written by | October 11, 2021

மருத்துவ அங்காடி உரிமம்

×

Table of Content


டிரக் லைசென்ஸ் மற்றும் மெடிக்கல் ஸ்டோர் லைசென்ஸ் ஆகியவற்றை பெறுவதற்கான நெறிமுறைகள்

மனிதனின் உண்மையான சொத்து என்பது ஆரோக்கியம் ஆகும். இன்றைய காலகட்ட அவசர வாழ்க்கை முறைகளில் தனி மனித ஆரோக்கியத்தை பாதுகாப்பது என்பது அவசியமான ஒன்றாகும். ஆனால் அனைவராலும் அதை கடைபிடிப்பது என்பது இயலாத ஒன்றாக மாறி வருகிறது. அலுவலகம் அல்லது வியாபாரம் சம்பந்தப்பட்ட பணி இடைஞ்சல்கள், அவசரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளின் காரணமாக ஒருவர் தன்னுடைய உடல் ஆரோக்கியத்தின் மீது தேவையான கவனத்தை செலுத்த முடியாமல் போகிறது. மனித உடலானது இயன்றவரை தன்னை தற்காத்துக் கொள்ளக்கூடிய சுய பாதுகாப்பு முறைகளுக்கு உட்பட்டு செயல்படுகிறது. அந்த முறைகளில் ஏற்படுகின்ற செயற்கையான மாற்றங்கள் காரணமாக உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகளை உண்பது ஆகியவை அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக ஆகிறது. உடல் ஆரோக்கியத்திற்கான மருத்துவம் என்பது பல்வேறு வகையாக இருந்தாலும் அலோபதி என்று சொல்லப்படுகின்ற ஆங்கில மருத்துவ முறை என்பதற்கு உலகளாவிய அங்கீகாரமும், மதிப்பும் உள்ளது. அந்த வகையில் ஆங்கில மருந்துகள் என்பது உலகளாவிய சந்தை மதிப்பை கொண்டிருக்கின்றன. 

ஒவ்வொரு நாட்டுக்கும் தனிப்பட்ட முறையில் ஆங்கில மருத்துவத்தை மற்றும் ஆங்கில மருந்துகளை பயன்படுத்துவதில் தனிப்பட்ட சட்ட திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. இந்திய அளவில் ஆங்கில மருந்துகள் விற்பனை என்பதற்கு கடுமையான தரக்கட்டுப்பாடு மற்றும் டிரக் லைசென்ஸ் என்று சொல்லக்கூடிய மருந்து விற்பனை உரிமம் உள்ளிட்ட பல்வேறு லைசென்ஸ் வகைகளை பெற்ற பின்னரே தொழிலைத் தொடங்கி நடத்த இயலும். மருந்துக் கடை வர்த்தகத்தை தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் மெடிக்கல் ஸ்டோர் லைசென்ஸ் மற்றும் டிரக் லைசென்ஸ் ஆகியவை பற்றி அறிந்திருப்பது அவசியம். அதன் அடிப்படையில் ஒரு முதலீட்டாளர் மேற்கண்ட லைசென்ஸ் வகைகளை எவ்வாறு பெறுவது என்பதற்கான அடிப்படை தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பார்மசி லைசென்ஸ்

மருந்துகள் விற்பனை என்பது இரண்டு விதங்களில் அமைந்துள்ளது. முதலாவது சில்லறை விற்பனை நிலையம் மூலமாக பொதுமக்களுக்கு தேவையான மருந்துகளை அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு விற்பனை செய்வது என்பதாகும். இரண்டாவது மொத்த விற்பனை என்பதாகும். அதாவது சில்லறை விற்பனை கடைகளுக்கு தேவையான அனைத்து விதமான மருந்துகளையும் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மொத்த விற்பனையாக செய்யப்படும் அமைப்பாகும். 

தனிப்பட்ட மெடிக்கல் ஸ்டோர் அல்லது மருந்துகள் மொத்த விற்பனை நிறுவனம் என்ற மருந்துகள் விற்பனை செய்வதற்கு மிக முக்கியமான ஆதாரம் என்பது பார்மஸி லைசன்ஸ் ஆகும். அதாவது, தகுதி பெற்ற மருந்தாளுநர் என்ற நிலையில் பார்மசி படிப்பில் டிப்ளமோ, இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் ஆகிய ஏதாவது ஒன்றை பெற்றிருப்பது அவசியம். சம்பந்தப்பட்ட தொழில் முனைவோரை ஒரு பார்மசிஸ்ட் ஆக இருந்தால் ரொம்பவும் நல்லது. இல்லாவிட்டால் ஒரு பார்மசிஸ்ட் தன்னுடைய மருந்தாளுநர் என்ற தகுதியின் அடிப்படையில் அந்த மருந்து கடை செயல்படுவதற்காக அவரது அனுமதி மற்றும் ஒப்புதல் அவசியமானது.

