written by khatabook | December 4, 2019

பிஸ்னஸ்களுக்கான ஜிஎஸ்டி-யின் முக்கிய நன்மைகள் மற்றும் தீமைகள்

×

Table of Content


ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) ஒரு மறைமுக வரியாகும். இந்தியாவில் தற்போதுள்ள பல மறைமுக வரிகளை மாற்றும் நோக்கத்துடன் ஜி.எஸ்.டி-யை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. சரக்கு மற்றும் சேவைகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வு ஆகியவற்றின் மீது  விதிக்கப்பட வேண்டிய ஒரு விரிவான வரியாக அரசு ஜி.எஸ்.டி மசோதாவை நாடு முழுவதும் ஜூலை 1,2017 ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இது ஒவ்வொரு மதிப்பு கூட்டலின் போதும் விதிக்கப்படும் இலக்கு அடிப்படையிலான வரியாகும்.

ஜிஎஸ்டி-யை அறிமுகப்படுத்தியதும் நடைமுறைப்படுத்தியதும் இந்திய வரி சீர்திருத்தத்தில் ஒரு மிக முக்கிய  தருணமாகும். இது பிஸ்னஸ்கள் வரிகளைப் பார்க்கும் முறையை முற்றிலுமாக மாற்றியுள்ளது. வரி செலுத்துவதை எளிமையாக்கி அதை மேலும் நெறிமுறைப்படுத்துவது தான் ஜிஎஸ்டி-யை அறிமுகப்படுத்துவதற்கு பின்னாலுள்ள யோசனை. ஜிஎஸ்டி மொத்த வரி வசூலை அதிகரித்து, வரி வசூல் செயல்முறையை பிஸ்னஸ்களுக்கு ஏற்றவாறு மாற்றி அதை வளர்ச்சிக்கு உகந்ததாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஜிஎஸ்டி-யில் நன்மைகள் பன்மடங்கு உள்ளன. இருப்பினும், அனைத்து செயல்முறைகளை போலவே, ஜிஎஸ்டி-யில் தீமைகளும் உள்ளன. இக்கட்டுரையில், ஜிஎஸ்டி-யின் பல்வேறு நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி பிஸ்னஸ்கள் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை பற்றி காணலாம்.

