ஆன்லைனில் பணம் சம்பாதிக்க எளிதான மற்றும் சிரமமில்லாத வழிகள்
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் விழிப்புணர்வும் மக்களிடையே கடந்த சில வருடங்களாக அதிகரித்து வந்தாலும் கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட தடை காலத்தில் பன்மடங்கு பெருகி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது வீட்டை விட்டு வெளியேறாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க விரும்பும் மக்களுக்கு உதவும் வகையில், பல்வேறுபட்ட எளிதான மற்றும் சிரமம் இல்லாத ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் வழிகள் தொகுப்பு கீழே கொடுக்கப் பட்டுள்ளது. நீங்கள் எந்த மாதிரியான பட்டமேற்படிப்பு முடித்து இருந்தாலும் பட்டப்படிப்பை படிக்காதவர்களாக இருந்தாலும் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது. ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது நீங்கள் இதுவரை எந்த வகையான தொழிலை செய்து வந்தீர்கள் மற்றும் இப்போது எந்த தொழிலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை பொறுத்து அமையாமல், ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது பற்றிய ஆர்வமும் நுணுக்கமும் பொருத்தே அமையும். உங்களது தனித்திறன்களை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக பணத்தை வீட்டில் இருந்து கொண்டு அல்லது பயணங்களின்போது சம்பாதிக்க முடியும். நம்முடைய தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கும் நம்முடைய வாழ்க்கை முறையை நமக்கு பிடித்த மாதிரி வாழ்வதற்கும் ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்கும் முறையை பின்பற்றுவது நல்லதாகும்.
ஆன்லைனில் மிகுந்த ஆர்வத்துடன் நம்பிக்கையுடன் முழு முயற்சியை மேற்கொண்டால் கண்டிப்பாக வெற்றி அடைவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்களால் முடிந்தவரை அதிக ஈடுபாட்டுடன் செயல்படும்போது உற்பத்தித் திறன் அதிகம் உள்ள செயல்களை செய்ய முடியும். ஆன்லைனில் இருக்கும் பணிகளுக்கும் அதிகமான தொழில் போட்டி நிலவி வருவதால் விளையாட்டு போக்காக இதை எடுத்துக் கொள்ளாமல் நீங்கள் செய்யும் வேலையில் முழு அர்த்தத்தையும் உணர்ந்து பணிபுரியும் போது மட்டுமே நீங்களும் ஒரு முதலாளியாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது. வீட்டிலிருந்தே அல்லது பயணங்கள் செய்துகொண்டே பணம் இப்போது சம்பாதிப்பது மட்டும் இல்லாமல் பிற்காலங்களில் இதே நிலையை தொடர வேண்டும் என்றால் உங்களது முழு தனித்திறன்களையும் வெளிப்படுத்தக்கூடிய தொழில்களைத் தேர்ந்தெடுத்து பிரகாசிக்க முயற்சி செய்யுங்கள். ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது மிக எளிமையானதாக இருந்தாலும் சிலருக்கு இதில் உள்ள நடைமுறை மற்றும் செயல்பாடுகள் திருப்தி அளிக்காத வகையில் இருப்பதற்கு வாய்ப்புண்டு. அத்தகைய நபர்கள் தங்களுக்கு ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கும் முறை ஏற்புடையதாக இல்லை என்பதை புரிந்து கொண்டு விலகி இருத்தல் மிகவும் நல்லது. உலக அளவில் ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் மிக முக்கியமான மற்றும் எளிதான 10 வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
-
புகைப்படங்களை ஆன்லைனில் விற்கவும்
உங்களிடம் புகைப்படங்கள் எடுக்கும் ஆர்வம் மற்றும் திறமை இருந்தால் பல்வேறு வகையான சினிமா பிரபலங்கள், குழந்தைகள், இயற்கை சூழ்நிலைகள் போன்றவற்றை படமெடுத்து உங்களது பழைய தளத்தில் பதிவேற்றம் செய்து வாருங்கள். பத்திரிக்கை நிறுவனங்கள் அல்லது விளம்பரப் பட நிறுவனங்கள் உங்கள் வலைத்தளத்தில் உள்ள புகைப்படங்களை பார்த்து அவர்களுக்கு வேண்டிய படத்தை பயன்படுத்துவதற்கு உங்களின் அனுமதி கேட்டு வரும்போது குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு அனுமதி அளிக்கலாம். மேலும் குழந்தைகள் மற்றும் சினிமா பிரபலங்கள் வைத்து நீங்கள் அழகான புகைப்படங்களை எடுக்கும் போது மற்றவர்களும் உங்களிடம் புகைப்படம் எடுக்க விரும்புவார்கள். அதன் மூலமும் நீங்கள் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக தேனியை சேர்ந்த 26 வயது பெண், கொரனா காலகட்டத்தில் வேலை இழந்த பின்பு வீட்டின் அருகே உள்ள குழந்தைகளை வைத்து புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் பெரும்பாலான மக்களிடம் வரவேற்பை பெற்று இன்று அதிகப்படியான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை அந்த பெண் மூலம் எடுக்க விரும்புகிறார்கள். இது மட்டுமல்லாது இயற்கை சார்ந்த புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிடும்போது அதன் அழகை ரசிப்பதற்கு என்று ஒரு கூட்டத்தை உருவாக்கி, அதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது.
