உங்கள் உணவக மெனுவை டிஜிட்டல் மயமாக்குவதன் முக்கிய நன்மைகள்
மக்களின் இயல்பு வாழ்க்கையில் தினமும் ஏதோ ஒருவிதமான சட்டத்திருத்தங்கள் அல்லது வாழ்க்கை நடைமுறை மாற்றங்கள் போன்றவை ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய வாழ்க்கை நடைமுறை மாற்றங்களை நாம் விரும்புகிறோமோ இல்லையோ ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அவ்வாறாக நாம் செய்யும் தொழிலில் வரக்கூடிய புதுப்புது மாற்றங்களை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அத்தகைய நன்மை பயக்கக் கூடிய ஒரு மாற்றம் அனைத்துவிதமான உணவகங்களிலும் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. அது எத்தகைய மாற்றம் என்னவென்றால் பாரம்பரிய காகித பலகை அல்லது மரப்பலகை புதிதாக புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் மெனு பதாகைகளை உணவகங்களில் கொண்டுவந்து விட்டனர். பாரம்பரிய மெனு பலகைகளை ஒப்பிடுகையில் இத்தகைய டிஜிட்டல் பலகைகள் வேகமாக செயல்பட கூடியதாகவும் மற்றும் மலிவாகவும் உள்ளது. பெரும்பாலான நகரங்களில் உள்ள உணவகங்களில் இத்தகைய டிஜிட்டல் மெனு பலகைகளை நிறுவி அதன் பயனை அனுபவிக்க தொடங்கிவிட்டனர். இத்தகைய டிஜிட்டல் மெனு உணவகங்களில் உணவகம் சார்ந்த இடங்களிலும் பயன்படுத்துவதால் கிடைக்கக்கூடிய வெவ்வேறான பயன்களை பற்றி நாம் இங்கு பார்ப்போம்
-
டிஜிட்டல் மெனுவை நிறுவுவதன் மூலம் நேரத்தைச் சேமிக்க முடியும்
உணவக உரிமையாளர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு உணவக இருப்பு மற்றும் அதன் விலைக்கான மாற்றத்தை உடனுக்குடன் தெரிவிக்கும் வசதி உள்ளது. இத்தகைய மாற்றத்தை மிக எளிதாக டிஜிட்டல் போர்டுகள் மூலம் செய்ய முடியும். பாரம்பரிய மெனு போர்டு வைத்திருப்பவர் அதை அழித்து திரும்ப எழுதுவதற்கு அதிக நேரம் செலவு ஆகும். டிஜிட்டல் சிக்னேஜ் மென்பொருளைப் பயன்படுத்தி செய்யப்படும் எந்த மாற்றங்களும் உங்கள் உணவகத்தில் உள்ள அனைத்து மெனு போர்டுகளில் உள்ள தகவல்களையும் ஒரே நேரத்தில் மாற்றக்கூடும். இத்தகைய டிஜிட்டல் மெனு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் உங்களுக்கு அதிகப்படியான நேரத்தை மிச்சம் ஆக்க முடியும்.
-
குறைந்த செலவுகள் மற்றும் அதிக லாப வரம்புகள்
பிரிண்ட் செய்யப்பட்ட பேனர்கள் உங்கள் கடையில் வைத்து இருப்பீர்களானால் ஒவ்வொரு சிறிய மாற்றத்திற்கும் ஒவ்வொரு முறையும் புதுப் புது பேனர்களை அச்சிட்டு பயன்படுத்த வேண்டியிருக்கும். இவ்வாறாக பேனர் அச்சிட நீங்கள் பயன்படுத்தும் தொகையை கணக்கிட்டால் உங்களது லாபத்தில் மிகப்பெரிய சதவிகிதம் அதற்கே போய்விடும். ஆனால் டிஜிட்டல் சிக்னேஜ் மெனுக்கள் மற்றும் போர்டுகளில் ஒரே ஒரு முறை முதலீடு செய்வதன் மூலம், ஒவ்வொரு முறையும் உங்கள் மெனுக்களில் மாற்றம் செய்ய விரும்பினார் மிகவும் எளிதாக செய்து விட முடியும். இதற்காக எந்த வித செலவும் புதியதாக செய்ய தேவையில்லை. டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவிப்பு பலகை மூலம் உங்கள் உணவகத்தின் வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது உணவைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து அதன் மூலம் உங்களது லாப வரம்பை அதிகரிக்க முடியும்.
