வாகனங்களின் டென்ட் பழுதுபார்க்கும் தொழிலை எவ்வாறு தொடங்குவது
ஆட்டோமொபைல் துறை சம்பந்தமான வேலை செய்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் சொந்தமாக தொழில் செய்ய விரும்பினால், வாகனத்தில் உள்ள டென்ட் சரிசெய்யும் மையத்தை தொடங்கி இலாபகரமாக நடத்தும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த ஆட்டோ டென்ட் ரிப்பேர் சரி செய்யும் மையத்தை தொடங்கி நடத்துவதில் ஒரு சில பிரச்சினைகள் இருந்தாலும் பல்வேறு வகையான நன்மைகள் இருக்கிறது. அவ்வாறு இருக்க கூடிய பல்வேறு வகையான நன்மைகளில் முதன்மையாக நாம் கருதுவது என்னவென்றால், உங்களது ஆட்டோமொபைல் தொழில் அனுபவம் சம்பந்தமான தொழிலாக இது திகழ்கிறது என்பதே ஆகும். இவ்வாறாக பல்வேறு வகையான நபர்களிடமிருந்து நன்மதிப்பு பெற்றுள்ள நீங்கள் சொந்தமாக இத்தகைய தொழிலை ஆரம்பிக்கும் போது அவர்களை உடனடியாக உங்கள் வாடிக்கையாளராக பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. நீங்கள் ஏற்கனவே வாகனங்களை பழுது பார்க்கும் சம்பந்தமான தொழில் செய்பவராக இருந்தால், இத்தகைய புது தொழில் அதனுடன் இணைத்து செயலாற்றும் போது வாடிக்கையாளர் வேறு இடங்களைத் தேடிச் செல்லாமல் ஒரே இடத்தில் அனைத்து வகையான ரிப்பேர் வேலை செய்யும் வாய்ப்பை பெறுவார்கள்.
டென்ட் பழுதுபார்க்கும் தொழில் என்றால் என்ன
என்பதைப் பற்றி குறிப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஏனென்றால், இந்த ஆட்டோமொபைல் துறை சம்பந்தம் இல்லாதவர்க்கும் டென்ட் சரிசெய்யும் நிறுவனத்தை தொடங்க வழிவகுக்கும் என்பதால். இந்த டென்ட் பழுதுபார்க்கும் நிர்வாகத்தை சுருக்கமாக பி.டி.ஆர் என்று குறிப்பிடுவார்கள் அதாவது பெயிண்ட்லஸ் டென்ட் ரிமூவல். பி.டி.ஆர் என்பது விபத்து காரணமாக வாகனங்களில் ஏற்படும் ஒடுக்கு மற்றும் ஒடுக்குகளை சரி செய்யும் முறை ஆகும், இவ்வாறு செய்யும் போது வாகனத்தில் மீது பூசப்பட்டுள்ள வண்ணங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் கவனித்து கருவிகளை இயக்க வேண்டும். இதிலும் சில நபர்கள் பெயிண்ட் டச் அப் செய்து அதன் மூலமாகவும் தனியாக வாடிக்கையாளரிடம் வசூல் செய்து லாபம் அடைவார்கள். இந்த கார் டென்ட் பழுதுபார்க்கும் தொழில் மிகவும் பிரபலமாக அடைவதற்கு முன்னர் வாகனத்தில் விபத்து காரணமாக ஏதேனும் பழுது ஏற்பட்டால் அது சம்பந்தமான அனைத்தையும் புதிதாக மாற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த கார் டென்ட் பழுதுபார்க்கும் தொழில் மிகவும் வளர்ச்சி அடைந்த பிறகு அவ்வாறு முழு பாகத்தையும் மாற்றாமல் அதில் ஏற்பட்ட சில ஒடுக்குகளை கருவியில் மூலம் சரி செய்வதால் வாடிக்கையாளரின் பெரும் பணம் மிச்சமாகும். வாகனத்தை பார்க்கிங் செய்யும் இடத்தில் ஏற்படும் சில விபத்துகளும், சிக்னலில் வாகனத்தை நிறுத்தும் போது ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்ளும் சில விபத்துகளும், எதிர்பாராமல் எதிரெதிரே மோதிக்கொள்ளும் வாகனங்களாலும் ஏற்படக்கூடிய ஒடுக்குகளை பழுது பார்ப்பதே இந்தத் தொழிலின் முக்கிய அம்சமாகும்.
