் உங்களது ஆன்லைன் ஸ்டோரில் விற்கப் போகிறீர்கள் என்ற பட்டியலை தயாரித்த பிறகு அந்த பொருட்களை எங்கே வாங்குவது எவ்வாறு தயார் செய்வது போன்ற தகவல்களை சேகரிக்க வேண்டும். ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே உங்களால் தயாரிக்க முடியும் என்பதால் பெரும்பாலான பொருட்களுக்கு நீங்கள் ஒரு மொத்த விலை விற்பனையாளரை நாடி செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. உங்களது ஆன்லைன் பெட் ஸ்டோரில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் ஒரே ஒரு மொத்த விற்பனையாளரை சார்ந்து இருந்தால் உங்களுக்குள் ஏதேனும் மனக்கசப்பு வரும்போது அடுத்த கட்டத்திற்கு உங்களது வணிகத்தை எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை பிரச்சனை ஏற்படக்கூடும். ஆதலால் ஒன்றுக்கு மேற்பட்ட சப்ளையர்களை கண்டறிந்து அவர்களுடன் நல்லுறவை பேணி காத்து கொள்ள வேண்டும்.

  1. ஆன்லைன் பெட் ஸ்டோர்கான முழு வணிக திட்டத்தை உருவாக்குங்கள் 

  • உங்களது ஆன்லைன் பெட் ஸ்டோர் உருவாக்கத்திற்கான முக்கிய குறிக்கோள் என்ன?
  • உங்களது வாடிக்கையாளர்கள் யார் ?எவ்வாறு அவர்களை திருப்திப்படுத்தி வணிகத்தை செய்யப்போகிறீர்கள்?
  • மற்றவர்களை விட உங்களது ஆன்லைன் பெட் ஸ்டோர் எந்த வகையில் சிறப்பு வாய்ந்தது?
  • உங்களது போட்டியாளர்களை எவ்வாறு சமாளிக்க போகிறீர்கள்?
  • போன்ற அடிப்படையான கேள்விகளுக்கான பதிலை துல்லியமாக இல்லாவிட்டாலும் தோராயமான திட்ட வடிவில் தயாரித்து வைத்துக் கொள்வது நல்லது.
  1. முதலீடு மற்றும் இதர பணத்தேவையை பற்றி முடிவு செய்யுங்கள்

எவ்வளவு பணத்தை முதலீடு செய்யப் போகிறீர்கள்? தொழில் தொடங்கி வெற்றி அடையக்கூடிய குறிப்பிட்ட கால அளவு வரை என்னமாதிரியான சந்தைப்படுத்துதல் செலவை செய்யப்போகிறீர்கள்? இந்த ஒரு தொழிலை செய்ய ஆரம்பித்தாலும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடாக எடுத்த வைத்தே ஆரம்பிக்க முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அத்தகைய முதலீட்டுத் தொகை நீங்கள் உங்கள் கையிருப்பில் இருந்து கொடுக்கப் போகிறீர்களா அல்லது வங்கி மற்றும் அரசாங்க அலுவலகங்களில் உதவியை நாட போகிறீர்களா என்பதை பற்றி யோசித்து முடிவு செய்யுங்கள். செல்லப்பிராணிகள் பற்றிய தொழில் என்பதால் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இதற்கான கடனை வழங்கி வருகிறது, அதைப்பற்றிய தகவல்களை கூகுள் வலைத் தேடல் மூலம் அறிய முடியும்.

  1. பிரபலம் அடைய கூடிய கவர்ச்சியான டொமைன் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்

ஆன்லைனில் நீங்கள் செய்யக் கூடிய தொழிலுக்கு வலைதளம் உருவாக்குவது முக்கியமாகும். அத்தகைய வலைதளம் உருவாக்குவதன் முதல் படி என்னவென்றால் அதற்கு ஏற்ற ஒரு டொமைன் நேம் தேர்வு செய்து பதியப்பட வேண்டும். இந்த டொமைன் நேம் ஐ தேர்வு செய்யும் போது உங்களுக்கு பிடித்த பொதுப்படையான பெயரை தேர்ந்தெடுப்பதை விட உங்களது விற்பனை பொருளுக்கு சம்மந்தமான பெயரைக் கொண்ட டொமைனை தேர்வு செய்வது சிறந்ததாகும். ஆன்லைன் மூலமான விற்பனையையும், வணிக வளாகத்தில் கடை மூலம் விற்பனையும் நடத்தி வருபவர்களேயானால் இரண்டுக்கும் ஒரே பெயரை வைப்பது மக்களிடையே உள்ள குழப்பத்தை போக்கும். காம் இன்போ நெட் என பல்வேறுபட்ட பின் சேர்க்கைகள் கொண்ட டொமைன் நேம் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. உங்களுக்கு பிடித்த உங்களது வணிகத்தின் பெயரை வேறு யாரும் பயன்படுத்த முடியாத வகையில் மிக விரைவாக உங்களது பெயரில் டொமைன் நேம் பதிவு செய்து கொள்வது நல்லது.

