written by | October 11, 2021

விளம்பர நிறுவனம் வணிக திட்டம்

×

Table of Content


மாதிரி திட்ட வரையறை செய்து கொண்டு அட்வர்ட்டைசிங் நிறுவனம் தொடங்கும் வழிமுறைகள்

எந்த ஒரு பொருளுக்கும் விளம்பரம் செய்யப்படாமல் அதன் விற்பனை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படுவதில்லை. அன்றாட வாழ்க்கையில் அரிசி சாப்பாடு முதல் ஓட்டு கேட்கும் அரசியல் கட்சிகள் வரை அனைத்தும் விளம்பர மயமாகவே அமைந்திருக்கின்றன. ஏராளமான தொழில்கள் மற்றும் வர்த்தக கட்டமைப்புகள் ஆகியவை பரபரப்பாக இயங்கி வரக்கூடிய இன்றைய சூழலில் எந்த ஒரு நிறுவனத்துக்கும் விளம்பரம் என்பது மிகவும் அவசியமானது.  அதன்மூலமே டார்கெட் ஆடியன்ஸ் அல்லது பொதுமக்களிடம் ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகள் குறித்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.  அதன்மூலம் விற்பனை அளவை அதிகரித்து வர்த்தக வளர்ச்சியை  பெறுவது என்ற செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. நிறுவனம் குறித்த விளம்பரங்கள் மக்களை சென்று சேரும் வகையில் இருக்க வேண்டும் அதனால் அந்தப் பொறுப்பை ஒரு திறமை வாய்ந்த அட்வர்டைசிங் ஏஜென்சி மூலம் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் தொழில் முனைவோர்களுக்கும் பிரிண்ட் மீடியா மற்றும் விஷுவல் மீடியா ஆகிய அமைப்புகளுக்கு இடையில் விளம்பர ஏஜென்சிகள் ஒரு பாலமாக செயல்படுவதுடன், அவர்களுக்கான விளம்பர கட்டணங்களையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

ஒரு விளம்பர நிறுவனம் என்பது சந்தைப்படுத்தப்படும் ஒரு நுகர்பொருளின் தரத்திற்கேற்ப பொதுமக்களிடையே அதை எவ்வாறு அறிமுகம் செய்வது மற்றும் விற்பனைக்கு வைப்பது என்ற பல்வேறு தகவல்களை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு தெளிவாக எடுத்துக் கூறும். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட நுகர்பொருளுக்கான விளம்பரங்களை வடிவமைத்து அவற்றை மனம் கவரும் வகையில் ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும்.  இந்த முயற்சியை சட்டப்படி அங்கீகாரம் செய்வதற்கு ஏற்ப இந்திய விளம்பர முகவர் சங்கம் 1945-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய விளம்பரக் கழகம்  அதாவது  இந்தியன் கவுன்சில் ஆப் அட்வர்டைஸ்மென்ட்  என்ற அமைப்பானது விளம்பரம் பற்றிய அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி  வருகிறது. மேலும்,  ஏ.பி.சி  என்று குறிப்பிடப்படும்  ஆடிட் பீரோ ஆப் சர்குலேஷன்  என்ற அமைப்பும்  நாளிதழ்கள் மற்றும் இதர வகையிலான இதழ்களுக்கும், விளம்பரம் செய்வோருக்கும் இடையே  ஒரு பாலமாக  செயல்பட்டு வருகிறது. இந்திய விளம்பரக் கழகம் மூலம் மத்திய அரசு விளம்பரங்கள் அளிக்கப்படுகின்றன. மக்கள் தொடர்புத் துறை மூலம் மாநில அரசு விளம்பரங்களை  அளித்து வருகிறது.

எந்த ஒரு வியாபார நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்திச் செல்வதற்கு சரியான திட்டமிடல் என்பது அவசியமானது. அதன் அடிப்படையில் அட்வர்டைசிங் ஏஜென்சி பிசினஸ் பிளான் என்ற செயல்திட்ட வரையறையை  எவ்வாறு துல்லியமாக மேற்கொள்வது என்பது பற்றிய நெறிமுறைகளை இங்கே  பார்க்கலாம்.

