written by | October 11, 2021

ஆன்லைன் வணிகம்

×

Table of Content


கோவிட்-19 பிறகு இந்தியாவில் செய்யக்கூடிய மிகச்சிறந்த ஆன்லைன் வணிகங்கள்  

நோய்த் தொற்றால் ஏற்பட்ட தடை விதிப்பின் காரணமாக இந்தியாவில் மட்டுமல்லாது உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி பல மாற்றங்களையும் சவால்களையும் சந்தித்து உள்ளதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். குறிப்பாக இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் பொருளாதார வீழ்ச்சி இந்த கோவிட்-19 நோய்த் தொற்று காலகட்டத்தில் ஏற்பட்டுள்ளது. சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் பலவும் இந்த தடை விதிப்பு காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க முடியாமல் தங்களது பணியாளர்களை குறைத்தும் அல்லது தொழிலை நிரந்தரமாக நிறுத்திவிட்டது பற்றியும் பல்வேறு செய்திகள் அன்றாடம் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் 50 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தங்களது வேலையை இழந்து தங்களது அன்றாட தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது தெரியாமல் தவித்து வருகிறார்கள். 

இத்தகைய காலகட்டத்தில் வேலை இழந்தவர்களும் புதிய வேலை தேடுபவர்களுக்கும் மகிழ்ச்சி தரும் விதமாக பல்வேறு ஆன்லைன் வர்த்தகங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகின்றன. இன்னும் 5 வருடங்களில் ஆன்லைன் விற்பனை வணிகத்தின் வளர்ச்சி என்பது இப்போது இருக்கும் அளவை விட மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே இந்த கோவிட்-19 நோய்த்தொற்று மட்டுமல்லாது இதற்குப் பிறகும் நிரந்தரமான ஆன்லைன் வர்த்தகங்களை செய்யக்கூடிய வாய்ப்பு இந்தியாவில் உருவாகி உள்ளது. இவற்றில் மிக முக்கியமான ஆன்லைன் தொழில்களை கண்டுபிடித்து புதியதொரு வளர்ச்சிப் பாதையை அனைவரும் அடையும் வாய்ப்பை பற்றிய முழு விளக்கம் இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளது. கோவிட்-19 தடை காலத்திற்குப் பிறகு அனைவராலும் எளிதில் முயற்சித்து பார்க்கக்கூடிய 14 ஆன்லைன் வணிகங்களை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

1) டிராப்ஷிப்பிங் தொழில் செய்யுங்கள் 

ஆன்லைன் வணிகத்தில் மிகவும் அதிகப்படியான பண பரிமாற்றங்கள் நடக்கக்கூடிய வணிகமாக இந்த டிராப்ஷிப் வணிகம் உலகளவில் சிறந்து விளங்குகின்றது. கோவிட்-19 காலகட்டத்தில் கூட பெரிய அளவில் பாதிப்படையாத ஒரு தொழிலாக இந்த டிராப்ஷிப்பிங் தொழில் இருப்பதால் நீங்களும் இந்த டிராப்ஷிப்பிங் தொழிலை ஆரம்பித்து அதிகப்படியான லாபம் சம்பாதிக்க முடியும். எல்லாத் தொழிலிலும் இருக்கக்கூடிய இடைத்தரகர்கள் செய்யக்கூடிய வேலை பற்றிய நுணுக்கங்கள் உங்களுக்கு தெரிந்து இருந்தால் நீங்களும் இந்த டிராப்ஷிப்பிங் தொழிலில் சிறந்து விளங்கலாம்.

2) கேம் டிசைனர் ஆகுங்கள் 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த குவித்தது தடை காலத்தில் செய்த முக்கிய வேலை என்னவென்றால் தங்களது கைபேசியில் கேம் விளையாடியதாகும். இத்தகைய கேம் டிசைனிங் தொழில்நுட்பத்தை நீங்கள் கற்றுக் கொண்டு செய்து வந்தால் மிகப்பெரிய வளர்ச்சி மற்றும் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. கேம் டிசைனிங் முறையில் பல்வேறு விதமான சாப்ட்வேர்கள் மட்டும் கோடிங் பயன்படுத்தப்படுவதால் இதை அனைவராலும் உடனடியாக செய்ய முடியாவிட்டாலும் தகுந்த பயிற்சியின் மூலம் குறுகிய காலத்தில் புதுப் புது வகையான விளையாட்டுக்களை அறிமுகப்படுத்த முடியும்.

