written by | October 11, 2021

தரைவிரிப்பு வணிகம்

×

Table of Content


கார்ப்பெட் பிசினஸ் தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

வீடுகளின் உள் அலங்கார பணிகளில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ள ஒரு பொருள் கார்ப்பெட் ஆகும். அடுக்குமாடி வீடுகள் மற்றும் தனி வீடுகள் ஆகியவற்றின் அளவுகளை குறிப்பிடும்பொழுது கார்ப்பெட் ஏரியா என்று சொல்வதை பலரும் கவனித்திருக்கலாம். அதாவது, ஒரு வீட்டின் உள்புற தரை அளவை குறிக்கக்கூடிய கார்ப்பெட் ஏரியா என்பது கார்ப்பெட் என்ற தரை விரிப்பின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதாக கொள்ளலாம். கார்ப்பெட் என்றவுடன் அது அறையில் விரிப்பாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் என்பதைத் தாண்டி கலை நுணுக்கங்கள் கொண்ட தயாரிப்பாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சர்வதேச அளவில் அதற்கான சந்தை மதிப்பு மற்றும் வர்த்தக வாய்ப்பு ஆகியவற்றை கொண்ட ஒரு தொழிலாகவும் அதன் தயாரிப்பு அமைந்துள்ளது. 

கார்ப்பெட் பிசினஸ் என்று எடுத்துக் கொண்டால் இந்திய அளவில் முகலாயர்களின் காலகட்டத்திலேயே அதன் முக்கியத்துவம் மக்களால் உணரப்பட்டது. குறிப்பாக, இந்தியாவில் காஷ்மீர் மற்றும் பெர்சியன் வகை கார்ப்பெட் தயாரிப்புகள் மக்களால் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆப்கானிஸ்தான் கார்ட் வகைகளும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொழிலில் ஈடுபடுவோருக்கு எல்லா காலங்களிலும் வர்த்தக வாய்ப்பு உள்ளது என்பதை உறுதியாக கூற முடியும். ஏனென்றால், நகர்ப்புற வீடுகள் மற்றும் குடியிருப்புகளில் எவ்வளவு அழகாக டைல்ஸ் அல்லது கிரானைட் வகைகளை தரைத்தளங்களுக்கு பதித்து இருந்தாலும்கூட அழகிய வண்ணங்களில் தயாரிக்கப்பட்ட கார்ப்பெட் போடப்படுவது நாகரிகமான வழக்கங்களில் ஒன்றாக மாறி இருக்கிறது.

இரண்டு வகைகள்

கார்ப்பெட் பிசினஸ் என்பது இரண்டு வகைகளாக அமைந்துள்ளது. முதலாவது அதனை நெசவு மூலம் உற்பத்தி செய்யும் தொழில் பிரிவு ஆகும். இரண்டாவது, தயாரிப்புகளை ஒரு நிறுவனம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சில்லறை விற்பனை செய்யும் வர்த்தக பிரிவு ஆகும். இந்த இரண்டு வகைகளையும் இணைத்து செய்யக்கூடிய தொழில் முனைவோர்களும் இந்திய அளவில் ஆங்காங்கே செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, சென்னை, ஹைதராபாத், மைசூர், ஜெய்ப்பூர், காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தயாரிப்பு மற்றும் விற்பனை என்ற நிலையில் பல்வேறு தனிநபர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

கார்ப்பெட் பிசினஸ் தொழில் முனைவோர்கள் மேற்கண்ட இரண்டு வகைகளில் எந்த பிரிவில் அவர்களுடைய தொழில் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக முடிவு செய்து கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான தொழில் முனைவோர்களுக்கு பொருத்தமாக இருக்கக்கூடியது சில்லறை விற்பனை செய்யக்கூடிய தொழில் பிரிவு ஆகும். அதன் அடிப்படையில் கார்ப்பெட் தயாரிக்கக்கூடிய தனி நபர்கள் அல்லது நிறுவனங்களிடமிருந்து பல்வேறு வகையான கார்ப்பெட் தயாரிப்புகளை மொத்த விலைக்கு வாங்கி சில்லறை விற்பனையாக செய்து வரலாம். தரை விரிப்பு என்ற நிலையில் பயன்படுவது மட்டுமல்லாமல் சுவர்களில் அழகிய கண்கவரும் வடிவங்களை தாங்கிய வால் டெக்கரேஷன் என்ற வகையிலும் கார்ப்பெட் வகைகளை தொங்க விடப்படுகின்றன. தரைத்தளம் மற்றும் சுவர் அலங்காரம் ஆகிய இரு நிலைகளிலும் கலை மற்றும் கலாச்சார உணர்வு ஆகியவற்றை வெளிக்காட்டும் வகையிலும், அழகியல் அம்சம் கொண்டதாகவும் கார்ப்பெட் வகைகளை தயார் செய்கிறார்கள். இந்த நுட்பமான விஷயங்களை தொழில் முனைவோர் கவனமாக உணர்ந்து அதை வர்த்தக ரீதியாக பயன்படுத்தும் திறமையை வளர்த்துக் கொள்வது அவசியம். 

