written by | October 11, 2021

ஒரு நிறுவனத்தை எவ்வாறு பதிவு செய்வது

×

Table of Content


இந்தியாவில் ஒரு நிறுவனத்தை பதிவு செய்வது எவ்வாறு? – முழுமையான விளக்கம் 

இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் உங்களது வெகு நாள் கனவான சொந்த தொழில் தொடங்கும் திட்டத்தை செயல்படுத்த ஆயத்தமாக உள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. உங்கள் தொழில் நிறுவனத்தின் முதலாளி இருக்கையில் நீங்கள் அமரும்போது கிடைக்கக்கூடிய மனநிறைவு மற்றும் பூரிப்பு வேறு எதிலும் கிடைக்காது. தொழில் தொடங்க முனைவோர்கள் பெரும்பாலும் தொழில்நுட்பத்தை பற்றிய சிந்தனையிலும் சந்தைப்படுத்துதல் பற்றிய சிந்தனையிலும் இருப்பதால் தொழில் துவங்கும் போது அவர்களுக்கு எந்த மாதிரியான அரசாங்க பதிவுகள் செய்ய வேண்டும் என்பது பற்றிய புரிதல் இல்லாமல் போய்விடுகிறது. இத்தகைய தொழில் முனைவோர்களுக்கு உதவும் வகையில் அனைத்து விதமான பதிவுகள் பற்றிய விரிவான விளக்கங்கள் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தியாவில் நிறுவனங்கள் பதிவு செய்வது தொடர்பான அனைத்து ஆவண நடவடிக்கைகளும் எம்.சி.ஏ என்றழைக்கப்படும் மினிஸ்ட்ரி ஆப் கார்ப்பரேஷன் அப்பேர்ஸ் நடவடிக்கைகளின் கீழ் உட்பட்டதாகவே இருக்கும். ஒரு புது கம்பெனி ரிஜிஸ்டர் செய்வதை இன்கார்ப்பரேஷன் ஆஃப் கம்பெனி, ஃபார்மேஷன் ஆஃப் பிசினஸ் என்றும் அழைக்கப்படும் வழக்கம் உள்ளது. இத்தகைய பதிவு சான்றிதழ்களை அரசாங்கத்திடம் பெறுவது மூலமாக மட்டுமே உங்களது நிறுவனத்தை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். இந்தியாவில் இன்றளவு கணக்கின்படி ஏறத்தாழ எட்டு லட்சம் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாது பல ஆயிரக்கணக்கான புதிய தொழில் நிறுவனங்களின் அனுமதியும் கோரப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு படிநிலையாக நீங்கள் உங்கள் தொழில் நிறுவனத்தை பதிவு செய்வதற்கான வழிமுறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

1) எம் சி ஏ வலைதளத்தில் புதிய பயனாளராக சேருங்கள் 

எம்.சி.ஏ போர்ட்டலில் பதிவு செய்வது என்பது மிக முக்கியமானதாகும். நீங்கள் எந்த ஒரு மின்னணு படிவங்களை நிரப்ப போவதாக இருந்தாலும், மற்ற தகவல்களை பதிவேற்றம் செய்வதற்கும் மற்றும் பணப்பரிமாற்றம் நிகழ்த்துவதற்கு நீங்கள் இந்த வலைதளத்தின் பயனாளராக இருப்பது அவசியம். நீங்கள் இந்த எம்சிஏ போர்ட்டலில் பயனாளராக சேர்வதற்காக எந்த ஒரு தனி கட்டணமும் செலுத்த தேவையில்லை. 

