written by | October 11, 2021

42 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

×

Table of Content


ஜி.எஸ்.டி கவுன்சில் மீட்டிங் நிகழ்வின் 42-வது கூட்டம் ஒரு தொடர்கதை

கடந்த 2017-ம் வருடம் ஜூலை மாதம் 1-ம் தேதி நாடெங்கும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு அமலாக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டரை ஆண்டுகளில் அதன் வரி விகிதங்களில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது, குறைந்த பட்ச வரி விகிதம் என்பது 5 சதவிகிதமாக உள்ளது. அத்துடன் பெரும்பாலான பொருட்கள் 12 சதவிகிதம் மற்றும் 18 சதவிகிதம் வரி விகிதத்தில் உள்ளன. ஜி.எஸ்.டி அமல்படுத்துவதை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொண்ட நிலையில், அதனால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்புகளை ஈடு செய்யவும் மத்திய அரசு உறுதிமொழி அளித்தது. அதன்படி மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்ற உறுதியளிப்பு ஜி.எஸ்.டி வரி விகிதத்துக்கான சட்டத்தில் 101-வது திருத்தச் சட்டப் பிரிவாகவும் குறிப்பிடப்பட்டது. வரி தொடர்பான திருத்தங்கள், மாற்றங்கள் செய்வதற்காக, மத்திய நிதி அமைச்சர் தலைமையில், மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய, ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. இது வரை நாற்பதுக்கும் மேலான கூட்டங்கள் நடந்துள்ள நிலையில் 42-வது ஜி.எஸ்.டி கவுன்சில் மீட்டிங் நிகழ்வுக்கு முன்னதாகவும், அதற்கு பின்பும் நடந்த விஷயங்கள் தொடர்கதையாகவும் இருக்கின்றன.

ஜி.எஸ்.டி என்ற சரக்கு மற்றும் சேவை வரிக்கான கவுன்சில் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்படுவது வழக்கம். என்ற நிலையில் கடந்த 2020 செப்டம்பர் மாதம் 27-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய இழப்பீட்டு தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளும் கோரிக்கை விடுத்தன. கடந்த 2019-20 ஆண்டில் ஜி.எஸ்.டி இழப்பீடாக மாநிலங்களுக்கு ரூ.1.65 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியது. அது, 2018-19 நிதியாண்டில் ரூ.69,725 கோடியாகவும், 2017-18 நிதியாண்டில் ரூ.41,146 கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒட்டு மொத்த இழப்பீடாக வழங்க வேண்டிய ரு.1.51 லட்சம் கோடி இன்னும் நிலுவையில் உள்ளது.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தியதன் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்பீட்டை பகிர்ந்தளிக்கும் விஷயத்தில், மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பிரச்சினை ஏற்படுத்தும் விஷயமாகவே இன்று வரை இருந்து வருகிறது. ஜி.எஸ்.டி-க்கு கீழ் வரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு அளித்து வரும் நிலையில், அந்த இழப்பீடு நடப்பு ஆண்டின் சில மாதங்களாக அளிக்கப்படவில்லை என்று சில மாநில அரசுகள் குற்றம் சாட்டின. அதற்கு கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஜி.எஸ்.டி வருமானம் குறைந்து விட்ட நிலையில், போதுமான வருமானம் இல்லாததால் இழப்பீடு வழங்க இயலவில்லை என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. 

இழப்பீட்டுத் தொகைக்கான மாற்று வழி

ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகை பெறுவது தொடர்பாக மத்திய அரசு மாநில அரசுகளுக்கு இரண்டு விருப்ப தேர்வுகளை முன் மொழிந்தது. அதாவது, ரிசர்வ் வங்கி மூலம் ரூ.97 ஆயிரம் கோடி அல்லது வெளிச்சந்தையில் இருந்து ரூ.2.35 லட்சம் கோடி கடன் வாங்குமாறு 2 பரிந்துரைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தெரிவித்தது. அதை சில மாநில அரசுகள் எதிர்த்த நிலையில், பல மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. மேலும், பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுவதால், அந்தக் கூட்டத்தில் மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு குறித்து விவாதிக்கப்படும் என்ற காரணத்தால் 42-வது ஜி.எஸ்.டி கவுன்சில் மீட்டிங் நிகழ்வு அக்டோபர் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மத்திய அரசு அளித்த முதல் வாய்ப்பு 

கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், மத்திய அரசின் சார்பில் மாநிலங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் அளிக்கப்பட்ட நிலையில், முதல் வாய்ப்பாக சந்தைகளில் கடன் வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இது மாநில அரசுகளுக்கு நிர்வாக ரீதியில் நடைமுறைப்படுத்துவதில் சிக்கலானதாகவும், மிகவும் செலவு பிடிக்கக் கூடியதாகவும் உள்ள திட்டமாகும். அதனால், ஜி.எஸ்.டி. வரிக்கான இழப்பீட்டுத் தொகைகளை முன் தொகையாக மத்திய அரசு வழங்க வேண்டுவதுடன், ஏதேனும் கடன் பெற வேண்டிய தேவை ஏற்பட்டால் அது இழப்பீட்டுத் தொகைக்கான நிலுவையின் நீட்சியாகவே இருக்க வேண்டும் என்பது பல மாநில அரசுகளின் கோரிக்கையாக வைக்கப்பட்டது.

மத்திய அரசு அளித்த இரண்டாம் வாய்ப்பு

இரண்டாவது வாய்ப்பு என்பது ரூ.2.35 லட்சம் கோடியை கடன் தொகையாக மாநிலங்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகையை ரிசர்வ் வங்கியிடம் இருந்து சிறப்புக் கடனாகவோ அல்லது வெளிச் சந்தையிலிருந்தோ திரட்டிக் கொள்ளுமாறு மத்திய அரசு மாநிலங்களுக்கு ஆலோசனை அளித்தது. மேலும், ஆடம்பரப் பொருட்கள் மற்றும் மது, புகையிலை போன்ற பொருட்களுக்கு கூடுதல் வரியை, நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கும் அதிகமாக வசூலித்து இக்கடனை திரும்ப செலுத்திக் கொள்ளலாம் என்றும் கடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. சுயச்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஏற்கெனவே மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஒரு சதவீதம் வரை கடன் பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இரண்டாவது வாய்ப்பு மாநில அரசுகளின் நிலைகளைக் கவனத்தில் கொண்டு செய்யப்படவில்லை என்பது பல மாநிலங்களின் நிலைப்பாடாக உள்ளது.

இழப்பீட்டுத் தொகைக்கான தனி அமைப்பு 

மத்திய அரசு முன்வைத்துள்ள இரண்டு வாய்ப்புகளும் மாநிலங்களுக்கு உரிய பிற ஒட்டுமொத்த ஆதாரங்களைக் குறைப்பதுடன், கோவிட்-19 நோய்த்தொற்று மற்றும் இதர பணிகளுக்காக செலவிட்டு வரும் மாநில அரசுகளை பாதிக்கும் வகையிலும் உள்ளது. அப்படியான நிதிச் சிக்கல்களால் மாநிலங்களின் உள் கட்டமைப்புகளுக்கான மூலதன செலவுகள் மற்றும் நலத்திட்டங்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், ஜி.எஸ்.டி., இழப்பீட்டுத் தொகைக்காக ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பாக்கித் தொகையை வழங்கும் முறையை செயல்படுத்தி, நடப்பு நிதியாண்டிலேயே ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்பதும் பல மாநில அரசுகளின் வேண்டுகோளாக இருந்ததுடன், 42-வது ஜி.எஸ்.டி கவுன்சில் மீட்டிங் நிகழ்வில் அவை பூர்த்தி செய்யப்படும் பல மாநில அரசுகள் நம்பிக்கையுடன் இருந்தன.

அத்துடன், நடப்பு நிதியாண்டில் ஜி.எஸ்.டி முழு இழப்பீட்டுத் தொகை வழங்குவதையும், சுயச்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2 சதவீதம் அளவுக்கு கடன் பெற அனுமதிப்பதை உறுதிப்படுத்த, அதற்கான நிபந்தனைகளையும் தளா்வாக்க வேண்டும் என்பதுடன், 2022 மார்ச் 31-ம் தேதிக்குப் பிந்தைய இழப்பீட்டுத் தொகைகள் எந்தப் பாக்கியும் இல்லாமல் வழங்கப்படும் என்ற உறுதியை அளிக்கும்படியும் பல மாநில அரசுகள் மத்திய அரசுக்கு வேண்டுகொள் அளித்திருக்கின்றன. குறிப்பாக, கோவிட்-19 பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார வசதிகளை ஏற்படுத்தியது, நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டது போன்ற பணிகளுக்காக மாநிலங்கள் கோடிக்கணக்கான ரூபாய் கூடுதலாக செலவிட்டுள்ளதால், அவற்றின் வழக்கமான திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளுக்கு உடனடி நிதி ஆதாரங்கள் அவசியம் என்ற நிலையில், ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை வழங்க உரிய நிதி ஆதார அம்சங்களுக்கு மத்திய அரசு வழி காண வேண்டும் என்றும் பல்வேறு மாநில அரசுகள், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றன.