நெசவு மூலம் கார்ப்பெட் தயாரிப்பு 

கார்ப்பெட் பிசினஸ் மூலம் அதன் தயாரிப்பை மேற்கொள்ள விரும்பும் தொழில் முனைவோர்கள் நிச்சயம் முன் அனுபவம் இல்லாமல் இந்த தொழிலில் ஈடுபட முடியாது. அதாவது, கார்ப்பெட் தயாரிப்பு என்பது பெரும்பாலும் ஹேண்ட்லூம் என்று சொல்லப்படும் கைத்தறி மூலமாகவே மனித உழைப்பின் மூலம் தயார் செய்யப்படுகிறது. குறிப்பாக, ஏற்றுமதி செய்யப்படும் எல்லாவிதமான கார்ப்பெட் வகைகளும் கைத்தறி மூலம் தயார் செய்யப்பட்டவை  என்பது கவனிக்கத்தக்கது. பெருநகரங்களில் கார்ப்பெட் நெசவு செய்யக்கூடிய அனுபவமிக்க தொழிலாளர்கள் நிச்சயம் இருக்க மாட்டார்கள். அவர்கள் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே தங்களுடைய தொழிலை குடும்பத்துடன் செய்து வருகிறார்கள். அதனால் நகர்புறங்களில் தொழில் ரீதியாக கார்ப்பெட் தயாரிப்பு பிசினஸ் செய்ய விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை அழைத்து வந்து தயாரிப்புப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டியதாக இருக்கும். மேலும், கார்ப்பெட் நெசவு செய்வதற்கான தறி மற்றும் அதற்கான உபகரணங்களை தகுந்த வசதிகளுடன் அமைத்து அவர்களை தொழிலில் ஈடுபடுத்த வேண்டும். கைத்தறி நெசவு முறையில் கார்ப்பெட் தயார் செய்யப்படுவதால் இந்த தொழிலுக்கு மின்சாரம் அதிகம் தேவைப்படாது. 

கார்ப்பெட் நெசவு என்பது இரண்டு வகைகளில் அமைந்துள்ளது அவற்றில் முதலாவது பழங்குடியினர் மக்கள் அவர்களுடைய பாரம்பரிய முறையில் நெசவு செய்யும் முறையாகும். இரண்டாவது முறை என்பது நகரத்தில் வாழும் மக்கள் தங்களுடைய மேம்பட்ட திறமை மூலம் நுணுக்கமான விஷயங்களை கார்ப்பெட் நெசவில் புகுத்தி தயாரிப்பது ஆகும். அதேசமயம், பழங்குடி மக்களுடைய தயாரிப்பு என்பது முற்றிலும் தனித்தன்மை கொண்ட வித்தியாசமான டிசைன்களில் அமைந்திருக்கும். பழங்குடியினர் தங்களுடைய தயாரிப்பு முறைகளில் ஊசிகள் மூலம் நூல்களை கோர்த்து தயாரிப்பது,  நூல்களை தகுந்த விதத்தில் இணைத்து முடிச்சுகள் அமைத்து தயாரிப்பது, தையல் வேலை மூலம் கார்ப்பெட் தயாரிப்பது ஆகிய மூன்று விதங்களில் தயாரிப்பு பணிகளை செய்கிறார்கள். அவர்களுடைய தயாரிப்புக்கான மூலப்பொருள்கள் பெரும்பாலும் காட்டன் அல்லது கம்பளி வகைகளாக இருக்கும். 