2) இயக்குநர் அடையாள எண்ணுக்கு (டிஐஎன்) விண்ணப்பிக்கவும்

உங்களது நிறுவனத்தை பதிவு செய்வதற்கான முதல் படியாக ஒரு நிறுவன இயக்குனரை நியமித்து அவருக்கான இயக்குனர் அடையாள எண் அதாவது டைரக்டர் ஐடெண்டிஃபிகேஷன் நம்பர் பெற வேண்டும். இந்திய தொழில் நிறுவனங்கள் சட்டப்பிரிவு 153 படி எட்டு இலக்க அடையாள எண் உங்களுக்கு வழங்கப்படும். இந்திய தொழில் நிறுவனங்கள் சட்டப்பிரிவு 164 யார் யாருக்கெல்லாம் கம்பெனி டைரக்டர் ஆவதற்கான தடைகள் இருக்கிறது என்பது பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி குற்றப்பின்னணி இருப்பவர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கடன் நிலுவை தொகை சம்பந்தமான குற்றமுள்ளவர்கள்  இந்த டி.ஐ.என் நம்பரை பெறமுடியாது.   

டிஐஎன் பதிவு செய்வதற்கு உங்களது பெயர், உங்களது தந்தையின் பெயர், பிறந்த தேதி, அஞ்சலக முகவரி மற்றும் முகவரிக்கான ஆதாரங்கள், பான் கார்டு, வேறு ஏதேனும் ஒரு அடையாள சான்றிதழ், பாஸ்போர்ட் அளவில் உள்ள இரண்டு புகைப்படங்கள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்துக் கொள்வது வேண்டும். இத்தகவல் காண சான்றிதழ்களை தயார் நிலையில் வைத்துக் கொண்ட பிறகு மினிஸ்ட்ரி ஆஃப் கார்ப்பரேஷன் விவரங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வலைதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.  

தொழில் நிறுவன உரிமையாளர்கள் தங்களது அடையாள எண் மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி எம்சிஏ வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அடுத்தகட்ட நடவடிக்கையாக உங்கள் நிறுவனத்திற்கு அமைக்கப்படும் இயக்குனருக்கான டி ஐ என் பெறுவதற்கான வலைதள பக்கத்தில் உள்ள டிஐஎன் பார்ம்-1 தங்களது விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்காக நீங்கள் நூறு ரூபாய் கட்டண தொகையை செலுத்திய பிறகு உங்களது ஃபார்ம் மற்றும் மற்ற விவரங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட ஓரிரு நாட்களில் உங்களுக்கான டிஐஎன் வழங்கப்பட்டுவிடும்.

3) டிஜிட்டல் கையொப்ப சான்றிதழுக்கு (டி.எஸ்.சி) விண்ணப்பிக்கவும்

பெரும்பாலான நிறுவனங்கள் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் ஆன்லைனில் மேற்கொள்வதால் ஆன்லைனில் பயன்படுத்தக்கூடிய மின்னணு கையொப்பம் பெறுவதற்கான பதிவு செய்வது மிகவும் அவசியம். இந்த சான்றிதழ் வழங்குவதற்கான மிகச்சில தனியார் அமைப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எம்.டி.என்.எல், டி.சி.எஸ் மற்றும் சேப்ஸ்கிரிப்ட் போன்ற தனியார் நிறுவனங்கள் இத்தகைய சான்றிதழ் வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டாலும் இதை கட்டுப்படுத்தும் ஆணையமாக கண்ட்ரோலர் ஆஃப் சர்டிபிகேஷன் ஏஜென்சி நிலவுகிறது. இந்த டி.எஸ்.சி பெறுவதற்கும் டி ஐ என் பெறுவதை போன்றே அனைத்து விதமான தகவல்களையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும்.

நீங்கள் பல நிறுவனங்களை நடத்தி கொண்டு இருப்பவராக இருந்தாலும் ஒரு நிறுவனத்திற்காக பெறப்பட்ட டிஎஸ்சி மற்ற நிறுவனங்களுக்கு பயன்படுத்தக்கூடாது. டிஎஸ்சி நீங்கள் பதிவு செய்து பெறப்பட்ட காலத்திலிருந்து ஒரு ஆண்டுகள் அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். இந்தக் கால அளவு முடிந்த பிறகு காலாவதியான டிஎஸ்சி தவறாமல் புதுப்பித்துக் கொள்வது நல்லது. டி எஸ் சி பெறுவதற்கு கட்டண தொகையாக 600 முதல் 6000 வரையிலான தொகை நீங்கள் விரும்பும் காலகட்டத்திற்கு ஏற்றவாறு மற்றும் நிறுவனங்களுக்கு வசூலிக்கப்படுகிறது. நீங்கள் விண்ணப்பித்த ஒரு வாரத்திற்குள் உங்களது டி எஸ் சி தகவல்கள் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். 

