written by khatabook | August 8, 2020

ஜிஎஸ்டி டிராக்கிங் - உங்கள் விண்ணப்ப நிலையை ஆன்லைனில் டிராக் செய்யவும்

×

Table of Content


ஜூலை 2017 முதல் அமல்படுத்தப்பட்ட, சரக்கு மற்றும் சேவை வரி ( ஜிஎஸ்டி ) மூலம் மிகப்பெரிய மறைமுக வரி சீர்திருத்தத்தை இந்தியா கண்டது. ‘ஒரு தேசம், ஒரு வரி’ முயற்சியின் கீழ், மத்திய மற்றும் மாநிலங்களில் வசூல் செய்த, மைய ஆயத்தீர்வு, சேவை வரி, மாநில வாட், நுழைவு வரி, சொகுசு வரி போன்ற பல வரிகளை ஜிஎஸ்டி தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது.

பல மறைமுக வரிகளை ஒரு நிலையான வரியாக மாற்றுவதன் மூலம் காகித பணிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரி செலுத்துவோரின் சுமை நேரடியாகக் குறைக்கப்படுகிறது. இந்த கட்டுரை, ஜிஎஸ்டி பற்றிய முக்கிய விவரங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

எப்போது ஜிஎஸ்டி பதிவு தேவை?

கீழே பட்டியலிடப்பட்ட வகைகளின் கீழ் வரும் எல்லா பிஸ்னசுக்கும் ஜிஎஸ்டி பதிவு செய்தல்:அவசியம்.

  • இ-காமர்ஸ் பிஸ்னஸ்கள், அவைகள் ஈட்டும் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல்
  • ரூ.20 லட்சம் மற்றும் அதற்கும் மேல் ஆண்டு வருமானத்தை ஈட்டும் உள்-மாநில பிஸ்னஸ்கள்.
  • ரூ .10 லட்சம் வருமானத்தை ஈட்டும் வடகிழக்கு, உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், மற்றும் ஜம்மு-காஷ்மீர் போன்ற சிறப்பு வகையினுள் வரும் மாநிலங்களுக்குள் நடைபெறும் மாநில பிஸ்னஸ்கள்

உள்ளீட்டு வரிக் கடனை க்ளைம் செய்வதற்கு, ஒரு சரக்கு மற்றும் சேவை வரி அடையாள எண் (ஜிஎஸ்டின்) தேவை.

இது ஜிஎஸ்டியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு வரி செலுத்துவோருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள தனித்துவமான 15 இலக்கை உடைய எண்ணாக இருப்பது மட்டுமின்றி ஜிஎஸ்டி வரி அமைப்பில் உங்களை தனித்து காட்டவும் உதவும். உங்கள் பதிவு முழுவதும் முடிந்தால் மட்டுமே உங்களுக்கு ஜிஎஸ்டின் வழங்கப்படும். யார் உள்ளீட்டு வரிக் கடனை பெற க்ளைம் செய்யலாம்?

  • ஆண்டு வருமானத்தை பொருட்படுத்தாமல் அனைத்து பிஸ்னஸ்கும் ஜிஎஸ்டின் அவசியம்.
  • வெவ்வேறு மாநிலங்களில் பல பிஸ்னஸ்கள் இருக்கும் பட்சத்தில் தனித்தனியான பதிவுகள் அவசியம்.
  • வரி செலுத்த தகுதியுள்ள ஒரு சாதாரண நபர் வரிவசூலிக்க வேண்டிய பொருட்களை சப்ளை செய்தல்.
  • வரி செலுத்த தகுதியுள்ள ஒரு குடியுரிமை அற்ற நபர் வரிவசூலிக்க வேண்டிய பொருட்களை சப்ளை செய்தல் .
  • ரிவர்ஸ் சார்ஜின் கீழ் வரியை செலுத்தவேண்டியவர்கள்

எவ்வாறு ஜிஎஸ்டியை ஆன்லைனில் பதிவு செய்வது?

ஆன்லைனில் GST செலுத்துவது என்பது இப்போது மிகவும் எளிமையான செயல் முறையாகிவிட்டது. தொடங்குவதற்கு முன், பின்வரும் ஆவணங்களை சேகரிக்கவும்.

