வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் விற்பனை தொழிலை எவ்வாறு தொடங்குவது
வீட்டிலேயே பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யக்கூடிய தொழில்கள் பல்வேறு எண்ணிக்கையில் இருந்தாலும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு சம்பந்தம் இல்லாத தொழிலாகவே பெரும்பாலானவை இருக்கின்றன. ஆனால் அவ்வாறு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் விரும்பக்கூடிய பொருளை தயாரித்து விற்க நினைப்பவர்களுக்கு சாக்லேட் விற்பனை தொழில் முக்கியமான வணிகமாக அமைகிறது. தனியார் நிறுவனம் ஒன்றால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி ஓர் ஆண்டிற்கு சுமார் 3000 டன் சாக்லேட் உட்கொள்ளப்படுகிறது. இவ்வளவு பெரிய எண்ணிக்கை வர்த்தகத்தை கொண்ட வணிகத்தை நீங்களும் நடத்த விரும்பினால் ஒரு சில முக்கிய வழிகளை பின்பற்றுவது அவசியம். மிகப்பெரிய தொழிற்சாலை அமைக்காமல் வீட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட சாக்லேட் விற்பனை தொழிலை செய்வதற்கான சில முக்கிய படிநிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1) போட்டியாளர் மற்றும் வணிக வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சி
வீட்டில் சாக்லேட் தயாரித்து விற்பனை செய்ய நினைப்பவராக நீங்கள் இருந்தால் உங்களை சுற்றியுள்ள பகுதிகளை வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் பொருளுக்கு எத்தகைய வரவேற்பு இருக்கிறது என்பதைப் பற்றி சந்தை ஆராய்ச்சி செய்யவேண்டும். உங்கள் பகுதியில் எந்த மாதிரியான சாக்லேட் விற்பனை தொழிற்சாலைகள் இருக்கின்றன மற்றும் எத்தனை சாக்லேட் தயாரிப்பு மற்றும் விற்பனை கூடங்கள் இருக்கின்றன போன்றவற்றை ஆராய்வதன் மூலம் உங்களது எதிர்கால தொழிலுக்கு அமையப்போகும் போட்டியாளர்களை பற்றி நன்கு அறிந்துகொள்ள முடியும். உங்களது எதிர்கால போட்டியாளர்கள் எந்த மாதிரியான சந்தைப்படுத்துதல் திட்டங்களை முன்னிலைப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர முயற்சிக்கிறார்கள் போன்றவற்றை தெரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையிலான சந்தைப்படுத்துதல் திட்டங்களை செயல்படுத்த முடியுமா என்பதை மதிப்பாய்வு செய்வதற்கு ஏதுவாக இருக்கும். எந்தவித செலவும் இல்லாமல் உங்கள் நேரத்தை மட்டும் செலவிட்டு மற்ற தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களை நோட்டம் இடுவதன் மூலம் பல்வேறு பலன்களை தரக்கூடிய முடிவுகளை எடுக்கமுடியும்.
2) என்ன மாதிரியான சாக்லேட்டுகள் தயாரிக்க போகிறீர்கள் என்பதை உறுதி செய்யுங்கள்
சாக்லெட்டுகள் என நாம் பொதுவாக கூறினாலும் சாக்லேட்டுகள் பல்வேறு சுவைகளின் அடிப்படையிலும், சேர்க்கப்படும் மூலப்பொருளின் அடிப்படையிலும் பல்வேறு வகையான விலைகளில் பல்வேறு வடிவங்களில் விற்கப்பட்டு வருகின்றன. பாரம்பரியமான சுவையுள்ள சாக்லேட் மற்றும் மிட்டாய் வகைகள் தயாரித்து விற்பனை செய்யப் போகிறீர்களா அல்லது இன்றைய சூழ்நிலையில் உள்ள சிறார்களை கவரும் வகையில் உள்ள சாக்லெட்டுகளை தயாரித்து விற்பனை செய்யப் போகிறார்களா என்ற முடிவு எடுப்பது முக்கியமாகும். புதுமையான சுவையுடைய சாக்லேட்டுகளை விரும்பி வாங்கும் பல்வேறு குழந்தைகள் இருந்தாலும் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட சாக்லேட் மற்றும் மிட்டாய் பொருட்களை விரும்பி வாங்குவதற்கான ஒரு பகுதி கூட்டமும் இருக்கிறது. எந்த மாதிரியான விலையுள்ள சாக்லெட்டை நீங்கள் தயாரித்து விற்க போகிறீர்கள் என்பதைப் பொருத்தும் உங்களது வாடிக்கையாளர்கள் மாறுபடுவார்கள். இந்தியா போன்ற நாடுகளில் விலை குறைந்த சாக்லேட் அதிக வரவேற்பை பெறும் சூழ்நிலை உள்ளது என்பதை தெரிந்து அதற்கேற்ற வகையில் சாக்லேட் தயாரிப்பு பணியில் ஈடுபடுவது நல்லது.
