written by | October 11, 2021

ஈ-காமர்ஸ் வணிகம்

×

Table of Content


பாரம்பரிய சில்லரை வணிகத்தை விட இ-காமர்ஸ் வணிகம் எந்த வகையில் சிறப்பு வாய்ந்தது 

இ காமர்ஸ் எனப்படும் மின்னணு வணிகமானது  பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் முழுவதுமாக இணையதளத்தை பயன்படுத்தி செய்யக்கூடிய வணிகமாக இருக்கிறது. அதாவது நீங்கள் வாங்க கூடிய அல்லது விற்க கூடிய பொருள்களுக்கான பணபரிமாற்றம் மின்னணு முறையில் நடைபெறுவதால் இது மின்னணு வணிகம் (இ-காமர்ஸ்) என்று அழைக்கப்படுகிறது. பத்து வருடங்களுக்கு முன்னர் இ-காமர்ஸ் வணிகம் வருங்காலத்தில் வணிகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்து மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என யாரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்புகள் இல்லை. உங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கணினியின் மூலமாக ஒரு சிறு நிமிடங்களில் ஆர்டர் செய்து, உங்களது வீட்டில் வாசலிலே பொருளைப் பெறக்கூடிய வாய்ப்புள்ளது என்று பத்து வருடங்களுக்கு முன்னால் யாரேனும் கூறியிருந்தால் நாம் சிரித்து இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் படிப்படியாக இத்தகைய இ-காமர்ஸ் வணிகம் கடந்த பத்து வருடங்களில் வளர்ந்து வரும் அபாரமான வளர்ச்சியை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். 

2015-இன் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 20 சதவிகித மக்கள் இகாமர்ஸ் வணிகத்தை பயன்படுத்திய நிலையில் 2020 இன் கணக்கெடுப்பின்படி 60 சதவிகித மக்கள் ஈகாமர்ஸ் வணிகத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். பாரம்பரிய முறையில் வணிகம் செய்து வந்த பல்வேறு நிறுவனங்கள் இ-காமர்ஸ் வணிகத்திற்கு மாற தொடங்கி விட்டார்கள் என்பதே இதற்கு சான்றாக விளங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஈகாமர்ஸ் வணிகத்தில் உள்ள நன்மைகளை போலவே விற்பனையாளர்களுக்கும் அதிகப்படியான நன்மைகள் இருப்பதால் மட்டுமே இத்தகைய அபரிமிதமான வளர்ச்சியை குறுகிய காலத்தில் அடைந்துள்ளது. ஏதேனும் ஒரு பிரிவை அதாவது வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அல்லது விற்பனையாளர்களுக்கு மட்டும் நன்மை தரக்கூடிய வகையில் இ-காமர்ஸ் வணிகம் இருந்திருக்குமேயானால் இத்தகைய வளர்ச்சியை அடைய வாய்ப்பு இல்லை. பாரம்பரிய வணிகத்தை விட ஈகாமர்ஸ் வணிகத்தில் எந்த மாதிரியான நன்மைகள் வாடிக்கையாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் இருக்கிறது என்பதைப் பற்றி கீழே விளக்கமாக கூறப்பட்டுள்ளது. 

1) பல்வேறு இடங்களுக்கு உங்கள் வணிகத்தை விரிவுபடுத்த முடியும் 

இ-காமர்ஸ் மூலமாக விற்பனை செய்யக் கூடியவராக நீங்கள் இருந்தால் உங்களது வாடிக்கையாளர்களாக நாட்டிலுள்ள அனைத்து பகுதியிலிருந்தும் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் பாரம்பரிய முறைப்படி நகரத்தின் முக்கிய பகுதியில் கடை வைத்து சில்லரை விற்பனை செய்யக் கூடியவராக இருந்தால் அதிகபட்சமாக அந்த நகரத்தில் உள்ள மக்கள் மட்டுமே உங்களுக்கு வாடிக்கையாளர்களாக அமையப் பெறுவார்கள். வாடிக்கையாளர்களை பொருத்தவரைக்கும் இது மிகுந்த லாபகரமாக உள்ளதற்கான காரணம் என்னவென்றால் தங்களுக்கு பிடித்த தரமான பொருளை நாட்டின் பிற மூளையிலுள்ள வணிகம் செய்பவர்கள் இடம் இருந்தும் பெற முடியும் என்பதாகும். தங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் தேவைகளுக்காக அருகில் உள்ள கடையில் வாங்கியாக வேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்கு இல்லை. வாடிக்கையாளர் மற்றும் விற்பனையாளர்கள் என இரு தரப்பினருக்கும் மனநிறைவையும் வெற்றியையும் தரக்கூடிய வகையில் இந்த மின்னணு வணிகம் (இ காமர்ஸ்) அமைந்துள்ளது என்பதற்கு இது ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. 

