written by | October 11, 2021

llp பதிவு

×

Table of Content


எல்.எல்.பி பதிவு என்றால் என்ன? உங்கள் நிறுவனத்தை எல்.எல்.பி பதிவு செய்வது எப்படி?

எல்.எல்.பி பதிவு என்றால் என்ன

2008ஆம் ஆண்டு, பார்ட்னர்ஷிப் நிறுவன அமைப்பின் சிறப்பம்சங்களையும் லிமிடெட் லெயிபிலிட்டி நிறுவன அமைப்பின் சிறப்பு அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு புதிய அமைப்பாக தொடங்கப்பட்டதே லிமிடெட் லெயிபிலிட்டி பார்ட்னர்ஷிப் (எல்.எல்.பி) அதாவது வரையறுக்கப்பட்ட கடன் பொறுப்பு கூட்டாண்மை நிறுவனமாகும். புதிதாக தொழில் தொடங்க உள்ள தொழில்முனைவோர்களிடையே எல்.எல்.பி அமைப்பிற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளதை வளர்ந்து வரும் அதிகமான எல்எல்பி நிறுவனங்களின் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது. இக்கட்டுரையில் பின்வரும் அனைத்து எல்.எல்.பி சம்பந்தப்பட்ட தலைப்புகளின் கீழ் முழு விவரங்களையும் விரிவாக காண்போம். 

  • எல்.எல்.பி பதிவின் அம்சங்கள்
  • எல்.எல்.பி ஆக பதிவு செய்யும் செயல்முறை
  • எல்.எல்.பி பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்
  • எல்.எல்.பி பதிவு செய்ய ஆகும் செலவு
  • எல்.எல்.பி பதிவு செய்ய எடுக்கப்படும் கால அளவு 

எல்.எல்.பி பதிவின் அம்சங்கள்

  • நிறுவனத்தில் உள்ள கூட்டாளர்களின் கடன் பொறுப்பு என்பது அவர்கள் இட்ட முதலீட்டுக்கு ஈடான அளவு மட்டும் இருக்கும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் உங்களது நிறுவனத்தை பதிவு செய்வதற்கு எந்தவித குறைந்த முதலீடு தொகையும் இல்லை.
  • வரம்புகள் அற்ற அதிகபட்ச கூட்டாளர்கள் சேர்க்க முடியும் 
  • எல்.எல்.பி தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கான ஆரம்ப செலவு குறைவு.

எல்.எல்.பி நிறுவனமாக தங்கள் நிறுவனத்தை அடையாளப்படுத்துவதற்கு குறைந்தபட்சம் இரண்டு நபர்களாகவும் அதிகபட்சமாக எவ்வளவு நபர்களை வேண்டுமானாலும் கூட்டாளர்கள் ஆக சேர்த்துக்கொள்ள முடியும். குறைந்தபட்சம் இரண்டு நபர்கள் டெசிகனெக்டட் பார்ட்னராகவும் குறைந்தபட்சம் ஒருவர் இந்தியராகவும் இருப்பது மிக அவசியம். டெசிகனெடைட் பார்ட்னர் செய்யவேண்டிய கடமைகள் மற்றும் அவருக்கு இருக்கக்கூடிய உரிமைகள் போன்றவற்றை எல்.எல்.பி ஒப்பந்தத்தின் மூலம் நிர்வகிக்கப்படும். எல்.எல்.பி சட்டம் 2008 இதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதமான பொறுப்புகளையும் ஏற்கக்கூடிய நபர்களாக இந்த டெசிகனெடைட் பார்ட்னர்கள் இருப்பார்கள். நீங்கள் வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுவனத்தை தொடங்க விரும்பினால் வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை சட்டம் 2008 கீழ் பதியவும். 

