written by | October 11, 2021

ஓவியம் வணிகம்

×

Table of Content


பெயிண்டிங் பிசினஸ் தொடங்குவதற்கான வழிகாட்டும் நெறிமுறைகள் 

தற்கால வாழ்க்கை சூழ்நிலையில் கலையம்சம் பொருந்திய பல தொழில்கள் வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயமான சூழல் ஏற்பட்டுள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒரு தொழில் பெயிண்டிங் பிசினஸ் என்று சொல்லலாம். பெயிண்டிங் என்பது கட்டிடங்களின் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் கோட்டிங் செய்யப்படும் தொழில் என்ற நிலையை தாண்டி, கலையின் விதவிதமான வண்ண வடிவங்களை வீட்டின் சுவர்களில் வெளிப்படுத்தக்கூடிய முறையாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக, இன்றைய வர்த்தக சூழ்நிலையில் தொழில் முறை பெயிண்டிங் பிசினஸ் செய்பவர்களுக்கான வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது. ஒரு நிறுவனத்தை அல்லது குறிப்பிட்ட ஒரு நுகர்பொருளை வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலம் செய்ய வேண்டுமென்றால் பல்வேறு வித்தியாசமான விளம்பர யுக்திகளை கடைபிடிக்க வேண்டியதாக இருக்கும். அதன் அடிப்படையில் கட்டிடங்களின் சுவர்கள் மற்றும் சாலைகள் ஆகியவற்றில் விளம்பரங்கள் அல்லது குறிப்பிட்ட நுகர்பொருள் சார்ந்த விழிப்புணர்வு வாசகங்கள் ஆகியவற்றை அழகாக அமைத்து பொதுமக்களின் கவனத்தை கவர வேண்டும் என்பதால் பெயிண்டிங் துறையினருக்கு பணி வாய்ப்புகள் நிறைய உருவாகி விட்டன. 

  • இந்தத் துறைக்கான முதலீடு என்பது மற்ற தொழில்களை விட சற்று குறைவாகவே இருக்கும் என்று சொல்லலாம். காரணம் பெரும்பாலும் சிறிய வகை உபகரணங்களை இந்த துறையில் பயன்படுத்தப்படுகின்றன. 
  • அதிக முதலீடு, மூலப்பொருள் கொள்முதல் போன்ற சிக்கல்கள் இந்தத் துறையில் இருக்காது. சிறிய முதலீட்டின் மூலம் பெரிய அளவில் வளர்வதற்கான வாய்ப்புகளை பெயிண்டிங் பிசினஸ் துறை கொண்டிருப்பதாக உறுதியாக சொல்லலாம். 
  • தொடர்ச்சியான அனுபவங்களும், திறமையும் இந்தத் துறையில் ஒருவருடைய தனித்தன்மையை வாடிக்கையாளருக்கு எடுத்துச் சொல்வதாக இருக்கும். 
  • சர்வதேச அளவிலான சந்தையைக் கொண்ட தொழில் இது என்பதால் கலைத் திறமை கொண்டவர்கள் எளிதாக புகழ் பெறுவார்கள்.
  • இன்னொரு தொழிலை செய்து வருபவர்களும் கூட பகுதிநேர தொழிலாக இந்தத் துறையில் ஈடுபட முடியும் என்பது இந்த தொழிலுக்கான ஒரு விசேஷ அம்சமாகும். 

பெயிண்டிங் பிசினஸ் என்பது காலை 9 மணிக்கு அலுவலகம் மாலை 5 மணிக்கு வீடு திரும்புவது என்ற நிலையில் இருந்து முற்றிலும் வேறுபட்ட பணி வாய்ப்புகளை உள்ளடக்கிய தொழில் முயற்சியாகும். ஒருவருடைய தனித்திறமையை எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் வெளிப்படுத்தக்கூடிய தொழிலாகும் இதை குறிப்பிடலாம். இந்த தொழிலிலும் திறமைசாலிகள் நிச்சயம் மக்களால் மதிக்கப்படுவார்கள். இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பெயிண்டிங் துறை என்பது பல்வேறு வித்தியாசமான பணி வாய்ப்புகளை கொண்டிருக்கிறது. உதாரணமாக வீட்டின் வரவேற்பு அறை அலங்காரம் செய்வது, குழந்தைகளை வண்ணமயமாக அலங்கரிப்பது, பல்வேறு அரங்கங்கள் மற்றும் மண்டபங்கள் உள்ளிட்ட பிரபு இடங்களில் கண் கவரும் அலங்கார பணிகளை செய்வது ஆகிய வகைகளில் தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன. 

