written by | October 11, 2021

தாவர நர்சரி வணிகம்

×

Table of Content


பிளான்ட் நர்சரி  தொழில் தொடங்குவதற்கு அவசியமான குறிப்புகள் 

கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும் பசுமையான மரம், செடி கொடிகளை பார்ப்பதில் அனைவருக்கும் ஒருவித மகிழ்ச்சி ஏற்படுவது உண்டு. கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய பசுமையான சூழ்நிலையை அனைவருமே விரும்புகிறார்கள். இன்றைய பெருநகரங்களில் மரங்கள் வளர்ப்பு என்பது தனி மனிதருடைய ஆர்வம் என்பதை தாண்டி, அரசாங்கத்தின் செயல் திட்டமாகவும் மாறி இருக்கிறது. மாசு கலப்பு இல்லாத பிராணவாயு தேவை என்றால் அது கிராமமாக இருந்தாலும் சரி, நகரமாக இருந்தாலும் சரி, பசுமையான தாவரங்கள் மூலமே அது பெறப்படுகிறது. அதனால், வீடுகளில் பசுமையான செடி, கொடிகள் வளர்ப்பதை பலரும் விரும்புகிறார்கள். நகர்ப்புறங்களில் இடவசதி கொண்ட குடியிருப்புகளில் வீட்டு தோட்டம் மற்றும் மாடி தோட்டம் என்ற முறைகளில் மரம் மற்றும் செடி, கொடி வகைகளை வளர்ப்பதில் நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். இன்றைய பலமாடி அபார்ட்மெண்ட் நாகரிக நகர வாழ்க்கைக்கு ஏற்ற வெர்ட்டிகல் கார்டன் என்ற நவீன முறையில் சுவர்களில் செங்குத்தாக தொட்டிகள் அமைக்கப்பட்டு அவற்றில் செடிகள் வளர்க்கக்கூடிய மேலைநாட்டு தொழில்நுட்பமும் தற்போது அறிமுகமாகி இருக்கிறது. 

இந்திய மெட்ரோ சிட்டி வாழ்க்கை முறைகளில் இல்லத்தரசிகள் மாடித்தோட்டம் அமைத்து தங்களுக்கு வேண்டிய காய்கறி வகைகளை பயிரிட்டு பராமரித்து வருவதை பலரும் அறிந்திருப்போம். பாக்கு, மகிழம்பூ, வேங்கை, பாதாம், குமிழ்தேக்கு, ரோஸ்உட், மகாகனி, வேம்பு, பலா, கொய்யா, எலுமிச்சை, மாமரம், மாதுளை, மூங்கில், விளாமரம், சீத்தா, பப்பாளி, நீர்மருது, பூவரசு, செம்மரம், தேக்கு, அரைநெல்லி, பெரியநெல்லி, இலுப்பை, நாரத்தை, அசோகா, மருதாணி, நாவல் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை மரங்களை இன்றைய சூழலில் பலரும் வீட்டுத் தோட்டத்தில் வளர்ப்பதற்கு விரும்புகிறார்கள். மேலும், பூச்செடி வகைகளில் நாட்டுரோஸ், செம்பருத்தி, மினிநந்தி, நந்தியாவட்டை, துளசி, கருவேப்பிலை, காகிதப்பூ, அரளி, அடுக்குமல்லி, ரோஜா, குத்துமல்லி, குண்டுமல்லி, நந்தியாவட்டை, சாதிப்பூ, நித்தியமுல்லை, அடுக்குமல்லி, கத்தாழை, குரோட்டன்ஸ், தங்க அரளி, மருதாணி, சிறியாநங்கை, பெரியாநங்கை, மணிப்ளான்ட், டிசம்பர், கனாகாம்பரம் உள்ளிட்ட விதவிதமான வகைகளை வீடுகளில் அல்லது வீட்டுத் தோட்டங்களில் வளர்ப்பதற்கும் பலர் ஆர்வமாக இருக்கிறார்கள். 

மேலும், நிறைய சமூக ஆர்வலர்கள் ஆங்காங்கே சாலை ஓரங்களில் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் விதவிதமான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருவதையும் கவனித்து இருப்போம். அந்த வகையில், நர்சரி கார்டன் என்ற முறையில் செடி கொடிகளுக்கான நாற்றுப் பண்ணை அமைத்து, விதவிதமான காய்கறி செடிகள், கொடிகள், அரிய வகை மரங்கள் மற்றும் விதவிதமான பூச்செடி வகைகளை விற்பது என்பது தவிர்க்க இயலாத ஒரு தொழிலாக அமைந்துவிட்டது. அதன் அடிப்படையில் பிளான்ட் நர்சரி பிசினஸ் தொடங்கி வருமானம் ஈட்ட விரும்பும் தொழில் முனைவோருக்கு  அவசியமான குறிப்புகளை இங்கே காணலாம்.