-
எப்படி, எவ்வாறு, போன்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வீடியோவை உருவாக்குங்கள்
இன்றைய காலகட்டத்தில் உள்ள மக்கள் தங்களது மனதில் உள்ள கேள்விகளுக்கு விளக்கமான மற்றும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய பதில்களை தேடுவதற்காக யூட்யூப் இணைய தளத்தை நாடுகிறார்கள். அவ்வாறு மக்கள் விரும்பக்கூடிய மற்றும் தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பல்வேறு வீடியோக்களை யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்கி பதிவேற்றம் செய்க. உங்கள் யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்களை அதிகப்படியான மக்கள் பார்க்கும் பொழுது யூடியூப் மூலமாக உங்களுக்கு வருவாய் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு வகையான நிறுவனங்களும் வீடியோக்களின் இடையே அவர்களது நிறுவனத்தைப் பற்றிய விளம்பரம் செய்வதற்கும் பணம் கொடுப்பார்கள். எத்தகைய கேள்வி உடைய வீடியோ மக்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்பதை நீங்கள் ஆராய்ந்து செயல்பட வேண்டும். எடுத்துக்காட்டாக மதன் கௌரி என்ற இளைஞர் யூடியூப் சேனல் மூலம் பல லட்சங்களை வீட்டிலிருந்தே ஆன்லைனில் சம்பாதித்து வருகிறார்.
-
காப்பி ரைட்டிங் எனப்படும் நகல் எழுத்தாளராகுங்கள்
உலகத்தின் ஒரு மூலையில் உள்ள தீவில் வாழ்ந்து கொண்டு அதிகப்படியான டாலர் கணக்கில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் இந்த காப்பி ரைட்டிங் எனப்படும் நகல் எழுத்தாளர் உங்களுக்கு ஏதுவாக இருக்கும். நகல் எழுத்தாளர் என்பது ஒரு நிறுவனத்தில் விற்கக்கூடிய பொருளைப் பற்றிய தகவல்களை மக்கள் விரும்பும் வகையில் அந்தப் பொருளை வாங்க தூண்டும் வகையில் எழுதுவது ஆகும். எழுத்தாளர் என்பது இரண்டு வகையில் பிரிக்கப்படும். ஒன்று, தகவலை மட்டும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அமைவது மற்றொன்று தகவலோடு சேர்த்து மக்களை அந்தப் பொருளை வாங்க வைப்பதற்கும் முயற்சிப்பது. இவ்வாறு மக்களின் உணர்வுகளைப் புரிந்து பொருளை வாங்க வைக்கக்கூடிய எழுத்தாளர்களுக்கு உலகளவில் பெரிய வரவேற்பு இருக்கிறது என்பதற்கு அவர்களுக்காக கொடுக்கப்படும் சம்பளத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
-
ஆங்கிலம் அல்லது பிற மொழிகளை கற்பிக்கவும்
உங்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடிய திறமை மற்றும் ஆங்கில இலக்கணம் பற்றிய புரிதல் இருந்தால் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கக் கூடிய வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றம் செய்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். குறிப்பாக இந்தியா போன்ற பல்வேறு மொழிகளை உள்ளடக்கிய நாடுகளில் ஆங்கிலம் என்பது மிகவும் இன்றியமையாத மொழியாக மாறி விட்டதாலும் அனைத்து மக்களும் இலக்கணப் பிழையில்லாமல் ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டும் என்று விரும்புவதால் இத்தகைய மொழிப்பயிற்சி வீடியோக்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. நீங்கள் ஆங்கிலம் மட்டும்தான் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் என்பதும் இல்லை. தெலுங்கு இந்தி மலையாளம் போன்ற அனைத்து விதமான மொழிகளை கற்றுக் கொள்ளும் ஆர்வமும் மக்களிடையே இருப்பதால் அத்தகைய மொழிகளை கற்றுக் கொடுக்கும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து பணம் சம்பாதிக்க முடியும்.