3) உரிமங்கள் பெறுதல் மற்றும் பதிவு செய்தல்
இந்திய நாட்டின் சட்ட திட்டத்தின்படி பதிவு செய்யப்படாத எந்த ஒரு தொழில் நிறுவனமும் குறிப்பாக உணவு சார்ந்த பொருட்களை தயாரிக்கக் கூடாது என்பதாகும். சாக்லேட் என்பது நேரடி உணவாக உட்கொள்ளக் கூடிய பொருள் என்பதால் அனைத்து விதமான பதிவு சான்றிதழ்களை பெற்ற பிறகே உங்களது சாக்லேட் தயாரிப்பு மற்றும் பணியில் ஈடுபட முடியும்.
-
a) எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ
சாக்லேட் என்பது நேரடி உணவு பொருளாக இருப்பதால் இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சான்றிதழ் கண்டிப்பாக தேவை. இந்த ஆணையத்தில் உள்ள அதிகாரிகள் உங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் சாக்லேட் பொருட்கள் நல்ல தரமானவைத்தான் என்ற அங்கீகாரத்தை உங்களுக்கு வழங்குவார்கள்.
-
b) நிறுவனத்தின் பெயரை தேர்ந்தெடுங்கள்
சாக்லேட் தயாரிப்பு தொழிலும் ஒரு தயாரிப்பு தொழிற்சாலைக்கான கட்டமைப்பை கொண்டிருப்பதால் உங்கள் சாக்லேட் தயாரிப்பு தொழிலுக்கு யாரும் பயன்படுத்தாத மக்கள் மனதில் எளிதாக பதியக் கூடிய பெயரை தேர்ந்தெடுத்து பதிய வைத்தல் நல்லது. இவ்வாறு உங்களது சாக்லெட் தொழிலை பெயருடன் பதிவு செய்வதால் வேறு யாரும் உங்களது பெயரை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை.
-
c) நகராட்சி உரிமம் பெறுதல் அவசியம்
எந்த ஒரு கடை நடத்தினாலும் வீட்டுத் தயாரிப்பு முறையில் பொருட்களை தயாரித்தாலும் உங்கள் பகுதியில் உள்ள நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு உங்கள் தொழில் பற்றிய பதிவை செய்ய வேண்டும்.
-
d) நிறுவன தன்மையை பதிவு செய்து கொள்ளுங்கள்
சோல் ப்ராப்பர்ட்டிஷிப், பார்ட்னர்ஷிப் ஃபர்ம், பிரைவேட் லிமிடெட், அல்லது லிமிட்டட் லியாபிலிடி பார்ட்னர்ஷிப் ஆக செயல்படுகிறதா என்பதை பொருத்து அதற்கேற்ற நிறுவன லைசென்சை பெற்றுக் கொள்வது முக்கியம். இந்த லைசென்ஸ் மூலம் பல்வேறு அரசாங்க சலுகைகள் மற்றும் உத்தரவாதங்கள் கிடைக்கப்பெறும் என்பதால் எந்த வகையான பிஸினஸ் அடிப்படையில் உங்களது சாக்லேட் தயாரிப்பு நிறுவனம் அமைகிறது என்பதை அறிந்து அதற்கேற்ற லைசன்ஸ் பெற்றுக் கொள்ளுங்கள்.
