written by | October 11, 2021

வால்பேப்பர் வணிகம்

×

Table of Content


வால்பேப்பர் பிசினஸ் தொடங்குவதற்கான தொழில்முறை ஆலோசனைகள்

இன்றைய அழகியல் கோட்பாடுகள், மக்கள் மத்தியில் மாற்றம் பெற்றுவிட்டதன் அடிப்படையில் வீடுகளை நவீனமாக அலங்காரம் செய்ய வால் பேப்பர்கள் உதவிகரமாக இருக்கின்றன. மத்தியதர மக்களுக்கு வீடுகளின் உள் அலங்கார பாணியில் அதிநவீன தோற்றத்தை எளிய விலையில் அவை ஏற்படுத்தியிருக்கின்றன. குடும்ப அங்கத்தினர்கள் அனைவரது விருப்பத்திற்கு ஏற்பவும், அவர்களுடைய அறையை அவர்களுடைய எண்ணப்படி வண்ணமயமாக மாற்றிக்கொள்ள வால்பேப்பர் பிசினஸ் தொழில் முனைவோர் மிக உதவியாக இருக்கிறார்கள். அவற்றை பயன்படுத்துவதும் சுலபம். அதேசமயம் அகற்றுவதும் சுலபம். இந்த காரணத்தால் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர் வேறு அழகான வால்பேப்பர் வகையை ஓட்டிக்கொண்டு குறிப்பிட்ட ஒரு அறையை அல்லது வீடுகளை அழகாக காட்சியளிக்கும்படி செய்ய முடியும். 

அறைகளின் சுவர்களில் பூசப்படும் பெயிண்ட் வகைகள் ஒரே விதமாக அமைந்து தோற்றத்தில் அவ்வளவாக கவர்ச்சியை ஏற்படுத்துவதில்லை. ஆனால், ஒரு வீட்டில் உள்ள நான்கு சுவர்களுக்குள் நான்கு விதமான வெவ்வேறு வால்பேப்பர்களை ஒட்டி வித்தியாசமான தோற்றத்தை ஏற்படுத்தலாம். அதற்கு ஏற்ப நவீன வடிவங்களில் கிடைக்கக்கூடிய  3டி  டிஜிட்டல் வால்பேப்பர்களை விருப்பப்படி சுவர்கள் மற்றும் சீலிங் ஆகிய பகுதிகளில் ஒட்டிக் கொள்ளலாம். ‘பாஸ்போ லுமினசென்ஸ்’ என்னும் என்னும் முறையைப் பயன்படுத்தியும் வால்பேப்பர்கள் தயாரிக்கப்படுகின்றன. அவை வெளிச்சத்தில் வண்ண மயமாகவும் இருளில் பிரகாசம் வீசுவதாகவும் செயல்படுகின்றன. 

வால்பேப்பர் வகைகள்

கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்களுக்கு துணையாக செயல்படும் விதத்தில் வால்பேப்பர் வகைகள் அமைந்துள்ளன என்று குறிப்பிடலாம். இவர்களுக்கான வால்பேப்பர் வகைகள், வால் மியூரல், வால்பேப்பர் மற்றும் வால் டாட்டூ என்ற மூன்று விதங்களாக இருக்கின்றன. இவற்றில் அதிநவீன வடிவமான முப்பரிமான டிஜிட்டல் வால்பேப்பர்கள் தற்போது அதிகப்படியான உபயோகத்தில் இருந்து வருகின்றன. இவற்றை ஒட்டப்படும் விதத்தில் ஃபேப்ரிக், வினைல், ஃபோம், நான் – ஓவன் ஆகிய நான்கு முறைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 

வீடுகளில் அல்லது தொழில் நிறுவனங்களில் பயன்படுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் ஏன் வால்பேப்பர் வகைகளை பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது கைக்கு அடக்கமான பட்ஜெட் என்பதாகும். அதாவது குறைந்த செலவில் நிறைவான தரம் என்ற அடிப்படையில் வால்பேப்பர் வகைகள் இன்றைய சூழலில் நடுத்தர மக்களால் விரும்பப்படுகிறது. உயர் நடுத்தர வர்க்க மக்கள் இறக்குமதி செய்யப்பட்ட மேலைநாட்டு வால்பேப்பர்களை தங்கள் விருப்பப்படி பயன்படுத்துகிறார்கள்.