மெடிக்கல் ஸ்டோர் லைசென்ஸ் என்ற வகையில் மருந்துகள் மொத்த விற்பனை நிறுவனம் என்பதற்கு தனிப்பட்ட டிரக் லைசன்ஸ் தேவை. ரீடைல் மெடிக்கல் ஸ்டோர் லைசென்ஸ் என்பது சில்லறை விற்பனையகங்களுக்கான தனிப்பட்ட லைசென்ஸ் ஆகும். இந்த லைசென்ஸ் வகைகளை பெறுவதற்கு ரெகுலேஷன் ஆஃப் ஃபுட் சேப்டி அண்டு டிரக் அட்மினிஸ்ட்ரேஷன் டிபார்ட்மென்ட் என்ற அரசு அமைப்பின் இணையதளத்தில் பல்வேறு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டியதாக இருக்கும் .

மேலும், மருந்துகளுக்கான மொத்த விற்பனை நிறுவனம் என்றால் அங்கு பணியாற்றுவதற்கு பத்தாம் வகுப்பு படித்த மற்றும் நான்கு வருட பணி அனுபவம் கொண்ட விற்பனையாளர்கள் அல்லது பட்டதாரியாக இருந்து ஒரு வருடம் பணி அனுபவம் கொண்ட நபர்கள் தேவைப்படுவார்கள். மருந்துகளுக்கான சில்லரை விற்பனை கடை என்ற நிலையில் வாடிக்கையாளர்களுக்கு மருந்துகளை எடுத்து தருவதற்கு பார்மசி டிப்ளமோ அல்லது பட்டம் பெற்ற நபர்கள் அவசியம். அவர் தவிர நீதி கடையில் பணிபுரிவோர் கேஷியர் என்ற நிலையில்தான் கணக்கில் கொள்ளப்படுவார்கள். 

மெடிக்கல் ஸ்டோர் லைசென்ஸ் பெற்ற சில்லறை விற்பனை கடை என்பது 100 சதுர மீட்டர் இடப்பரப்பு தேவையாக இருக்கும். இதுவே மொத்த விற்பனை நிறுவனம் என்றால் 250 சதுர மீட்டர் இடம் தேவையாக இருக்கும். அத்துடன் அவசியம் தேவைப்படும் வசதியாக ரெஃப்ரிஜிரேட்டர் மற்றும் ஏர் கண்டிஷனிங் வசதிகள் அவசியம் செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும், மருந்துகள் வைப்பதற்கான அலமாரிகள் மற்றும் ஷோகேஸ் வகைகள், மருந்துகள் இருப்பு வைப்பதற்கான தனி இடம் மற்றும் குளிர் சாதன வசதி ஆகியவை அடிப்படையான விஷயங்கள் ஆகும்.

தொழிலை மேற்கொள்வதற்கான இடம்

மெடிக்கல் ஸ்டோர் லைசன்ஸ் பெற்று தொழிலை செய்வதற்கான இடம் சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு சொந்தமானதாகவோ, வாடகை அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட இடமாக இருக்கலாம். அதன் அடிப்படையில் வாடகை அல்லது குத்தகை இடம் என்றால் அதற்காக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த பத்திரம் ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட இடம் தொழில் முனைவோருக்கு சொந்தமாக இருக்கும் நிலையில் அந்த சொத்துக்கான விற்பனை பத்திரம் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும். 