அனைவருமே ஈடுபடலாம்

இந்த தொழிலுக்கு முன் அனுபவம் இல்லாவிட்டாலும் கூட சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள அரசாங்கத்தின் தோட்டக்கலை துறை மூலமாக முறையான பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டு தொழிலை தொடங்கலாம். செடி கொடிகள் வளர்ப்பு என்பதால் அவற்றை வைத்து பராமரிப்பதற்கு தேவையான நிலம் சொந்தமாக இருப்பது நல்லது. இல்லாவிட்டால் குத்தகை அடிப்படையில் விவசாய நிலங்களை நீண்டகால ஒப்பந்தத்துக்கு எடுத்துக்கொண்டு தொழிலை செய்ய வேண்டியதாக இருக்கும். அவ்வாறு பயன்படுத்தப்படும் நிலங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து தகுந்த அனுமதியை பெற்றுக் கொள்வது அவசியம். மேலும் தோட்டக்கலை துறை மூலமாக பிளான்ட் நர்சரி கார்டன் பிசினஸ் செய்வதற்காக அங்கீகாரமும் பெற்றிருப்பது அவசியம். இந்த இருவகையான அனுமதிகளை பெற்று தொழிலை ஆரம்பிக்கும் முன்னர் அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பிளான்ட் நர்சரி கார்டன் பகுதியை ஆய்வு செய்வது நடைமுறையில் இருக்கிறது. 

கவனிக்க வேண்டிய தொழில் பிரிவுகள்

தேவையான நிலம் இருக்கிறது, பிளான்ட் நர்சரி பிசினஸ் என்ற வகையில் அனுபவம் அல்லது பயிற்சியை பெற்றிருக்கிறோம் என்ற நிலையில் தொழில் முனைவோர்கள்  கவனிக்க வேண்டிய அடுத்த நிலை எந்த வகையிலான நர்சரி அமைப்பது என்பதாகும். காரணம், செடி கொடி மற்றும் மரம் வகைகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. அவற்றை தோட்டக்கலை துறை வெவ்வேறு பிரிவுகளாக வரையறை செய்திருக்கிறது. அதாவது, காய்கறி நர்சரி, பழங்கள் நர்சரி, பூக்கள் நர்சரி, மருத்துவம் மற்றும் வாசனை செடி நர்சரி மற்றும் பெரிய வகை மரங்களுக்கான நர்சரி என்று பல வகைகளில் இருக்கிறது. 

காய்கறி நர்சரி என்பது இல்லத்தரசிகளுக்கான கவனத்தை கவரக்கூடிய பிரிவு என்று சொல்லலாம். வீடுகளில் எளிமையாக வளர்க்கக்கூடிய தக்காளி, உருளைக்கிழங்கு, பாகற்காய், கேரட், காலிபிளவர், தக்காளி, மிளகாய், பூசணி, பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான செடி கொடி வகைகளை நாற்றங்கால் முறையில் பயிரிட்டு, சிறிய செடி வகைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யக்கூடிய பிரிவு இதுவாகும். 

பழங்கள் நர்சரி என்ற பிளான்ட் நர்சரி பிசினஸ் சுவாரசியமான தன்மை கொண்டதாகும். ஏனென்றால், சம்பந்தப்பட்ட பழங்கள் விளையக்கூடிய செடி அல்லது மரக்கன்றுகளை வாங்க வரும் வாடிக்கையாளர்கள், நர்சரியில் விளைந்துள்ள பழங்களை சாப்பிடுவதற்கும் ஆர்வம் காட்டுவார்கள். மாம்பழம், சப்போட்டா, ஆரஞ்சு, பலாப்பழம், எலுமிச்சை, வாழை உள்ளிட்ட பல்வேறு பழ மரக்கன்றுகளை சரியான முறையில் பராமரித்து விற்பனை செய்யக்கூடிய பிரிவு இதுவாகும்.

