written by | October 11, 2021

பழுதுபார்க்கும் கடை

×

Table of Content


கடிகாரம் பழுது பார்க்கும் தொழிலைத் தொடங்குவது எப்படி? 

கடிகாரம் பழுதுபார்க்கும் தொழில் உங்களுக்கானதா?

கடிகாரங்கள் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு விதமான இயந்திரத் தன்மை கொண்டதாக தயாரிக்கப்படுவதால் சாதாரண மனிதனால் எந்தவித பயிற்சியும் இல்லாமல் கடிகார பழுது பார்க்கும் வணிகத்தை தொடங்குவது என்பது எளிதான காரியமல்ல. கடிகாரம் தயாரித்தல் மற்றும் கடிகாரங்களின் வரலாறு பற்றிய உண்மைகளை ஆர்வத்துடன் தெரிந்து கொண்ட அல்லது தெரிந்து கொள்ள விருப்பமுள்ள நபர்களால் மட்டுமே கடிகாரத்தை சரி செய்து கொடுக்கும் தொழிலை சிறந்ததொரு வணிகமாக செய்யமுடியும். கடிகாரம் பழுது பார்க்கும் வணிகத்தை ஒரு சாதாரண தொழிலாக கருதாமல் அது ஒரு கலை என கருதி ஆர்வத்துடன் பல்வேறுவிதமான கடிகார வடிவமைப்புகளை விரும்பும் நபரால் மட்டுமே இத்தொழிலை சிறப்புடன் நடத்தமுடியும். 

பெரும்பாலான நேரங்களில் கடிகாரம் பழுது பார்க்கும் நபர்கள் ஒரே மாதிரியான வேலையை செய்து கொண்டிருப்பார்கள். அதாவது கைப்பிடி மாற்றுதல், பேட்டரி மாற்றுதல், கடிகார முக பக்கங்களை மாற்றுதல் போன்ற ஒரே மாதிரியான வேலையை எந்தவித சலிப்பும் இல்லாமல் காலம்காலமாக செய்யக்கூடிய பொறுமை இருத்தல் அவசியம். ஏனென்றால் உங்களுக்கு நாள்தோறும் பல அரிதான கடிகாரங்களை பழுது பார்க்கும் வாய்ப்பு இருக்கப்போவதில்லை. கடிகாரம் பழுது பார்க்கும் தொழிலை செய்ய விரும்புவோர் மக்களிடம் எளிதில் பேசி பழக கூடியவர்களாகவும் புதிதாக வரக்கூடிய நபர்களிடமும் அன்பாக பேசும் தன்மை கொண்டவராகவும் இருந்தால் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு முழுமையான மனநிறைவை தரமுடியும். கடிகாரம் பழுது பார்ப்பதில் நல்ல அனுபவம் சரியாக இருப்பதால் மட்டுமே எந்த ஒரு கடிகாரத்தையும் பார்த்தவுடன் அதன் பழுதை கண்டறியும் திறமையும் உடனடியாக கழட்டி சரி பார்த்துக் கொடுக்கும் வேகமும் கிடைக்கும். 

உங்களுக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களிடம் புது கடிகாரங்களை விற்கும் திறமையும் இருப்பது இத்தொழிலை நடத்துவதற்கு கூடுதல் பலத்தை தரும். இவைகள் மட்டுமல்லாது ஒரு சொந்தத் தொழிலை நிர்வகிக்க கூடிய நிர்வாகத் திறமையும் கணக்கு வழக்குகளை சரியாக பார்க்கக்கூடிய நபராகவும் புதுப்புது டெக்னாலஜியில் உருவாகக்கூடிய கடிகார தொழில்நுட்பத்தை புரிந்துகொள்ளக்கூடிய நபராகவும் இருத்தல் அவசியம். மேலே குறிப்பிட்ட அனைத்து அம்சங்களும் உங்களுக்கு இருக்குமேயானால் நீங்கள் இத்தகைய கடிகாரம் பழுது பார்க்கும் கடையை தொடங்கி நடத்துவதென்பது எளிதான காரியம்தான். கடிகாரம் பழுதுபார்க்கும் தொழிலை சிறந்ததொரு வணிகமாக நடத்துவதற்கான வழிமுறைகளை இந்த கட்டுரையில் விரிவாக காண்போம். 