எல்.எல்.பி ஆக பதிவு செய்யும் செயல்முறை

  • 1) டி.எஸ்.சி பெறுதல் 
  • 2) டி.ஐ.என் பெறுதல்
  • 3) நிறுவனப் பெயரை தேர்ந்தெடுத்தல் 
  • 4) எல்.எல்.பி நிறுவன அங்கீகாரம் பெறுதல் 
  • 5) எல்.எல்.பி கூட்டாளர்கள் ஒப்பந்தத்தை தயார் செய்யவும் 

1) டி.எஸ்.சி பெறுதல்

எல்.எல்.பி பதிவுசெய்தல் செயல்முறையின் முதல்படியாக நீங்கள் தொடங்க உள்ள எல்எல்பி நிறுவனத்தின் டெசிகனெடைட் பார்ட்னர் ஆக பொறுப்பேற்க உள்ள நபர்களுக்கான டி.எஸ்.சி எனப்படும் டிஜிட்டல் சிக்னேச்சர் சர்டிபிகேட் வாங்க வேண்டும். இந்த டி.எஸ்.சி பயன்பாடு என்னவென்றால் எல்.எல்.பி தொடங்குவதற்காக நீங்கள் பதிவு செய்ய வேண்டிய பல்வேறு இடங்களில் ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்பதாலாகும். டிஜிட்டல் கையொப்பம் சான்றிதழ் – டி எஸ் சி உங்களது எழுத்துப்பூர்வமான கையொப்பங்கள்க்கு இணையான அனைத்து அதிகாரங்களையும் கொண்டுள்ளபடியால் இதைப் பயன்படுத்தும் இடங்களில் கவனமாக கையாள வேண்டும். டிஜிட்டல் கையொப்பம் சான்றிதழ் வழங்குவதற்கான அங்கீகாரத்தை பெற்ற நிறுவனங்களிடம் இருந்து டெசிகனெடைட் பார்ட்னர் அனைவரும் டி எஸ் சி பெறுவதற்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்கவும். 

  • நேஷனல் இன்பர்மேஷன் சென்டர் (என்ஐசி)
  • ஐடிஆர்பிடி சர்டிஃபையீங அத்தாரிடி 
  • சேஃப்ஸ்கிரிப்ட் சிஏ சர்வீஸஸ், சிஃபை கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்
  • (என்) கோட் சொல்யூஷன்ஸ்  சிஏ 
  • இ-முத்ரா 
  • சி.டி.ஏ.சி 
  • என்.எஸ்.டி.எல் 
  • கேப்ரிகார்ன் 
  • பண்டாசைன் 
  • ஐடிசைன் 

டிஜிட்டல் சிக்னேச்சர் சர்டிபிகேட் வழங்குவதற்காக மேலே குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒவ்வொரு மாதிரியான கட்டண தொகை வசூலிக்கப்படுகிறது. ஆகவே நீங்கள் எந்த நிறுவனத்திடமிருந்து டிஎஸ்சி பெற போகிறீர்களோ அவர்களை தொடர்பு கொண்டு கட்டண தொகை பற்றிய விவரத்தை கேட்டு அறிந்து கொள்வது நல்லது. டிஜிட்டல் சிக்னேச்சர் சர்டிபிகேட் விண்ணப்பப்படிவம் சமர்ப்பித்த மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் உங்களது டிஎஸ்சி தயாராகிவிடும். எம் சி ஏ தளத்தில் உங்களது நிறுவன அனுமதி சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களை செய்யவேண்டுமென்றால் கிளாஸ் 2 மற்றும் கிளாஸ் 3 வகையான டிஜிட்டல் சிக்னேச்சர் சர்டிபிகேட் பெறுவது அவசியம். டி எஸ் சி சான்றிதழ் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே செல்லுபடி ஆகுமென்பதால் செல்லுபடி காலம் முடிவதற்கு முன்பாக டி எஸ் சி புதுப்பித்துக் கொள்வதே பல்வேறு கட்ட சிக்கல்களில் இருந்து தப்பிக்க உதவும்.  

2) டி.ஐ.என் பெறுதல் 

டெசிகனெடைட் பார்ட்னர் ஆக நியமிக்க நிர்ணயிக்கப்பட்ட அனைவரும் அல்லது டெசிகனெடைட் பார்ட்னர் ஆக விருப்பமுள்ள அனைவரும் டைரக்டர் ஐடெண்டிஃபிகேஷன் நம்பர் (டி.ஐ.என்) இயக்குனர் அடையாள எண் பெறுவது அவசியமாகும். டிஐஎன் ஒதுக்கீடு செய்வதற்கான விண்ணப்பம் படிவம் டிஐஆர் -3 பதிவு செய்வதற்கு முன்பாக உங்களுக்கு சில ஆவணங்கள் இருப்பது அவசியம். உங்களுக்கு டி ஐ என் பெறவேண்டுமென்றால் பின் வரக்கூடிய அனைத்து ஆவணங்களும் தயார் நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும். 