வழிபாட்டுத்தலங்களுக்கான பெயிண்டிங்

பொதுமக்கள் தங்களுடைய ஆன்மீக ஈடுபாடுகளை வெளிப்படுத்தக்கூடிய இடமான வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள கோபுரங்கள் மற்றும் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட கட்டிட அமைப்புகள் ஆகியவற்றுக்கு கண் கவரும் வகையில் வர்ண வேலைப்பாடுகளை செய்வது ஒரு தனிப்பட்ட துறையாகவே இருந்து வருகிறது. இந்தத் துறை எல்லா காலகட்டங்களிலும் வேலை வாய்ப்புகளை அளிக்கக் கூடியதாக இருந்து வருகிறது. தகுந்த முன் அனுபவம் பெற்றவர்கள் இந்தத் துறையில் ஆண்டு முழுவதும் வருமானம் பெறக்கூடிய வாய்ப்புகளை அடைகிறார்கள். இந்த துறையில் தனி நபர் மட்டும் தனது திறமையை வெளிக்காட்டுவது இயலாது. ஒருவரது தலைமையின்கீழ் பல்வேறு உதவியாளர்கள் இணைந்து செயல்பட்டு அவர்களது தனித்தன்மையை மேம்படுத்திக்கொண்டு தொழிலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே இந்தத் துறையில் உள்ள ஒரு முக்கியமான தொழில்நுட்பமாகும். கோவில்களில் அமைந்துள்ள கோபுரங்களுக்கான பெயிண்டிங் பணிகளை செய்ய விரும்பும் தொழில் முனைவோர்கள் நிச்சயம் ஆகமம் சார்ந்த விதிமுறைகளை நன்றாக அறிந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கேற்ப ஸ்தபதிகள் என்று சொல்லப்படும் கோவில் கட்டுமான பணிகளை செய்யும் சிற்பக்கலை வல்லுனர்களை அணுகி தங்களுடைய பணி வாய்ப்புகளை பெற வெண்டும். 

சுய திறன் மேம்பாடு அவசியம்

ஒரு தொழில் முனைவோராக பெயிண்டிங் பிசினஸ் துறையில் ஈடுபட விரும்புபவர்கள்  முதன்மையாக தங்களுடைய தனித்திறமையை நன்றாக உணர்ந்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில் வீடுகள் மற்றும் வர்த்தக கட்டிடங்களுக்கான அழகிய பெயிண்டிங் பணிகளை செய்வது, வீடுகளுக்கான உள் அலங்கார முறை என்ற வகையில் கண்கவரும் அழகிய வண்ணங்களை கொண்டு அறைகளை அலங்காரம் செய்வது, குழந்தைகள் அறைகளை அலங்கரிப்பது, கேன்வாஸ் பெயிண்டிங், வால் பேப்பர்கள் பெயிண்டிங் உள்ளிட்ட விதவிதமான வகைகளில் தொழில் திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் செயல்பட வேண்டும். மேலும்,

  • ஆயில் பெயிண்டிங்
  • வாட்டர் கலர் பெயிண்டிங்
  • பேஸ்டல் பெயிண்டிங்
  • அக்ரிலிக் பெயிண்டிங்
  • முரல் பெயிண்டிங் 
  • அப்ஸ்ட்ராக்ட் பெயிண்டிங்
  • லேண்ட்ஸ்கேப் பெயிண்டிங்
  • ஸ்டில் லைஃப் பெயிண்டிங்
  • ஏன்சியண்ட் பெயிண்டிங் 
  • இந்தியன் பெயிண்டிங்
  • சைனீஸ் அண்ட் ஜேப்பனீஸ் பெயிண்டிங்

ஆகியவற்றிற்கேற்ப கூடுதலான பயிற்சிகள் தேவை என்றாலும் கூட தக்க முறையில் அவற்றை பெற்றுக்கொண்ட பின்னர் தொழிலில் இறங்கி வெற்றிகரமாக வலம் வரலாம். பல்வேறு வகைகளில் உள்ள பெயிண்டிங் பிசினஸ் என்பது பொதுவாக ஒரு தனி நபருடைய திறமையின் கீழ் வெளிப்படுத்தப்படுவதாகும். அந்த தனிநபர் தன்னுடைய தொழில் மூலம் கிடைக்கக்கூடிய விளம்பரத்தை வியாபார ரீதியான வெற்றியாக மாற்றிக் கொள்ள வேண்டும். நிறுவனங்களுக்கான பிராண்டிங் என்ற வகையில் பஸ் மற்றும் ரயில்களில் விளம்பரங்கள் செய்யும் பெயிண்டிங் முறை பற்றிய பயிற்சிகளை பெற்றுக்கொண்டு அவற்றை வர்த்தக ரீதியாக செயல்படுத்துவது அவசியம். 