2) குறைந்த முதலீட்டில் தொடங்கி சிக்கனமாக நடத்த முடியும்  

பாரம்பரிய முறைப்படியில் உள்ள வணிக நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்றால் உங்களுக்கு மிகப்பெரிய முதலீட்டை கொண்டு ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மிகுந்த நெருக்கமான வீடுகள் மற்றும் மக்கள் தொகை அதிகமுள்ள இடத்தின் முக்கிய பகுதியில் மக்கள் அனைவரும் வந்து செல்லக்கூடிய வளாகத்தில் மிகப்பெரிய இடத்தை வாடகைக்கோ அல்லது விலைக்கு வாங்கி நீங்கள் தொழிலை ஆரம்பித்தால் மட்டுமே அதிகப்படியான வளர்ச்சியை குறைந்த நாட்களில் அடைய முடியும். முக்கிய இடத்தில்  கடையை நிறுவுவதற்கு மிகப்பெரிய தொகையை நீங்கள் கடனாக ஏதும் பெற்றால் பிற்காலத்தில் மிகப்பெரிய தலைவலியை அளிக்கக்கூடும். இது மட்டுமில்லாது மாத வாடகை மற்றும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் போன்றவற்றிற்காக மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் இழக்க நேரிடும். வணிக வளாகங்களில் மின் கட்டணம் அதிகம் இருப்பதாலும் உங்களது லாபத்தின் ஒரு பகுதியை நீங்கள் எழுந்து கொண்டே இருப்பீர்கள். ஆனால் இ-காமர்ஸ் வணிக நிறுவனங்களில் இதைப் போன்றதொரு வாடகை, மின் கட்டணம், மற்றும் ஊழியர்களின் சம்பள பிரச்சனை இல்லை. இணையதளம் வாயிலாகவே வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடுவது மற்றும் விற்பனை நடைபெறுவதால் மிகப் பெரிய அளவில் நகரத்தின் முக்கிய பகுதியில் வணிக  வளாகங்கள் இல்லாமல் ஒரு சிறிய இடத்தில் நிறுவனத்தை ஆரம்பித்தால் போதுமானது.

3) வணிகத் தகவல்களை ஆராய்வது எளிது 

இ-காமர்ஸ் வணிகம் மூலமாக விற்பனை செய்யும் வணிகர்கள் தங்களின் ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் அடிக்கடி எந்த மாதிரியான பொருட்களை வாங்குகிறார், ஒரு மாதத்திற்கு எவ்வளவு பொருளை வாங்குகிறார், மற்றும் எந்த பொருளை வாங்க விரும்புகிறார் போன்ற தகவல்களை எளிதாக பெற முடியும். அதுமட்டுமல்லாது உங்களது இ-காமர்ஸ் வணிகத்தில் எந்த ஊரிலிருந்து அதிகப்படியான ஆர்டர்கள் வருகிறது, எந்த நேரத்தில் ஆர்டர்கள் அதிகமாக வருகிறது, ஆண் வாடிக்கையாளர்கள் அதிகமாக இருக்கிறார்களா அல்லது பெண் வாடிக்கையாளர் அதிகமாக இருக்கிறார்களா என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது, மற்றும் எந்த வயதுடைய வாடிக்கையாளர்களுக்கு அதிக விற்பனை உங்கள் வணிகத்தில் செய்யப்படுகிறது போன்ற தகவல்களை சில வினாடிகளில் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இத்தகவல்களை ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் வணிகத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதன் மூலம் உங்களது தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து கொண்டு செல்ல முடியும். ஆனால் பாரம்பரிய முறைப்படி உள்ள சில்லறை விற்பனை மையத்தில் இம்மாதிரியான தரவுகளை பெறுவது என்பதே இயலாத காரியமாகும்.

