written by | October 11, 2021

ஆலோசனை வணிக திட்டம்

×

Table of Content


கன்சல்டிங் பிஸினஸ் பிளான் நிர்ணயம் மற்றும் தொழில் முயற்சிக்கான நெறிமுறைகள்

தொழில் முனைவோர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் வேலை வாய்ப்புகளை  தேடிச் செல்வதை விடவும் நாமே ஒரு வேலை அல்லது தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்வதே சிறந்தது என்று மிகப்பெரும் ஆளுமைகள் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் கூறியது ஒரு தனி மனிதருடைய தன்னம்பிக்கையை தூண்டுவது என்ற அளவில் எடுத்துக் கொள்ளக்கூடாது. சமூக அளவில் சுய தொழில் முனைவோர்கள் அதிகரிக்க வேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையில் அந்தக் கருத்து வெளிப்படுத்தப்பட்டது.  இந்திய அளவில் ஒரு வேடிக்கையான கருத்து உண்டு. அதாவது அறிவுரை சொல்ல ஆயிரம் பேர் உண்டு. ஆனால், காரியம் ஆற்ற ஒருவருமில்லை என்ற சொல்வழக்கு மிகவும் ஆழமான அர்த்தம் கொண்டதாகும். ஒருவகையில் கன்சல்டிங் என்று சொல்லப்படும் ஆலோசனை அளிக்கக்கூடிய தொழிலுக்கு அந்த மனோபாவம் அடிப்படையான தேவையாகக்கூட இருக்கலாம்.

வாய்ப்புகள் ஏராளம்

கன்சல்டிங் பிசினஸ் பிளான் வரையறை செய்துகொண்டு, தொழில் தொடங்கும் வகையில் தற்போதைய காலகட்டத்தில்  ஏராளமான தொழில்கள் உலகமெங்கும் செய்யப்படுகின்றன. அதாவது குறிப்பிட்ட ஒரு துறையில்  படித்து  பல்கலைக்கழக அளவில் சிறப்பான பட்டம் பெற்று இருந்தாலும் கூட, தொழில் முயற்சி என்று வரும்பொழுது சம்பந்தப்பட்டவர் அதன் நடைமுறை சார்ந்த செயல் திட்டங்களில் தீர்மானமான அணுகுமுறையுடன் செயல்பட முடிவதில்லை. காரணம் பல்வேறு சமூக அளவிலான சிக்கல்கள், குறிப்பாக இந்த துறையில் பெண்கள் பல சிரமங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கலாம். மேலும், நிறுவன அமைப்பு ரீதியான சட்ட, திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களின் அடிப்படையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும். அதற்கு ஏற்ப, குறிப்பிட்ட துறையில் செய்யப்படும் தொழில் முயற்சியை அரசின் சட்ட திட்டங்களுக்கு ஏற்பவும், சமூக மற்றும் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் செய்து முடிக்க மிகச்சரியான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் அவசியமானது. அதன் அடிப்படையில், இந்த துறையில் கால் பதிக்க விரும்புபவர்கள், கன்சல்டிங் பிசினஸ் பிளான் என்ற செயல் திட்டத்தை வரையறை செய்துகொண்டு எவ்வாறு செயல்படுவது என்ற தகவல்களை பார்க்கலாம்.

முதலிலேயே, பார்த்தது போல ஒருவரது  கல்வி மற்றும் அனுபவ அறிவு சார்ந்தும் அல்லது அவருடைய தனிப்பட்ட விசேஷ திறமை அடிப்படையிலும் கன்சல்டிங் தொழில் முனைவோராக செயல்பட முடியும். அதாவது ஒரு பெட்டிக் கடையை எவ்வாறு தொடங்கி வெற்றிகரமாக நடத்துவது என்று ஆரம்பித்து, மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் தொழில்முறை ஆலோசகராக இருப்பது வரை  மிக விசாலமான அறிவு சார்ந்த  துறையாக கன்சல்டிங் பிசினஸ் உள்ளது 

தொழில் நடவடிக்கைகள்,  வர்த்தக பரிவர்த்தனைகள்,  ஆயுள் காப்பீடு,  உடல்நலம்,  மனநலம்,  தனிமனித சேமிப்பு,  பெருநிறுவனங்களின் காசு கட்டுப்பாடு மற்றும் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா, ஆன்மீகம், யோகா, ஜோதிடம்,  வாஸ்து, வருமான வரி, மேற்படிப்பு, ஸ்டாக் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகள், ஜி.எஸ்.டி வரி ஆலோசனை உள்ளிட்ட ஏராளமான தளங்களில் ஒருவர் தனக்கான கன்சல்டிங் பிசினஸ் பிளான் செயல்திட்டத்தை வரையறை செய்துகொண்டு தனது திறமையை நிரூபிக்க வேண்டும்.