3) வணிக ஆலோசகராகுங்கள்

இன்றைய காலகட்டத்தில் சிறு வணிகம் முதல் பெரிய வணிகம் வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாகி விட்டதால் பாரம்பரிய முறைப்படி தொழிலை நடத்தி வருபவர்களுக்கு டிஜிட்டல் மயமாக்குதல் பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த செயல்முறை வடிவங்களையும், வழிகாட்டுதலையும், ஆலோசனையும் வழங்குவதன் மூலம் உங்களுக்குத் தேவையான பணத்தை எந்த ஒரு முதலீடும் இல்லாமல் பெறமுடியும். இத்தகைய தொழிலை நீங்கள் செய்வதற்கு உலகளாவிய பொருளாதாரத்தின் அடிப்படை நுணுக்கங்களையும் டிஜிட்டல் மயமாக்குதல் பற்றிய தொழில்நுட்பத்தையும் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. 

4) டிஜிட்டல் சந்தைப்படுத்தல் திட்டங்களை நடத்துங்கள்

கோவிட்-19 தடை காலத்தில் அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், அலுவலகமும் திறக்க அனுமதி அளிக்காததால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருளை ஆன்லைன் மூலமாக வலைதளத்தில் தேடி வாங்கிக் கொள்கிறார்கள். ஆன்லைன் விற்பனையில் உள்ள பல்வேறு நன்மைகள் காரணமாக கோவிட்-19 தடை காலத்திற்கு பிறகும் ஆன்லைன் விற்பனை வளர்ச்சி மிகவும் அமோகமாக இருக்குமென பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளார்கள். ஆகவே ஆஃப்லைனில் மட்டும் செயல்பட்டு வந்த பல்வேறு வகையான வணிகங்கள் இப்போது டிஜிட்டல் தளத்திற்கு மாறி ஆன்லைன் விற்பனையில் இறங்குவதால் அவர்களுக்கு தகுந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறையை செய்து தரலாம். 

5) ஆன்லைன் வகுப்புகளை ஆரம்பிக்கலாம் 

கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடியதால் இளைய தலைமுறையினர் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தங்களது படிப்பை தொடர கஷ்டப்பட்டு வருகிறார்கள். அவருக்கு ஏற்ற வகையில் பல்வேறு பாடத்திட்டங்களை எளிய வகையில் விளக்கக்கூடிய ஒலி வடிவங்களாகவும் காணொளி காட்சிகளாகவும் வெளியிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். மாணவர்களின் அறிவுத் தன்மையை புரிந்து கொள்ளக்கூடிய திறமை வாய்ந்த ஆசிரியராக நீங்கள் இருப்பின் உங்களுக்கு அதிகப்படியான வரவேற்பு கிடைக்கும் என்பது உறுதி.

6) ஃப்ரீலான்சிங் பணிகளை தொடங்கலாம்

பிரீலன்சர், அப்ஒர்க், ஃபைவர் போன்ற இணையதளங்களில் மொழிபெயர்ப்பு, கிராஃபிக் டிசைனிங், வீடியோ எடிட்டிங், கன்டன்ட் ரைட்டிங் போன்ற பணிகளுக்கான வாய்ப்புகள் மிகுந்த அதிகமாக இருக்கின்றன. அத்தகைய வலைதளங்களில் உள்ள பணிகளை உங்களுக்கு இருக்கும் திறனின் அடிப்படையில் தேர்வு செய்து செய்து கொடுப்பதன் மூலம் அதற்கேற்ற பணத்தை நீங்கள் பெற முடியும். இத்தகைய பிரீலன்ஸிங் ஒர்க் மூலமாக நீங்கள் யாருடைய கட்டுப்பாடும் இன்றி தன்னிச்சையான முறையில் செயல்படுவதால் சுதந்திரமான முறையில் பணியாற்ற முடியும்.