கடிகாரம் பழுது பார்க்கும் தொழிலை செய்ய தேவையான படிநிலைகள்: 

1) உங்கள் வணிகத்தைத் திட்டமிடுங்கள்

ஒரு தொழில்முனைவோராக நீங்கள் வெற்றி பெற விரும்பினால் கடிகாரம் பழுது பார்க்கும் தொழிலை ஆரம்பிப்பதற்கு முன்பு அதற்கான சரியான திட்டமிடல் வரையறை செய்தல் அவசியம். திட்டமிடுதல் என்பது உங்களுக்கு இருக்கக்கூடிய சந்தேகங்களை மற்றும் கேள்விகளை உங்களுக்குள் கேட்டு ஒரு சிறு ஆய்வு நடத்தி உங்கள் சந்தேகம் மற்றும் கேள்விகளை போக்கக்கூடிய பதில்களை தேடுவதாகும். பெரும்பாலான மக்களின் மனதில் ஓடக்கூடிய சில முக்கியமான கேள்விகளுக்கு எங்கள் தரப்பில் செய்யப்பட்ட ஆய்வின் தகவல்களை உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம். 

  1. a) கடிகார பழுதுபார்க்கும் கடை தொடங்க தேவையான முதலீடு எவ்வளவு? 

ஒரு கடிகார பழுதுபார்க்கும் கடையை துவங்குவதற்கான தகுந்த இடவசதி உங்களிடம் இருக்குமேயானால் ஒரு 50 ஆயிரம் ரூபாய் செலவில் இத் தொழிலைத் தொடங்கிவிடலாம். மேசை, லென்ஸ், விளம்பரப் பலகை, பழுது பார்க்கும் உபகரணங்கள், அத்தியாவசிய உதிரி பாகங்கள் மட்டுமே இந்தத் தொழிலை தொடங்குவதற்கு தேவையான பொருளாக இருப்பதால் அதிகப்படியான செலவு இருப்பதில்லை.  

  1. b) வாட்ச் பழுதுபார்க்கும் வணிகத்திற்கான மாத செலவுகள் எவ்வளவு?

சொந்த இடத்தில் கடையை நிறுவி இருந்தால் வாடகை போன்ற தொந்தரவு இல்லாமல் இருப்பதால் எந்தவித மாதச் செலவுகளும் உங்களுக்கு இந்தத் தொழிலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்தியாவசிய பொருட்களை ஏற்கனவே வாங்கி வைத்திருப்பது மற்றும் வாடிக்கையாளர்களிடம் முன் பணம் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாலும் மாதச் செலவுக்கு என்று தனி தொகை எடுத்து வைக்கத் தேவையில்லை. 

  1. c) உங்களுடைய வாடிக்கையாளர் யாராக இருப்பார்கள்?

கைக்கடிகாரங்கள் பயன்படுத்தக்கூடிய மக்கள் மற்றும் பழங்கால அரிதான சுவர்க்கடிகாரம் மற்றும் நினைவுப் பொருளாக சுவர் கடிகாரங்கள் வைத்திருக்கக்கூடிய மக்களே உங்களுடைய முக்கியமான வாடிக்கையாளர்களாக இருப்பார்கள். பழங்கால மற்றும் அரிதான கலைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடிய நபர்களிடம் நீங்கள் ஒப்பந்த முறையில் அவர்களது கடிகாரங்கள்க்கு சுத்தம் செய்து கொடுக்கும் வேலையும் பழுதுபார்க்கும் வேலையும் செய்யலாம். 

  1. d) வாடிக்கையாளர்களிடம் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும்?

ஒவ்வொரு கைக்கடிகார பழுதுபார்க்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்தும் உதிரி பாகங்களின் விலைக்கு மேல் 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கடிகாரத்தின் மதிப்புக் ஏற்ற வகையில் வாங்கிக் கொள்ளலாம்.

  1. e) வாட்ச் பழுதுபார்க்கும் வணிகத்தால் எவ்வளவு லாபம் ஈட்ட முடியும்?

ஒரு கடிகார பழுதுபார்க்கும் தொழிலை நடத்தி வருபவரின் சராசரி ஆண்டு வருமானம் என்பது 2 லட்சம் முதல் 3 லட்சம் வரையில் அமையும். நீங்கள் தொழில் செய்யும் இடம், வாடிக்கையாளர்களை அணுகும் முறை, உங்களது தொழில் அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் இந்தத் தொகையில் சற்று மாறுதல் இருக்கக்கூடும். ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்ற நவீன தொழில்நுட்ப வரவுகளால் கடிகாரங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதால் அதிகப்படியான ஆண்டு வருமானத்தை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. 