பொதுவாக, நகர்ப்புறங்களில் கார்ப்பெட் நெசவு செய்பவர்கள் காலத்திற்கு ஏற்றாற்போல நவீன முறைகளில் தங்களுடைய தயாரிப்பை வெளிப்படுத்துகிறார்கள். அதற்கேற்ப காட்டன் மற்றும் கம்பளி வகை நூல் ஆகியவற்றை பயன்படுத்துவதுடன் பாலியஸ்டர், அக்ரிலிக், பாலிபுரோபைலீன் மற்றும் நைலான் ஆகிய பொருட்களை பயன்படுத்தியும் விதவிதமான அளவுகளில் நாகரீகமான டிசைன்கள் கொண்டதாக கார்ப்பெட் வகைகளை நெசவு செய்கிறார்கள். அவை, குறிப்பிட்ட அளவுகளில் தயாரிக்கப்படுவதாக இருந்தாலும்கூட அவர்களுக்கு கிடைக்கும் ஆர்டர்களுக்கு ஏற்ப கார்ப்பெட் அளவுகளை மாற்றியும் தயார் செய்து தருகிறார்கள். 

கார்ப்பெட் உற்பத்தியை  வர்த்தக ரீதியாக செயல்படுத்தும் தொழில் முனைவோர்கள் அதை மொத்த வியாபாரம் அல்லது சில்லறை வியாபாரம் என்ற வகையில் தங்களுக்கான சந்தைப்படுத்தும் வேலைகளை செய்யலாம். பெரும்பாலான தயாரிப்பாளர்கள் மொத்த விற்பனை என்ற அளவில்தான் தங்களுடைய வர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள். காரணம், ஒரு பொருளை தயாரிப்பவர்கள் அதை வாடிக்கையாளர்களுக்கு சில்லறை வியாபாரம் செய்வதில் உள்ள நுணுக்கங்களை அறிந்தவர்களாக இருக்க மாட்டார்கள். அதனால், தயாரிப்பு தொழிலில் உள்ளவர்கள் மொத்த விற்பனையில்தான் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள். 

கார்ப்பெட் தயாரிப்பு தொழிலில் பவர்லூம் போன்ற எந்திரங்கள் பயன்படுத்தப்படாமல், கைத்தறி நெசவு மூலமாகவே அதை உருவாக்குவதால் அரசாங்கத்தின் சலுகைகளை பெறுவதற்கான வாய்ப்பு நிச்சயம் இருக்கிறது. மேலும், சிறந்த ரகங்கள் மற்றும் நிறங்கள் கொண்ட கார்ப்பெட் வகைகள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவ்வாறு ஏற்றுமதி செய்வதற்கு அரசாங்கம் சம்பந்தப்பட்ட கார்ப்பெட் பிசினஸ் தொழில் முனைவோர்களுக்கு  பல்வேறு சலுகைகளையும் அளித்து வருகிறது. 