தொழில் ஆரம்பிப்பதற்கான நடைமுறை வழிகள்
-
I) திட்டமிடல்:
ஒரு சொந்த தொழில் முனைவோராக நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் என்னவென்றால் அந்த தொழிலை ஆரம்பிப்பது முதல் சிறப்பாக நடத்தி செல்லும் வரையிலான அனைத்து காரணிகளை பற்றி சிந்தனை செய்து, அச்சிந்தனையை சிறப்பாக செயலாற்றக் கூடிய திட்டங்களை வகுக்க வேண்டும்.
-
II) சட்டப்பூர்வ தொழில் சான்றிதழ் பெறவும்:
இந்த தொழில் நிறுவனமும் உங்களது பெயரில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற சான்றிதழ் பெறுவது எதிர்காலத்தில் ஏற்படும் பல சிக்கல்களை தவிர்க்க உதவுகிறது. ஆகவே நீங்கள் வாகன ஒடுக்குகளை சரிபார்க்கும் தேர்ந்தெடுத்த உடன் அதற்கேற்ற முகவரியில் உங்களது நிறுவனப் பெயரை கொண்டு சட்டபூர்வமாக பதிவு செய்துவிடுங்கள்.
III) வருவாய் மற்றும் வரி சார்ந்த இடங்களில் பதிவிடுங்கள்:
மத்திய மற்றும் மாநில அரசின் வரிச் சலுகைகளை பெறுவதற்கு இத்தகைய வருவாய்த் துறை அலுவலகங்களில் உங்களது பிடிஆர் தொழிலை பதிவு செய்து அதற்கு ஏற்ற பதிவு எண்களை பெருக.
-
IV) மாதாந்திர வருமானத்தை ஆய்வு செய்வது அவசியம்:
உங்களுக்கென்று தனி ஒரு தொழில் முனை வங்கி கணக்கை ஆரம்பித்து அதன் மூலமாக அனைத்து வரவு செலவுகளையும் செய்ய முற்படும்போது உங்களது மாத வருமானத்தின் அளவுகோலை நிர்ணயிக்க முடியும். இவ்வாறு வங்கி கணக்கின் மூலம் உங்களது வரவு செலவுகளை செய்யும்போது எளிதாக வரவு செலவை அழிப்பதோடு மட்டுமல்லாமல் வெளியிலிருந்து பார்ப்பதற்கு நீங்கள் ஒரு வளர்ச்சியடைந்த தொழில் நிறுவனத்தின் நிறுவனராக தெரிவீர்கள்
-
V) காப்பீடு மற்றும் அனுமதி உரிமங்களை பெறுக:
காப்பீடு என்பது அனைத்து வகையிலும் உதவி செய்யக்கூடிய ஒரு திட்டமாக திகழ்கிறது. இவ்வாறு உங்களது தொழிலில் உள்ள உபகரணங்களுக்கும் வேலை ஆட்களுக்கும் காப்பீடு செய்வதன் மூலம் பிற்காலத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஓரளவு உதவியைப் பெற்று சமாளித்துக் கொள்ள முடியும். சில மாநில கட்டுப்பாடுகளின் படி இத்தகைய காப்பீடு பெறுவது சட்டபூர்வமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
-
VI) சந்தைப்படுத்துதல் அவசியம்:
நீங்கள் யார், எத்தகைய தொழிலை செய்கிறீர்கள், உங்களது தொழில் நிறுவனம் எங்கு அமைந்துள்ளது, உங்களிடம் உள்ள சிறப்பம்சங்கள் என்ன போன்றவற்றை மக்களிடம் கொண்டு சேர்ந்தால் மட்டுமே நீங்கள் தொழிலில் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது. அதற்கு நீங்கள் பல வித சந்தைப்படுத்தும் மார்க்கெட்டிங் முயற்சியான வலைதள இணைப்பு உருவாக்குதல், சமூக வலைகளில் அறிவிப்புகளை அறிவித்தல், பத்திரிக்கை போன்ற செய்தி ஊடங்களில் விளம்பரங்களை அறிவித்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்
வாகனங்களில் உள்ள டென்ட் சரி செய்யும் தொழிலின் நன்மைகள்:
-
a) பெரிய அளவில் முதலீடு இல்லை:
நீங்கள் இந்த தொழில் மூலமாக எதுவும் தயாரிக்கப் போவது இல்லை சரி செய்ய மட்டுமே போகிறீர்கள். ஆகவே ஒருசில கருவிகளுக்கு மட்டுமே முதலீடு செய்து பெருமளவு உங்களது அனுபவத்தை முதலீடாக வைத்தே ஆரம்பிக்கக் கூடிய தொழிலாக இருப்பதால் தொழில் ஆரம்பிக்கும் போது அதிக பணம் தேவைப்படுவதில்லை.
