written by | October 11, 2021

கரிம வேளாண்மை வணிகம்

×

Table of Content


ஆர்கானிக் ஃபார்மிங் என்ற இயற்கை விவசாயம் மற்றும் அதன் சாதக-பாதக அம்சங்கள்

இன்றைய சூழலில் பெரும்பாலானோர் இயற்கை விவசாயம், இயற்கை உணவு என இயற்கையை நோக்கி திரும்பி உள்ளனர். மாறி வரக்கூடிய கால நிலையும் மக்களுக்கு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதனால், இயற்கை வேளாண்மையின் அவசியத்தை ஆய்வாளர்கள் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். அதுபற்றி விவசாயிகள் மட்டுமின்றி அனைவரும் தெரிந்து  கொள்வது மிக அவசியமாகும். இயற்கை வேளாண்மையில் எல்லா உயிரிங்களும் ஏதாவது ஒரு வகையில் நன்மையையே செய்கின்றன. பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று மற்றும் ஆகாயம் ஆகியவற்றை பாதிக்காத வகையில் இயற்கை வேளாண்மை செய்யும் முறையான ஆர்கானிக் ஃபார்மிங் என்ற பாரம்பரிய விவசாயம் இந்திய அளவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இயற்கை வேளாண்மை என்பது உயிருக்கு தீங்கு விளைவிக்கின்ற இரசாயன உரங்களையோ, வேதியியல் பூச்சிக் கொல்லி அல்லது களைக் கொல்லி ஆகியவற்றை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வதாகும். இயற்கை வேளாண்மைக்கு தனிப்பட்ட எந்த ஒரு கொள்கைகளும் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு வேளாண் விளைபொருள் உற்பத்தியாளரும் அறிந்த பாரம்பரியமான வழிமுறைகள்தான் இதில் கடைபிடிக்கப்படுகிறது. ஆர்கானிக் ஃபார்மிங் முறையில் முக்கியமான அம்சங்கள் என்பவை பயிர் சுழற்சி முறை மற்றும் கலப்பு பயிர்கள் பயிரிடுதல் ஆகியவையாகும். இந்த முறையானது சுற்றுச் சூழலுக்கு உகந்தது என்பது மட்டுமல்லாமல், வர்த்தக மதிப்பீட்டின்படி குறைந்த செலவில் அதிக உற்பத்தி மற்றும் லாபம் தரக்கூடியதாக முறையாகவும் உள்ளது. அது பற்றிய பல்வேறு தகவல்களை இங்கே காணலாம்.

பொதுவான நன்மைகள்

பொதுவாக, நடைமுறையில் உள்ள இரசாயன வேளாண்மை முறையில், உரங்கள், பயிர்ப் பாதுகாப்பு ரசாயனப் பொருட்கள் இவற்றை சந்தையிலிருந்து வாங்குவதற்கு குறிப்பிட்ட முதலீடு செய்ய வேண்டும். இயற்கை வேளாண்மை முறையில், அனைத்துப் பொருட்களும் ஒருவரது பண்ணையிலிருந்தே தயாரிக்கப்படலாம். அந்த அடிப்படையில் கிராமப்புறப் பகுதியிலுள்ள உள்நாட்டுக் கால்நடைகள், வேளாண் குடும்பங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. மேலும், பண்ணை மற்றும் தோட்டங்களிலிருந்து சரியான வளர்ப்பு முறை பின்பற்றப்பட்டு விளையும் பயிர்களிலிருந்தே, தரமான விதைகள் எடுத்துப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த முறை பயன் தருமா..?

கால மாற்றத்தின் அடிப்படையில் ரசாயன முறைகளை பயன்படுத்தியே கடந்த 35 40 ஆண்டுகளாக வேளாண் விளை பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்திருக்கிறது. அந்த நிலைகளில் இருந்து மீண்டு, பாரம்பரிய முறைகளை பயன்படுத்தி விளைச்சலை நல்ல முறையில் பெற வேண்டும் என்ற நிலையில் ஆரம்பகட்ட சிக்கல்கள் ஏற்படுவது சகஜம். அதன் அடிப்படையில், ஆர்கானிக் ஃபார்மிங் என்ற இந்த முறையானது அனைவருக்கும் தேவையான தானியங்களை உற்பத்தி செய்ய ஏற்றதா, இந்த முறை பொதுவான நன்மைகளுக்கு உகந்ததா, தரமான பொருட்களை இந்த முறை உற்பத்தி செய்கிறதா, விவசாயிகள் அனைவரும் இந்த முறையை பயன்படுத்த இயலுமா, அவ்வாறு பயன்படுத்த விரும்புபவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப அறிவு இல்லாத நிலையில் அதை எங்கிருந்து அவர் பெறுவார் ஆகிய நிலைகளில் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன. இந்த அனைத்து கேள்விகளுக்கும் சாதகமான பதில்கள் தான் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