-
பிராண்ட் நிலைத்தன்மை
நீங்களோ அல்லது உங்களிடம் வேலை செய்யும் வேலை ஆட்களோ, சிறு மாற்றம் மட்டும் பாரம்பரிய முறைப்படி உள்ள மெனு போர்டில் செய்ய வேண்டும் என்றால் அதை ஒரு பொருட்டாகக் கருத மாட்டீர்கள். ஏனென்றால் இந்த முறையில் அறிவிப்புப் பலகையில் மாற்றங்கள் செய்ய அதிக நேரம் எடுக்கும். ஒரு சிறிய மாற்றத்திற்கு அதிக நேரம் செலவழிக்க வேண்டுமா என்று யோசித்து எவரும் செய்யாமல் இருப்பீர்கள். ஆனால் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட அறிவிப்பு பலகைகளை உங்களது உணவகங்களில் நிறுவுவதன் மூலம் இத்தகைய சிறுசிறு மாற்றத்தையும் மிகவும் எளிதாக மாற்றலாம். இவ்வாறு அனைத்து மாற்றங்களும் செய்யப்படுவதால் உணவகங்களில் உள்ள இருப்புகள் மற்றும் அதன் விலை பற்றிய அனைத்துத் தகவல்களும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக சென்றடையும். இவ்வாறு வாடிக்கையாளர்கள் உணவுகளை உள்ள இருப்பு தன்மையை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் தங்களிடம் ஆர்டர் செய்து கொள்வார்கள்.
-
பொழுதுபோக்கிற்கான அம்சம்
டிஜிட்டல் மெனு போர்டுகள் வெறும் அறிவிப்பு பலகையாக மட்டுமல்லாமல் பொழுது போக்கிற்கான ஊடகமாகவும் செயல்படுகிறது. இந்த டிஜிட்டல் மெனு போர்டு மூலமாக உங்கள உணவகம் சார்ந்த படங்களையும் வீடியோக்களையும் வெளியிடலாம். உணவு தயாராகி வரும் வரைக்கும் இத்தகைய வீடியோக்களையும் படங்களையும் வாடிக்கையாளர்கள் பார்த்துக் கொண்டிருப்பது மூலமாக அவர்களுக்கு ஒரு சிறந்த பொழுது போக்கிற்காக இந்த மெனு போர்டுகள் பயன்படுத்தப்படுகிறது. இவை மட்டுமல்லாமல் வாடிக்கையாளருக்கு புதுப்புது உணவு பண்டங்களின் படங்களை காண்பித்து அவர்களை ஈர்த்து அதிகப்படியான உணவு விற்பனை செய்ய முடியும். உங்களது வணிகத்திற்கு சம்பந்தமான விளம்பரங்கள் உணவுப் பொருட்களின் படங்கள் சமையல் குறிப்புகள் விதவிதமான சமையல் வகைகள் இவை அனைத்தையும் ஒரே ஒரு டிஜிட்டல் மெனு போர்டு வைத்திருப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க முடியும்.
-
கண்காட்சி வடிவம்
இயற்கையாகவே மனிதர்கள் வண்ணமயமாக உள்ள இடத்தை அதிகமாக விரும்புவார்கள். இத்தகைய டிஜிட்டல் போர்டுகள் வாடிக்கையாளர்களுக்கு தேவையான அறிவிப்பை வண்ணமயமாக வீடியோக்கள் மூலமும் படங்கள் மூலமும் அனிமேஷன் செய்து காண்பிக்க முடியும். இத்தகைய வீடியோக்கள் மற்றும் படங்கள் கொண்ட மெனு போர்டுகள் மக்கள் கண்ணை கவரும். இத்தகைய கவனத்தை ஈர்க்கும் அறிவிப்பு பலகையும் பொழுதுபோக்கு பலகையும் ஒருங்கே அமைவதனால் வாடிக்கையாளர் அதிக நேரம் தங்கள் உணவகங்களில் செலவழிப்பார். இவ்வாறு அதிக நேரம் உங்கள் உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்வதனால் உங்களது வணிகம் கண்டிப்பாக அதிகரிக்கும்.