2) சரியான பெயரை தேர்ந்தெடுங்கள் 

உங்கள் கடைக்கான பெயரை தேர்ந்தெடுக்கும் போது மக்கள் மனதில் எளிதாக பதியும் படியான கடிகாரங்கள் தொடர்புடைய பெயராக இருப்பதோடு மட்டுமல்லாது மற்ற நிறுவனங்களால் பயன்படுத்தாத பெயராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அவசியம். நீங்கள் வைக்கக்கூடிய பெயரில் ஏதேனும் வலைதளங்கள் இருக்கிறதா என்பதை சரி பார்ப்பது மூலம் பிற்காலத்தில் நீங்கள் ஆன்லைனில் தொழில் விஸ்தரிப்பு செய்ய முற்படும்போது ஏற்படும் குழப்பங்களை தவிர்க்கலாம். 

3) உங்கள் தொழில் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் 

உங்கள் தொழில் நிறுவனத்தின் பெயர் உரிமையாளர் முகவரி மற்றும் தொழில் தன்மை போன்றவற்றின் தகவல்களை அரசாங்க அலுவலகங்களை தொடர்புகொண்டு உங்கள் தொழிலை பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் தொழிலை பதிவு செய்தால் மட்டுமே ஜிஎஸ்டி மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் இதர வரிச் சலுகைகளை பெறுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். நீங்கள் உங்களது வணிகம் பற்றிய விவரங்களை சரியாக சமர்பிக்க தவறினால் கார்ப்பரேஷன் மூலம் உங்களுக்கு அபராதம் விதிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகவே நீங்கள் வைத்திருக்கும் இடத்திற்கான உரிமம் அல்லது வாடகைக்கு இருந்தால் வாடகை ஒப்பந்தம் போன்றவற்றை பயன்படுத்தி கார்ப்பரேஷன் அலுவலகங்களில் பதிவு செய்து கொள்க. 

4) வணிக பரிமாற்றத்திற்கான தனி நடப்பு வங்கிக் கணக்கை தொடங்குங்கள்

உங்களது தனிப்பட்ட சொத்துக்களின் பாதுகாப்பிற்காகவும் வணிக செலவுகள் மற்றும் சொந்த செலவுகளுக்கு இடையில் எந்தவித குழப்பம் ஏற்படாமல் தடுப்பதற்கும் வணிகப் பரிமாற்றத்திற்கான தனி ஒரு வங்கிக் கணக்கை தொடங்க வேண்டும். ஒரு தனி வங்கிக் கணக்கை வணிகத்திற்காக தொடங்கி பயன்படுத்துவதன் மூலம் பிற்காலத்தில் உங்களுக்கு தொழில் கடன் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. தனி ஒரு வங்கிக் கணக்கை உங்கள் கடிகார பழுது பார்க்கும் கடைக்கு பயன்படுத்தும்பொழுது ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் சமர்ப்பிக்க கூடிய வரி சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட் தயார் செய்வதற்கு எளிதாக அமையும். உங்களது வருடாந்திர கணக்கை சரியான முறையில் சமர்ப்பிப்பதன் மூலம் மட்டுமே உங்களது வரிச் சலுகைகளை பெற முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்க. இது மட்டுமல்லாது உங்களது வங்கிக் கணக்கை பயன்படுத்தி தனி ஒரு கடன் அட்டையை பெறுவதன் மூலம் உங்களது அத்தியாவசிய வணிக வளர்ச்சிக்கு மற்றும் பண சுழற்சிக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். 