தொழில் ரீதியாக தொடங்கும்போது தனி ஒருவராக இருந்தால் சோல் புரோப்ரைடர்ஷிப் முறையில் தொடங்கலாம். லிமிட்டட் லையபிலிடி  பார்ட்னர்ஷிப்  என்ற முறையில்  தொடங்குவதாக இருந்தால் குறைந்தபட்சம் இரண்டு தொழில் பங்குதாரர்கள் தேவைப்படுவார்கள்.  நிறுவனம்  மற்றும் அதன் லோகோ  ஆகியவற்றை டிரேட் மார்க் ரிஜிஸ்ட்ரேஷன் செய்துகொள்வது  எதிர்கால சிக்கல்களை தவிர்ப்பதற்கு உதவியாக இருக்கும்.  ஏனென்றால், தொழில் ரீதியான போட்டி என்று வரும்பொழுது ஒருவர் எப்படிப்பட்ட சிக்கல்களை சந்திக்க நேரும் என்று சொல்ல இயலாது. அதனால், கம்பெனிகள் பதிவு சட்டம் 1956-ன் கீழ் லோகோ மற்றும் நிறுவனத்தின் பெயர் பதிவு ஆகியவற்றை செய்து கொள்வது வெற்றிக்கான முதல் வழியாகும்.

அங்கீகாரம் அவசியம்

எந்த  ஒரு தொழில் முயற்சியாக இருந்தாலும்  அதனை செயல்படுத்தும் நடைமுறை சட்டதிட்டங்களுக்கு ஏற்ப அரசின் அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டியது கட்டாயம். கன்சல்டிங் என்ற ஆலோசனை அளிக்கும் இந்த தொழில் பிரிவுக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அரசு அமைப்புகள் அல்லது உயர்மட்ட குழு ஆகியவை அளிக்கும் சான்றிதழ் அல்லது அங்கீகாரம் அவசியமானது. மேலும், ஒரு குறிப்பிட்ட துறையில் பணியாற்றி வருபவர்கள் பகுதிநேர தொழிலாக இந்த ஆலோசனை பிசினசை மேற்கொண்டு வருவதும் உண்டு. பெரும்பாலும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களை இத்தகைய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது உண்டு. அரசுத்துறையில் பணியாற்றுவோருக்கு இந்த வாய்ப்பு அறவே கிடையாது.

உதாரணமாக. தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த ஆலோசனை அளிப்பவர்கள் அந்த துறை சார்ந்த உயர்மட்ட அமைப்புகளிடமிருந்து லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். நிறுவனங்களுக்கான கணக்கு, வழக்குகளுக்கான தணிக்கை அல்லது கன்சல்டிங் செய்பவர்கள் இந்திய தணிக்கை ஆணையத்திடம் இருந்து முறையான உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஆயுள் காப்பீடு சம்பந்தமாக ஆலோசனை அளிப்பவர்கள் ஐ.ஆர்.டி.ஏ அமைப்பிலிருந்து பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.  ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறை சார்ந்த கன்சல்டிங் பிசினஸ் செய்பவர்கள் அதற்குரிய இம்போட்- எக்ஸ்போர்ட் கோட் பதிவு பெற்றிருக்க வேண்டும். உணவுத்துறை அல்லது உணவகங்கள் சார்ந்த தொழிலுக்கு ஆலோசனை அளிப்பவர்கள் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ அமைப்பிடம் இருந்து சான்று பெற்றிருக்க வேண்டும்.  பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றவர்கள் தனியார் சேவை நிறுவனங்களுக்கு நிதி ஆதாரங்களை பெறும் வகையில்  ஃபண்ட் ரைசிங் கன்சல்டன்ஸி மூலம் ஆலோசனைகளை அளிக்கலாம். மேலும்,  அக்கவுண்டிங், அட்வர்டைசிங், ஆடிட்டிங், பிசினஸ், கேரியர் கவுன்சிலிங், மனிதவள மேம்பாடு, வரிகள் ஆகிய துறைகளிலும் கல்வி மற்றும் அனுபவம் பெற்றவர்கள் தங்களுடைய கன்சல்டிங் பிசினஸ் பிளான் செயல்திட்ட நடைமுறையை சுலபமாக வகுத்து அதன்படி தொழிலை மேற்கொள்ளலாம். 