மருந்து விற்பனை தொழிலுக்கான பதிவு

இந்திய அளவில் செயல்பட்டு வரக்கூடிய அனைத்து மருந்து விற்பனை கடைகளுக்கும் இந்தியன் பார்மசி சட்டம் 1948 என்பதன் அடிப்படையில் மெடிக்கல் ஸ்டோர் லைசன்ஸ் அளிக்கப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள சட்ட நடைமுறைகளுக்கு ஏற்பவும் தகுந்த பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட மருந்து விற்பனை நிலையம் ஒரு மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுகிறது, அல்லது ஒரு மருத்துவ நிலையத்தில் தொடர் விற்பனையகமாக செயல்படுகிறதா, அல்லது தனிப்பட்ட ஒரு உரிமையாளர் அல்லது பங்குதாரர்களுடன்  நகர்ப்புற விற்பனை நிலையமாக செயல்படுகிறதா என்ற விஷயங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மேலும், புரோப்ரைடர்ஷிப் ரிஜிஸ்ட்ரேஷன், பார்ட்னர்ஷிப் ரிஜிஸ்ட்ரேஷன், சிங்கிள் பர்சன் கம்பெனி ரெஜிஸ்ட்ரேஷன், பிரைவேட் லிமிடெட் கம்பெனி, லிமிடெட் பார்ட்னர்ஷிப் ஆகிய வகைகளில் தொழிலுக்கான உரிமம் பெறப்படவேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளின் உரிமம்

தொழில் நிறுவனங்களுக்கு, அவை தொழிலை குறிப்பிட்ட பகுதியில் நடத்துவதற்கான உள்ளாட்சி அமைப்பின் அங்கீகாரம் பெறப்படவேண்டும். இந்த அங்கீகாரத்தை, சம்பந்தப்பட்ட பகுதியின் நகராட்சி, பேரூராட்சி அல்லது மாநகராட்சி ஆகியவை வழங்குகின்றன. இந்த அனுமதியின் அடிப்படையில் தான் மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனத்திற்கு அளிக்கப்படுகின்றன.

வரி செலுத்துவதற்கான பதிவு

அனைத்து தொழில் நிறுவனங்களும் ஜி.எஸ்.டி வரி செலுத்துவதற்கான பதிவு எண் பெற்று இருப்பது அவசியமானது. அதன் அடிப்படையில் மருந்து வணிகம் செய்யும் நிறுவனங்களும் ஒரு நிதியாண்டில் பெறக்கூடிய வருமானத்தின் அடிப்படையில் ஜிஎஸ்டி வரியை செலுத்துவதற்கான வரையறை இருக்கிறது. அதாவது ஒரு ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு உட்பட்ட அளவில் வருமானம் பெறக்கூடிய நிறுவனங்கள் மாநில அரசின் ஜி.எஸ்.டி வரி பதிவு எண் பெற வேண்டும். குறிப்பிட்ட இந்த தொகைக்கும் அதிகமாக வருமானம் ஈட்டக்கூடிய மருந்து விற்பனை நிறுவனங்கள் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி பதிவு எண்ணை பெறவேண்டும். 

ஜி.எஸ்.டி பதிவுக்காக விண்ணப்பிக்கும் தொழில் முனைவோர் அவரது புகைப்படம், ஆதார் கார்டு அல்லது பான் கார்டு, ரேஷன் கார்டு அல்லது பாஸ்வேர்ட் ஆகிய புகைப்பட அடையாளம் கொண்ட ஆதாரம், நிறுவனம் செயல்படும் இடத்திற்கான உரிமை அதாவது வாடகை அல்லது சொந்த கட்டிடம் என்பதற்கான சான்று, நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தம், மருந்து நிறுவனம் சார்பான வங்கி கணக்கு எண், மருந்து நிறுவன உரிமையாளர் அது டிஜிட்டல் கையெழுத்து சான்று மற்றும் நிறுவன உரிமையாளர் உடைய குடியிருப்பு சான்று போன்ற தகவல்களை அளித்து ஜி.எஸ்.டி பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

டிரக் லைசன்ஸ்

ஒரு மருந்து விற்பனை நிறுவனம் என்பது டிரக் லைசென்ஸ் பெறுவதன் அடிப்படையில்தான் சட்டப்படி செயல்பட முடியும். 1940 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட டிரக்ஸ் அண்ட் காஸ்மெட்டிக்ஸ் சட்டத்தின் அடிப்படையில் இந்த அரசு உரிமம் வழங்கப்படுகிறது. இந்த சட்டத்தின் அடிப்படையில் அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருந்துகள் விற்பதற்கான அனுமதி அளிக்கப்படுகிறது. மேற்கண்ட மருத்துவ பிரிவுகள் சம்பந்தப்பட்ட மருந்துகளை சட்டத்திற்கு உட்பட்டு முறையாக தயாரிப்பாளர்களிடம் இருந்து பெற்று வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