ஜிஎஸ்டி-யின் நன்மைகள்

    • ஜிஎஸ்டி சேவை வரி, மத்திய கலால் வரி, சொகுசு வரி, விற்பனை வரி போன்ற பல வரிகள் அனைத்தையும் சேர்த்து ஒரே வரியாக கொண்டு வந்துள்ளது. இது வரி கணக்கீடு மற்றும் வசூல் செயல்முறையை எளிதாக்கியுள்ளது.
    • வரி வசூல் செயல்முறையின் வெளிப்படைத்தன்மையை ஜி.எஸ்.டி மேம்படுத்தியுள்ளது.
    • ஜிஎஸ்டி காரணமாக சரக்கு மற்றும் சேவைகளின் மீதான செலவுகள் வரும் காலங்களில் குறையும் என்று தொழில் வல்லுநர்கள் நம்புகின்றனர்.ஏனெனில், இதற்கு முன்னர் சரக்கு மற்றும் சேவைகளின் விலையை அதிகரிப்பதற்கான காரணமாக பல மதிப்பு கூட்டப்பட்ட வரிகள் (வாட்)  அமைந்ததுள்ளது. இப்போது கொண்டுவரப்பட்ட, ​​ஒற்றை வரி முறை அந்த சிக்கலை முற்றிலுமாக ஒழிக்கும்.
    • ரூ.20 லட்சத்துக்கும் குறைவான வருவாய் உள்ள சேவை வழங்குநர்கள் ஜிஎஸ்டி-யை செலுத்த வேண்டியதில்லை. வடகிழக்கு மாநிலங்களில், வருவாய்க்கான வரம்பு ரூ .10 லட்சமாக மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இது சிறு பிஸ்னஸ் வணிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்மையாகும். ஏனெனில் அவர்கள் அவர்களது நேரத்தை வீணடிக்கும் வரிவிதிப்பு செயல்முறையைத் தவிர்த்து அவர்களது பிஸ்னஸின் மீது கவனம் செலுத்தலாம்.
    • ஜிஎஸ்டி ஜவுளித் தொழில் போன்ற அமைப்புசாரா துறைகளில் மிக அவசியமாக இருக்க வேண்டிய பொறுப்புக்கூறல் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கொண்டுவரும். இந்தியாவில், அமைப்புசாரா துறைகள் பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை வழங்குவதோடு பெரும் வருவாயையும் ஈட்டுகின்றன. ஆனால், வரி பொறுப்புக்கூறல் என்று வரும்போது அத்துறைகள் மிகவும் ஒழுங்கற்றுள்ளது. இந்த ஒழுங்கின்மையை சரிசெய்ய ஜிஎஸ்டி முயல்கிறது.
    • தற்போதைய வரிவிதிப்பு முறையின் கீழ், சரக்கு மற்றும் சேவைகளுக்கு தனித்தனி வரி உள்ளது. இதற்கான, வரிப் பொறுப்பை தீர்மானிக்க, பரிவர்த்தனை மதிப்புகள் சரக்கு மற்றும் சேவைகளின் மீதான மதிப்புகளாக பிரிக்கப்பட வேண்டும். இதுவே அதிக சிக்கல்களுக்கும் நிர்வாக பிரச்சனைகளுக்கும் காரணமாகிறது. ஜி.எஸ்.டி அவற்றையெல்லாம் அகற்றும்.
    • முன்னதாக, பல மறைமுக வரிகளை நிர்வகிக்கும் சிக்கலான பணியை அரசாங்கம் எதிர்கொண்டது. ஆனால்,  ஜி.எஸ்.டி-யின் முதுகெலும்பான, ஜிஎஸ்டி நெட்வொர்க் (ஜி.எஸ்.டி.என்), ஜிஎஸ்டி செயல்பாடு தொடர்பான அனைத்து செயல்முறைகளையும் நிர்வகிக்கும். இது ஜி.எஸ்.டி செயல்பாடுகளை எளிதாக்கி, அது சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக முற்றிலுமாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு தளமாகும்.
    • ஜிஎஸ்டி நுகர்வின் இறுதி கட்டத்தில் மட்டுமே விதிக்கப்படும். இதன் மூலமாக, சரக்கு மற்றும் சேவை, உற்பத்தியாளரிடமிருந்து சில்லறை விற்பனை நிலையங்கள் சென்றடைவது வரை பல இடங்களில் விதிக்கப்படும் இரட்டை வரிவிதிப்பு நீக்கப்படும். இது பொருளாதார சிதைவுகளை ஒழிப்பதற்கான ஒரு வழியாகும்.

                                                                                                            

  • ஜி.எஸ்.டி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜி.டி.பி) உயர்த்தியுள்ளது. ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஒரு காலகட்டத்திலான அந்நாட்டின் பொருளாதார செயல்திறனையும் வளர்ச்சியையும் பிரதிபலிக்கிறது. பலதரப்பட்ட தொழில்கள் சீரான வரிச் சட்டத்தின் கீழ் வருவதை ஜிஎஸ்டி உறுதி செய்து பிஸ்னஸ்கள் சுமுகமாக செயல்படுவதை மிகவும் எளிதாக்கியுள்ளது.
  • ஜிஎஸ்டி-யின் முக்கிய நன்மைகளில் ஒன்று என்னவென்றால், வரி செலுத்துவோர் ஜிஎஸ்டி போர்ட்டல் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்து, வருமானத்தை தாக்கல் செய்யவும் வரி செலுத்தவும் செய்யலாம். மேலும், செயல்பாட்டில் உள்ள அமைப்புகள் சப்ளையர் மற்றும் வாங்குபவரின் இன்வாய்ஸ்களை ஒப்பிட்டுப் பொருத்துகின்றன. இந்த வழிமுறை வரி மோசடி மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றை திறம்பட கட்டுப்படுத்தும். அதே நேரத்தில், இது கட்டமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில், இன்னும் அதிக பிஸ்னஸ்கள் தேசிய பொருளாதாரத்தில் தொடங்குவதை உறுதி செய்யும்.
  • முந்தைய வாட் முறை வரி இணக்கத்தில், காமர்ஸ் பிஸ்னஸ்கள் வேறு மாதிரியான நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டன. ஆனால், இது தொடர்பான அனைத்து குழப்பங்களையும் ஜி.எஸ்.டி நீக்கியுள்ளது. இந்திய முழுவதுமுள்ள அனைத்து காமர்ஸும் இப்போது ஜி.எஸ்.டி சட்டத்தின் கீழ் நன்கு விதிக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றுகிறது. இது மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்து தொடர்பான சிக்கல்களையும் நீக்கியுள்ளது.