-
இணையதள கட்டுரைகளுக்கு மொழிபெயர்ப்பாளராகுங்கள்
ஒரு சில வலைதளங்கள் தங்கள் தளத்தில் பல்வேறு விதமான மொழிகளை உள்ளடக்கிய கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இத்தகைய வலை தளத்தில் ஒரு மொழியில் வெளிவந்த கட்டுரையை மற்ற மொழியில் இலக்கண பிழை இல்லாமல் மாற்றிய பிறகு பதிவேற்றம் செய்வார்கள். இத்தகைய கட்டுரையை மொழிபெயர்ப்புகளுக்கு நீங்கள் தகுதியானவராக இருப்பீர்கள் என்றால் நீங்கள் எந்தவித யோசனையும் இன்றி இந்த தொழிலை ஆரம்பியுங்கள். இத்தகைய கட்டுரை மொழிபெயர்ப்பு செய்யும் போது உங்களுக்கும் பல்வேறு விதமான புதிய தகவல்களை பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
-
டிராப்-ஷிப்பிங் தொழிலை ஆரம்பிக்கலாம்
எந்த ஒரு பெரிய முதலீடும் இன்றி ஆன்லைனில் நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய வர்த்தக வணிகமாக இந்த டிராப்ஷிப்பிங் தொழில் நிலவுகிறது. இந்த டிராப்ஷிப்பிங் தொழில் என்பது பாரம்பரியமாக நம் இடைத்தரகர்கள் செய்யக்கூடிய தொழிலை போன்றதொரு அமைப்பே ஆகும். அதாவது உள்ளூரில் உள்ள மக்களின் தேவையை புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான பொருளில் பணத்தை அவரிடம் இருந்தே பெற்றுக் கொண்டு வெளியூரில் உள்ள நபர்களிடம் அப்பொருளை குறைந்த விலைக்கு வாங்கி அவர்களின் மூலமாகவே உங்களது வாடிக்கையாளர்களுக்கு அப்பொருளை அனுப்புவதாகவும்.
-
குழந்தைகளுக்கான ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம்
உங்களுக்கு ஆசிரியர் துறையில் ஏதேனும் அனுபவமும் ஆர்வமும் இருந்தால் குழந்தைகளுக்கு தேவையான பாடத்திட்டங்களை ஆன்லைன் வகுப்பு மூலம் சொல்லிக் கொடுக்க முடியும். இன்றைய காலகட்டத்தில் பத்து சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பள்ளிக்கல்வித்துறையை சாராமல் சுயசார்பு கல்வியை பின்பற்றி வருகிறார்கள். இதன் எண்ணிக்கை பின்வரும் நாட்களில் அதிகமாகவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று உலக கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. பைஜூஸ், டியூட்டர் போன்ற பல்வேறு இணையதளங்கள் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
-
ஃப்ரீலான்ஸ் ப்ரூஃப் ரீடர் ஆகுங்கள்
ஒரு கட்டுரையை ஒருவர் எழுதும் போது, அவர் எழுதிய கட்டுரையில் உள்ள தவறுகளை அவர்களாகவே கண்டுபிடிப்பது என்பது கடினமான காரியம் என்பதால் வலைதளங்களில் அல்லது பிரசுரங்களில் பதிவேற்றம் செய்வதற்கு முன்பு கட்டுரையில் உள்ள பிழைகளை சரி பார்ப்பதற்கு மற்றவர்களின் உதவியை நாடுவார்கள். இவ்வாறு கட்டுரை உள்ள பிழைகளை சரி செய்தும் கொடுக்கும் பணிக்கு ஒரு மணி நேரத்திற்கு 500 ரூபாய் முதல் அதிகப்படியான விலையை உங்களது திறமைக் கேற்ற வகையில் பெற்றுக்கொள்ளமுடியும். பொதுவாகவே அடுத்தவரிடம் உள்ள பிழையை எளிதாக கண்டுபிடிக்கக்கூடிய நமக்கு இத்தகைய பணி மிகவும் எளிமையானதாகவும் சிரமம் இல்லாததாகவும் இருப்பதால் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க விரும்புவர்கள் இத்தொழிலை உடனே செய்யலாம்.