இந்தத் துறையில் தனி நபராக இருந்தாலும் கூட குறிப்பிட்ட ஒரு பெயரின் அடிப்படையிலேயே ஒருவரது தொழில் முயற்சிகள் சமூகத்தில் குறிப்பிடப்படும். நுண் கலை சார்ந்த தொழிலாக இருப்பதால் இந்தத் துறைக்கும் பெயர் பதிவு அவசியமானது. அப்பொழுதுதான் தொழிலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும். போட்டிகள் நிறைந்த உலகத்தில் தனித்து நின்று செயல்பட முடியும். 

பெயிண்டிங் என்றாலே அதற்கான தொழில் கருவிகள் வேறு வகையில் இருக்கின்றன. மிக சிறிய வகை பிரஷ் முதற்கொண்டு பெரிய அளவிலான பெயிண்டிங் ஸ்பிரேயர் வரை விதவிதமான உபகரணங்கள் இருக்கின்றன. அத்தகைய நவீன முறைகளை நிச்சயம் பயன்படுத்தியாக வேண்டும். அதற்கான கருவிகளை தற்போது ஆன் லைன் முறையிலேயே ஆர்டர் அளித்து பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் சந்தையில் கிடைக்கக்கூடிய பல்வேறு வகை பெயிண்டிங் மெட்டீரியல்ஸ் பற்றி நன்றாக அறிந்து வைத்திருக்க வேண்டும். அவற்றின் நடைமுறை பயன்கள் பற்றிய கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள விரும்பினால் தகுந்த தொழில்நுட்ப வல்லுனர்களை அணுகி பயிற்சியும் பெற்றுக்கொள்ளவேண்டும். 

தொழில்ரீதியாக மற்றும் வர்த்தக ரீதியாக வெற்றி பெற விரும்பும் பெயிண்டிங் பிசினஸ் தொழில் முனைவோர்கள் மாநில அளவில் முன்னணியில் இருக்கக்கூடிய மற்ற துறை சார்ந்த வல்லுனர்களுடன் நல்ல தொடர்பில் இருக்க வேண்டும். தனக்கு கிடைக்கக்கூடிய தொழில் வாய்ப்புகளில் மற்ற அவர்களுடைய உதவி அவசியம் என்றால் நிச்சயம் அவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால், வாடிக்கையாளர் உடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு  பல நேரங்களில் வெவ்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவி தேவையானதாக இருக்கும். அவ்வாறு வெவ்வேறு தொழில் நுட்ப வல்லுநர்கள் உடைய தொடர்புகளை பெறுவதன் மூலம் தகுந்த அனுபவத்தையும் பெற்றுக்கொள்ளமுடியும். தொழில் வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியமான ஒன்று. 

பெயின்டிங் துறையில் உள்ளவர்கள் தங்களுடைய பிரிவைச் சார்ந்த தொழில் முனைவோர்களிடம்  நல்ல தொடர்பு கொண்டிருக்க வேண்டும். ஒருவேளை கூடுதலான பணி வாய்ப்புகள் அமையும் பொழுது அவர்களை அழைத்து பணியைச் செய்வதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும். அதன்மூலம் பரஸ்பர தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை இரு தரப்பினரும் பெற்றுக்கொள்ளமுடியும். 

இன்றைய நாகரீக உலகத்தில் எந்த ஒரு தொழிலுக்கும் விளம்பரம் மிகவும் அவசியமானது. நுண் கலை சார்ந்த தொழிலாக இருந்தாலும் கூட பெயிண்டிங் பிசினஸ் வர்த்தக ரீதியாக வெற்றி பெறுவதற்கு நிச்சயம் விளம்பரம் அவசியம். இந்தத் துறையினருக்கு ஏற்ற விளம்பர யுத்திகளை இங்கே பார்க்கலாம்.