ஆர்கானிக் ஃபார்மிங் முறையின் பயன்கள் என்பதை கீழ்க்கண்ட வகைகளில் குறிப்பிடலாம்.

  • விவசாய செலவுகள் குறைவதுடன், உற்பத்தி மற்றும் லாபம் அதிகரிக்கிறது.
  • மண்ணின் தரத்தைப் பாதுகாக்கப்பட வேண்டி, ரசாயன உரங்களின் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டால் விளையும் நச்சுத் தன்மையை அகற்றுவதன் மூலம், பாதிப்பற்ற நிலையான விவசாய வளர்ச்சி கிடைக்கிறது.
  • ஆரோக்கியம் மற்றும் தூய்மை கொண்ட விவசாய விளைபொருள்களான உணவுப் பொருட்கள் அனைவருக்கும் கிடைக்கும்.
  • விளை பொருட்களின் ஆயுள், காய்கறி மற்றும் பழங்களின் சுவை ஆகியவை அதிகரிக்கும்.
  • நிலத்தடி நீரின் தரம் பாதுகாக்கப்படும்.
  • பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படாத காரணத்தால், வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் தேனீக்கள் பூக்களை நோக்கி ஈர்க்கப்பட்டு, அதிக மகரந்த சேர்க்கை உருவாகி, உற்பத்தியின் அளவும் கூடுதலாகும்.
  • ஆர்கானிக் ஃபார்மிங் முறையில் பயன்படுத்தப்படும் நீர் வடிவிலான உரங்கள், மண்ணில் உள்ள சத்துக்கள் பயிர்களைச் சென்றடைவதற்கு உதவுவதுடன், மண்ணின் வளத்தையும் பாதுகாக்கிறது.
  • நீர், மண், பசுஞ்சாணி, பசுவின் சிறுநீர், எலுமிச்சம் பழம், தானியங்களின் மாவு, வெல்லம் ஆகிய முற்றிலும் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி, கன ஜீவாம்ருதம், பீஜாம்ருதம், ஜீவாம்ருதம், வாபாசா ஆகிய பயன்பாட்டு அடிப்படையில், முற்றிலும் இயற்கையான வேளாண் பொருட்களின் உற்பத்தி உறுதி செய்யப்படுகிறது. 

பயிர்களுக்கான பாதுகாப்பு

வேளாண் பயிர்களை பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்கும்போது அக்னியாஸ்திரம், பிரம்மாஸ்த்திரம், நீமாஸ்திரம், பூசனம் 1, பூசனம் 2, பூச்சிக்கொல்லி 1, பூச்சிக்கொல்லி 2, பூச்சிக்கொல்லி 3 ஆகிய முறைகள் நிபுணர்களால் பரிந்துரை செய்யப்படுகின்றன. நோய் தடுப்பு அல்லது நோய் குணப்படுத்துதல் என்னும் முறையில், பூஞ்சைகளும் பூச்சிக் கொல்லிகளும் சம்பந்தப்பட்ட வேளாண் பொருள் உற்பத்தியாளர் அல்லது விவசாயியாலேயே தயாரிக்கப்படலாம். காடுகளில் யாரும் விதைக்காமல் தாமாகவே செடி, கொடிகள் மற்றும் மரங்கள் தாமாகவே வளர்வதற்கான காரணம் என்பது அதன் மண் வளத்தில் உள்ளது அதனால், ஆர்கானிக் ஃபார்மிங் முறையில் மண் வளப்பதுகாப்பு என்பதில் அதிகமான கவனம் செலுத்தப்படுகிறது. மேலும், காட்டுப்பகுதிகளில் மரங்களிலிருந்து விழக்கூடிய இலை, தழைகள் போன்றவை அப்படியே நிலத்தில் விழுந்து மூடப்பட்டு, மண்ணிற்கு தக்க ஈரப்பதத்தை கொடுகின்றன. இதுவே, இயற்கை வேளாண்மையின் அடிப்படையாகும். 