-
b) அதிக லாபம் பெறக்கூடிய தொழிலாக உள்ளது:
இந்தத் தொழிலில் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே பணி செய்து பல்லாயிரக்கணக்கான ரூபாய் சர்வீஸ் சார்ஜ் ஆக பெற்று அதிக லாபம் அடைய முடியும். குறிப்பாக வாகனத்தில் ஏற்பட்ட சிறிய அளவிலான ஒடுக்குகளை சரிசெய்வதற்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை பெறுகிறார்கள். இந்த ஒடுக்குகளை சரிசெய்வதற்கு அதிக நேரமும் எடுக்கப்போவதில்லை குறிப்பாக சொல்ல வேண்டுமேயானால் 20 முதல் 30 நிமிடங்களில் அனைத்து வேலையும் செய்துவிட முடியும்.
-
c) பிரகாசமான எதிர்காலம் கொண்ட தொழில்:
பெரும்பாலான பெருநகரங்களில் கார் வைத்திருப்பவர்கள் இடம் மட்டுமே இத்தகைய தொழில் பற்றிய விழிப்புணர்வு இப்போது வந்துள்ளது. பல கிராமத்தில் உள்ள கார் வைத்திருப்பவர்களுக்கு ஒரு வாகனத்தில் உள்ள ஒடுக்குகளை சரி செய்வதற்கு குறைந்த செலவு மட்டுமே ஆகும் என்ற அறியாமையின் காரணமாக அவர்கள் அந்த கார்களை அப்படியே ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தொழில் வளர்ச்சியின் அளவில் பெருகி வரும் போது அனைவரும் தங்களது வாகனங்களில் உள்ள சிறு ஒடுக்குகளை சரிசெய்து அழகான கார்களை ஓட்ட விரும்புவார்கள்.
-
d) அதிக தொழில் வளர்ச்சி உடைய வணிகம்:
இங்கு இத்தகைய கார் டென்ட் சரிசெய்யும் தொழிலை எடுத்து நடத்தி வரும் பொழுது, உங்களிடம் வரும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ற இதர பிற ஆட்டோ மொபைல் சம்பந்தமான தொழில்களான வாட்டர் வாஷ், வாடகை கார், கார் இன்சூரன்ஸ், பழைய கார் விற்பனை, உதிரி பாகங்கள் விற்பனை போன்றவற்றை எடுத்து நடத்தும் வாய்ப்பு உள்ளது. அதிகமான மக்கள் பழைய மாடல் கார்களை சிறு விபத்து காரணமாக ஓரமாக நிறுத்திவிட்டு புது கார்களை வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவரிடம் அந்த பழைய மாடல் கார்களை நீங்களாகவே வாங்கி சிறு சிறு ஒடுக்குகளை உங்கள் தொழில் அனுபவத்தின் மூலம் சரி செய்து நல்ல விலைக்கு விற்க முடியும்.