  • பாலினம் மற்றும் பிறந்த தேதி மற்றும் தேசிய குடியுரிமை விவரங்கள்
  • நிரந்தர கணக்கு எண் (பான்)
  • வாக்காளர்கள் அடையாள அட்டை
  • வெளி நாட்டவராக இருப்பின் கடவுச்சீட்டு இருப்பது அவசியம் 
  • ஓட்டுனர் உரிமம்
  • ஆதார் அட்டை
  • தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்
  • நிரந்தர முகவரி 
  • டி எஸ் சி 

நீங்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களில் நிறுவனத்தின் செயலாளர் அழகு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கையொப்பங்கள் இருப்பது அவசியம். டி.ஐ.ஆர் விண்ணப்ப படிவ எண் 3 ஐ வெற்றிகரமாக சமர்ப்பித்தவுடன் உருவாக்கப்படும் எஸ் ஆர் என் எண்ணை எம் சி ஏ தளத்தின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

3) நிறுவனப் பெயரை தேர்ந்தெடுத்தல் 

உங்களது நிறுவனத்தை எல்எல்பி நிறுவனமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்றால் உங்கள் தொழில் சார்ந்த நிறுவனங்களை நடத்தி வரக்கூடிய வேறு யாரும் பயன்படுத்தாத பெயரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். எம்சிஏ வலைதளத்தில் ஏற்கனவே இருக்கக்கூடிய நிறுவனங்களின் பெயர்களை நீங்கள் ஆராய்வதன் மூலம் எந்த விதமான புதிய பெயர்களை உங்கள் நிறுவனத்திற்கு தேர்ந்தெடுக்கலாம் என்ற தெளிவு கிடைக்கும். இவ்வாறு முழுவதுமாக ஆராய்ந்து யாரும் பயன்படுத்தாத ஒரு தனி பெயரை தேர்ந்தெடுத்த பின்பு எல்.எல்.பி – ஆர்.யு.என் எனப்படும் லிமிடெட் லியாபிலிடி பார்ட்னர்ஷிப் – ரிசர்வ் யுனிக் நேம் மூலம் எஸ்.டி.பி அல்லாத மத்திய பதிவு மையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். 

நீங்கள் தேர்ந்தெடுக்கும் பெயரானது வேறு ஏதேனும் நிறுவனங்களின் பெயர்களுக்கு ஒத்தவாறு இருந்தால் உங்களது பெயர் பதிவிற்கான விண்ணப்பம் முழுவதுமாக நிராகரிக்கப்படும். அவ்வாறு உங்களது பெயர் பதிவிற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அடுத்த 15 நாட்களுக்கு பிறகுதான் மறுபடியும் விண்ணப்பிக்க முடியும். நீங்கள் ஒரே ஒரு பெயரை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பதால் மற்றொரு மாற்று பெயரையும் வழிமொழிந்து விண்ணப்பிக்க வேண்டும்.

4) எல்.எல்.பி நிறுவன அங்கீகாரம் பெறுதல் 

எல்.எல்.பி நிறுவன அங்கீகாரம் பெற பயன்படுத்தப்படும் படிவம் உங்களது தொழில் நிறுவனம் அமைய உள்ள மாநகராட்சி கட்டுப்பாட்டின் சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இணைப்பு படிவம் ஏ சமர்ப்பிப்பதற்கான கட்டணத்தை நீங்கள் இதற்காக செலுத்தவேண்டும். இந்த இணைப்பு படிவம் மூலம் உங்களது நிறுவனத்தின் டிஸ்கனெக்டட் பார்ட்னராக பொறுப்பேற்க உள்ளவருக்கு டி ஐ என் இல்லாமல் இருந்தால் டி பி ஐ என் பெற்றுக் கொள்வதற்கான வசதியும் உள்ளது. 

