written by | October 11, 2021

மருத்துவ ஆய்வக வணிகம்

×

Table of Content


மருத்துவ ஆய்வுக்கூட தொழில் தொடங்குவது எப்படி? 

பதோலோஜி லேப் அல்லது  டைக்னோஸ்டிக் சென்டர் அல்லது ரத்தப் பரிசோதனை மையம் என பல்வேறு பெயர்களில் மருத்துவ ஆய்வுக்கூட தொழில்கள் இந்தியாவில் அழைக்கப்பட்டு வருகிறது.  இதில் மனிதனின் உடலில் உள்ள நோய்களைக் கண்டறிய ரத்தப் பரிசோதனை மற்றும் இதர பரிசோதனைகள் வாயிலாக இது போன்ற ஆய்வுக்கூடங்களில் சோதனையின் மூலம் கண்டறியப்படுகிறது.  உடலில் ஏற்படும் எந்த ஒரு நோயாக இருந்தாலும் அதை ரத்தப் பரிசோதனையின் மூலம் பெரும்பாலும் கண்டுபிடித்து விடலாம் என இருக்கும் பட்சத்தில் இதுபோன்ற மருத்துவ ஆய்வுக்கூடங்களின் உதவியுடன் மிகத்துல்லியமாக உடம்பில் ஏற்பட்டுள்ள நோய்கள் கண்டறியப்படுகிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போக உலக அளவில் பொருளாதார வளர்ச்சியிலும் மக்கள் தொகை பெருக்கத்திலும் இந்தியா மிக வேகமாக முன்னேறிக் கொண்டு வருகிறது. இவ்வாறு மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க நாளுக்கு நாள் பல்வேறு வகையான நோய்களும் உருவாகிக் கொண்டே போக இதனால் பாதிக்கப்படும் மனிதர்களும் பல்வேறு வகையான நோயால் தாக்கப்படுகின்றனர் என சமீபத்திய ஆய்வின் ” பதோலோஜிகல் லெபாரட்ரிஸ் இந்தியா” தெரிவித்துள்ளது. எளிதான அதேசமயம் சிக்கலான பல நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போக ஆய்வு செய்வதற்காக வரும் நோயாளிகள் ஆரம்ப கட்டத்திலேயே அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டு குணமாகி வருகின்றனர். எனவே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக நாளுக்கு நாள் மருத்துவ ஆய்வுக்கூடங்களின் எண்ணிக்கையும் முன்பு இருந்ததை விட இப்போது அதிகரித்து உள்ளது.

இன்றைய காலகட்டத்தில்  அனைவருக்கும் தேவைப்படும் ஒன்றான மருத்துவ சம்பந்தப்பட்ட தொழிலை  தொடங்க விரும்புவார்கள் மிக தாராளமாக மருத்துவ ஆய்வுக் கூடங்களை தொடங்கலாம்.  சிறிய நோய்கள் முதல் பல குணப்படுத்த முடியாத நோய்கள் வரை அனைத்திற்கும் கட்டாயம் தேவைப்படுகின்ற இந்த மருத்துவ ஆய்வு கூட தொழிலை பலரும் செய்ய முன்வந்துள்ளனர். அவ்வாறு மருத்துவ ஆய்வுக் கூடம் தொடங்க வேண்டுமெனில் கட்டாயமாக ஒரு சில முக்கியமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

முதலில் மருத்துவ ஆய்வு கூடங்கள்  மொத்தம் எத்தனை வகையாக இயங்குகின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மக்கள் பலரும் மிக எளிதாக அணுகக்கூடிய வகையிலும் அதேசமயம் மிகக் குறைந்த செலவில் தரமான மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் விரும்புவதுண்டு. இந்நிலையில் அதற்கு உதவும் வகையில் மிக எளிதாகவும் அதேசமயம் அதிக லாபம் தரக்கூடிய வகையிலும் வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ ஆய்வக கூடங்கள் எவ்வாறு தொடங்கலாம் என்பதைப் பற்றி இங்கு நாம் காண்போம்.

மருத்துவ ஆய்வுக்கூட தொழில் தொடங்க பதிவு மற்றும் உரிமம் பெறுதல்!

