written by | October 11, 2021

ஜீரோ முதலீட்டு வர்த்தகம்

×

Table of Content


இன்றைய காலகட்டத்தில் முதலீடு இல்லாமல் செய்யக்கூடிய தொழில் பிரிவுகள்

உத்தியோகம் புருஷ லட்சணம் என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது, எந்த வேலை வெட்டியும் இல்லாமல் சும்மாவே இருப்பது மரியாதைக்குரிய விஷயம் அல்ல என்பதே அவருடைய உள் அர்த்தம் ஆகும். பலருடைய கவலை என்னவென்றால் என்னுடைய படிப்புக்கும், தகுதிக்கும் சரியான வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதாக இருக்கிறது. வெற்றி அடைந்த தொழில் அதிபர்களின் கருத்து என்னவென்றால் ஒரு புத்திசாலி தனக்கான வேலை வாய்ப்பை அவனாகவே உருவாக்கிக் கொள்கிறான் என்பதாகும். அந்த அடிப்படையில் ஒரு தொழில் முயற்சியை தொடங்கி அதை படிப்படியாக வெற்றியை நோக்கி எடுத்துச் செல்ல வேண்டுமானால் பணம் என்ற மாபெரும் சக்தி அவசியம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், தகுந்த திறமையும், அனுபவமும் உடையவர்கள் சொந்தத் தொழில் செய்வதற்கு பணம் அதாவது முதலீடு என்பது இல்லாமல் தங்களுடைய உழைப்பு மற்றும் திறமையின் அடிப்படையில் அவர்களுக்கான வர்த்தக அல்லது தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற நிலை தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற சூழலில் ஏற்பட்டுள்ளது. 

அதாவது, ஜீரோ இன்வெஸ்ட்மெண்ட் பிசினஸ் என்ற முதலீடு இல்லாமல் செய்யக்கூடிய தொழில் என்பது அனைவரது ஆர்வத்தையும் தூண்டக் கூடிய ஒன்றாகும். ஆனால், உண்மையில் அப்படிப்பட்ட தொழில் முயற்சிகளில் பணம் என்ற சக்தியை முதலீடு செய்யவில்லை என்பதை தவிர, தனது விலை மதிப்பற்ற காலம் மற்றும் திட்டமிட்ட உழைப்பு ஆகியவற்றை சொந்த முதலீடாக செய்துதான் ஒருவர் தொழில் வெற்றியை அடைய முடியும் என்பதை ஒரு சிலர்தான் அறிந்து வைத்துள்ளார்கள். தற்போதைய சூழ்நிலையில் முதலீடு இல்லாமல் செய்யக்கூடிய தொழில் பிரிவுகள் எவை என்பதை இங்கே பார்க்கலாம். 

கோச்சிங் கிளாஸ்

இந்த தொழில் பிரிவு என்பது கல்வி சார்ந்த ஒன்றாகும். குறிப்பிட்ட ஒரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் தங்களுடைய பாடப் பிரிவில் உள்ள நுட்பமான விஷயங்களை மாணவர்கள் மதிப்பெண் பெறுவதற்கான வாய்ப்பாக மாற்றக்கூடிய விதத்தில் தகுந்த வழிகாட்டுதல்களை அளிப்பதன் மூலம் அவர்களுக்கான தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம். நகர்ப்புற மாணவ, மாணவிகள் வெளியில் அலைந்து திரியாமல் வீட்டிலிருந்தபடியே தங்களுடைய கல்வி வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும் பொழுது அதை அவர்கள் நிச்சயம் பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த தொழில் முயற்சியை மேற்கொள்ள விழையும் பட்டதாரி தொழில் முனைவோர் குறிப்பிட்ட காலத்துக்கு அவர்களுடைய கோச்சிங் திறமையை வளர்த்துக் கொள்ளும் பயிற்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

கண்டெண்ட் எழுத்தாளர்

இந்த தொழில் பிரிவும் ஜீரோ இன்வெஸ்ட்மெண்ட் பிசினஸ் முயற்சியாக இருக்கிறது. வர்த்தகம், தொழில், கல்வி, சந்தை நிலவரம், ஆன்மீகம், ஜோதிடம், மனோதத்துவம், அரசியல், பொருளாதாரம், தனிமனித முன்னேற்றம் உள்ளிட்ட வெவ்வேறு பிரிவு விஷயங்களில் உள்ள அடிப்படை நுணுக்கங்களை அறிந்த தனி நபர்கள் அதை நிச்சயம் தொழில் வாய்ப்பாக மாற்றிக்கொள்ள முடியும். அதற்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் அவர்களுக்கென்று ஒரு பிளாக் தொடங்கி தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வரலாம் அல்லது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வரலாம். அதன்மூலம் படிப்படியாக தங்களை வளர்த்துக் கொண்டு தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை கேட்கக் கூடிய வகையில் அவர்களுக்கான விளம்பர வாசகங்கள் அல்லது வர்த்தக ரீதியான கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி கொடுக்கலாம்.