மண்ணை தயார் செய்யும் முறை

அனைத்து விதமான பயிர்களும் வளர்வதற்கு ஏற்றவாறு விவசாய நிலத்தை தயார் செய்வது வேளாண்மையின் முதல் படியாகும். எனவே, நிலத்தினை நன்கு உழுவதன் மூலம், விதைப்பு செய்ய எளிதாகவும், பஞ்சு போல மிருவானதாகவும் மண்ணை மாற்ற வேண்டும். இயற்கை வேளாண்மையினை எப்போது வேண்டுமானாலும் தொடங்க இயலும் என்ற நிலையில், 50 வருடங்கள் செயற்கை உரம் பயன்படுத்திய நிலமாக இருந்தாலும் கூட, 6 மாதங்களில் இயற்கை வேளாண்மையின் மூலம் அதன் வளத்தை மீட்டெடுக்க இயலும்.

அதன் அடிப்படையில், இன்றைய இயற்கை வேளாண் திட்டத்தில் பயிர் சுழற்சி முறை, கலப்பு பயிர் பயிரிடுதல், உயிர் பூச்சிக் கொல்லிகள் போன்ற யுக்திகளை பயன்படுத்துவதன் மூலம், இயற்கையை, இயற்கையாலேயே கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், ஒற்றை நாற்று நடவு, தக்க ஷீட் மூலம் மூடப்படு வெயில் தாக்காமல் தடுப்பது, உரக் குழிகள் வெட்டுதல், பயிர்களுக்கு இடையே காற்றோட்டத்தை பராமரிப்பது, நாட்டு விதைகளை பயன்படுத்துவது போன்ற பாரம்பரிய தொழில் நுட்பங்களும் ஆர்கானிக் ஃபார்மிங் முறையின் அடிப்படைகளாக இருக்கின்றன.

பயிர் சுழற்சி முறை

இந்த முறைப்படி, வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் அல்லது விவசாயிகள் அவர்களது விளை நிலங்களில் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான பயிரை வகைகளை சாகுபடி செய்வதைத் தவிர்ப்பது அவசியம். அதற்கு மாற்றாக, சுழற்சி முறையில் பல்வேறு காலகட்டங்களில் விதவிதமான பயிர்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும். அதுமட்டுமல்லாது, ஒரே மாதிரியான பயிர் தொடர்ந்து பயிர் செய்யப்படுவதால், நிலம் அதன் இயற்கை வளத்தினை படிப்படியாக இழந்து விடுகிறது. அதனால், பயிர் செய்யும் நிலத்தின் தன்மை, நீரின் அளவு ஆகியவற்றுக்கு ஏற்ப பயிர் சுழற்சி முறையை மேற்கொண்டு, பயிர் செய்வதன் மூலம் நிலத்தினுடைய இழந்த வளத்தை மீட்டெடுக்க முடியும்.. 

கலப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி

ஆர்கானிக் ஃபார்மிங் முறையில் கலப்பு மற்றும் ஊடுபயிர் ரகங்களை ஒரு ஆண்டின் குறிப்பிட்ட காலகட்டங்களில் பயிர் செய்வதன்  மூலம் விளைச்சல் அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக, களைகள் வளர்வது மற்றும் அவற்றின் எண்ணிக்கை ஆகியவை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு, பூச்சிகளின் தாக்குதலும் வெகுவாக  குறைகிறது.

இயற்கை முறை பூச்சிகள் அழிப்பு

செயற்கை உரங்களைப் பயன்படுத்தும் போது, பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகள் எவை மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் எவை என்று கணக்கில் கொள்ளப்படாமல் அனைத்து விதமான பூச்சிகளும் கொல்லப்படுகின்றன. இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பூச்சி விரட்டிகள், பயிர்க்ளுக்கு தீமை செய்யும் பூச்சிகளை மட்டுமே அழிப்பது அல்லது விரட்டுவது என்ற நிலையில் செயல்படுகின்றன. மேலும், விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்கள் ஆகியவை ரசாயன பொருட்களின் கலப்பு இல்லாமல், சுவையான ஆரோக்கியமான உணவுப்பொருட்கள் கிடைக்கும். 