 இந்தியாவைப் போல அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில்  மருத்துவ துறை சம்பந்தப்பட்ட தொழில்கள் மற்றும் மருத்துவ ஆய்வுக் கூடங்கள் சம்மந்தப்பட்ட தொழில்களைத் தொடங்க முதலில் அதற்கான முறையான பதிவு அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்டு அதற்கான உரிமமும் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு இந்தியாவில் மருத்துவ ஆய்வுக்கூட தொழில் தொடங்க பெறப்படும் உரிமம் ஆனது இடத்துக்கு இடம் மற்றும் தொழிலுக்கு தொழில் மாறுபடும். 

இந்தியாவில் இயங்கி வரும் மருத்துவ ஆய்வுக் கூடங்கள் பெரும்பாலானவை நோயாளிகளின் பாதுகாப்பின் மீது அக்கறை கொண்டு இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் சேர்த்து அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள்,  செவிலியர்கள், டெக்னீசியன் மற்றும்  பதோலோஜிஸ்ட் என அனைவரும் ஒன்று சேர்ந்து மருத்துவ ஆய்வுக் கூடங்களை மிகவும் பாதுகாப்பான முறையில் நடத்தி வருகின்றனர்.  அவ்வாறு மருத்துவ ஆய்வுக்கூடங்களில் பரிசோதிக்கப்பட்ட அறிக்கை என்பது மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம் உள்ளிட்டவைகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும், இல்லையொனில் அது சட்டத்திற்குப் புறம்பானது என சொல்லப்படும்.

மருத்துவ ஆய்வு கூடம் அமைக்கும் இடத்தை தேர்ந்தெடுத்தல்!

மருத்துவ ஆய்வு கூடம் தொடங்க அதன் இடத்தை தேர்வு செய்தல் என்பது அடிப்படையான தேவைகளில் ஒன்று.  மருத்துவக் கூடம் அமைக்கப்படும் இடம் என்பது மக்கள் அதிகமாக வந்து செல்லும் இடத்தை விட தூரமாக இருக்க கூடாது அதேபோல கட்டாயம் கட்டடத்தின் தரைதளத்தில் அமைந்திருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அனைவரும் மிக எளிதாக வந்து செல்வதுடன்  வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் என பலரும் வந்து செல்ல வசதியாக இருக்கும். இதுமட்டுமல்லாது மருத்துவ ஆய்வு கூடம் இருக்கின்ற இடமானது குளிர்ச்சியான சுற்றுச்சூழலில் தாராளமான காற்றோட்ட இட வசதியுடன் இருக்க வேண்டும். 

மருத்துவ ஆய்வு கூடம் அமைப்பதற்கான இடம் என்பது  ஒவ்வொரு வகையான ஆய்வுக்கூடங்களில் தேவையை பொருத்து மாறும், எனினும் பொதுவாக குறைந்தபட்சம் 500 ஸ்கொயர் ஃபீட் ஆவது  கட்டாயம் இருக்க வேண்டும்.  ஒருவேளை ரேடியாலஜி உள்ளிட்ட ஆய்வுக்கூடங்களை நடத்தப் போகிறீர்கள் என்றால் அதற்கு தேவையான இடவசதி என்பது சற்று அதிகமாகவே தேவைப்படும் ஏனென்றால் மருத்துவ ஆணைப்படி அதில் வெளியாகும் ரேடியேஷன் கட்டுப்படுத்தும் அளவிற்கு மருத்துவ கூடம் அமைந்திருக்கும் இடமானது இருக்கவேண்டும். அதாவது சாதாரண  ஆய்வுக்கூடங்கள் பயன்படுத்தும் அறையின் அளவைவிட ரேடியாலஜி ஆய்வுக்கூடத்தின் அறையானது  150 ஸ்கொயர் ஃபீட் அதிகமாகவே தேவைப்படுகிறது. இந்நிலையில் பயோகெமிஸ்ட்ரி மருத்துவ ஆய்வு கூடம் மேலே கூறிய அளவைப் போல தேவையான அளவு இருந்தால் போதும் என்றாலும் அதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்காக தனித்தனி கழிவறைகள் தகுந்த நீர் வசதியுடன் கட்டாயம் இருக்க வேண்டும். 