4) கூட்ட நெரிசல் இல்லாமல் அதிகப்படியான ஆர்டர்கள் பெற முடியும் 

வணிக வளாகத்தில் உள்ள கடைக்கு நீங்கள் மாலை நேரத்திற்கு சென்றால் அங்கு பில் போடும் இடத்தில் உள்ள வரிசையில் குறைந்தது 15 நிமிடங்களாவது நிற்க வேண்டிய நிலைமைக்கு உள்ளாவீர்கள். ஆனால் இ-காமர்ஸ் வணிகத்தில் நீங்கள் எந்தவித கூட்ட நெரிசலிலும் வரிசையிலும் சிக்காமல் உடனடியாக ஆர்டர் செய்துவிட்டு வீட்டின் வாசலிலேயே பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். அதே போல் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு விற்பனையாளர் அதிகபட்சமாக 100 வாடிக்கையாளர்களுக்கு மேல் சந்திக்க முடியாது. ஆனால் இ-காமர்ஸ் இணையதளத்தில் ஒரே நேரத்தில் நீங்கள் 500-1000 என கணக்கிலடங்கா ஆர்டர்களை எந்தவித நெரிசலும் சிக்கலும் இல்லாமல் பெற்றுக்கொள்ள முடியும். இ-காமர்ஸ் இணையதளத்தில் ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான பொருளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் நீங்கள் பாரம்பரிய முறைப்படி கடை வைத்து வணிகம் செய்பவராக இருந்தால் அதிகபட்சமாக 100 பேரை மட்டுமே கடையில் அனுமதிக்க வாய்ப்புள்ளது. 

5) வாடிக்கையாளரின் கருத்துக்களை எளிதாக தெரிந்துகொள்ள முடியும் 

நீங்கள் வாடிக்கையாளராக இ-காமர்ஸ் இணையதளத்தில் ஒரு பொருளை வாங்க விரும்புவதாக இருந்தால், ஏற்கனவே அந்த பொருளை வாங்கியவர்களின் கருத்துகளை நோட்டமிட்டு அந்தப் பொருளின் தரத்தை பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு வாடிக்கையாளர்களின் கருத்துக்களை தெரிந்து கொள்வதன் மூலம் ஒரு விற்பனையாளராக நீங்களும் அந்தப் பொருளில் உள்ள குறைபாடுகளை தெரிந்து கொண்டு அதை சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும். ஆனால் பாரம்பரிய முறைப்படியிலுள்ள வணிகத்தில் இத்தகைய வாடிக்கையாளர்களின் கருத்துக்களை தெரிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். ஒரு உரிமையாளராக ஒரு பொருளில் உள்ள அனைத்து சிறப்பம்சங்களையும் வாடிக்கையாளர்கள் மூலம் தெரிந்து கொண்டாலும் அதை அடுத்த வாடிக்கையாளர்களிடம் நீங்கள் சொல்லும் போது அவர்கள் நம்புவார்கள் என்று நாம் யூகிக்க முடியாது ஏனென்றால் அந்த வாடிக்கையாளர்களை பொருத்தவரை விற்பனையாளர் என்ன வேண்டுமானாலும் அந்த பொருளை விற்பதற்காக சொல்லகூடும் என்பதே ஆகும். 