-
e) எளிமையான செயற்பாட்டு வடிவம் உள்ள தொழில்:
இந்த பிடிஆர் தொழில் செய்வதற்கு தனியாக இடம் இல்லை என்றாலும் வாடிக்கையாளரின் இடத்திற்கே சென்று அவர்கள் வாகனத்தில் உள்ள ஒடுக்குகளை சரிசெய்து பணம் பெற்றுக் கொள்ள முடியும். ஒரு இடத்தை நிறுவி இந்த பிடிஆர் தொழிலை செய்ய விரும்பினாலும் இதற்கென்று தனியாக பெரிய இடம் தேவையில்லை, நீங்கள் உங்கள் வீட்டு உடன் இணைந்த பகுதியிலோ அல்லது வேறு தொழில் செய்து கொண்டிருக்கும் இடத்தில் அருகாமையிலோ நிறுவ முடியும். பெயிண்ட் டச்-அப், இன்டீரியர் பழுதுபார்ப்பு அல்லது விண்ட்ஷீல்ட் பழுதுபார்ப்பு என ஒரு வாகனத்திற்கு முழு ஆய்வு செய்து வாடிக்கையாளர்களிடம் முழு ஒப்பந்த வகையிலான ஆர்டர்கள் எடுத்து அனைத்து தொழில்களையும் தாங்களாகவே முன்னெடுத்து செய்து கொடுத்து அதற்குரிய கமிஷன் பெறலாம்.
-
f) பட்டப்படிப்பு அறிவு தேவையில்லை:
இந்தத் தொழிலை ஆரம்பித்து நடத்துவதற்கு எந்த பட்ட மேற்படிப்பும் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. அது மட்டுமல்லாது மற்ற தொழில்களான தயாரிப்பு தொழிலாக இருந்தாலும், வாங்கி விற்பனை செய்யும் தொழிலாக இருந்தாலும், பண விஷயத்தில் காரணமாக பெரிய தயக்கம் ஏற்படும். ஏனென்றால் அத்தகைய தொழிலில் நீங்கள் பெரிய முதலீடு இட்ட பிறகு நீங்கள் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும், ஆனால் இத்தகைய பழுதுபார்க்கும் தொழில் செய்வதால் உங்களுக்கு எந்தவித முதலீடும் தேவைப்படுவது இல்லை. சில லட்சங்களை இந்த தொழிலை ஆரம்பித்து பல லட்சங்களை வருமானமாக ஈட்டக் கூடிய வாய்ப்பு இத்தகைய பிடிஆர் தொழிலில் உள்ளது.
பிடிஆர் தொழிலில் உள்ள சிக்கல்கள்:
இத்தகைய வாகனம் டென்ட் பழுதுபார்க்கும் தொழிலுக்கு மிகப்பெரிய பண முதலீடு தேவைப்படாமல் இருந்தாலும் உங்களது அதிகப்படியான உழைப்பு அனுபவத்திற்குப் பிறகு மட்டுமே இதை செய்ய முடியும். முக்கியமாக அதிக விலையுள்ள கார்களில் உள்ள பழுதுகளை நீங்கள் முற்படும் போது ஏதேனும் உங்களது அனுபவமின்மை காரணமாக தவறு ஏதும் நிகழ்ந்தால் பெரிய அளவில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. ஆகவே உங்களுக்கு அதிகப்படியான பழுதுகளை சரி செய்யும் அனுபவ அறிவு தேவைப்படுவது மட்டுமல்லாமல் அதில் ஏற்படும் சில சிக்கல்கள் எந்த வகையில் சமாளிக்க வேண்டும் என்ற அனுபவமும் தேவை. தொழில் நுட்ப அறிவை பெற குறைந்தபட்சம் ஓரிரு ஆண்டுகள் நீங்கள் வேறு ஒரு நிறுவனத்திடம் இது சம்பந்தமான வேலையை செய்து கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் தொழில் செய்ய ஆரம்பிக்கும் பொழுது மிக விலை உயர்ந்த காரணங்களில் நேரடியாக செய்யாமல் குறைந்த மதிப்புள்ள கார்களின் பள்ளங்களை சரிசெய்து அனுபவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறாக நீங்கள் தொழிலில் மிகப்பெரிய லாபம் அடைவதற்கான முயற்சிகள் மற்றும் கால அளவுகள் அதிகம் என்பதே இதில் உள்ள மிக முக்கிய குறைபாடு. சிறந்த அனுபவம் இல்லாமல் நீங்கள் இந்த தொழில் செய்யும்போது ஏற்படும் சில சிக்கல்களால் உங்களது மற்ற தொழிலில் இருக்கும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை இறக்க ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். ஆகவே இந்தத் தொழிலை நீங்கள் தேர்ந்தெடுக்கும் முன்பு ஒருமுறைக்கு பலமுறை நன்றாக யோசித்து எந்தவிதத்திலும் உங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்குமேயானால் மட்டுமே இறங்கவும்.