4) பட்டய ஆவணங்களுக்கான தாக்கல் செய்ய வேண்டும்

மெமோராண்டம் ஆஃப் அசோசியேஷன் (எம் ஓ ஏ) மற்றும் ஆர்டிகல் ஆஃப் அசோசியேஷன் (ஏ ஓ ஏ) போன்ற பட்டய ஆவணங்களை உருவாக்குவதென்பது அனைத்து விதமான புதிய நிறுவனங்களை பதிவு செய்வதற்கும் பொருந்தும். 

மெமோராண்டம் ஆஃப் அசோசியேஷன் (எம் ஓ ஏ) 

உங்களது கம்பெனி உரிமையாளர்கள் பற்றிய தகவல்கள், உங்களது கம்பெனியின் தயாரிப்புகள் மற்றும் குறிக்கோள் பற்றிய அனைத்து விதமான தகவல்களையும் இந்த எம் ஓ ஏ மூலமாக தாக்கல் செய்யப்பட வேண்டும். இது உள்ள தகவல்களை ஒருமுறை நிரப்பினால் மறுமுறை மாற்ற இயலாது என்பதால் தகவல்களை நிரப்பும் போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். இந்தத் தகவல்கள் உங்கள் நிறுவனத்தைப் பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய யார் வேண்டுமானாலும்படித்து புரிந்து கொள்ளக்கூடிய அளவில் தயார் செய்ய வேண்டும். 

ஆர்டிகல் ஆஃப் அசோசியேஷன் (ஏ ஓ ஏ) 

இதில் இருக்கும் தகவல்கள் பொது மக்கள் பார்வைக்கு வெளி வராதபடி நிறுவனத்திற்குள் கடைப்பிடிக்கப்பட வேண்டிய தகவல்களைக் கொண்டதாக இருக்கும். எம் ஓ ஏ போல் அல்லாமல் இதில் உள்ள தகவல்களை எப்போது வேண்டுமானாலும் தேவைக்கேற்ற வகையில் திருத்திக் கொள்வதற்கான வாய்ப்புள்ளதால் மிகப்பெரிய கவலை கொள்ள தேவையில்லை . 

5) தனித்துவமான நிறுவன பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும் 

மற்ற நிறுவனங்களாக பயன்படுத்தாத பெயராகவும் மக்கள் மனதில் உங்களது தயாரிப்பு அல்லது சேவை பற்றிய விவரங்களை தெரிவிக்க கூடியவகையில் உள்ள பெயராகும் தேர்ந்தெடுத்து உங்களது நிறுவனத்திற்காக பதிவு செய்துவிட வேண்டும். இவ்வாறு உங்களது நிறுவன பெயரை பதிவு செய்வதன் மூலம் மற்றவர்கள் அதைப் பயன்படுத்துவதில் இருந்து தவிர்க்க முடிவதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கான சந்தைப்படுத்தல் நோக்கத்தை எளிதாக்க கூடிய வாய்ப்பாக இருக்கும். கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (எம்.சி.ஏ) சமீபத்தில் தங்களது வலைதள பக்கத்தில் புதிதாக தொழில் நிறுவனங்களை ஆரம்பிக்கும் தொழில் முனைவோர்களுக்கு உதவும் வகையில் யாரும் பயன்படுத்தாத பெயரை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு வலைத்தள பக்கத்தை உருவாக்கியுள்ளது. 

உங்களுக்கு தேவையான பெயரை இப்போது தொடங்கப்பட உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது வருங்காலத்தில் தொடங்கப்பட உள்ள நிறுவனத்திற்கும் ஒரு பெயரை பாதுகாத்து வைத்துக்கொள்ள முடியும். இதில் ஒரே ஒரு பெயரை மட்டுமே பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியும் என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பெயர் உங்களது நிறுவனத்திற்கு சம்பந்தமானதாகவும் அவர்களது நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்கவில்லை என்றால் அப்பெயரை நீக்கி விடுவதற்கான அதிகாரம் அவர்களுக்கு உண்டு. இவ்வாறு ஏதேனும் காரணங்களால் நீங்கள் தேர்வு செய்த பெயர் நீக்கப்பட்டால் மறுபடியும் குறிப்பிட்ட அளவு தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். 