பூக்கள் நர்சரி என்பது பெயரிலேயே விளக்கத்தை கொண்டுள்ள தொழில் பிரிவாகும். கிராமமாக இருந்தாலும் சரி, நகரமாக இருந்தாலும் சரி தரைதளத்தில் அமைந்துள்ள வீடுகளில் ஏதாவது ஒரு பூச்செடி வளர்ந்திருப்பதை சாதாரணமாக பார்க்க முடியும். அந்த அடிப்படையில் இல்லத்தரசிகள் தொட்டிகளில் வைத்துக்கூட பூச்செடிகளை பராமரிக்க விரும்புகிறார்கள். அதற்கு ஏற்ப ரோஜா, மல்லி, முல்லை, செண்பகம், செம்பருத்தி போன்ற பூச்செடிகளுக்கான நாற்றுகளை இந்தப் பிரிவு விற்பனை செய்கிறது. 

மருத்துவம் மற்றும் வாசனை நர்சரி என்ற பிரிவு உடல் ஆரோக்கியத்தை அளிக்கக்கூடிய விதவிதமான மருத்துவ குணம் கொண்ட செடி வகைகளை வீடுகளில் வளர்ப்பதற்கு உதவி செய்கிறது. இன்றைய காலகட்டத்தில் இயற்கை மருத்துவத்தை பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். அதனால்,  மருத்துவ குணம் கொண்ட அரிய வகை மூலிகைகளை வீடுகளில் எளிமையாக வளர்க்கும் விதத்தில் நாற்றுகளாக விற்பனை செய்யும் தொழில் பிரிவாக இது அமைந்துள்ளது. 

பெரிய வகை மரங்கள் நர்சரி என்ற பிரிவானது காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் ஆங்காங்கே நட்டு பராமரித்து வரக்கூடிய பெரிய வகை மரங்களுக்கான நாற்று வகைகளை விற்பனை செய்கிறது. இந்த முறையில் ஆலமரம், அரசமரம், யூக்கலிப்டஸ்,  தென்னை மரம், பனைமரம் உள்ளிட்ட பெரிய மரங்களை நடுவதற்கு ஏற்ற வகையில் பக்குவமாக வளர்த்து நாற்று முறையில் விற்பனை செய்வதற்கேற்ப பராமரிப்பு செய்துவரும் நர்சரி தொழில் பிரிவு இதுவாகும். 

மேற்கண்ட ஐந்து பிரிவுகளில் ஒரே வகையை மட்டும் வர்த்தக ரீதியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வது பெரிய லாபத்தை அளிப்பதில்லை. அதனால், பல்வேறு தரப்பு வாடிக்கையாளர்களையும் திருப்தி செய்யும் வகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளை பிளான்ட் நர்சரி பிசினஸ் தொழில் முனைவோர் ஒன்றாக இணைத்து செயல்படுத்த வேண்டியதாக இருக்கும். அதற்கு ஏற்ப கச்சிதமான உள்கட்டமைப்பு வசதிகளை சம்பந்தப்பட்ட மாநிலத்தின் தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டு அமைத்துக் கொள்வது அவசியமானது. இந்தியா பொதுவாக வெப்ப நாடாக இருப்பதால் இந்த தொழிலில் வெப்பத்தை கட்டுப்படுத்தும் வலை அமைப்பு, சரியான சூரிய வெளிச்சம், குளிர்ச்சியான சூழல், தேவையான தண்ணீர் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் தொழிலை லாபகரமாக நடத்த முடியும்.

இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள்

பிளான்ட் நர்சரி பிசினஸ் தொழில் முனைவோர் சொந்த இடம் வைத்திருந்தாலும் சரி அல்லது குத்தகை நிலமாக இருந்தாலும் சரி அது வளமான பூமியாக இருக்க வேண்டும். மேலும் அந்த நிலத்தின் மண்வளம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, எந்தவிதமான செடி வகைகளை எப்படி வளர்ப்பது என்ற ஆலோசனைகளை தோட்டக்கலைத் துறையில் பெற்றுக்கொள்ள வேண்டும். செடி, கொடி மற்றும் மரக்கன்றுகள் வளர்ப்பில் நிச்சயம் தரமான உரங்கள் மற்றும் ரசாயனங்கள் அவசியம். அதன் அடிப்படையில் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ரசாயன வகைகளை பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் நர்சரி என்ற வகையில் தண்ணீர் பாய்ச்சுவது, நிலத்தில் குழி தோண்டுவது, வளர்ந்த செடி வகைகளை சரியான அளவுகளில் கட்டிங் செய்வது, நாற்று நடுவது போன்ற பணிகளுக்கான கருவிகளை கொள்முதல் செய்ய வேண்டும். தேவையான பணியாளர்களையும் நியமனம் செய்வது அவசியம். 