-
உணவின் சிறப்பம்சம் பற்றிய தகவல்கள்
உங்கள் உணவங்களில் வழங்கப்படும் உணவின் சிறப்பம்சம், அந்த உணவு தயாரிக்கும் முறை, உணவில் அடங்கிய சத்துப் பொருட்கள், மற்றும் அதன் தனித்துவம் போன்றவற்றை டிஜிட்டல் மெனு போர்டுகள் மூலம் வாடிக்கையாளருக்கு தெரிவிக்க முடியும். இவ்வாறு அந்த உணவின் சிறப்பம்சம் மற்றும் ஊட்டச்சத்து முறைகளை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வதனால் அவர்கள் அந்த வாங்கி ருசிக்க ஆசைபடுவார்கள். இவ்வாறு வாடிக்கையாளருக்கு தேவையான தகவல்களை தெரிவித்து அவர்கள் அந்த உணவை வாங்கி ருசிக்கும் ஆர்வத்தை அதிகரிக்க முடியும்.
-
பிழைகள் அற்ற அறிவிப்பு பலகை
மெனு போர்டுகளின் முழு செயல்பாடுகளையும் ஒரே ஒருவர் கவனித்துக் கொள்வதால் அதில் ஏற்படக்கூடிய பிழைகள் தவிர்க்கப்படும். ஒரே ஒரு இணைய வழி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அனைத்து விதமான மேலும் பவுடர்களை உங்களது உணவாக மேலாளர்கள் நிர்வகிக்கலாம். இவ்வாறு ஒருவர் மட்டுமே இதை செயல்படுத்தி சிறப்புற செய்ய முடிவதால் இது ஏற்படக்கூடியது பிழைகளை களைய வாய்ப்பு உள்ளது. வந்திருக்கக்கூடிய வாடிக்கையாளர்களின் வயதைப் பொறுத்து அவர்களுக்கு தேவையான காட்சிகளை அதில் தெரிய வைக்க முடியும். குழந்தைகளுடன் கூடிய பெற்றோர்கள் வந்தால் அவர்களுக்கு அந்த மீனை போட்டு வண்ணமயமான குழந்தைகள் விரும்பக்கூடிய உணவகங்களை உடனடியாக பிரதிபலித்து விற்பனை செய்ய முடியும்.
-
சமூகம் சார்ந்த தகவல் பரிமாற்றம்
அங்கே உள்ள அறிவிப்பு பலகைகளில் உணவகம் சார்ந்த விஷயங்களை மட்டுமல்லாமல் சமூகம் சார்ந்த சமூக அக்கறை உள்ள விஷயங்களை தெரிய படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு புதுவிதமான சமூக அக்கறை கொண்ட விஷயங்களை தெரியப்படுத்தலாம். இத்தகைய விழிப்புணர்வு உங்களது வாடிக்கையாளருக்கு செல்லும்போது உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ள சமூகத்திற்கும் சிறந்ததொரு உயர்வான வாழ்வு ஏற்பட வழிவகுக்கும். அதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கு இருக்கக் கூடிய வேறு சில வணிகத்தின் விளம்பரங்களையும் இதில் அவ்வப்போது பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.
-
காலத்திற்கேற்ற மெனு அறிவிப்பு
ஒவ்வொரு உணவகங்களிலும் காலை மாலை இரவு என விதவிதமான நேரத்திற்கு ஏற்ற உணவு வகைகள் சமைத்து வழங்கப்படுகிறது. டிஜிட்டல் சிக்னேஜ் மூலம் உங்கள் மெனுக்களை ஒவ்வொரு முறையும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. காலத்திற்கு ஏற்றாற்போல் நேரத்திற்கு ஏற்றாற்போல் அதிலுள்ள மெனுக்கள் தானாகவே மாறிக் கொள்ளும் வகையில் செட்டிங் செய்து வைத்துக்கொள்ள முடியும். இவ்வாறு செய்வதனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் ஒருவர் இதற்காக மணியை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சுற்றுப்புற சூழ்நிலைக்கு தகுந்தவாறு உங்கள் மனுவை உடனடியாக மாற்றி வைக்க முடியும். வெயில் காலம் அதிகமாக இருந்தால் குளிர்பான வகைகள் மற்றும் ஐஸ்க்ரீம் வகைகளை அதிகமாக காட்சிப்படுத்தி விற்பனை செய்யலாம். குளிர்காலமாக இருந்தால் சூடான சுவையான பொருட்களை காட்சிப் படுத்தி விற்பனை செய்யலாம். உங்கள் வாடிக்கையாளர் தேவையான உணவை எளிதாக தேர்ந்தெடுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கும் அதிகப்படியான வியாபார மாற்றத்தை இந்த டிஜிட்டல் போர்டு உருவாக்கும்.