  1. சிறப்பான வடிவமைப்பும் செயல்பாடும் கொண்ட பெட் ஸ்டோர் வலைதளத்தை உருவாக்கவும்

உங்கள் வலைத்தளத்தில் உள்ள தகவல்களை சேகரித்து வைக்கக்கூடிய ஒரு சிறந்த ஹோஸ்டிங் தேர்ந்தெடுத்து சிறப்பான செயல்பாடு உடைய வலைதளத்தை உருவாக்குவது முக்கியம். உங்களுக்கு வலைதள உருவாக்குவது பற்றிய அதிகப்படியான தொழில்நுட்ப நுணுக்கங்கள் தெரியாவிட்டாலும் உங்களது போட்டியாளராக கருதப்படும் பிரபலமான ஆன்லைன் பெட் ஸ்டோரை வலை தளத்தில் தேடி அதில் உள்ள சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ள முடியும். நீங்களும் அத்தகைய போட்டியாளர்களின் ஆன்லைன் பெட் ஸ்டோர் வலைதளத்தை விட சிறப்பு வாய்ந்த வடிவமைப்பையும் செயல்பாட்டையும் கொண்ட வலை தளத்தை உருவாக்கினால் மட்டுமே வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறமுடியும். இத்தகைய செய்திகளை உங்களுக்கு எளிதாக செய்து கொடுப்பதற்காக பல்வேறு டிஜிட்டல் மார்க்கெட்டிங் கம்பெனிகள் சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகமாகவே இருக்கின்றன. உங்களது வலைதளத்தில், ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு எளிதாக செல்ல முடிகிறதா பல்வேறு விதமான பொருட்களை கம்பேர் செய்து பார்க்கக்கூடிய வசதி இருக்கிறதா ஒவ்வொரு பொருளின் விற்பனை பக்கத்தில், பொருளை பற்றிய தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ளும் கூடிய வகையில் படங்களும் விளக்கங்களும் இருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளவும். 

  1. பெட் ஸ்டோருக்கு மொபைல் செயலியை உருவாக்க வேண்டும் 

இன்றைய கால கட்டத்தில் அதிகப்படியான மக்கள் மொபைல்போனை பயன்படுத்துவதன் காரணமாக வலைதளத்தை மிகுந்த சிரத்தையுடன் உருவாக்குவது போலவே மொபைல் செயலியையும் உருவாக்குவது அவசியமாகிறது. உங்களுக்கு ஆன்லைன் பெட் ஸ்டோர்க்கு தனி மொபைல் செயலியைப் உருவாக்குவதன் மூலம் 100 சதவீத ஆன்லைன் வாடிக்கையாளர்களை சென்றடைய வாய்ப்பு உள்ளது.

  1. பாதுகாப்பான கட்டண முறையைப் பயன்படுத்தவும் 

உங்களது ஆன்லைன் பெட் ஸ்டோரில் நடைபெறும் அனைத்து விற்பனைகளும் மின்னணு பணப் பரிமாற்றத்தின் மூலமே நடைபெறுவதால் உங்களுக்கும் உங்களது வாடிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் பிரபலமான கட்டண முறையை பயன்படுத்துவது அவசியமாகும். கூகுள் பே, பேடிஎம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற அனைத்து விதமான உள்ளூர் பணப்பரிவர்த்தனை முறைகளும் பேபால், ஸ்கிரில், பயோனீர் போன்ற உலகளாவிய பணபரிவர்த்தனை முறைகளையும், பயன்படுத்துவது அவசியம். பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளையும் பெரும்பாலான மக்கள் உலகளாவிய பண பரிமாற்றத்திற்கு பயன்படுத்துவதால் இந்திய நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.

  1. சந்தைப்படுத்தல் திட்டத்தை உருவாக்குங்கள்

எந்த மாதிரியான பொருட்களை விற்க வேண்டும் என்ற முடிவு எடுத்து, அதற்கேற்ற வலைதளம் மற்றும் செயலிகளை சரியான வடிவமைத்த பிறகு நீங்கள் செய்யக்கூடிய வேலை என்னவென்றால் உங்களது பெட் ஸ்டோர் பற்றிய விழிப்புணர்வு மற்றும் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது ஆகும். உங்களது பெட் ஸ்டோர் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் இருந்தால் மட்டுமே உங்களது வியாபாரம் தழைத்து நீங்கள் போட்ட முதலீட்டை லாபமாக மாற்ற முடியும். இதற்காக மிகச் சிறந்த சந்தைப்படுத்துதல் திட்டங்களை உருவாக்கி சமூக வலைதளங்கள், வலைப்பதிவுகள், பதாகைகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

  1. சரியானதொரு ஷிப்பிங் பார்ட்னரை தேர்வு செய்ய வேண்டும்

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து செயல்களையும் சரியான முறையில் செய்து வந்தால் உங்களுக்கு அதிகப்படியான விற்பனைகள் உங்களது ஆன்லைன் ஸ்டோரில் வரும் என்பது உறுதி. ஆனால் இதோடு மட்டும் உங்களது பணி நிறைவடையவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் உங்களது வாடிக்கையாளருக்கு அவர்கள் ஆர்டர் செய்த பொருட்களை சரியான முறையில் அனுப்பி வைப்பதும் உங்கள் பொறுப்பாகும். ஆகையால் சரியானதொரு ஷிப்மன்ட் நிறுவனத்திடம் கூட்டு சேர்ந்து வாடிக்கையாளர்களின் பொருட்களை சிறந்த முறையில் பேக்கிங் செய்து அனுப்பி வைக்க வேண்டும். இந்தியாவில் மட்டும் உங்களது விற்பனை செய்யப் போகிறீர்களா அல்லது உலகளாவிய அளவில் உங்களது விற்பனை செய்யப் போகிறீர்களா என்பதை பொறுத்து இத்தகைய ஷிப்மன்ட் பார்ட்னரை நீங்கள் தெரிவு செய்ய வேண்டும்.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.