  • PAN கார்டு
  • ஆதார் கார்ட்
  • பிஸ்னஸ் பதிவு சான்றிதழ்
  • இணைத்தல் சான்றிதழ்
  • வங்கி கணக்கின் அறிக்கை
  • டிஜிட்டல் கையொப்பம்
  •  

  ஆன்லைன் ஜிஎஸ்டி பதிவு செயல்முறையைதுவங்க பின்வரும் ஸ்டெப்ஸை பின்பற்றவும்:

  • ப்ரௌசரை திறந்து ஜிஎஸ்டி போர்டல் தளத்திற்கு செல்லவும்(www.gst.gov.in)
  • 'புதிய கஸ்டமர்' என்ற லாகின் டேபை தேர்வு செய்யவும்
  • உங்கள் பிஸ்னஸுக்கு தேவைப்படும் ஜிஸ்டி ஃபார்மை/படிவத்தை தேர்வு செய்யவும்.
  • அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு ஜிஎஸ்டி படிவத்தை சமர்ப்பிக்கவும்.
  • அந்த ஃபார்முடன் சில ஆவணங்களும் பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.
  • முழு செயல்முறையும் முடிந்தப்பிறகு,விண்ணப்பத்தின் குறிப்பு எண்(ARN) தானாகவே உருவாக்கப்படும்

உங்கள் ஜிஎஸ்டிஐஎன் எண்ணை பெரும் வரை ARN தற்காலிக எண்ணாக செல்லுபடியாகும், ARNஐ உங்கள் பதிவுக்கான நிலையை போர்ட்டலில் டிராக் செய்ய பயன்படுத்தலாம். உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டவுடன் உருவாகும் ஜிஎஸ்டிஐஎன்-ஐ உள்நுழைய பயன்படுத்திக்கொள்ளலாம்.

  • உங்கள் பதிவுசெய்யப்பட்ட இமெயில் முகவரிக்கு கடவுச்சொல் அனுப்பப்படும், கீழிருக்கும் இ-மெயிலை அணுகி லிங்கை பின்பற்றவும்.
  • ஜிஎஸ்டி போர்ட்டல் லாகின் பக்கத்திற்குநீங்கள் செல்வீர்கள்.
  • விவரங்களை உள்ளிட்டு உங்கள் இமெயிலுக்கு அனுப்பட்ட கடவுச்சொல்லை பயன்படுத்தவும்.
  • அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னர் தேவைப்பட்டால் நீங்கள் உங்கள் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை மாற்றலாம்

உங்கள் ஜிஎஸ்டி விண்ணப்பத்தின் நிலையை எப்படி டிராக் செய்வது?

நீங்கள் ஜிஸ்டி பதிவு செய்தப் பின்னர் உங்கள் விண்ணப்பத்தை பல வழிகளில் டிராக் செய்யலாம், அவற்றுள் சில பின்வருமாறு.

                                                    

ஜிஎஸ்டி போர்ட்டலில் விண்ணப்பத்தின் நிலையை சோதிக்கலாம்

ஜிஎஸ்டி போர்ட்டல் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அப்டேட் செய்யும்

  • இணையத்தளத்திற்கு சென்று லாகின் செய்யவும்.
  • கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலிளிருந்து 'ரெஜிஸ்ட்ரேஷன்' என்பதை தேர்வு செய்யவும்
  • 'சேவைகள்' விருப்பத்தை தேர்வு செய்வதன் மூலம் 'விண்ணப்ப நிலையை டிராக் செய்தல்' விருப்பம் தெரியவரும்.

உங்கள் விருப்பத்தின் தற்போதைய நிலை காட்டப்படும். நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய பல விண்ணப்ப நிலைகள் பின்வருமாறு:

  • ARN உருவாக்கப்பட்டது - பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் தற்காலிக குறிப்பு எண்ணின் (TRN)நிலை
  • செயல்பாடு நிலுவையில் உள்ளது - பதிவு செய்யப்பட்ட விண்ணப்பம் வெற்றிகரமாக சேமிக்கப்பட்டது.
  • தற்காலிக - ஜிஎஸ்டிஎன் நிலை, சல்லான் உருவாக்கம் தொடங்கப்படுவதிலிருந்து (சாதாரண வரி செலுத்துவோருக்கு) பதிவு செய்யப்பட்ட விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும் வரை இருக்கும் நிலை.
  • சரிபார்ப்பிற்காக நிலுவையில் உள்ளது - பதிவு செய்யப்பட்ட விண்ணப்பம் சமர்ப்பித்தது முதல் ARN உருவாக்கப்படும் வரை இருக்கும் நிலை.
  • சரிபார்ப்பு பிழை - பதிவு செய்யப்பட்ட விண்ணப்பம் சமர்ப்பித்தது முதல் ARN உருவாக்கப்படும் வரை ஏற்படும் சரிபார்ப்பு தோல்வியுற்றல்.
  •  
  •  

ஜிஎஸ்டி போர்ட்டலில் உள்நுழையாமல் விண்ணப்பதின் ஸ்டேட்டஸை சரிபார்க்கிறது

ஜிஎஸ்டி போர்ட்டலில் உள்நுழையாமல் உங்கள் விண்ணப்பத்தை நீங்கள் சமர்ப்பித்திருந்தால், ARN ஐப் பயன்படுத்தி உங்கள் ஸ்டேட்டஸை நீங்கள் கண்காணிக்கலாம்.