மருத்துவ ஆய்வுக் கூடத்தில் இருக்கவேண்டிய அடிப்படை  தேவைகள் !

பொதுவாவே  மருத்துவ ஆய்வுக்கூடங்களில் இருக்கவேண்டிய சில அடிப்படை உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதில் குறைந்தபட்சம் ஒரு கணிப்பொறி, நோயாளிகளின் சோதனை அறிக்கையை பதிவேற்றி கொள்ள தேவையான மென்பொருள்,  தேவையற்ற மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த தேவைப்படும் சிறிய குப்பைத்தொட்டி,  குறைந்தபட்சம் ஒரு கழிவறை மற்றும் சில மருந்துகளை பதப்படுத்தி வைக்க  ஒரு குளிர்சாதன பெட்டி மேலும் நோயாளிகளுக்கு தேவையான  நாற்காலிகள். 

என இவையெல்லாம் கட்டாயம் ஒரு மருத்துவ ஆய்வு கூடத்தில் அரசு பரிந்துரைக்கப்பட்டு செயல்படும் அனைத்து இடங்களிலும் கட்டாயம்  ஆக்கப்பட்டுள்ளது.  மேலும் அரசின் சுகாதாரத்துறை அவ்வப்போது ஆய்வுக்  கூடத்திற்கு வந்து மேற்பார்வையிட்டு செல்வதால் மேலே கூறப்பட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளும் எப்பொழுதுமே மருத்துவ ஆய்வுக்கூடங்களில் தவறாமல் இருக்க வேண்டும்.

மருத்துவ ஆய்வுக் கூடம் தொடங்க தேவையான முதலீடு !

புதிதாக மருத்துவ ஆய்வுக்கூட தொழில் தொடங்க தேவைப்படும் நிதி எந்த மாதிரியான ஆய்வுக் கூடத்தை நடத்தப் போகிறீர்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் முதலீடு கணக்கிடப்படுகிறது.  ஆய்வுக் கூடத்தை பொறுத்த வரையிலும் எந்த அளவிற்கு முதலீடு செய்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அதிநவீன கருவிகளை பயன்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு மக்களும் நோயாளிகளும் ஆய்வுக்கூடங்களை நோக்கி நம்பிக்கையுடன் படையெடுப்பார்கள்.  அதிக அளவிலான முதலீட்டில் உருவாகும் மருத்துவ ஆய்வுக் கூடத்தில் நிறைய சேவைகள் அளிக்கப்படுவதால் ஆய்வுக்கூடத்திற்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து  ஆய்வுக்கூடத்தின் பெயரும் மிக விரைவிலேயே பிரபலமாகிறது.

எனினும் இந்தியாவில் அமைந்திருக்கும் பெரும்பாலான ஆய்வுக்கூடங்களின் முதலீட்டைப் பொறுத்தவரையிலும் கணிக்க  முடியாத வகையில் அவரவர்களின் தேவைக்கு ஏவ்வாறு உருவாக்கப்பட்ட நிலையில் சமீப காலமாக அவை அனைத்தையும் அரசு சரியான முறையில் ஒழுங்குபடுத்தி உள்ளது. மேலும் மருத்துவ ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்படும் மருத்துவ எந்திரங்கள் அனைத்தும் விலை அதிகமானவையாக  பயன்படுத்தப்பட்டு நிலையில் குளிர்சாதன பெட்டி,  குளிரூட்டப்பட்ட அறைகள் அதற்கு தேவைப்படும் மின்சாரம்,  தண்ணீர் என பராமரிப்பு செலவுகள் உட்பட ஆய்வுக்கூடம் நடத்துவது என்பது கொஞ்சம் அதிக அளவிலான முதலீட்டை  ஏற்றதாகும். எனினும் ஆரம்ப முதலீடு மிக அதிகமாக  இருக்கின்றது என நினைப்பவர்களுக்கு வங்கிகளில் இதற்கு ஏராளமான பிரிவுகளில் கடன் அளிக்கவும் பல வசதி முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ ஆய்வுக் கூடத்தில் தேவைப்படும் உபகரணங்கள்!