மொழி பெயர்ப்பு பிரிவு

சுயதொழில் வாய்ப்பில் இந்தப் பிரிவு ஒரு முக்கிய இடத்தை பெறுகிறது. அனைவருக்கும் தங்களுடைய தாய்மொழியை பேசுவதற்கும், எழுதுவதற்கும் நிச்சயம் தெரிந்து வைத்திருப்பார்கள். அதன் அடிப்படையில் ஒருவர் அறிந்துள்ள இதர மொழிகளில் உள்ள விஷயங்களை தன்னுடைய தாய் மொழியில் மொழி பெயர்ப்பு செய்வதற்கும் தொழில் வாய்ப்பு இருக்கவே செய்கிறது. அதேபோல ஒருவர் நன்றாக அறிந்த மொழியில் உள்ள விஷயங்களை இன்னொரு மொழியில் அதாவது ஆங்கிலம், பிரெஞ்ச், ஜப்பான் உள்ளிட்ட மொழிகளில் ட்ரான்ஸ்லேஷன் செய்வதற்கான தேவையும் இன்றைய சந்தை வாய்ப்பாக இருக்கிறது. ஏனென்றால் சர்வதேச அளவில் செயல்படும் நிறுவனங்கள் அவர்களுடைய தயாரிப்பை விற்பதற்கு, குறிப்பிட்ட மாநிலத்தின் மொழிகளில் அவர்களுடைய வர்த்தக விஷயங்களை மொழி பெயர்ப்பு செய்து அளிக்க வேண்டும். அதனால், சிறப்பாக ட்ரான்ஸ்லேஷன் செய்பவர்களுக்கான தேவை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.

சிறு தொழில் ஆலோசனை

இன்றைய பொருளாதார சூழலில் தொழில் முனைவோர்களுக்கு அல்லது தொழில் செய்ய திட்டமிடும் தனி நபர்களுக்கு அவர்களுக்கான தயாரிப்பு பொருள் பற்றிய சந்தை நிலவரம் மற்றும் தயாரிப்பு கருவிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தெளிவான புரிதலை அளிப்பது என்பது ஒரு தொழில் முயற்சியாக வளர்ந்து வருகிறது. இந்த தொழில் பிரிவை இண்டஸ்ட்ரியல் கன்சல்டன்ட் என்றும் குறிப்பிடலாம். குறிப்பாக, சிறு தொழில் செய்ய விரும்பும் தனி நபர்களுக்கு ஆலோசனை என்பது மிகவும் அவசியம். அதனால், தகுந்த அனுபவம் மற்றும் கல்வித்தகுதி பெற்றவர்கள் தேசிய அளவில் நுகர்பொருள் தயாரிப்புகளுக்கான சந்தை, மற்றும் உற்பத்தி முறைகள் மற்றும் தயாரிப்பு உபகரணங்கள் ஆகிய நிலைகளில் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, ஒரு தயாரிப்பை மேற்கொள்வதற்கான அரசு உரிமங்கள், சந்தைப்படுத்துதல், முதலீடு, கருவிகளை வாங்குவதற்கான வழி உள்ளிட்ட பல விஷயங்களை தெளிவாக புரிந்துகொண்டு, அந்த விஷயங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழி காட்டுவதன் மூலம் ஜீரோ இன்வெஸ்ட்மெண்ட் பிசினஸ் பிரிவில் நிச்சயம் வெற்றி காணலாம். 