  • முதலாவது பாயிண்டாக நடைமுறைக்கு ஏற்ப தொழிலுக்கான செயல் திட்டத்தை தெளிவாக வரையறை செய்து கொள்ள வேண்டும். அதில் தொழிலுக்கான அனைத்து விதமான அடிப்படை விஷயங்களும் உள்ளடங்கி இருக்க வேண்டும். ஒரு வாடிக்கையாளரை அணுகும் பொழுது கடந்த காலங்களில்  செய்யப்பட்ட வெற்றிகரமான விளம்பரங்கள் அல்லது பொதுமக்களை எளிதாக சென்று சேர்வதற்கான விளம்பர யுக்திகள் ஆகியவற்றுடன் எப்போதும் வாடிக்கையாளர்களை அணுக வேண்டும்.
  • இரண்டாவது பாயிண்டாக எந்த ஒரு தொழில் முனைவோராக இருந்தாலும், வரையறை செய்யப்பட்ட திட்ட நடவடிக்கைகளை, அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொண்டு லட்சியத்தை அடையக்கூடிய மன உறுதி கொண்டவராக இருப்பது அவசியமான தகுதியாகும். குறிப்பாக அலுவலக நேரத்தில் மட்டுமே தொழில்ரீதியாக சிந்திப்பது என்ற முறை அவ்வளவு பொருத்தமாக இருக்காது.  அவுட் ஆப் த பாக்ஸ் என்ற விதிமுறைப்படி 24 மணி நேரமும் தொழில்ரீதியான அணுகுமுறைகளை சிந்திக்கும் வழக்கம் கொண்டவர்கள் வெற்றியை எட்டிப் பிடிக்கிறார்கள். மேலும்,  தொழிலில் அறிமுகமாகும் அதிநவீன தொழில்நுட்ப விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
  • அட்வர்டைசிங் ஏஜென்சி பிசினஸ் பிளான் சம்பந்தமான மூன்றாவது பாயிண்ட் என்பது பிசினஸ் சம்பந்தமான தொழில்நுட்ப திறன்கள் நிறுவனத்தின் தலைவருக்கு அவசியம் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் திருப்திகரமான நிலை எட்டப்படாவிட்டால், அதற்கேற்ப சரியான நபர்களின் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை பெறுவது அத்தியாவசியம். ஏனென்றால் வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட விளம்பர ஏஜென்சி மூலம் விளம்பரங்களை  வெளியிடுவதன் மூலம் பொதுமக்களிடம் அவர்களது தயாரிப்பு சிறந்த முறையில் சென்றடையும் என்ற ஒரு மார்க்கெட் சென்டிமென்ட் மறைமுகமாக இருந்து வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • நான்காவதாக, நிர்வாக ரீதியான அடிப்படை அறிவு, பொருளாதார ரீதியாக முடிவெடுக்கும் திறன், ஒரு நிறுவனத்தின் வரவு, செலவு மற்றும் சந்தை நிலவரங்களை கணக்கெடுத்து செயல்படக்கூடிய பகுத்தாய்வு திறன் ஆகிய திறமைகள் நிறுவன செயல்பாட்டாளர்களுக்கு மிகவும் முக்கியம். குறிப்பாக இந்த விஷயங்கள் சம்பந்தமாகவும் தகுந்த நபர்களிடம் தேவையான ஆலோசனைகளை மற்றும் அறிவுரைகளை பெற்றுக்கொள்வது தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. ஏனென்றால் மற்ற விளம்பர  நிறுவனங்களிடமிருந்து ஒரு நிறுவனத்தை வேறுபடுத்திக் காட்டுவது திறமையான ஊழியர்களிடம் வெளிப்படக்கூடிய செயல் திறன்  ஆகும். 

மேற்கண்ட நான்கு முக்கியமான விதிமுறைகளின் கீழ் ஒரு தொழில் முனைவோர் ஏன் அந்த தொழிலை செய்கிறார் என்பதற்கான அடிப்படையான காரணங்களை உணர்ந்திருக்க வேண்டும். அதாவது, சுய விருப்பத்துடன் வெற்றிபெறும் மனநிலையுடன் தொழில் முயற்சி தொடங்கப்பட்டு இருப்பதை அவர் தெளிவாக உணர்ந்திருக்க வேண்டும். மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக  கையிலுள்ள மூலதனத்தை முதலீடாக போட்டு நாமும் செய்வோம் என்ற மனநிலையில், அட்வர்டைசிங்  ஏஜென்சி  பிசினஸ் பிளான்  வரையறை செய்து, தொழிலில் இறங்குவது நிச்சய வெற்றிக்கு வழிவகுக்காது. இந்த கருத்தை விளம்பர துறையில் பல ஆண்டு காலம் அனுபவம் பெற்ற வல்லுனர்கள் தெரிவித்திருக்கிரார்கள்.