கார்ப்பெட் பிசினஸ் சில்லறை விற்பனை

  • வர்த்தக ரீதியாக சில்லரை விற்பனையில் ஈடுபட விரும்பும் தொழில் முனைவோர்கள் வழக்கமான நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும். அதாவது தங்களுடைய நிறுவனத்திற்காக தேர்வு செய்யப்பட்ட பெயர், தனிநபர் நிறுவனமாக அல்லது கூட்டு நிறுவனமாக செயல்பட இருப்பதற்கான உரிமம், ஜி.எஸ்.டி வரி விதிப்பு எண் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் செயல்பட உள்ள பகுதியின் உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பெறவேண்டிய நிறுவன உரிமம் ஆகிய பொதுவான நடைமுறைகளை செய்து கொள்ள வேண்டும். 
  • நிறுவன ரீதியாக தொழிலை நடத்த சரியான ஏரியா அல்லது நகரத்தை தேர்வு செய்வது மிகவும் முக்கியமானது. ஏனென்றால், பெரும்பாலான மத்தியதர வர்க்க மக்களின் வீடுகளில் கார்ப்பெட் என்பது அதிகபட்ச செலவாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் கூட நகர்ப்புற நாகரிகம் காரணமாக நிறைய அடுக்குமாடி குடியிருப்புகளில் கார்ப்பெட் விரிப்பு என்பது தரைத்தள பாதுகாப்பு என்ற முறையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது, உயர்தரமான மார்பிள் அல்லது கிரானைட் கொண்டு அமைக்கப்பட்ட தரைத்தளம் கீறல்கள் அல்லது இதர கறைகள் காரணமாக பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருப்பதற்கும், அழகான தோற்றத்தை அளிப்பதற்கும் கார்ப்பெட் வகைகள் விரிக்கப்படுவது வழக்கத்தில் அதிகமாக மாறி வருகிறது. அதனால், இனிவரும் காலங்களில் நிச்சயம் கார்ப்பெட் பிசினஸ் என்பது தொழில் வாய்ப்புகளை கொண்டதாகவே இருக்கும். 
  • தேசிய அளவில் பல்வேறு நகரங்களில் உள்ள கார்ப்பெட் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களை தொடர்பு கொண்டு என்னென்ன வகைகள் தயாரிக்கப்படுகின்றன என்பதை தெளிவாக கேட்டு அறிய வேண்டும். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கார்ப்பெட் உற்பத்தி செய்யக்கூடிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று சம்பந்தப்பட்ட நெசவாளர்களை அல்லது தயாரிப்பாளர்களை சந்தித்து அவர்களுடன் வர்த்தக ரீதியான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களிடம் தற்போது தயாரிப்பில் உள்ள ரகங்கள் பற்றி கேட்டு அறிந்து கொள்வதுடன் தங்களுடைய நிறுவனத்திற்கு தேவையான வெவ்வேறு அளவுகள் கொண்ட ரகங்களையும் தயாரிப்பதற்கும் அவர்களை கேட்டுக் கொள்ள வேண்டும் அதற்கேற்ப மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அவர்களுடைய தயாரிப்பை கொள்முதல் செய்து தங்களுடைய நிறுவனத்தில் அழகாக கண்காட்சிக்கு வைக்க வேண்டும்.

கார்ப்பெட் ஏற்றுமதி வாய்ப்புகள் 

கார்ப்பெட் நெசவு என்பது இந்திய அளவில்  16 ஆம் நூற்றாண்டு முதல் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் உயர்தர கார்ப்பெட் வகைகளில் கிட்டத்தட்ட 75 முதல் 85 சதவிகிதம் வரை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காரணம், அவற்றின் உயர்தரமான வேலைப்பாடுகள் அமைந்துள்ளதால் பல்வேறு உலக நாடுகள் இந்தியாவிலிருந்து விதவிதமான கார்ப்பெட் வகைகளை இறக்குமதி செய்து கொள்கின்றன. குறிப்பாக சொல்வதென்றால் உலக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் மொத்த கார்ப்பெட் அளவில் சுமார் 40 சதவிகிதம் இந்திய தயாரிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் தொழில் முனைவோர்கள் தங்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் எந்தெந்த வகையில் இருக்கின்றன என்பதை சரியாக கணக்கிட்டு, கார்ப்பெட் பிசினஸ் வர்த்தகத்தை ஏற்றுமதி மூலம் சிறப்பாக செய்து வர முடியும். 

கார்ப்பெட் தயாரிப்பு மற்றும் சில்லறை விற்பனை ஆகியவற்றில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் கண்டிப்பாக ஏற்றுமதி பிரிவில் தங்களுடைய வர்த்தக வாய்ப்புகளை அமைத்துக் கொள்ள முடியும். அதற்கு தகுந்தவாறு மத்திய அரசின் ஜவுளித்துறையின்கீழ் இயங்கி வரும் சி.இ.பி.சி என்ற கார்ப்பெட் எக்ஸ்போர்ட் புமோஷன் கவுன்சில் என்ற அமைப்பு தேசிய அளவில் செயல்பட்டு வருகிறது. அந்த கவுன்சில் மூலமாக உலக அளவில் சந்தை மதிப்பு பெற்ற வகைவகையான கார்ப்பெட் தயாரிப்புகளை அடையாளம் கண்டு அவற்றை இந்தியாவில் தயாரித்து, ஏற்றுமதி செய்வதற்கான வர்த்தக வாய்ப்புகளை இந்திய தொழில் முனைவோர்களுக்கு அமைத்துத் தருகிறது. மேலும், உலக அளவிலான சந்தை வாய்ப்புகளையும் கண்டறிந்து அதுபற்றிய சகல தகவல்களையும் இந்திய தொழில் முனைவோர்களுக்கு அளித்து வருகிறது. 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.