  • பல்வேறு தரங்களில் கிடைக்கக் கூடியதாகவும், நூற்றுக்கணக்கான டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் கிடைப்பதாலும் விரும்பிய வகையில் வாடிக்கையாளர் தனது தேர்வை செய்துகொள்ள முடியும். 
  • விலை குறைவாக இருப்பதுடன் எளிதாக அவற்றை ஒட்டிக் கொள்வது அல்லது அகற்றிவிட்டு வேறொன்றை தேர்வு செய்து ஓட்டுவது ஆகியவை எளிதான விஷயமாகும்.
  • சிலவகை வால்பேப்பர்கள் ஆங்காங்கே பெயிண்டிங் செய்து கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டதாக இருக்கின்றன. அவற்றில் தேவையான இடத்தில் கச்சிதமாக பெயிண்டிங் செய்து அழகாக ஒட்டிக் கொள்ளலாம்.
  • தற்போது அறிமுகமாகி உள்ள வால்பேப்பர் வகைகள் எளிதாக நிறுத்துவதற்கும் சுத்தம் செய்வதற்கும் ஏற்ற வகையில் இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் எளிதாக அவற்றை சுத்தம் செய்து கொள்ள முடியும். 

தொழில் ரீதியாக வால்பேப்பர் பிசினஸ் செய்ய விரும்பும் தொழில் முனைவோர்களுக்கு தேவையான செய்திகள் குறித்து இங்கே பார்க்கலாம். இந்த தொழிலுக்கு சட்ட ரீதியான அனுமதிகள் அனைத்தும் மற்ற தொழில்துறைகளுக்கு உள்ளதுபோலவே பொதுவானவை என்பதால் எளிதாக தொழிலில் இறங்க முடியும். 

வால்பேப்பர் ஏற்றுமதி  மற்றும் இறக்குமதி

இன்டீரியர் டெக்கரேஷன் தொழிலில் நல்ல அனுபவம் பெற்றவர்கள் வீடுகளுக்கு தேவையான விதவிதமான வால்பேப்பர் வகைகளை இறக்குமதி அல்லது ஏற்றுமதி மூலமாக வால்பேப்பர் பிசினஸ் செய்யலாம். இறக்குமதி என்ற நிலையில் அதற்கு பல்வேறுவிதமான கட்டுப்பாடுகள் மற்றும் வர்த்தக ரீதியான வரிவிதிப்புகள் ஆகியவை இருக்கும். ஆனால் ஏற்றுமதி என்ற நிலையில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும் என்பதை தொழில் முனைவோர் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றைய போட்டிகள் நிறைந்த உலகத்தில் சர்வதேச தரத்திற்கு நம்முடைய இந்திய பொருளை விற்பனை செய்ய வேண்டும் என்றால் அதற்கேற்ற தொழில்நுட்ப பயிற்சி மற்றும் தயாரிப்பு யுக்திகள் நிச்சயம் தேவைப்படும். இந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் வர்த்தக வாய்ப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு ஏற்றுமதி நிலவரத்தை சரியாக மதிப்பீடு செய்வதும் அவசியம்.

வால்பேப்பர் இன்ஸ்டாலேஷன்

இந்தப் பிரிவில் அதிகப்படியான முதலீடுகள் எதுவும் இல்லாமலேயே ஒருவர் தொழிலில் இறங்கி வெற்றியாளராக வலம் வர முடியும். வால்பேப்பர் பிசினஸ் தொழிலில் இந்த பிரிவு உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு உள்ளது. குறிப்பாக அலுவலக அறை அல்லது திருமண மண்டபங்கள், விழா மண்டபங்கள் ஆகியவற்றில் பத்து அடிக்கும் மேற்பட்ட நீளம் அகலம் கொண்ட வால்பேப்பர்களை மிகச்சரியாக சுவர்களில் ஒட்டுவதற்கு நிச்சயம் அனுபவம் அவசியம். பெரிய பெரிய வால் பேப்பர்கள் பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும். அவற்றை தகுந்த பகுதிகளை ஒன்றாக இணைத்து தேவையான தோற்றத்தை சுவரில் கொண்டு வரவேண்டும். அதனால் இந்த பிரிவில் டீம் ஒர்க் என்பது மிக மிக அவசியமானது. அதுமட்டுமல்லாமல் துல்லியமான திட்டமிட்ட செயல்பாடு என்பதும் தேவையாகும். 