அட்வர்டைசிங் ஏஜென்சி பிசினஸ் பிளான் அடிப்படையில் வணிக வளர்ச்சிக்கான கணிப்புகள், வர்த்தக ரீதியான பொருளாதார முதலீடு, தெளிவான வரையறை செய்யப்பட்ட லாப, நஷ்ட கணக்கு ஆகிய நிலைகளில் உத்தேச மதிப்பீடு எதுவும் இல்லாமல்  செயல்படுவது தொழில் வெற்றியை அளிக்காது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், அட்வர்டைசிங் ஏஜென்சி பிசினஸ் பிளான் என்பது அதன் அடிப்படையில் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறக்கூடிய சேவை கட்டண திட்டம், வர்த்தக ரீதியாக நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் வியாபார ரீதியாக நிறுவனத்தை ஆரம்பித்து நடத்துவதற்கான சகலவிதமான வாய்ப்புகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

மேலும்

  • தொழிலை மேற்கொள்வதற்கான திட்ட வரையறை
  • தொழில் தொடங்குவதற்கு  எதிர்பார்க்கப்படும் பொருளாதார அடிப்படை
  • வாடிக்கையாளருக்கு அளிக்கக்கூடிய அனைத்து விதமான சேவைகள் பற்றிய விளக்கம்
  • அடுத்து வரக்கூடிய ஐந்து ஆண்டுகளுக்கான தொழில்ரீதியான வரவு, செலவு கணக்கு மற்றும் எதிர்பார்க்கக்கூடிய வளர்ச்சி அல்லது உருவாகலாம் என்று எதிர்நோக்கக்கூடிய சிக்கல்களுக்கான காரணிகள்
  • நிர்வாக நடைமுறைக்கான  சுருக்க விவரங்கள்
  • தொடர்ந்து தொழிலை நடத்துவதற்கான  வியூக முறையுடன் கூடிய திட்டமிடல்
  • இறுதியாக தொழிலை தொடர்ந்து செய்ய முடியும் அல்லது இயலாது என்பதற்கான தீர்மானம்

ஆகிய பல்வேறு விதிமுறைகளின் அடிப்படையில் திட்ட வரையறையை வகுத்துக் கொள்ளலாம். 

அட்வர்டைசிங் ஏஜென்சி பிசினஸ் பிளான் நடைமுறைப்படுத்தும் செயல் திட்டத்தை கீழ்கண்ட நிலைகளில் விரிவாக தீர்மானம் செய்து கொள்ளலாம்.

எக்ஸிக்யூடிவ் சம்மரி

ஒரு விளம்பர நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கக்கூடிய சேவைகள் பற்றிய முழுமையான தகவல், நிறுவனத்திற்கு தேவையான பொருளாதார அடிப்படைகள்,  நிறுவனத்தின் அடிப்படையான செயல்திட்டம், பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் நிர்வாக குழு பற்றிய சகல விவரங்கள், நிறுவனம் செயல்படும் முறைக்கு ஏற்ப எதிர்பார்க்கப்படும் வருமானம், அதன் அடிப்படையில் நிகர லாபம், செலுத்தப்படும் வரி போன்ற நிலைகளுக்கேற்ப ஏற்ப நிறுவனத்தின் வளர்ச்சி துல்லியமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

கம்பெனி அண்ட்  பைனான்ஸிங் ரிவியூ

இந்த பிரிவில் தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்தின் பெயர், முதன்மை நடைமுறை மூலதனம்,  வர்த்தக வளர்ச்சிக்கு ஏற்ற பொருளாதார செலவினங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான முதலீடுகள், நிர்வாக செலவுகள் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும். நிறுவனத்தின் ஆரம்ப நிலையில் கட்டண விஷயங்கள் மற்றும் கட்டண விஷயங்களில் வாடிக்கையாளர்கள் செய்யக்கூடிய தாமதம் ஆகியவற்றில் நிச்சயம் உணர்ச்சிவயப்பட்ட முடிவுகளை எடுக்கக்கூடாது. 

மேனேஜரியல் பிளான் அண்ட் ஸ்டாஃப் சம்மரி

இந்த தலைப்பின் கீழ் நிறுவன தலைவரில் ஆரம்பித்து, பல்வேறு படிநிலைகளைக்கு ஏற்ப பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் அனைத்து ஊழியர்கள் பற்றிய விபரங்கள்,  நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளும் இதர துறை நிபுணர்கள், ஒட்டுமொத்த சம்பள செலவுகள், நிர்வாகக் குழுவின் செயல்திறன், அவர்களுடைய கல்வித்தகுதி மற்றும் நிர்வாகத் திறமை ஆகிய விபரங்களை இந்த தலைப்பில் பதிவு செய்ய வேண்டும்.எந்த ஒரு அலுவலகமாக இருந்தாலும் அங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு தனிப்பட்ட திறமைகள் இருக்கக்கூடும். ஒரு திறமையான நிர்வாகி என்பவர் குறிப்பிட்ட ஊழியர்களின் தனித்தன்மையை பிசினஸ் வெற்றியாக மாற்றக்கூடிய வித்தையை அறிந்திருப்பார்.