-
கலோரி அளவை காண்பிக்கலாம்
இந்தியா மட்டுமல்லாது உலகத்தில் உள்ள அனைத்து நாட்டு மக்களும் தங்களது உணவு முறையில் மாற்றம் செய்து தங்களது உடல் அமைப்பை சரி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவில் எவ்வளவு கலோரி உள்ளது என்பதை தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வத்துடன் சிரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். பெரும்பாலான பெருநகரங்களில் உள்ள அனைத்து வகையான ஹோட்டல்களிலும் தங்களது உணவில் உள்ள கலோரி அளவை கட்டுகின்றனர். அதேபோல் உள்ள நடைமுறையே நீங்களும் உங்கள் உணவகங்களில் செயல்படுத்த வேண்டும் என்பது கட்டாயம் ஆகிவிட்டது. டிஜிட்டல் கன்வெர்ஷன் இருப்பதால் அதன் கலோரியின் அளவை எளிதாக கண்டுபிடிக்கலாம் உங்களுக்கு இது உதவுகிறது.
முடிவுரை
உங்கள் உணவகத்தின் டிஜிட்டல் போர்டு வைப்பதற்கு இத்தகைய பயன்பாடுகளை நாம் அடுக்கிக்கொண்டே செல்ல முடியும். தோராயமாக 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தை உங்களது உணவகங்களை நிறுவி அதற்கு ஏற்ற இரட்டிப்பு வருமானத்தை நீங்கள் கண்டிப்பாக குறைந்த நாட்களிலேயே பெற முடியும். உங்கள் கடைக்கு வரும் ஒரு புது வாடிக்கையாளருக்கு ஒரு புது உணவு வகையை சாப்பிட விரும்பினால் அவர்களுக்கு அது எப்படி இருக்கும் என்பது தெரியாது என்பதால் அதை ஆர்டர் செய்ய தயங்குவார்கள். ஆனால் டிஜிட்டல் சிக்னேஜ் தொழில்நுட்பத்தின் மூலம் அந்த உணவின் படங்களை நீங்கள் டிஸ்பிளே செய்வதால் அவர்கள் அதை புரிந்து கொண்டு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் அதை ஆர்டர் செய்து சாப்பிட்டு மகிழ்வார்கள். இத்தனை முயற்சி புது வாடிக்கையாளர்களை உங்களை உணவகத்திற்கு உள்ளே இருப்பதற்கும் புது புது வகையான உணவுகளை அவர்களுக்கு நீங்கள் கொடுப்பதற்கும் மிகச் சிறந்த காரணியாக விளங்குகிறது. காலத்திற்கு ஏற்ப அனைத்து உணவகங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது எனவே நீங்களும் உங்கள் உணவகத்தில் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தி வாடிக்கையாளர்களின் விருப்பத்தை தெரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் மட்டுமே உங்கள் வியாபாரத்தை அதிகரிக்க முடியும். இன்னும் சொல்ல வேண்டுமானால் மக்கள் பழைய பாரம்பரிய அறிவிப்பு பலகையில் கொண்ட உணவு வகைகளை வேடிக்கையாக பார்க்க ஆரம்பித்து விட்டனர். அத்தகைய பாரம்பரிய அறிவிப்பு பலகைகள் கொண்ட உணவகத்திற்கு மக்கள் செல்ல விரும்புவதில்லை. ஆகவே இப்போது உள்ள உணவக உரிமையாளர்கள் அத்தகைய வாடிக்கையாளர் இழப்பை தடுத்து நிறுத்த டிஜிட்டல் மெனு போர்டு அவசியம்.