  • ஜோதிடம் அல்லது வாஸ்து சாஸ்திரம் சம்பந்தமாக ஆலோசனை அளிப்பவர்கள் பல்கலைக்கழக பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது இந்திய அளவில் அல்லது சர்வதேச நிலையில் உள்ள ஜோதிட அமைப்புகளில் தகுதி சான்றிதழ் பெற்றிருப்பதும் அவசியம். யோகா மற்றும் சித்தா முறையில் ஆலோசனை அளிப்பவர்கள் அதற்கேற்ற பல்கலைக்கழக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கல்வித்துறை ரீதியாக மேல் படிப்பு அல்லது அரசு தேர்வுகளுக்கான கன்சல்டிங் செய்பவர்கள் நிச்சயம் சம்பந்தப்பட்ட துறை ரீதியான கல்வியியல் பட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும். கணினி சம்பந்தமான கல்வி மற்றும் அனுபவம் பெற்றவர்கள் சாப்ட்வேர் அல்லது ஹார்டுவேர் என்ற இரு பெரும் பிரிவுகளில் தொழில்முறை ஆலோசனை மற்றும் சேவைகள் அளிக்கலாம். ஒருவர் எந்த துறையில் கன்சல்டிங் பிசினஸ் செய்கிறாரோ அந்தத்துறையில் நிச்சயம் கல்வி மற்றும் அனுபவ அறிவு பெற்றிருக்க வேண்டும்.
  • கன்சல்டிங் பிசினஸ் பிளான் என்ற வரையறையின்படி அடுத்து கவனத்தில் கொள்ள வேண்டியது ஜி.எஸ்.டி பதிவு ஆகும். ஆலோசனை அடிப்படையில் பிறருக்கு சேவை அளித்து அதற்குரிய கட்டணத்தை  வருமானமாக பெறுகிறோம் என்ற அடிப்படையில் வரையறைக்கு உட்பட்ட  பண பரிமாற்றங்களுக்கு வருமான வரி செலுத்துவது மட்டும் போதுமானதாக இருக்கும். குறிப்பிட்ட வரையறையை தாண்டிய நிலையில் பண பரிமாற்றங்கள் இருக்கும் பொழுது அதற்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பு எண் பெற வேண்டியது அவசியம். குறிப்பாக, வங்கி நடவடிக்கைகளுக்காக தனிப்பட்ட அக்கவுண்ட் தேவைப்படுமா அல்லது நிறுவனத்தின் உரிமையாளரின் வங்கிக் கணக்கே போதுமானதா என்பதையும் முடிவு செய்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் கன்சல்டிங் பிஸினஸ் பிளான் செய்பவர்களுக்கே ஒரு கன்சல்டிங் தேவைப்படக்கூடும்.
  • முதன்முதலாக கன்சல்டிங் பிசினஸ் தொழிலில் தன்னந்தனியாக கால் பதிப்பவர்கள் ஒரு சிறிய  அலுவலக அறையில் தங்களுடைய முயற்சியை செய்ய வேண்டியதாக இருக்கலாம். ஆனால், அந்த நிலையில் இருந்துதான் படிப்படியாக வளர்ந்து, அதை பல்வேறு நபர்கள் பணிபுரியும் ஒரு நிறுவனமாக மாற்ற முடியும். அதனால், கன்சல்டிங் பிசினஸ் பிளான் என்ற செயல்திட்டம் வெகு துல்லியமாக வரையறை செய்யப்பட வேண்டும்.
  • தங்களுக்கான வாடிக்கையாளர்கள் யார் என்பதை சரியாக முடிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கான விளம்பரங்களை பிரிண்ட் மீடியா, டிஜிட்டல் மீடியா மற்றும் விஷுவல் மீடியா ஆகிய முறைகளில் செய்ய வேண்டும். தொடக்க காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு  தவிர்க்க இயலாமல் குறைவான கட்டணத்தில் கன்சல்டிங் செய்ய வேண்டியதாக இருக்கலாம்.  பின்னர் படிப்படியாகத்தான் கட்டண விகிதங்களில் கறாராக நடந்து கொள்ள முடியும்.  குறிப்பாக கட்டணம் விஷயத்தில் இதர கன்சல்டன்ஸி அலுவலகங்களில் பெறப்படும் பீஸ் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலான  கன்சல்டன்சி முறைகள் நேர அடிப்படையில் கட்டணங்களை பெறுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.
  • கன்சல்டிங் பிசினஸ் பிளான் என்ற முறையில் பதிவு செய்து கொள்ளவேண்டிய முக்கியமான திறன் சார்ந்த விஷயங்கள் சில இருக்கின்றன.  அதாவது ஒரு கன்சல்டன்ட் பெற்றுள்ள அனுபவத்தின்  அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படலாம். குறிப்பிட்ட ஒரு தொழிலில் எவ்விதமான எதிர்கால சிக்கல்கள்  வரலாம் மற்றும் அவற்றை எவ்வாறு தீர்க்கலாம் என்பதற்கான ஆலோசனை கேட்கப்படலாம்.  பொதுவான வழிமுறைகள் மற்றும் வரையறைகள் பற்றிய ஆலோசனைகளுக்காக அணுகப்பட லாம். அதனால் ஒரு கன்சல்டிங் என்பவர் சமூக அளவில் மதிப்பு பெற்றவராக தன்னை மாற்றிக் கொள்வது அவசியம்.
  • தொழிலை தன்னுடைய வீட்டிலிருந்து செய்வதா அல்லது தனிப்பட்ட அலுவலகம்  தேவையா என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். வீட்டிலிருந்து கன்சல்டிங் பிசினஸ் செய்வது என்றால் தனிப்பட்ட ஒரு அறையில் அழகான பர்னிச்சர் வகைகள், கம்ப்யூட்டர்  வசதி,  இன்டர்நெட் இணைப்பு, ஒரு பிரிண்டர் உள்ளிட்ட  அவசியமான உள்கட்டமைப்புகளை செய்திருக்க வேண்டும்.  தனிப்பட்ட அலுவலகம் என்றால் அதற்கு ஏற்ப இன்டீரியர் டெகரேட்டர்கள்  மூலமாக  அலுவலக கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.  அலுவலகம் என்ற நிலையில் சரியான இடம் தேர்வு செய்யப்படுவது மிக முக்கியம்.