புராடக்ட் மற்றும் சர்வீசஸ்

இந்த தலைப்பின் கீழ் வாடிக்கையாளர்கள் கவனத்தை கவரும் வகையில் விளம்பரங்கள் எவ்வாறு பிரசன்ட் செய்யப்படுகிறது, அவர்களுக்கு எந்த வகையிலான சேவைகள் அளிக்கப்படுகின்றன,  மார்க்கெட்டிங் செயல் திட்டங்கள், கிராபிக்ஸ் டிசைனிங் சர்வீஸ் உள்ளிட்ட சேவைகள் குறிப்பிடப்பட வேண்டும். 

ஸ்ட்ராடஜிக்  அண்ட் இண்டஸ்ட்ரி அசஸ்மெண்ட்

இந்த தலைப்பின் கீழ் மக்களின் பொருளாதார நிலவரம், சந்தை நிலவரம் ஆய்வு, எந்த வகையான வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை அளிப்பது, மொத்த மக்கள்தொகை,  அவர்களுடைய கல்வி நிலை, வியாபார போட்டிகள்,  சக போட்டியாளர்களுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கும் சந்தைப்படுத்தலில் உள்ள நடைமுறை வித்தியாசங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட வேண்டும்.

மார்க்கெட்டிங் பிளான்

இந்த பிரிவு தொழில்ரீதியாக வெற்றி பெறுவதற்கான அனைத்து வித சாத்தியக்கூறுகள், சந்தைப்படுத்தல் இலக்குகள், தொழிலை மேம்படுத்துவதற்கான திட்ட நடவடிக்கைகள், உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதற்கான விளம்பரங்கள் அளிப்பது, நிறுவனம் எந்தெந்த வகைகளில் சேவைகளை அளிக்கிறது மற்றும் அதற்காக பெறப்படும் கட்டணங்கள் ஆகியவை இந்த பிரிவில் குறிப்பிடப்பட வேண்டும். வர்த்தகரீதியாக லாபகரமான விளம்பரங்களை  அளிக்கக்கூடிய நிறுவனங்களின் தலைவர்களுடன் நிச்சயம் நல்ல உறவு முறையை பேண வேண்டும். 

வருடாந்திர திட்டம்

இந்த பிரிவின் கீழ் ஆண்டு முழுவதும் பெறப்பட்ட வருமானம், வங்கி கடன் மற்றும் அதற்கான வட்ட,. சந்தை மாற்றங்களுக்கேற்ப மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள், வரவு, செலவு மற்றும் லாப, நஷ்ட கணக்கீடுகள், அரசுக்கு செலுத்த வேண்டிய வரி இனங்கள், மாதாந்திர மற்றும் வருடாந்திர நிறுவன வளர்ச்சி விகிதங்கள், வருங்காலத்தில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார ஆதாயங்கள் ஆகியவை இந்த பிரிவில் இடம்பெறும்.

மேற்கண்ட விதத்தில் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக உள்ள சகலவிதமான செயல்திட்ட  நடவடிக்கைகளுக்கான வியூகங்களை வரையறை செய்து அதில் கூடுதல் தகவல்கள் சேர்க்கப்படுவது அல்லது தேவையற்ற தகவல்களை நீக்கம் செய்வது ஆகிய முடிவுகளை தீர்மானம் செய்து இறுதியான திட்ட நடவடிக்கையை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

மேலே கண்ட அட்வர்டைசிங் ஏஜென்சி பிசினஸ் பிளான் அடிப்படையில் ஒரு விளம்பர ஏஜென்சியை தொடங்கும் தொழில் முனைவோர் நிறுவனம் சார்பாக வெப்சைட் ஒன்றை தொடங்க வேண்டும். அந்த வெப்சைட்  டிசைன் என்பது வாடிக்கையாளர்கள் கவனத்தை ஈர்ப்பதாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக சம்பந்தப்பட்ட நிறுவனம் மேற்கொள்ள கூடிய அனைத்து விதமான நவீன தொழில்நுட்ப அடிப்படைகளையும் அந்த வெப்சைட் வாடிக்கையாளருக்கு எடுத்துச் செல்வதாக இருக்க வேண்டும். அதேசமயம் வாடிக்கையாளர் எளிமையாக விளம்பர நிறுவனத்தை அணுகும் வகையில் காண்டாக்ட் டீடைல்ஸ் அமைந்திருக்க வேண்டும். காரணம் ஒரு விளம்பர ஏஜென்சியும்  அதற்கான விளம்பரத்தை செய்து கொண்டாக வேண்டும். 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.