5) வாடிக்கையாளர் சேவை ஒப்பந்தத்தை தயார் செய்து கொள்ளுங்கள்

வாடிக்கையாளர்களிடமிருந்து கடிகாரத்தை பழுதுபார்க்க வாங்குவதற்கு முன்பு உங்களது சேவையைப் பற்றிய நிபந்தனைகளை அடங்கிய சீட்டில் கையெழுத்து வாங்கிக் கொள்வது மிக முக்கியம். ஏனென்றால் நீங்கள் பழுதுபார்க்கவிருக்கும் கடிகாரத்தில் எந்தவித குறைபாடு உள்ளது அதை முழுவதுமாக சரி செய்து கொடுக்க முடியுமா போன்றவற்றை நீங்கள் பரிசோதித்த பிறகே தெரியும் என்பதால் அதற்குத் தகுந்த நிபந்தனைகளை வரையறை செய்து வாடிக்கையாளர்களிடம் முன்கூட்டியே ஒப்பந்தம் பெறுவதால் பல்வேறு வகையான சிக்கல்களை தவிர்க்க முடியும். எவ்வளவு நாட்களில் அவர்களது பொருளைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் உங்களது சேவை கட்டண விவரங்கள் போன்ற தகவல்களை அந்த ஒப்பந்தத்தில் உள்ளிடுவது சிறப்பம்சமாகும். இந்த வாடிக்கையாளர்கள் ஒப்பந்தத்தை தயார் செய்வதில் உங்களுக்கு ஏதேனும் சிரமம் இருந்தால் நல்ல வழக்கறிஞரை சந்தித்து ஆலோசனை பெற்று அல்லது ஆன்லைனில் இருக்கக்கூடிய டாக்குமென்ட்களை பயன்படுத்தியோ உருவாக்கிக் கொள்ளுங்கள். 

6) வணிக காப்பீடு பெற்றுக்கொள்ளுங்கள் 

உங்களுடைய முதலீடு மிகவும் குறைவாக இருந்தாலும் உங்களது வாடிக்கையாளர்களின் விலைமதிப்புள்ள பொருட்களை சில நேரத்தில் நீங்கள் கையாள வேண்டியிருப்பதால் வணிக காப்பீடு பெற்றுக் கொள்வது அவசியமாகிறது. உங்கள் கடையில் ஏதேனும் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கி இருந்தால் அவர்களுக்கு தேவையான தொழிலாளர் காப்பீடு உரிமங்கள் சார்ந்த பதிவையும் செய்யுங்கள். இத்தகைய காப்பீட்டுத் திட்டங்களுக்கு நீங்கள் சிறிய தொகையை அவ்வப்போது செலவழித்து வந்தாலும் எதிர்காலத்தில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழும் போது ஏற்படக்கூடிய பெரும் நிதி நெருக்கடியில் இருந்து உங்களை காப்பாற்றுவதற்கு வசதியாக இருக்கும்.

7) வணிகத்தை பிரபலப்படுத்தி வாடிக்கையாளர்களை தக்க வைக்க வேண்டும் 

பெரும்பாலான நிறுவனங்கள் நஷ்டத்தில் செல்லாமல் காலம் காலமாக நடந்து கொண்டிருப்பதற்கான காரணம் என்னவென்றால் அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட அளவு நிரந்தர வாடிக்கையாளர்கள் இருப்பதேயாகும். தங்கள் வணிகத்திற்கு வரக்கூடிய புதிய வாடிக்கையாளர்களை பொறுத்து உங்களது லாப அளவில் சிறு மாறுதல் ஏற்பட்டாலும் மாதாந்திர செலவுகளை சமாளிப்பதற்கு நிரந்தர வாடிக்கையாளர்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். இத்தகைய நிரந்தர வாடிக்கையாளர்கள் பெறுவதற்கு உங்களது வணிகம் மிகவும் பிரபலம் அடையும் வகையில் பல்வேறு விதமான மார்க்கெட்டிங் உத்திகளைப் பயன்படுத்த வேண்டும். 

8) வலைதளங்கள் மூலம் ஆன்லைன் வாடிக்கையாளர்களையும் பெற வேண்டும் 

ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் என்று அனைத்தும் ஸ்மார்ட்டான மாறுதலுக்கு உட்பட்டு இருப்பதால் நீங்களும் உங்களது வாடிக்கையாளர்களை பெறுவதற்கு வலைதளங்கள் மூலம் முயற்சி செய்ய வேண்டும். பல்வேறு பிரபலமான வாட்ச் ரிப்பேர் செய்யும் நிறுவனங்களின் வலைதளத்தை நீங்கள் பார்வையிடும் பொழுது உங்களுக்கு எந்த மாதிரியான வலைதளத்தை உருவாக்க வேண்டும் என்ற புரிதல் உண்டாகும். ஆன்லைன் வாடிக்கையாளர்கள் மற்றும் நேரடி வாடிக்கையாளர்கள் என இரு தரப்பிலும் இருந்து  பல்வேறு கடிகார பழுதுபார்க்கும் வேலையை பெறுவதன் மூலம் வணிக வளர்ச்சியை மிக எளிதில் பெற முடியும். 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.