7) யூடியூபராகுங்கள்

தடை காலத்தில் அதிகப்படியான மக்கள் வீட்டில் வேலை இல்லாமல் அமர்ந்திருப்பதால் பொழுதுபோக்கிற்காக சமூக வலை தளமான யூடியுப் வீடியோக்களை பார்த்து வருகின்றனர். இவ்வாறு அதிகரித்து உள்ள வாடிக்கையாளர்களை சரியான முறையில் பயன்படுத்தி அவர்கள் விரும்பத்தக்க வகையில் உள்ள வீடியோக்களை நீங்களும் வெளியிட்டால் யூடியூப் வலைதளம் மூலமாக உங்களுக்கு பணம் கிடைக்கும். பல்வேறு சினிமா பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் புதிய யூடியூப் சேனல்களை ஆரம்பித்ததே இத்தகைய புதிய வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டுதான். ஆகவே நீங்களும் மக்களுக்கு விரும்பக்கூடிய பொழுதுபோக்கான மற்றும்  பயன்தரக்கூடிய பல்வேறு தகவல்களை தெரிவிக்கும் வீடியோக்களை வெளியிட்டால் உங்களுக்கும் மக்கள் ஆதரவு இருக்கும். 

8) அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்யலாம் 

முக்கிய சொற்களின் கூகுள் வலைதள தேடல்களுக்கு உங்கள் வலைதளத்தை எவ்வாறு முன்னிலைப்படுத்துவது என்பதைப் பற்றிய நுணுக்கமும், நீங்கள் சொல்லக்கூடிய கருத்துக்களை வாடிக்கையாளர் விரும்பும் வகையில் எழுதுபவராகவும் இருந்தால் உங்களுக்கென தனி ஒரு வலைத்தள பக்கத்தை ஆரம்பித்து அதன் மூலம் அப்ளியேட் மார்க்கெட்டிங் மற்றும் கட்டண வலைப்பதிவு போன்றவற்றை செய்து பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புள்ளது. இத்தகைய அப்ளியேட் மார்க்கெட்டிங் மற்றும் கட்டண வலைப்பதிவுகளை நீங்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவும் செய்ய முடியும்.

9) மொபைல் செயலிகள் மற்றும் வெப் டிசைனிங் செய்யலாம் 

மாறிவரும் ஆன்லைன் வர்த்தகத்தின் காரணமாக ஒவ்வொரு வணிகத்திற்கும் மொபைல் செயலிகளும் வலைதள பக்கங்களும் தேவைப்படுவதால் இதை செய்து கொடுக்கும் பணியை தொழிலாக எடுத்து நடத்தி பணம் சம்பாதிக்க முடியும். இதைப் பற்றிய அனுபவ அறிவு மற்றும் திறன் உங்களுக்கு இல்லாமல் இருந்தாலும் ஆறு மாதம் அல்லது மூன்று மாதம் பயிற்சி வகுப்புகளின் மூலம் எளிதில் கற்றுக்கொள்ள முடியும். இருக்கின்ற தொழில் மட்டுமல்லாது புதிதாக தொடங்கப்பட உள்ள அனைத்துத் தொழில்களுக்கும் இத்தகைய செயலிகள் மற்றும் வலைதள பக்கங்களில் தேவை இருப்பதால் நாளுக்குநாள் இதன் வளர்ச்சி அதிகரித்து கொண்டேதான் இருக்கும்.

10) மருத்துவ மற்றும் சுகாதார பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யலாம் 

கோவிட்-19 தடை காலத்தில் மக்கள் அனைவருக்கும் சுகாதாரத்தின் மீது மிகுந்த அக்கறையும் பயமும் வந்துள்ளதால் முகமூடிகள், சனிடைசர் மற்றும் கையுறைகளை விற்கக்கூடிய ஆன்லைன் தளத்தை உருவாக்கி பணம் சம்பாதிக்கலாம். முகமூடிகள் மற்றும் கையுறைகளை நீங்களே சொந்த தயாரிப்பு ஆக உற்பத்தி செய்யும் வாய்ப்பு இருந்தால் இத்தகைய விற்பனையில் இரட்டிப்பு லாபம் அடைவதற்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியமான உணவுகள் சமைக்கும் முறை, சித்தமருத்துவ/இயற்கை மருத்துவ குறிப்புகள் போன்ற புத்தகங்களையும் நீங்கள் ஆன்லைனில் விற்கலாம்.   