இணையதள வடிவமைப்பு

இன்றைய வர்த்தக சூழலில் சிறப்பான வர்த்தக வாய்ப்புகள் கொண்ட தொழில் பிரிவு வெப் டெவலப்மெண்ட் என்ற இணையதள வடிவமைப்பு ஆகும். கம்ப்யூட்டர் குறித்த ஆர்வம் உள்ள எவருமே குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின்னர் நிச்சயம் இந்த துறையில் ஈடுபட இயலும். அதற்கான சுய முயற்சியும், தகுந்த பயிற்சியும் மேற்கொள்ளும் தனிநபர்கள் வீட்டிலிருந்தபடியே எளிதாக வருமானம் ஈட்ட முடியும். அதாவது, பிரீலான்ஸ் வெப் டிசைனர் என்ற வகையில் தங்களுக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம். அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் சொந்தமான இணைய தளம் என்பது அவசியமான ஒன்று. அதன் அடிப்படையில் திறமை மிகுந்த பிரீலான்ஸ் வெப் டெவலப்பர் ஒருவரது தொழில் திறமையை வர்த்தக நிறுவனங்கள் அறிந்து கொள்ளும் வகையில் சந்தைப்படுத்துவதன் மூலமாக ஏராளமான வாய்ப்புகளை பெற முடியும்.

எடிட்டோரியல் சர்வீஸ்

கற்பனை வளம் மிகுந்த, எழுத்துத்துறையில் ஆர்வம் கொண்டவர்கள் இந்த துறையில் நல்ல வாய்ப்பை பெறுகிறார்கள். கூடுதலாக, இலக்கண சுத்தமாகவும், தவறு இல்லாத வாக்கிய அமைப்பு கொண்ட எழுத்து திறமையும் உடையவர்கள் காப்பி ரைட்டர் என்ற முறையிலும் ப்ரூப் ரீடர் என்ற முறையிலும் பத்திரிக்கை துறை அல்லது தொலைக்காட்சி துறைகளில் பிரீலான்சர் ஆக பணியாற்றலாம். மேலும், தினசரி பத்திரிகைகள் அல்லது வாராந்திர பத்திரிக்கைகள் ஆகியவற்றுக்கு தேவையான பல்வேறு கண்டெண்ட் வகைகளை அவர்களது தேவைகளுக்கு ஏற்ப தயாரித்தும் அளித்து வரலாம்.

வீடியோ எடிட்டிங்

தொழில்நுட்பம் சார்ந்த இந்த பிரிவானது இன்றைய சமூக தள வளர்ச்சிபெற்ற காலச் சூழ்நிலையில் பல தனி நபர்களுக்கு வருமானத்தை ஈட்டித் தருவதாக அமைந்திருக்கிறது. அதாவது, ஆன்லைன் அல்லது தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்படும் குறிப்பிட்ட வீடியோ, குறும் படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் ஆகியவற்றை கச்சிதமாக அவற்றின் மையக் கருத்துக்கு ஏற்றவகையில் எடிட்டிங் செய்வது என்பது மிக அவசியம். சில காலம் இந்த துறையில் ஒருவரிடம் பயிற்சி பெற்ற பின்னர் சொந்தமாகவே இதை வீட்டில் இருந்தபடி ஒருவர் செய்ய முடியும். அதற்கேற்ப கலைத்துறை ஈடுபாடு கொண்டவர்கள் இன்னும் கூடுதலான வாய்ப்பை இந்தத் துறையில் பெறுகிறார்கள்.

பயணத் திட்ட  வடிவமைப்பாளர்

ஜீரோ இன்வெஸ்ட்மென்ட் பிசினஸ் என்ற நிலையில் நல்ல வர்த்தக மதிப்பு கொண்ட தொழில் பிரிவு டிராவல் பிளானிங் என்ற பயணத்திட்ட வடிவமைப்பு என்பதாகும். இந்த தொழில் பிரிவு காலத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ஒன்றாகும். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. அவ்வாறு வரக்கூடிய அல்லது இன்னொரு நாட்டுக்கு செல்லக்கூடிய உள்நாட்டு பயணிகள் அல்லது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு, அவர்கள் செல்லும் பகுதிக்கான பயண முறைகள், டிக்கெட் புக்கிங் செய்வது, தங்குவதற்கான விடுதிகள் ஏற்பாடு செய்வது, சைட் சீயிங் என்ற முறையில் சுற்றிப் பார்ப்பது, ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கான வழித்தடங்களை குறிப்பிடுவது என்ற வகையில் சேவைகளை ஆன்லைன் முறையில் அளிக்கலாம். சுற்றுலா பயணிகள் கூகுள் உள்ளிட்ட பல்வேறு இணையதளங்களில் மூலமாக குறிப்பிட்ட இடத்தை அறிந்து பயணம் செய்யும் நிலையில், தனி நபர் மூலம் கச்சிதமான தகவல்களை நம்பகமாக பெற முடியும் என்றால் அதை பயணிகள் வரவேற்கவே செய்வார்கள்.