ஆய்வுக் கூடங்களில் ரத்த பரிசோதனை மட்டுமல்லாமல் எக்ஸ்ரே,  ஸ்கேன் உள்ளிட்ட பலவகையான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அவ்வாறு சோதனைக்கு தேவையான எக்ஸ்–ரே மெஷின், சிடி ஸ்கேன் மிஷின்,  மற்றும் ரத்தப் பரிசோதனை செய்யக் கூடிய உபகரணங்கள் என அந்தக் கூடத்தில் தேவைக்கு ஏற்ப பல வகையான உபகரணங்கள் ஒரு ஆய்வுக் கூடத்தை நடத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.  உபகரணங்கள் எதுவும் இல்லாமல் நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள நோயினை பற்றி அறிவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. 

மருத்துவ ஆய்வுக் கூடம் தொடங்க குறைந்தபட்சம் தேவைப்படும் உபகரணங்கள்! 

 மருத்துவ ஆய்வுக்கூடங்களில் பல்வேறு வகையான கூடங்கள், பல்வேறு வகையான நோய்களுக்கு சம்பந்தப்பட்ட சோதனைகளுக்கு ஏற்றவாறு அதில் உபகரணங்கள் மற்றும் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில்,  மருத்துவ ஆய்வுக் கூடம் தொடங்க குறைந்தபட்சம் தேவைப்படும் அடிப்படை உபகரணங்களாவது இன்குபேட்டர், மைக்ரோஸ்கோப், சென்டரிபியூஜ், பிப்பெட், கலோரி மீட்டர் மற்றும் ரீ–ஏஜேன்ஸ் உள்ளிட்டவைகள் மருத்துவ ஆய்வுக் கூடம் தொடங்க தேவைப்படும் குறைந்தபட்ச உபகரணங்களாகும்.  மேலும் இவை கட்டாயமாக ஒவ்வொரு ஆய்வுக் கூடங்களிலும் இருக்க வேண்டும்.

தகுதி வாய்ந்த தொழில் நுட்ப வல்லுனர்களை நியமித்தல்!

ஒரு அமைப்பில் பணியாற்றும் பணியாளர்களை  வைத்தே அந்த அமைப்பின்  தரத்தை முடிவு செய்துகொள்ளலாம்.  அவ்வாறு இருக்கையில் தொடங்கும் தொழிலில் தகுதி வாய்ந்த மற்றும் வல்லமை பெற்ற நன்கு தொழில் தெரிந்தவர்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும். இந்நிலையில் மருத்துவ ஆய்வுக் கூடத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் என்பவர்கள் கிட்டத்தட்ட ஆய்வுக்கூடத்தினுடைய முழுமையான கட்டுப்பாட்டை செயல்படுத்துபவர்கள்.  நன்கு பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவத் தொழில்நுட்ப வல்லுநர்களை அமைப்பதன் மூலம் தேவையில்லாமல் ஏற்படுகின்ற தவறுகளை தடுக்கலாம். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் குறைந்தபட்சம் மருத்துவ படிப்பில் தேர்ச்சி பெற்று அதற்காக “மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா“வின் உரிமம் பெற்றிருப்பது அவசியம்.

மருத்துவ ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருள் கருவிகள்!

கணிப்பொறிகளைக்கொண்டு   நவீன மற்றும் புதுப்பிக்கப்பட்ட முறையில் மருத்துவ ஆய்வுக்கூடங்களில் அனைத்தும் கம்ப்யூட்டர்  மயமாக மாற்றப்பட்டுள்ளதால்,  அவை மிகக் கச்சிதமாக செயல்பட வைக்கிறது. இவ்வாறு கணினியின் மூலம் உடலில் ஏற்பட்டுள்ள நோயினைக் கண்டறியும் போது அவை மிகத்துல்லியமாக கணக்கிடுவதோடு சிறந்த முறையில் செயலாற்றுகின்றது.

அவ்வாறு ஆய்வுக்கூடங்களில் உள்ள கணினிகளில் பயன்படுத்தப்படும் மென் பொருள்களான திங்க் லேப், திங்க் வைட்,  லைவ் ஹெல்த் உள்ளிட்ட அடிப்படை மருத்துவ மென் பொருள்கள் அனைத்து ஆய்வுக் கூடங்களிலும் கட்டாயமாக பயன்படுத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.