-
d) வர்த்தக முத்திரை பதிவு செய்யவேண்டும்
உங்களது சாக்லேட் தயாரிப்புக்கான ஒரு லோகோ தயார் செய்து அதை பதிவு செய்வதன் மூலம் மற்ற பிற நிறுவனங்கள் உங்களது லோகோ அமைப்பை பயன்படுத்தாமல் தடை செய்ய முடியும்.
-
e) ஜிஎஸ்டி எண்
குட்ஸ் அண்ட் சர்வீஸ் டேக்ஸ் நம்பர் எனப்படும் ஜிஎஸ்டி எண் அனைத்து விதமான தொழில் நிறுவனங்களுக்கும் தேவை என்பதால் உங்களது சாக்லேட் தயாரிப்பு நிறுவனத்திற்கான நிரந்தர கணக்கு எண்ணை பயன்படுத்தி ஜிஎஸ்டி எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும்.
- f) ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறியீட்டை பெறுவதைப் பற்றி ஆலோசனை செய்க
நீங்கள் தயாரிக்கும் சாக்லேட் தயாரிப்புகளை இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய வாய்ப்புகள் இருந்தால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறியீடு இருந்தால் மட்டுமே செய்ய முடியும் என்பதை தெரிந்து கொள்க.
4) விற்பனை செய்வதற்கான இடம் தேர்ந்தெடுப்பது
உங்களது சாக்லேட் வீட்டில் தயாரிக்கப்பட்டவை ஆக இருந்தாலும் விற்பனை செய்வதற்கு என்று ஒரு வணிக வளாகத்தில் அல்லது மக்கள் போக்குவரத்து அதிகமாக இருக்கக்கூடிய இடத்தில் விற்பனை செய்வதற்கான கடையை தேர்ந்தெடுப்பது நல்லது. நீங்கள் சாக்லெட் பொருட்கள் தயாரிக்கும் இடத்தையும் கடையையும் நல்ல சுகாதார அமைப்புடன் பராமரித்து வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் வீட்டில் சாக்லேட் தயாரிப்பில் ஈடுபடுவதால் செல்லப்பிராணி வளர்ப்பு பற்றிய சிந்தனை இல்லாமல் இருப்பதே நல்லது.
5) உபகரணங்கள் பட்டியலிடுங்கள்
சாக்லேட் தயாரிப்பில் ஈடுபடுவதற்கு சில முக்கிய உபகரணங்கள் ஆரம்ப கட்டத்தில் வாங்க வேண்டிய தேவை இருப்பதால் முழு பட்டியலையும் தயார் செய்து அதற்கு ஏற்றவகையில் குறைவான விலை மற்றும் தரமான பொருளாக வாங்கிக் கொள்ளுங்கள். சாக்லேட்டுகள் தயாரிப்பதற்கான அடுப்பு, பாதுகாப்பாக ஸ்டோர் செய்து வைத்திருக்கும் குளிர்சாதன பெட்டி மற்றும் பேக்கேஜ் செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் எந்திரங்கள் போன்றவை உங்களது பட்டியலில் இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
6) எவ்வளவு முதலீடு இட போகிறீர்கள்
சாக்லேட் தயாரிப்பு மற்றும் விற்பனை தொழிலை பொருத்தவரையில் ஆரம்ப காலகட்டத்தில் குறைந்த முதலீட்டில் நீங்கள் தொடங்கினாலும் உங்களுக்கு கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை முதலீடாக அவ்வப்போது மாற்றி வணிக வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். சாக்லேட் தயாரிப்பிற்கு எவ்வளவு முதலீடு இட போகிறீர்கள், விற்பனை நிலையத்தை உருவாக்குவதற்கு எவ்வளவு முதலீடு இட போகிறீர்கள், சந்தைப்படுத்துதல் நிகழ்வுகளுக்கு எவ்வளவு முதலீடு இட போகிறீர்கள் என்பதை தகுந்தவாறு வரையறுத்துக் கொண்டு அதற்கேற்ற செலவுகளை செய்வதே நல்லது. ஒருவேளை உங்களுக்கு முதலீடாக பணத்தை போட முடியாமல் இருந்தாலும் உங்களது சாக்லேட் தயாரிப்பு மற்றும் விற்பனை அனுபவத்தை வைத்துக்கொண்டு யாரேனும் ஒருவரை பார்ட்னராக சேர்த்து ஒப்பந்தம் இட்டு தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
7) விற்பனை திட்டங்கள் பற்றிய முடிவெடுங்கள்
சாக்லேட் தயாரிப்பு மற்றும் விற்பனை தொழில் வெளியிலிருந்து பார்ப்பதற்கு எளிதாக தோன்றினாலும் உங்களது தயாரிப்பை நல்ல முறையில் விற்பனை செய்வதற்கான திட்டங்கள் இல்லை என்றால் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க நேரிடும். சில்லரை விற்பனை கடைகள் மூலமாக விற்பனை செய்யப் போகிறீர்களா, மொத்த விற்பனை செய்யப் போகிறீர்களா அல்லது ஆன்லைன் வர்த்தகங்கள் மூலமாக விற்பனை செய்யப் போகிறீர்களா என்பதை தெளிவாக ஆலோசித்து முடிவெடுங்கள்.