வேர்கள் பாதுகாப்புக்கான முறை

ஆர்கானிக் ஃபார்மிங் முறையில் இதை மூடி அல்லது மூடாக்கு என்று சொல்கிறார்கள். இந்த மூடாக்கு போடப்படுவதற்கான காரணம் விளைச்சலை அதிகப்படுத்துவது ஆகும். இதற்காக பயிர்களுக்கு இடையே இலை, தழை, வைக்கோல், கரும்பு தோகை ஆகிய பொருட்களைக்கொண்டு கொண்டு முடப்படுகிறது. இதன் காரணமாக, வேர்ப் பகுதிகளின் ஈரப்பதம் கச்சிதமாக பாதுகாக்கப்படுகிறது. அதனால், மண்புழுக்கள் வளர எதுவாக இருப்பதுடன், களை போன்ற செடிகளின் வளர்ச்சியும் பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு, மண் வளம் பாதுகாக்கப்படுகிறது.

பயிர் வளர்ச்சிக்கான இயற்கை உரம்

இயற்கை உரங்கள் என்று குறிப்பிடப்படுகின்ற மண் புழு உரம், சாண எரு உரம், தொழு உரம், பசுந்தாள் உரம் மற்றும் பசுந்தழை உரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி விளைபொருட்களின் வளர்ச்சியை அதிகமாக்கிக்கொள்ள இயலும். அதன் அடிப்படையில், பயிர்கள் செழித்து வளர்வதற்கான வளர்ச்சி ஊக்கிகளான  குணப்பசலம், தேங்காய் பால்மோர், அமிர்தக் கரைசல், பஞ்ச கவ்யா உள்ளிட்ட முறைகளை பயன்படுத்தலாம்.

பயிர்களுக்கிடையே இடைவெளி

கோவிட்-19 நோய்த்தொற்று மனிதர்களுக்கு கற்றுக்கொடுத்த நவீன பாடம் என்பது சமூக இடைவெளி மற்றும் தனி மனித இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதாகும். ஆனால், பயிர் வளர்ச்சியிலும் இந்த வழிமுறையை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தார்கள். அதாவது, ஒவ்வொரு வேளாண் விளை பொருளுக்கான பயிருக்கும் தக்க இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. அந்த அடிப்படையில், நெல்லுக்கு நண்டு ஓடக்கூடிய அளவுக்கு இடைவெளி, கரும்புக்கு ஏர் பூட்டி ஓட்டுவதற்கான இடைவெளி, வாழை மரத்துக்கு மாட்டு வண்டி போகக்கூடிய அளவு இடைவெளி, தென்னை மரத்துக்கு தேர் போகக்கூடிய அளவு இடைவெளி என்னும் சொல் வழக்கை பண்டைய காலம் முதலே, முன்னோர்கள் இன்றைய ஆர்கானிக் ஃபார்மிங் என்பதற்கு முன்னோடியாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

உள் நாட்டு விதை வகைகள்

வேளாண் விளைபொருள்களை அளிக்கும் அனைத்து தாவர வகைகளுக்கும் உயிர் நாடி என்பது விதையாகும். அதனால், விதைகளை கவனமாக தேர்வு செய்து பயன்படுத்துவது முக்கியம். அதாவது, தரமான நாட்டு விதைகளைப் பயன்படுத்துவது என்பது மண்ணின் விளைவிக்கும் திறனுக்கு ஏற்ற முறையிலும், கூடுதலான விளைச்சலுக்கு பொருத்தமான ஒன்றாகவும் அமைகிறது. 

ஆர்கானிக் ஃபார்மிங் முறையில் நெல், கோதுமை, மக்காச்சோளம், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் அதாவது கடலை, ஆமணக்கு, கடுகு, எள், பருத்தி, கரும்பு, இஞ்சி, மஞ்சள், மிளகாய், வாழை, தேயிலை, சப்போட்டா, பப்பாளி, தக்காளி, கத்தரிக்காய் மற்றும் வெள்ளரி உள்ளிட்ட பல்வேறு வேளாண் விளைபொருட்களை சுலபமாக சாகுபடி செய்து பலன் பெற முடியும். அதற்கு ஏற்ற வகையில் அரசாங்க தோட்டக்கலை துறை மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மூலம் நடத்தப்படுகின்றன அமைப்புகள் ஆகியவை வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் அல்லது விவசாயிகள் ஆகியோருக்கு தகுந்த தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் இயற்கை உரங்கள் விற்பனை ஆகிய சேவைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.