டிரக் லைசென்ஸ் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட மருந்து விற்பனை நிறுவனத்தின் பதிவு பெற்ற சான்று, உரிமையாளர் அல்லது உரிமையாளர்களுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட தொழில் ஒப்பந்தம், பான் கார்டு மற்றும் கேன்சல் செய்யப்பட்ட காசோலை, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, நிறுவனத்திற்கு இயக்குனர்கள் இருந்தால் அவர்களுடைய சம்மத கடிதம், பார்மசிஸ்ட் அவர்களுடைய பயோ டேட்டா, அவரது அப்பாயின்மென்ட் கடிதம், அவரது அனுபவத்திற்கான சான்று, அவருடைய புகைப்பட அடையாள சான்று ஆகியவை முதன்மையான முக்கியத்துவம் பெறுகின்றன.

மேலும், மெடிக்கல் ஸ்டோர் லைசென்ஸ் பெற்ற நிறுவனம் ஷேர் ஹோல்டர் அல்லது டைரக்டர்கள் மூலம் செயல்படுவதாக இருந்தால், நிறுவனம் வாடகை நிறுவனமா அல்லது சொந்த கட்டிடம் என்பதற்கான சான்றுகளை அளிக்க வேண்டும். குறிப்பாக விற்பனை நடத்தப்படும் இடமானது பதிவு செய்யப்படாத ஒப்பந்தமாக இருந்தால் அந்த ஒப்பந்தத்தின் நகலுடன் மின் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது அல்லது குடிநீர் வரி செலுத்தியதற்கான ரசீது அல்லது உள்ளாட்சி அமைப்புகளிடம் சொத்து வரி செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை இணைக்க வேண்டும். கிராமப்புற பகுதியாக இருந்தால் சம்பந்தப்பட்ட இடத்திற்கான பட்டா எண் என்ன என்பதை குறிப்பிட வேண்டும்.

மருந்து நிறுவனம் செயல்படக்கூடிய இடத்தின் உரிமையாளரிடம் இருந்து தடையில்லா சான்று பெறுவதும் அவசியம். மேலும் சம்பந்தப்பட்ட இடத்திற்கான அரசு அங்கீகாரம் பெற்ற கட்டிட பொறியாளர் மூலம் ஒப்புதல் பெறப்பட்ட கட்டிட வரைபடம் அவசியம். இந்த இரு அங்கீகாரங்களும் மருந்து உரிமம் பெறுவதற்கான முதல்கட்ட அம்சங்களாகும். விண்ணப்பங்களை ஆன்லைன் முறையிலேயே இன்றைய காலகட்டத்தில் பூர்த்தி செய்து அனுப்பி வைக்க முடியும். அவ்வாறு அனுப்புவதற்கு அனைத்து விதமான ஆவணங்களையும் மற்றும் சான்றுகளையும் முறையாக ஸ்கேன் செய்யப்பட்டு மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அது மட்டும் அல்லாமல் தகுந்த கட்டணங்களையும் ஆன்லைன் முறையிலேயே எளிதாக செலுத்த முடியும். 

நேரடியான ஆய்வு

பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்த பின்னர் சம்பந்தப்பட்ட மருந்து விற்பனை நிறுவனம் அமைய உள்ள மண்டலத்திற்கான மருந்து ஆய்வு அதிகாரி அதாவது டிரக் இன்ஸ்பெக்டர் நேரடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வருகை புரிந்து சோதனைகளை மேற்கொள்வது வழக்கம். அதுமட்டுமல்லாமல் மருந்து விற்பனை நிறுவன உரிமையாளர் மற்றும் பார்மசிஸ்ட் ஆகியோர்களிடம் நேர்காணல் செய்து தகுந்த பதில்களை பெற்றுக் கொள்வார். அதன் பின்னர் அலுவலக நடைமுறைகளின் படி மேற்கண்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மண்டல மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்திலிருந்து டிரக் லைசென்ஸ் வழங்கப்படும். அதன் பின்னர், மெடிக்கல் ஸ்டோர் லைசென்ஸ் பெற்ற தொழில் முனைவோர் தன்னுடைய சேவையை பொதுமக்களுக்கு முறையாக அளிக்கவேண்டிய கடமையை செய்யத் தொடங்க வேண்டும்.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.