ஆர்ட்ஸ் எக்ஸிபிஷன்

இந்த முறை அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான ஒன்று. அதாவது, கண்காட்சி முறையில் ஒரு பெயிண்டிங் துறை கலைஞருடைய படைப்பு அல்லது ஒரு நிறுவனம் அளிக்கக்கூடிய சேவைகள் பற்றிய விளக்கம் ஆகியவற்றை பொதுமக்களிடையே கொண்டுசெல்லும் வழிமுறையாகும். ஆயில் பெயிண்டிங், வாட்டர் கலர் பெயிண்டிங், பேஸ்டல் பெயிண்டிங், அக்ரிலிக் பெயிண்டிங், முரல் பெயிண்டிங் போன்ற பிரிவுகளை சார்ந்தவர்கள் இந்த முறையில் வாடிக்கையாளர்களின் கவனத்தை நிச்சயம் கவர முடியும். அதன் மூலம் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் இயலும். 

இ காமர்ஸ் வெப்சைட்

சர்வதேச அளவில் உள்ள இணைய தளங்களில் பெயிண்டிங் தொழில் முனைவோர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்த முடியும். பார்ப்பவர்கள் உடைய கவனத்தையும் கண்களையும் கவரக்கூடிய வகையில் உள்ள படைப்புகள் நாடுகளின் எல்லை கடந்து விற்பனை வாய்ப்புகளை பெற்று வருகின்றன. ஒரு தொழில்முனைவோராக பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற பெயிண்டிங் துறை வல்லுநர்கள் தங்களுடைய படைப்புகளை சர்வதேச அளவில் எடுத்துச் செல்வதற்கு இணையதளங்கள் உதவிகரமாக செயல்பட்டு வருகின்றன.

சமூக வலைதளங்கள்

சோசியல் மீடியா என்று சொல்லப்படக்கூடிய ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பெயிண்டிங் பிசினஸ் செய்யும் தொழில்முனைவோர்கள் தாங்கள் அளிக்கக்கூடிய அனைத்து விதமான சேவைகள் பற்றி தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் தங்களுடைய முந்தைய படைப்புகள் பற்றியும் காட்சிப்படுத்த வேண்டும். அதன்மூலம் வர்த்தக வாய்ப்புகளை பெறுவது சாத்தியம். மற்ற விளம்பர வாய்ப்புகளை விட சமூக வலைதளம் என்பது ஒரு தொழில் முனைவோருக்கு நேரடியாகவே வாடிக்கையாளர்களை பெற்றுத் தருகிறது. அந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தும் திறன் பெற்ற தொழில் முனைவோர்கள் தங்கள் துறையில் வர்த்தகரீதியாக வெற்றி பெறுகிறார்கள்.

வாடிக்கையாளர் நேரடி தொடர்பு

இந்தத் துறையில் வெவ்வேறு வழிமுறைகளில் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும். அதனால் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களுக்கான விளம்பரத்தை அளிப்பவராக பயன்படுத்திக்கொள்ளும் நுட்பத்தை பெயிண்டிங் பிசினஸ் தொழில் முனைவோர் அறிந்திருக்க வேண்டும். ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து இன்னொரு வாடிக்கையாளருக்கு வாய் வார்த்தை மூலமாக அளிக்கப்படும் ஆலோசனை மற்றும் தகவல்கள் வர்த்தகவளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது.

பெயிண்டிங் ஒர்க் ஷாப்

நீண்ட கால அனுபவம் பெற்ற தொழில் முனைவோர்கள் தங்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் அடுத்த தலைமுறையினருக்கு இந்த கலையை கற்றுத் தரும் வாய்ப்பாக அவ்வப்பொழுது பெயிண்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வரலாம். பொழுதுபோக்கு அடிப்படையில் கற்றுக்கொள்ள வருபவர்களும் கூட அவற்றை தொழில்ரீதியாக மாற்றிக் கொள்ளும் வழிமுறைகளை அவர்களுக்கு கற்பிக்கலாம். இந்த முயற்சியில் தேசிய அளவில் இருக்கக்கூடிய சக துறையினரை அழைத்து ஒர்க் ஷாப்பில்  பங்கு பெற வைக்கலாம். சிறிய குழந்தைகள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு தகுந்த பயிற்சிகளை அளிக்கலாம். 

ஆர்ட் ஸ்டுடியோ

தொழில்ரீதியாக பக்கத்து நகரங்களில் ஆர்ட் ஸ்டுடியோ அமைப்பதன் மூலம் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள முடியும். அதன்மூலம் எல்லாவிதமான பிரிண்டிங் சம்பந்தப்பட்ட பணிகளையும் செய்வதற்கான வர்த்தக வாய்ப்புகள் உருவாகும். இந்தத் துறையில் கலை உணர்வுடன் வியாபார நோக்கமும் இணைந்திருந்தால் அது நிச்சயம் தொழில் ரீதியான வெற்றியை ஏற்படுத்தித்தரும். 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.