இந்தப் பிரிவில் இருப்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட ஏரியாவில் உள்ள கட்டிட உள் அலங்கார நிறுவனங்கள் தகுந்த வாய்ப்புகளை அளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் குறிப்பாக சொல்வதென்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட அளவில் அமைந்துள்ள வால்பேப்பர் தயாரிப்பாளர்களிடம் நேரடி தொடர்பு கொண்டவர்களாக இருந்தால் அவர்களும் தொடர்புகொண்டு பணி வாய்ப்புகளை அளிப்பார்கள். அதற்கேற்ப தனிப்பட்ட வாடிக்கையாளர்கள், உள் அலங்கார நிபுணர்கள் மற்றும் வால்பேப்பர் தயாரிப்பாளர்கள் ஆகியவர்களிடம் இந்தப் பிரிவில் உள்ள தொழில்முனைவோர் தங்களுடைய தகவல் தொடர்புக்கான தொலைபேசி எண் அல்லது விசிட்டிங் கார்டு ஆகியவற்றை கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

வால்பேப்பர் மேனுபேக்சரிங்

இந்தத் துறையில் உள்ள மிக முக்கியமான பிரிவு வால்பேப்பர்கள் தயாரிப்பு என்பதாகும். நிச்சயம் பல ஆண்டுகள் இந்தத் துறையில் இருந்து வாடிக்கையாளர்கள் மன எண்ணங்களை மற்றும் சந்தை வாய்ப்புகளை நன்றாக அறிந்தவர்களே வால்பேப்பர் பிசினஸ் தயாரிப்புப் பிரிவில் வெற்றிகரமாக செயல்பட முடியும். குறிப்பாக, கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் மூலம் மிக உயர்ந்த வழிமுறைகளை பயன்படுத்தி இந்த தயாரிப்பில் ஈடுபடுவதன் மூலமே வாடிக்கையாளர்களை கவரலாம். அதன் மூலம் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் சிறந்த தொழில் வாய்ப்புகளை பெறமுடியும்.

வால்பேப்பர் ரீ-செல்லர்

தொழிலின் இந்தப் பிரிவில் ஒரு வெற்றிகரமான தொழில் முனைவோராக செயல்பட வேண்டுமானால் தேசிய அளவில் இருக்கக்கூடிய வால்பேப்பர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் நிறுவனங்களுடன் நல்ல தொடர்பில் இருக்க வேண்டும். விலை மற்றும் தரம் ஆகிய இரண்டு நிலைகளில் வாடிக்கையாளர்கள் மனதை கவரும் வகையிலான தயாரிப்புகளை அறிமுகம் செய்வது மிக முக்கியம். அதுமட்டுமல்லாமல் கஸ்டமர் சர்வீஸ் என்ற வகையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தொழிலின் இந்த பிரிவில் வெற்றி பெற சம்பந்தப்பட்ட மாநில அளவில் உள்ள கட்டிட உள் அலங்கார நிறுவனங்கள் மற்றும் பில்டர்கள் ஆகியோர்களிடம் நேரடி தொடர்பு கொண்டிருக்க வேண்டும். தனிப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் பற்றிய தகவல்களையும் அறிந்து அவர்களுக்கும் வால்பேப்பர் விற்பனை பற்றிய தகவல் சென்று சேரும்படி செயல்பட வேண்டும்.

வால்பேப்பர் ஸ்டோர்

வால்பேப்பர் பிசினஸ் தொழிலின் இந்த பிரிவானது நகரத்தின் பிரதானமான ஒரு பகுதியில் செயல்படக்கூடிய நிறுவனமாகும். இதற்கு ஒரு தொழில்முனைவோர் அது விருப்பத்திற்கு ஏற்ற முதலீடுகளை செய்து கொள்ள முடியும். தொழில் கூட்டாளிகளை இணைத்துக்கொண்டு அவர்களுடைய முதலீடு அல்லது அனுபவம் ஆகியவற்றை பயன்படுத்தி தொழிலை முன்னிலைப்படுத்த முடியும். தனிப்பட்ட ஒரு நிறுவனம் என்ற வகையில் வால்பேப்பர் கலெக்சன்ஸ் என்ற வகையில் இறக்குமதி செய்யப்பட்டவை மற்றும் ஏற்றுமதி தரம் கொண்டவை ஆகிய இரண்டு நிலைகளிலும் வாடிக்கையாளர்கள் உடைய கண்ணையும் கவனத்தையும் கவரும் வகையில் விதவிதமான வால் பேப்பர்களை அழகாக காட்சிப்படுத்தி வைக்கலாம். குறிப்பாக வாடிக்கையாளர்கள் கேட்கக்கூடிய பட்ஜெட்டுக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்ட வால்பேப்பர்களை அவர்களுக்கு அளித்து நிரந்தரமான கஸ்டமர் என்ற நிலையில் அவரை மாற்றிக் கொள்ள முடியும். மேலும், அனுபவம் மிக்க பணியாளர்கள் மூலம் வால்பேப்பர் இன்ஸ்டாலேஷன் உள்ளிட்ட இதர சேவைகளை அளிப்பதும் அவசியமானது. 