ஆனால், இத்தகைய பெரிய அளவிலான வரி சீர்திருத்தங்களை கொண்டு வந்த ஜி.எஸ்.டி-யில் குறைபாடுகள் இல்லாமல்  இருக்காது. எனவே, பிஸ்னஸ்கள் அவற்றையும் அறிந்திருப்பது கட்டாயமாகும். ஜி.எஸ்.டி-யின் சில குறைபாடுகளை விரைவாகப் பார்ப்போம்:

ஜிஎஸ்டி-யின் தீமைகள்

  • ஜிஎஸ்டி என்பது முற்றிலும் ஐ.டி-யை அடிப்படையாக கொண்ட சட்டமாகும். இந்த யோசனை புதுமையானதாக இருந்தாலும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இம்முறையை முழுவதுமாக செயல்படுத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பு இல்லை என்பதுதான் அதன் பிரதான குறைபாடு.
  • தங்களது பிஸ்னஸை பல மாநிலங்களில் நடத்தும் நிறுவனங்கள், அவ்வனைத்து மாநிலங்களிலும் தங்களை பதிவு செய்ய வேண்டும். இது முன்பு இல்லாத கூடுதல் சிரமமான சிக்கலை உண்டாக்குகிறது.
  • ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் சில பொருட்களின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் நிச்சயமாக  உள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் செலவீனப் பொருட்களான காப்பீட்டு புதுப்பித்தல் பிரீமியம், உடல்நலம், கூரியர் சேவைகள், டி.டி.எச் சேவைகள் போன்றவற்றின் விலை உயரும்.
  • சக்கர நாற்காலிகள், செவிப்புலன் கருவிகள், பிரெய்லி பேப்பர்கள் போன்றவற்றை வரி விதிக்கும் சரக்குகளின் கீழ் கொண்டு வந்ததால் ஜி.எஸ்.டி “டிஸ்எபிலிட்டி டெக்ஸ்” என்ற புனைப்பெயரைப் பெற்றுள்ளது.
  • நிகர ஜிஎஸ்டி-யிலிருந்து  இது வரை பெட்ரோல் மற்றும் பெட்ரோலிய பொருட்களுக்கு விலக்கு அளிப்பட்டுள்ளது. இது ஜிஎஸ்டி-க்கு உந்து சக்தியாக உள்ள “ஒருங்கிணைந்த வரி” என்ற யோசனையுடன் ஒத்திருக்கவில்லை. ஒவ்வொரு மாநிலமும் இத்தயாரிப்புகள் மீது தனி வரிகளை விதிக்கிறது. இதனால், இத்துறை  அல்லது இத்துறை சார்ந்த துறைகள், உள்ளீட்டு வரிக் கடனைக் கோர முடியாது.
  • புதிய விதிகளை திறம்பட செயல்படுத்தவும் கண்காணிக்கவும் வரி வசூலிக்கும் அதிகாரிகளுக்கும் அது தொடர்பான பிற துறைகளிலுள்ள அதிகாரிகளுக்கும் விரிவான மற்றும் முழுமையான பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது.

முடிவுரை

முடிவாக, ஒவ்வொரு புதிய சீர்திருத்தமும் முயற்சியும் அதற்கான குறைபாடுகள் மற்றும் தீமைகள் இல்லாமல் இருக்காது. ஆனால், இக்குறைபாடுகள் பல தற்காலிகமானவை, ஏனெனில் ஜி.எஸ்.டி கவுன்சில் ஜி.எஸ்.டி செயல்படுத்தப்படுவதை ஒழுங்கான முறையில் கண்காணித்து வருகிறது. மேலும், அக்கவுன்சில் பிஸ்னஸ் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை முறையாக அவர்களிடமிருந்து கேட்டு அறிந்துகொள்கிறது. எனவே, காலப்போக்கில், ஜி.எஸ்.டி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பிஸ்னஸூகளுக்கு ஏற்ற ஒரு வரி விதிப்பு முறையாக இருக்க வேண்டும் என்ற அதன் நோக்கத்தை அடையும் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.