சரி.. பிளான்ட் நர்சரி பிசினஸ் தொடங்கி நடத்துவதற்கான செயல் திட்டம் தயாராகி விட்டது. அதன் பின்னர் வாடிக்கையாளர்களை எந்த வகையான வர்த்தக மாடலில் அணுகி விற்பனையை மேற்கொள்வது என்ற வரையறையை செய்து கொள்வது அவசியம். 

ரீட்டெய்ல் நர்சரி 

இந்த முறையில்  வாடிக்கையாளர்கள் உடைய வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு தேவையான செடி கொடி வகைகளை டோர் டெலிவரி  செய்யலாம். இன்னும், கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு வியாபார ஸ்தலங்களில் அவர்களது தேவைக்கு ஏற்ப செடிகளை விற்பனை செய்யலாம்.

பிரைவேட் நர்சரி

இந்த முறை ஒரு அட்வான்ஸ்டு  தொழில் முறையாக அமைந்திருக்கிறது. அதாவது, ஒரு தனி நபருடைய  தோட்டம் அல்லது பண்ணைகளுக்கான செடி, கொடி மற்றும் மரம் வகைகளை விற்பனை செய்வது அல்லது ஒரு தனியார் நிறுவனம் சார்ந்த தோட்டம் அல்லது விவசாய நிலங்களுக்கான செடி அல்லது மர வகைகளுக்கான கன்றுகளை விற்பனை செய்வது என்ற பிரிவாக இது உள்ளது.

கமர்சியல் நர்சரி

இந்த தொழில் பிரிவு விஸ்தாரமான இட பரப்பில் செய்யப்படவேண்டிய ஒன்றாகும். மேலும், கூடுதலான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும். ஏனென்றால் வாடிக்கையாளர்கள் அது விருப்பத்திற்கு ஏற்ப எந்த ஒரு செடி, கொடி அல்லது மரக்கன்று வகைகளையும் அவர்களுக்கு விற்பனை செய்யும் வகையில் இருப்பில் வைத்திருக்க வேண்டியது முக்கியம். அந்த அடிப்படையில் பூக்கள், அரியவகை தாவரங்கள், மருத்துவ குணம் கொண்ட செடிகள், பழ மரங்கள் போன்றவற்றை நாற்றுகளாக வளர்த்து பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும்.

விற்பனையை அதிகரிக்கும் விளம்பரம்

பிளான்ட் நர்சரி பிசினஸ் தொழில் முனைவோர்கள் சரியாக திட்டமிட்டு வாடிக்கையாளர்களை சேரும் வகையில் விளம்பரங்களை செய்ய வேண்டும். பொதுவான ஒரு முறை என்பது பத்திரிக்கைகளில் சம்பந்தப்பட்ட நர்சரி நிறுவனம் பற்றிய தகவல்களை விளம்பரமாக அளிப்பதாகும். இந்த முறையில் சற்று நிதானமான வளர்ச்சியை காணமுடியும்.  

இரண்டாவது முறை என்பது சம்பந்தப்பட்ட பிளான்ட் நர்சரி அமைந்துள்ள தொகுதிகளின் வீடுகள் தோறும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து விதமான செடி கொடிகளின் வகைகள், அவற்றை வாங்கும் பொழுது தரப்பட கூடிய தள்ளுபடிகள், இலவச பராமரிப்புகள் மற்றும் ஆலோசனைகள் ஆகிய தகவல்களை நோட்டீஸ் முறையில் அச்சடித்து வழங்கலாம். 

விளம்பரம் செய்வதில் உள்ள மூன்றாவது முறை என்பது திருமண அமைப்பாளர்கள், பொது நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் போன்ற பெரிய நிறுவனங்களை அணுகி அவர்களுக்கான அழகு செடி வகைகளை வாடகைக்கு அளிக்கலாம். அதன்மூலம் நர்சரி நிறுவனத்திற்கான வர்த்தக வாய்ப்பு மற்றும் விளம்பரங்களை செய்து கொள்ள முடியும். நான்காவது முறை என்பது சமூக வலைதளங்களில் நிறுவனம் சார்ந்த விஷயங்களை அளிப்பது மட்டுமல்லாமல், ஒரு வெப்சைட் ஆரம்பித்து அதில் சகலவிதமான தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் ஆகியவற்றை வீடியோ செய்தியாகவும், எழுத்து வடிவிலான செய்தியாகவும் வழங்கி வர வேண்டும்.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.