-
a) சில்லறை விற்பனை
இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்களிப்பை வைக்கக்கூடிய சில்லறை விற்பனை வணிகத்தில் உங்களது சாக்லேட் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக அதிகப்படியான மக்களை சென்றடைவதற்கான வாய்ப்பிருக்கிறது. சில்லறை விற்பனை வணிகமாக உங்களுடைய சாக்லேட் விற்பனை தொழிலை தொடங்குவதன் மூலம் பெரும்பாலான மக்கள் எந்த வகையான சாக்லேட்டில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை எளிதாக கணித்து அதற்கு ஏற்ற வகையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க இயலும்.
-
b) மொத்த விற்பனை
அதிகப்படியான சாக்லெட் பொருட்களை தயாரிக்க ஏதுவான தொழில் நிறுவன அமைப்பு உங்களிடம் இருந்தால் சில்லறை விற்பனை வணிகத்தில் உங்களது விற்பனை இலக்கை எட்டுவது கடினம். ஆதலால் அதற்கு ஏற்ற வகையில் மொத்த விலை கொள்முதல் செய்பவர்களை கண்டறிந்து அவர்களிடம் உங்களது சாக்லேட் பொருட்களை விற்பனை செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம். ஏற்கனவே புகழ்பெற்ற சாக்லேட் விற்பனை இணையத்துடன் கூட்டு வைத்துக் கொண்டு உங்களது சாக்லேட் தயாரிப்பை ஆரம்பித்தால் ஆரம்ப காலகட்டத்தில் வளர்ச்சி அடைவதற்காக நீங்கள் காத்திருக்கும் காலஅளவு குறைந்துவிடும்.
-
c) ஆன்லைன் விற்பனை தளங்கள்
ஸ்விக்கி, சோமடோ போன்ற பல்வேறு வகையான உணவு டெலிவரி செய்யும் செயலிகளை பயன்படுத்தியும் பிக் பாஸ்கட் போன்ற ஆன்லைன் விற்பனை வலைதளங்களை பயன்படுத்தியும் உங்களது சாக்லேட் பொருட்கள் விற்பதற்கான வாய்ப்புகள் இன்றைய காலகட்டத்தில் உருவாகியுள்ளன. பெரும்பாலான மக்கள் இத்தகைய செயலிகளை பயன்படுத்துவதால் உங்களது சாக்லேட் தயாரிப்பின் தொழில் பற்றிய சந்தைப்படுத்துதல் முயற்சிகளுக்கும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்
8) உங்கள் சாக்லேட் தயாரிப்பின் ரகசியத்தை பாதுகாக்க வேண்டும்
இன்றைய சாக்லெட் விற்பனை சந்தையில் விற்கப்படும் ஒவ்வொரு விதமான சாக்லெட்க்கும் ஒவ்வொரு விதமான தனிச்சுவை இருக்கின்றது. இந்த தனிச்சுவையை அந்த சாக்லெட்டில் மட்டுமே கிடைக்கப் பெறுவதால் பல்வேறுவிதமான மக்கள் அந்த பிராண்ட் பெயரை சொல்லி சாக்லேட்டை வாங்கிச் செல்கிறார்கள். இதேபோல் உங்களது சாக்லேட் தயாரிப்பிற்கும் தனி சூத்திரத்தை ஏற்படுத்தி பாதுகாக்கவேண்டும்.