11) கலை மற்றும் கைவினை பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யுங்கள் 

கலை மற்றும் கைவினைப் பொருட்களை மொத்த விலைக்கு வாங்கியோ அல்லது குழுவாக உற்பத்தி செய்தோ ஆன்லைன் வணிகம் மூலமாக விற்பனை செய்ய முடியும். இத்தகைய கலை மற்றும் கைவினைப் பொருட்களுக்கான ஆதரவு மற்றும் வரவேற்பு மக்களிடையே எந்த விதத்திலும் குறையவில்லை என்பதால் அதிகப்படியான வணிக வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்பு உள்ளது. இத்தகைய கைவினைப் பொருட்களை உருவாக்க நீங்கள் அதிகப்படியான உடல் உழைப்பை மட்டுமே நம்பி இருப்பதால் பெரிய அளவில் பணம் முதலீடு தேவை இல்லாத இருப்பதால் அனைவரும் இத்தொழிலை செய்யலாம்.  

12) உடற்தகுதி பயிற்சி மற்றும் யோகா வகுப்புகளை நடத்துங்கள் 

வயிற்றில் உள்ள தொப்பையை குறைக்க வேண்டும், ஆணழகன் போன்ற உடலமைப்பை பெற வேண்டும், நல்ல ஆரோக்கியமான உடலை வைத்துக்கொள்ள வேண்டும் மன நிம்மதிக்காக யோகா பயிற்சி செய்ய வேண்டும் போன்ற ஆசைகள் அனைவருக்கும் இருந்தாலும் தனித்தனி பயிற்சியாளர்களை வைத்து கொள்ளக்கூடிய பொருளாதார சூழ்நிலை பெரும்பாலனவர்களுக்கு இருப்பதில்லை. அவர்களின் குறையைப் போக்க கூடிய வகையில் அனைத்து விதமான உடற்பயிற்சி பற்றிய தகவல்கள் அடங்கிய வீடியோவை வெளியிட்டு அதன்மூலம் பணம் சம்பாதிக்க முடியும். ஒவ்வொருவரின் உடல் அமைப்பிற்கு ஏற்றவாறு எத்தகைய உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் இந்த மாதிரியான உணவுப் பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும் போன்ற தகவல்களை உங்களது வீடியோவில் பதிவு செய்து வெளியிடலாம். 

13) கல்வி ஆலோசகராக ஆகலாம் 

இந்திய மாணவர்களுக்கு அதிக அளவில் திறமைகள் இருந்தாலும் எந்த வகையான கல்வி கற்றால் எத்தகைய தொழில் வாய்ப்புகள் இருக்கிறது என்பதை பற்றிய புரிதலும் வழிகாட்டுதலும் இல்லாமல் இருப்பதால் உலகளவில் சோபிக்க முடியாமல் போய்விடுகிறது. இத்தனை மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆலோசனைகளுக்கு ஏற்றவாறு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது. 

14) தற்குறிப்பு (ரெஸ்யூம்) அல்லது கட்டுரை எழுத்தாளராக ஆகலாம்

பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து வெளியே வரும் மாணவர்களுக்கு பெரிய நிறுவனங்களில் வேலைக்காக விண்ணப்பிக்கும்போது தங்களின் ரெஸ்யூமை எந்த வகையில் அமைத்தால் அதிக வாய்ப்பு உள்ளது என்ற புரிதல் இல்லாமல் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நிபுணர்கள் கட்டண முறையில் ரெஸ்யூம் வடிவமைப்பை செய்து வருவாய் ஈட்டி வருகிறார்கள். அதேபோல் சிறு தொழில் தொடங்குபவர்கள் தங்களுடைய வியாபாரத்தில் உற்பத்தி பொருளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த கூடிய கட்டுரை எழுதுபவர்களுக்கும் அதிகப்படியான தேவைகள் இருக்கின்றன.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.