  • ஜிஎஸ்டி போர்ட்டலில் நுழைந்து , ‘பதிவு’ என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் ‘சேவைகள்’ என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • ‘ட்ராக் அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ்’ஆஃஷன் காண்பிக்கப்படும், மேலே சென்று தேர்ந்தெடுக்கவும்.
  • உள்நுழைத்தவும், ‘ARN உடன் பயன்பாட்டைக் கண்காணிக்கவும்’ என்ற ஆஃஷனை தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் ARN ஐ உள்ளிட வேண்டிய கிடைமட்ட நெடுவரிசை காண்பிக்கப்படும்.
  • உங்கள் பதிவுசெய்யப்பட்ட ஈமெயில் முகவரிக்கு அனுப்பப்பட்ட அதே ARN ஐ உள்ளிடவும்.
  • கேப்ட்சா டெக்ஸ்ட்டை நிரப்ப தொடரவும், ‘சர்ச்/தேடு’ என்பதைக் கிளிக் செய்யவும்.

ஜிஎஸ்டி சான்றிதழை எவ்வாறு பதிவிறக்குவது?

ஜிஎஸ்டி இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துவோருக்கு ஜிஎஸ்டி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழ் வரி செலுத்துவோரின் வணிக இடத்தில் காட்டப்பட வேண்டும். ஜிஎஸ்டி சான்றிதழைப் பதிவிறக்குவதற்கான செயல்முறை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது:

  • போர்ட்டலில் உள்நுழைக(www.gst.gov.in)
  • சேவைகளை தேர்ந்தெடுத்து பின்னர் யூசர் சேவைகளை தேர்நதெடுக்கவும்’.
  • சான்றிதழை காண வியூ/ டவுன்லோட் செய்ய ஆஃஷன் காண்பிக்கப்படும்.
  • பதிவிறக்க லிங்கை கிளிக் செய்து ஃபைலை சேமிக்கவும்.

ஜிஎஸ்டி சான்றிதழின்வாலிட்டிட்டி

வழக்கமான வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும் ஜிஎஸ்டி சான்றிதழ் ஜிஎஸ்டி பதிவு சரண்டர் செய்தல் அல்லது ஜிஎஸ்டி அதிகாரத்தால் ரத்து செய்யப்படாத வரை காலாவதியாகாது.

சாதாரண வரி செலுத்துவோர் அல்லது குடியுரிமை பெறாத வரி செலுத்துவோர் விஷயத்தில், சான்றிதழின் செல்லுபடியாகும் காலவரம்பு அதிகபட்சம் 90 நாட்கள் ஆகும். அதன் செல்லுபடியாகும் காலத்தின் முடிவில் காலவரம்பை நீட்டிக்கலாம் அல்லது புதுப்பிக்கலாம்.

ஜிஎஸ்டி சான்றிதழில் மாற்றங்கள் ஏற்பட்டால்

ஜிஎஸ்டி பதிவு சான்றிதழ் குறித்த ஏதேனும் தகவல் தவறாக இருந்தால், வரி செலுத்துவோர் ஜிஎஸ்டி போர்ட்டலில் திருத்தத்தைத் தொடங்கலாம். இந்த திருத்தத்திற்கு வரி அதிகாரிகளின் ஒப்புதல் தேவைப்படும்.

ஜிஎஸ்டி பதிவு சான்றிதழில் அனுமதிக்கப்பட்ட சில மாற்றங்கள்:

  • PAN கார்டில் மாற்றம் செய்யாமல், பிஸ்னஸின் சட்ட பெயரில் செய்யும் மாற்றங்கள்
  • பிஸ்னஸின் இயங்கும் இடத்தைப் பற்றிய மாற்றங்கள்.
  • பிஸ்னஸின் கூடுதல் இடங்களில் மாற்றங்கள் (மாநிலத்திற்குள் ஏற்படும் மாற்றம் தவிர).
  • பிஸ்னஸ் பார்ட்னர்கள், நிர்வாக இயக்குநர்கள், அறங்காவலர் குழு, தலைமை நிர்வாக அதிகாரி அல்லது அதற்கு சமமானவர்களை சேர்ப்பது அல்லது நீக்குவது போன்ற மாற்றங்கள்.

திருத்தப்பட்ட விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டாலோ அல்லது நிராகரிக்கப்பட்டாலோ, எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் அறிவிப்பைப் பெறுவீர்கள். மேலும், திருத்தப்பட்ட விவரங்களுடன் திருத்தப்பட்ட பதிவு சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய கிடைக்கும்.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.