உதவியாளர் அவசியம் 

கன்சல்டிங் பிசினஸ் பிளான் என்ற செயல் திட்டத்தில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வீட்டிலேயே  அலுவலகத்தை ஆரம்பித்து நடத்தினாலும் சரி அல்லது தனிப்பட்ட ஒரு இடத்தில் அலுவலகத்தை ஆரம்பித்து நடத்தினாலும் சரி அங்கு நிச்சயம் அலுவலக உதவியாளர் தேவை.  ஏனென்றால் வரக்கூடிய போன் கால்களுக்கு சரியான பதில் அளிக்க வேண்டும்,  வாடிக்கையாளர்களுக்கு சரியான அப்பாயின்மென்ட் நேரம் அளிக்க வேண்டும்,  மின்னஞ்சல்களை கவனித்து தகுந்த பதில்கள் அனுப்ப வேண்டும். மேலும், வழக்கமான அலுவலக நடவடிக்கைகளையும் கவனிக்க வேண்டும்.  இந்த பணிகளை  கச்சிதமாக செய்வதற்கு பொருத்தமான  மற்றும் நம்பிக்கைக்குரிய நபர்களை நபர்களை  தேர்ந்தெடுத்து பணியமர்த்துவது முக்கியம்.  காரணம் அலுவலகத்தில் கன்சல்டன்ட் இல்லாத நிலையில் திடீரென வரக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு  தகுந்த பதில் மற்றும் மீண்டும் சந்திப்பதற்கான நேரம் ஆகியவற்றை தக்க விதத்தில் தரவேண்டும்.

முடிந்தவரையில் ஆன்லைன்  மற்றும் டிஜிட்டல் முறையிலான விளம்பரங்களை தருவது நல்லது.  சோசியல் மீடியா என்று சொல்லப்படும் ஃபேஸ்புக் மட்டும் ட்விட்டர் போன்ற தளங்களில்  கன்சல்டன்ஸி பற்றிய தகவல்களை தொடர்ந்து அளித்து வரவேண்டும். இதுவரை பார்த்த அனைத்து தகவல்களையும் கன்சல்டிங் பிசினஸ் பிளான் உள்ளடக்கமாக கொண்டிருப்பது அவசியம். அதன் அடிப்படையில் வெற்றி என்பது திட்டமிட்டு பெற்ற பலனாக இருக்கும்.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.