6) வலைத் தேடல்களின் மூலம் பிரபலமாக வாய்ப்பு 

பாரம்பரிய முறைப்படி உள்ள சில்லறை வணிகத்தின் வெற்றி என்பது சுற்றியுள்ள மக்களிடம் நன்கு பிரபலம் அடைந்து அவர்களின் நன்மதிப்பைப் பெறுவதை பொருத்து அமையும். அவ்வாறு நீங்கள் அனைத்து மக்களிடமும் பிரபலம் அடைவதற்காக சந்தைப்படுத்துதல் முயற்சிகளுக்கு செலவிடும் தொகை என்பதே மிகப்பெரிய அளவில் இருக்கும். ஆனால் இணையதள தேடல்களில் இ-காமர்ஸ் வணிகத்தில் மிகவும் குறைந்த செலவில் அனைத்து மக்களிடம் பிரபலம் அடைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இன்றளவில் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் அனைத்து மக்களிடமும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வழக்கமும் இணையத்தில் தங்களது விருப்பமான பொருளைத் தேடும் பழக்கமும் அதிகரித்து இருப்பதால் உங்களது வலைதளத்தை பெரும்பாலான மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

7) தேவையான பொருளை கண்டறிவது மிகவும் எளிது 

வாடிக்கையாளராக ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்றால் ஒரு குறிப்பிட்ட பொருள் முதல் தளத்திலும் மற்றொரு பொருள் மூன்றாவது தளத்திலும் இருக்கும். ஆதலால் நீங்கள் பெரும்பாலான நேரத்தை ஷாப்பிங் மாலில் செலவிட்டு அந்தப் பொருளை தேட வேண்டியது இருக்கும். ஆனால் இத்தகைய இ-காமர்ஸ் வணிகத்தில் அனைத்துப் பொருள்களையும் ஒரு கிளிக்கில் தேடி வாங்கிக் கொள்ள முடிவதால் அதிகப்படியான நேரத்தை மிச்சப்படுத்த முடியும். அதைப்போல் விற்பனையாளராக இருக்கும்பட்சத்தில் உங்களிடம் உள்ள சரக்கு இருப்பு நிலை பற்றி எளிதாக தெரிந்துகொள்ள ஏதுவாக இத்தகைய இ-காமர்ஸ் இணையதளம் உறுதுணையாக இருக்கும். 

8) வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது 

இ-காமர்ஸ் வணிகத்தில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களின் தகவல்களை உங்களிடம் சேர்க்கப்படுவதால் அவ்வப்போது அவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் விற்பனை சலுகைகள் மற்றும் புது வரவுகளை பற்றிய தகவல்களை எளிதாக அனுப்ப முடியும். ஆனால் பாரம்பரிய முறைப்படி உள்ள வணிகங்களில் ஒருமுறை உங்களது வந்து செல்லும் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும் வாய்ப்புகள் இல்லை. தனிப்பட்ட வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களை செய்து விற்பனையை அதிகரிக்கும் வாய்ப்பு இ-காமர்ஸ் வணிகத்தில் மட்டுமே இருக்கிறது.

9) கால அளவு இன்றி அனைத்து நேரங்களில் செயல்பட முடியும் 

பாரம்பரிய முறைப்படி உள்ள வணிகம் மற்றும் கடைகளின் பெரும்பாலான நேரம் என்பது காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இருக்கும். ஆனால் இ-காமர்ஸ் வலைதளங்கள் அனைத்து நேரங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு நேரம் கிடைக்கும்போது பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். குறிப்பாக கொரோனா போன்ற நோய்த்தொற்று காலங்களிலும் மற்றும் விடுமுறை நாட்களிலும் கூட இ-காமர்ஸ் இணையதளம் மூலமாக பொருட்களை விற்கவும் வாங்கவும் முடியும்.

இறுதி குறிப்புகள் 

பாரம்பரிய வணிகம் அதனுடைய முழு சிறப்பையும் இழந்துவிட்டது என்று கூற முடியாவிட்டாலும் இ-காமர்ஸ் வணிகத்திற்கு ஈடான நன்மைகளை தர முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. பாரம்பரிய வழக்கத்தைவிட இ-காமர்ஸ் வணிகம் எந்த வகை சிறப்பு வாய்ந்தது என்ற தகவல்கள் உங்களுக்கு புரியும் வகையில் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது என நம்புகிறேன். ஆகவே உங்களது வணிக வளர்ச்சிக்காக 100 சதவீத வாடிக்கையாளர்களை திருப்தி படுத்த விரும்பினால் இரண்டுவிதமான வணிகத்தையும் சரியான முறையில் கையாண்டால் வெற்றி நிச்சயம். 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.