6) பிற விவரங்களை பதிவு செய்யுங்கள்

எம் சி ஏ இணையதளத்தில் படிவம் -1 கவனமாக நிரப்பப்பட்டு குறைந்தது நான்கு மாற்றுப் பெயர்களை வழங்கி சமர்ப்பிக்கப்பட வேண்டும். உங்களது நிறுவனத்தின் பெயரை தேர்ந்தெடுத்து நிறுவனத்தின் முகவரி மற்றும் இயக்குநர்கள், செயலாளர் மற்றும் மேலாளர் நியமனம் ஆகியவற்றின் தகவல்களை தாக்கல் செய்வதற்காக படிவம் -18 மற்றும் படிவம் -32 ஐ தாக்கல் செய்ய வேண்டும். நீங்கள் தாக்கல் செய்த தகவல்களை அலுவலர்கள் சரிபார்த்து 15 நாட்களுக்குள் உங்களது அப்ளிகேஷன் அப்ரூவ் செய்யப்பட்டுவிடும். உங்க நிறுவனத்தில் பணி செய்யும் மற்ற செயலாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் டி எஸ் சி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

7) பான், டான் மற்றும் ஜிஎஸ்டி

நிறுவன பதிவு செயல்முறையின் கடைசி கட்டம் உங்கள் நிறுவனத்திற்கு தொடங்கப்பட்ட தனி வங்கிக் கணக்கை பயன்படுத்தி பர்மனென்ட் அக்கவுண்ட் நம்பர் எனப்படும் பான் (நிரந்தர கணக்கு எண்) பெற வேண்டும். யூனியன் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (யுடிஐ) இன்வெஸ்டர்ஸ் சர்வீசஸ் லிமிடெட் அல்லது நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (என்.எஸ்.டி.எல்) போன்ற நிறுவனங்களால் நியமிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் மட்டுமே நீங்கள் பான் கார்டை பதிவு செய்து பெற வேண்டும். 

பான் கார்ட் பட்ட பிறகு நீங்கள் அடுத்து செய்யக்கூடிய வேலை என்னவென்றால் மற்ற வரி விதிப்புக்கு சம்பந்தமான பதிவுகளை செய்ய வேண்டியதாகும். டான் எண் வருமான வரித் துறையாகும், டின் எண் மாநிலத்தின் வணிக வரித் துறையாலும், ஜி.எஸ்.டி.என் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வணிகங்களுக்கும் பொதுவானதாகவும் வழங்கப்படுகிறது.  

8) நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் 

மேலே குறிப்பிட்டபடி அனைத்துவிதமான தகவல்களையும் அந்தந்த துறையின் கீழ் பதிவு செய்த பிறகு இறுதியாக நீங்கள் செய்யக்கூடிய வேலை என்னவென்றால் உங்கள் தொழில் நிறுவனம் அமைந்திருக்கக் கூடிய பகுதியில் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும் என்பதாகும். இது உங்களது நிறுவனத்தின் பெயர் முகவரி போன்றவற்றை கடைகள் மற்றும் ஸ்தாபன சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட தகவல்களை உங்கள் தொழில் நிறுவனம் தொடங்கிய 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

இத்தகைய தகவல்கள் ஒரு பொதுவான நிறுவனத்தை அடிப்படையில் கொண்டு உங்களுக்கு விளக்கப்பட்டுள்ளதாக இருந்தாலும் உங்களது தொழிலின் தன்மைக்கு ஏற்ற சிலபல அனுமதி சான்றிதழ்களும் தேவைப்படும். அதுமட்டுமல்லாது தனி உரிமையாளர் வணிகத்தை நடத்த விரும்பினால் எம் சி ஏ முறையில் பதிவு செய்ய தேவை இல்லை என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்க.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.