5) எல்.எல்.பி கூட்டாளர்கள் ஒப்பந்தத்தை தயார் செய்யவும்

எல்.எல்.பி கூட்டாளர்கள் ஒப்பந்தம் மூலம் கூட்டாளிகளுக்கு இடையேயான அதிகார பகிர்வு பற்றியான தகவல்கள் மற்றும் பரஸ்பர உரிமைகள் மற்றும் கூட்டாளர்கள் செய்யவேண்டிய கடமைகள் போன்றவற்றை வரையறுக்க வேண்டும். எம் சி ஏ வலைதளத்தில் உள்ள படிவம் மூன்றின் மூலம் உங்களது எல்எல்பி ஒப்பந்தத்திற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். எல்எல்பி ஒப்பந்தம் தயார் செய்த 30 நாட்களுக்குள் நீங்கள் இந்த படிவம் 3 சமர்ப்பிக்க வேண்டும். மாநில அரசால் அனுமதிக்கப்பட்ட முத்திரைத்தாளில் மட்டுமே உங்களது எல்எல்பி ஒப்பந்தம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

எல்.எல்.பி பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்

  1. கூட்டாளர்களின் ஆவணங்கள்

ஒரு எல்எல்பி நிறுவனத்தில் கூட்டாளர் ஆக இணைய உள்ள அயன் அனைவருக்கும் முதன்மையான அடையாள அட்டையாக பான் கார்டு இருப்பது அவசியம்.

பான் கார்டில் உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதி போலவே எந்தவித எழுத்துப் பிழையும் இல்லாத நிரந்தர முகவரிக்கான அடையாள அட்டை இருத்தல் அவசியம்.

கூட்டாளர்களின் இருப்பிடத்தை உறுதி செய்யும் வகையில் உள்ள மின்சார கட்டண ரசீது, தொலைபேசி கட்டண ரசீது, எரிவாயு கட்டண ரசீது போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். இத்தகைய ரசீது படிவங்களின் கால அளவானது கடந்த மூன்று மாதங்களுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.

வெள்ளை பின்னணியில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் புகைப்படங்கள் தேவை.

வெளி நாட்டில் வசிக்கக் கூடிய யாரேனும் இந்திய நாட்டில் தொடங்கப்பட உள்ள எல்எல்பி நிறுவனத்தில் பங்குபெற விரும்பினால் அவரது கடவுச்சீட்டின் தகவல்களும் நமது இருக்கும் நாட்டின் முகவரிக்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். 

2) எல்.எல்.பி நிறுவனத்தின் ஆவணங்கள்

உங்களது எல்எல்பி நிறுவனம் தொடங்கப்பட உள்ள அலுவலகத்திற்கான இருப்பிடச் சான்றிதழ் கண்டிப்பாக தேவை. உங்களது நிறுவனம் தொடங்கப்பட உள்ள இடம் வாடகை இடமாக இருந்தால் வாடகை ஒப்பந்தம் மற்றும் நிறுவனம் ஆரம்பிக்க எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்ற ஒப்பந்தம் நில உரிமையாளர்களிடம் இருந்து பெற வேண்டும்.

நாம் முன்பே கூறியது போல் பெரும்பாலான ஆவணம் தாக்கல் இணையவழி மூலமாகவே நடைபெறுவதால் டிஜிட்டல் சிக்னேச்சர் சர்டிபிகேட் மற்றும் டைரக்டர் ஐடெண்டிஃபிகேஷன் நம்பர் கட்டாயமாக இருக்க வேண்டும்.

எல்.எல்.பி பதிவு செய்ய ஆகும் செலவு

எல் எல் பி பதிவு செய்வதற்காக ஒவ்வொரு படிநிலையிலும் செலவிடக் கூடிய தொகையை தோராயமாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

  • டி.எஸ்.சி பெறுவதற்கு 1500
  • டி.ஐ.என் பெறுவதற்கு 1000
  • நிறுவனப் பெயர் பதிவிற்கு 200
  • இன்கார்ப்பரேஷன் பதிவிற்கு உங்களது நிறுவனத்தின் முதலீட்டு தொகை ஒரு லட்சம் ரூபாயாக இருந்தால் 500 ரூபாயும் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரையாக இருந்தால் 2000 ரூபாயும் தேவைப்படும்.
  • கூட்டாளர்கள் ஒப்பந்தம் செய்யக்கூடிய முத்திரைத்தாள் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது.
  • ஒரு லட்சம் ரூபாயில் கூட்டாளர் ஆக இணைய உள்ள படிவம்-3 க்கு 50

எல்.எல்.பி பதிவு செய்ய எடுக்கப்படும் கால அளவு 

உங்களிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் அனைத்து விதமான பதிவுகளையும் 15 நாட்களுக்குள் முடித்து விட முடியும்.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.