-
தட்டச்சு செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்
ஒரு சிலருக்கு ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் உள்ள தகவல்களை தட்டச்சு செய்து டாக்குமெண்ட் ஆக மாற்ற வேண்டிய சூழ்நிலை இருக்கக்கூடும். உங்களால் குறைந்த நேரத்தில் அதிவேகமாக தட்டச்சு செய்ய முடியும் என்றால் இத்தகைய வேலையை நீங்கள் எடுத்து செய்யலாம். இத்தகைய வேலைகளை கண்டறிவதற்காக ஃபைபர், பீப்பிள் பர் அவர் போன்ற இணையதளங்களை நோட்டம் இடுவதன் மூலம் கண்டறிய முடியும். இன்றைய ஏதாவது எளிதான சாஃப்ட்வேர்கள் ஒலி மூலம் தட்டச்சு செய்யக்கூடியதாக இருந்தாலும் அதில் ஏற்படும் பிழைகளை தவிர்க்க தட்டச்சு திறமைசாலிகளை மட்டுமே அணுகுகிறார்கள்.
-
பணம் சம்பாதிக்கும் முறை பற்றிய வலைதளத்தை உருவாக்கலாம்
உங்களிடம் பணம் சம்பாதிக்கும் முறை பற்றிய பல்வேறு வகையான அனுபவம் மற்றும் நிபுணத்துவம் இருந்தால் அத்தகவல்களை ஒருங்கே ஒரு வலைதளத்தில் வெளியிட்டு அதன்மூலம் அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்ய முடியும். மற்ற வகையான வலைதளத்தை உருவாக்குவதை விட ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்கும் முறை பற்றியான வலைதளத்தை உருவாக்குவதன் மூலம் அதிகப்படியான பார்வையாளர்களை உங்களது வலைதளத்திற்கு கொண்டுவர முடியும். ஹேக்கிங் பற்றிய விவாதங்கள் இ-காமர்ஸ் பற்றிய விவாதங்களை உங்களது வலைதளத்தில் பார்வையாளர்கள் மூலம் நடத்தும்போது அதிகப்படியான பார்வையாளர்களிடம் மற்றும் கூகுள் தேடலில் உங்கள் வலைதளம் பிரபலம் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு பிரபலமடைந்த வலைதளத்திலிருந்து அப்ளியேட் முறையில் எளிதாக ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியும்.
முடிவுரை
மேலே குறிப்பிட்டுள்ள முறைகள் மட்டுமல்லாது ஐம்பதிற்கும் மேற்பட்ட எளிதான மற்றும் சிரமம் இல்லாத ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் முறை இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் குறிப்பிடதக்க முறைகள் என்னவென்றால் ஆடியோ புக் உருவாக்குவது, இ புக் விற்பனை செய்வது, உடற்பயிற்சி சம்பந்தமான வீடியோக்களை வெளியிடுவது, சமையல் குறிப்பு சம்பந்தமான வீடியோக்களை வெளியிடுவது, பயணம் செய்பவர்களுக்கு உதவியாக டிராவல் பற்றிய தகவல்களை வெளியிடுவது, இணைய தளங்களைப் பற்றிய ஆராய்ச்சியின் முடிவுகளை வெளியிடுவது போன்ற தொழில்களும் அடங்கும்.