உலக நாடுகளின் தயாரிப்பு

சர்வதேச அளவில் பிளாஸ்டிக் டெக்கரேட்டடு வகைகள் உலகத்தின் மொத்த வால்பேப்பர் தேவையில் கிட்டத்தட்ட 75 சதவிகிதத்தை பூர்த்தி செய்கின்றன. அதன்பிறகுதான் இதர அக்ரிலிக் மற்றும் ஆர்டினரி வால்பேப்பர் வகைகள் சந்தையின் தேவையை பூர்த்தி செய்கின்றன. உலக அளவில் சீனா, ஜெர்மனி, இத்தாலி, தென் கொரியா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவை வால்பேப்பர் தயாரிப்பில் பெருமளவு பங்கு வகிக்கின்றன. இந்திய அளவில் இந்த தொழில் நீண்டகாலம் இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வால்பேப்பர்களை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறார்கள். 

இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் ஆன்லைன் மூலம் கிடைக்காத பொருட்களே இல்லை. அந்த வகையில் வால்பேப்பர் வகைகளையும் தேசிய அளவிலான மற்றும் சர்வதேச அளவிலான நிறுவனங்களிடமிருந்து நேரடியாகவே ஆர்டர் அளித்து அவற்றை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் சர்வதேச நிறுவனங்களுக்கு ஆர்டர் அளிப்பதற்கு தனிமனிதர்கள் அல்லது பில்டர்கள் அவர்களுடைய பட்ஜெட் போதுமானதாக இருக்காது. அதனால் அவர்கள் வால்பேப்பர் ஷோரூம் நிறுவனத்தை நாடி வரவேண்டும்.

வால்பேப்பர் தொழிலில் கிராபிக்ஸ் டிசைனிங்

ஆன்லைன் மூலம் அளிக்க முடியாத சேவைகளை ஒரு வால்பேப்பர் பிசினஸ் செய்யும் ஒரு தொழில் முனைவோர் நிச்சயம் அளிக்க முடியும். அதாவது, ஆன்லைன் மூலம் ஒரு வாடிக்கையாளர் தேர்வு செய்த தயாரிப்பை அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை செய்து வீடுகளில் உள்கட்டமைப்புக்கு அழகாக பயன்படுத்த முடியும். இந்த முறையானது நீண்டகாலம் தொழில் அனுபவம் பெற்றவர்களால் மட்டுமே சாத்தியமான ஒன்று. அதற்கேற்ப தற்போதைய கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மிகச் சிறப்பாக வளர்ந்துள்ளதால் கிராபிக்ஸ் டிசைனிங் தொழில் நுட்பம் படித்த மாணவர்களுக்கு இந்த தொழில் தேசிய அளவிலான வேலை வாய்ப்புகளை நிச்சயம் ஏற்படுத்தித் தரும்.

வீடுகள் மட்டுமல்லாமல் அலுவலகங்களை குறிப்பிட்ட ஒரு கருத்தின் அடிப்படையில் உள்கட்டமைப்பு பணிகள் மூலம் அழகாக அமைத்துக்கொள்ள முடியும். வால்பேப்பர் என்பது பக்கவாட்டு சுவர்கள் மற்றும் சீலிங் ஆகியவற்றுக்கு மற்றும் பயன்படக்கூடியது அல்ல. அவற்றை முப்பரிமாண தொழில்நுட்பத்தில் தரை தளங்களுக்கும் பயன்படுத்த முடியும் என்ற நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சி மாற்றம் பெற்றுள்ளது. அதனால், வீடுகள் மட்டுமல்லாமல் அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றையும் அவற்றின் தன்மைகளுக்கு ஏற்ப அழகாக மாற்றம் செய்துகொள்ள முடியும். 

இந்த பணிகளை மேற்கொள்ள கூடிய தொழில் முனைவோர் இரண்டு உட்பிரிவுகளாக செயல்பட வேண்டியது அவசியம். முதலாவது தொழில்நுட்ப பிரிவு. அதாவது வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப புதிய புதிய டிசைன்களை உருவாக்குவது. இரண்டாவது தயாரிக்கப்பட்ட வால்பேப்பர் வகைகளை சம்பந்தப்பட்ட இடங்களில் மிக அழகாகவும், பொருத்தமாகவும் ஓட்டுவதற்கான சேவைகளை அளிப்பது ஆகும். இந்த தொழில் பிரிவு தான் தற்போது இந்தியாவில் உள்ள பல பெருநகரங்களில் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை அளித்து வருகிறது.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.