திருமண திட்ட வரைவாளர்

ஜீரோ இன்வெஸ்ட்மெண்ட் பிசினஸ் என்ற நிலையில் இந்த தொழில் பிரிவு பற்றி அனைவரும் அறிந்திருப்பார்கள். ஒரு தனிப்பட்ட குடும்பத்தில் நடக்கும் திருமணம் என்பது சமூக அளவிலான முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் ஒரு திருமணத்தை நல்ல முறையில் நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். தனிக்குடும்பங்கள் பெருகிவிட்ட தற்போதைய நகர்ப்புற வாழ்க்கையில் திருமணம் போன்ற பெரிய விஷயங்களை சரியாக நடத்தி முடிப்பதற்கு தேர்ச்சி பெற்ற ஒரு  டீம் ஒர்க் மிக அவசியம். அந்த நிலையில் மண்டபம் புக்கிங் செய்வது முதல் திருமண விருந்து முடிந்து தாம்பூலம் தருவது வரையில் இருக்கக்கூடிய பாரம்பரிய பழக்க வழக்கங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை சம்பந்தப்பட்ட குடும்ப பாரம்பரியத்திற்கு ஏற்ப முறைப்படுத்தி ஒரு திட்டமாக வடிவமைத்து அளிப்பது என்பது தனிப்பட்ட ஒரு திறமையாகும். சமூகத்தில் நடைபெறும் அனைத்து விதமான நிகழ்ச்சிகளையும் கூர்ந்து கவனிப்பவர்கள் இந்த தொழில் பிரிவில் சிறப்பாக செயல்பட முடியும். கொஞ்சம் அனுபவம் பெற்றவர்கள், திருமணம் சம்பந்தப்பட்ட சேவை அளிப்பவர்களை ஒன்றிணைத்து, மொத்த திருமண நிகழ்ச்சியையும் நடத்தக்கூடிய வாய்ப்பையும் பெறலாம். 

ட்ரான்ஸ்கிரிப்ஷன் சேவைகள்

ஆடியோ அல்லது வீடியோ பதிவுகளை எழுத்து வடிவத்தில் மாற்றி கொடுக்கும் இந்த தொழில் பிரிவும் ஜீரோ இன்வெஸ்ட்மெண்ட் பிசினஸ் தொழில் பிரிவாக உள்ளது. மருத்துவம் சார்ந்த தகவல் தொழில்நுட்பம், விளம்பரங்கள், பிரபலங்களின் பேச்சுக்கள் அல்லது ஆன்மீகம் மற்றும் யோகா சார்ந்த ஆடியோ அல்லது வீடியோ ஆகியவற்றின் எழுத்து வடிவம் என்பது அதற்கான பயன்பாட்டு அடிப்படையில் பலருக்கும் அவசியமாக இருக்கிறது. அந்த அடிப்படையில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்த தனிநபர்களுக்கு இந்தத் துறை நல்ல வாய்ப்பு அளிக்கிறது. மொழி வளம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் திறமைகளை வளர்த்துக்கொண்டு இந்த ட்ரான்ஸ்கிரிப்ஷன் சர்வீஸ் துறையில் வருமானத்தை ஈட்ட முடியும். அதற்கு ஏற்ற வகையில் பல்வேறு ஆன்லைன் பயிற்சிகள் அளிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட தொழில் பிரிவுகள் தவிரவும், ஜீரோ இன்வெஸ்ட்மெண்ட் பிசினஸ் அடிப்படையில் ஆன்லைன் உடற்பயிற்சி மற்றும் டான்ஸ் கிளாஸ், இசை பயிற்சி அளிப்பது, விளையாட்டு துறையினருக்கான குறிப்புகள், அழகு கலை குறிப்புகள், ரெஸ்யூம் ரைட்டிங், இன்சூரன்ஸ் ஏஜென்சி, ரியல் எஸ்டேட் ஏஜென்சி  உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நிறைய வாய்ப்புகள் இன்றைய காலகட்டத்தில் இருக்கின்றன. ஆர்வம் உள்ள தனிநபர்கள்  மேற்கண்ட துறைகளில்  ஈடுபடும் நிலையில் அவர்களுடைய தொடர் முயற்சிகள் மூலமாக நிச்சயம் தொழில் முனைவோராக மாற முடியும். 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.