மீண்டும் நடந்த கவுன்சில் கூட்டம் 

அதன் பின்னர் நடைபெற்ற 42-வது ஜி.எஸ்.டி கவுன்சில் மீட்டிங் நிகழ்வு அக்டோபர் 5-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், காணொளி காட்சி மூலமாக நடைபெற்றது. மாநில நிதியமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்ற அந்தக் கூட்டம் சுமார் 7 மணி நேரம் நடைபெற்றது. அதில், கடன் திட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில், கவுன்சில் கூட்டம், நேற்று இரண்டாவது முறையாக நடந்தது. இதில், எந்த தீர்மானமான முடிவும் எட்டப்படவில்லை. மாநில அரசுகளுக்கு ஏற்படும் நிதி பற்றாக் குறையை சமாளிக்க, மத்திய அரசு கடன் வாங்க முடியாது. அது, மத்திய அரசின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும். அதனால், மாநில அரசுகள் தங்கள் எதிர்கால ஜி.எஸ்.டி. வரி வசூலின் அடிப்படையில் கடன் பெறுவது, பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்றும், மத்திய அரசின் இந்த பரிந்துரையை 21 மாநில அரசுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

ஆனால், நிதி நெருக்கடியைச் சமாளிக்க சந்தையில் கடன் வாங்குவது தொடர்பான மத்திய அரசின் ஆலோசனைகளை நிராகரித்த 10 மாநிலங்கள், சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை நடப்பு ஆண்டிலேயே வழங்க வேண்டும் என வலியுறுத்தியதால், நிலுவைத் தொகை தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதனிடையே இந்த கூட்டத்தில், குறைவான இழப்பீடு பெற்ற மாநிலங்களுக்கு, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி தொகையாக 25 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக ஆடம்பரப் பொருட்கள், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட செஸ் வரியை, 2022-ம் ஆண்டுக்குப் பிறகும் வசூலிக்கவும், ஆண்டு வர்த்தகம் 5 கோடி ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்கள், காலாண்டிற்கு ஒருமுறை ஜி.எஸ்.டி கணக்கை தாக்கல் செய்தால் போதும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சரின் பேட்டி 

42-வது ஜி.எஸ்.டி கவுன்சில் மீட்டிங் நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநிலங்களுக்கான நிலுவைத்தொகை கட்டாயம் வழங்கப்படும் எனவும், இதுதொடர்பான தீர்க்கப்படாத விவகாரங்கள் குறித்து விவாதிக்க அக்டோபர் 12-ம் தேதி ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் மீண்டும் கூடும் எனவும், இழப்பீட்டு செஸ் வரியாக வசூலிக்கப்பட்ட தொகையில் 20 ஆயிரம் கோடி ரூபாய் திங்கட்கிழமை இரவுக்குள் அதாவது அக்டோபர் 12-ம் தேதிக்குள் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஜி.எஸ்.டி., வரி வசூலில், மாநில அரசுகளுக்கு ஏற்படும் பற்றாக்குறையை ஈடுசெய்வது தொடர்பாக அக்டோபர் 12-ம் தேதி திங்கட்கிழமை அன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் மீண்டும், கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திலும் மாநில அரசுகள், ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையை அளிக்க வலியுறுத்தின. ஆனால், மத்திய அரசு, பொதிய நிதி இல்லை. மேலும், கடனும் வாங்க இயலாது. ஆனால், மாநில அரசுகள் கடன் வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக அறிவித்தது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

’மாநிலங்கள், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கடனுக்கான கால அவகாசம் 50 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மாநில அரசுகள், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்திருக்கின்றன. மத்திய அரசால் தற்போதைய சூழ்நிலையில் ஏன் கடன் வாங்க இயலாது என்பது குறித்து மாநிலங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை 12 மாநிலங்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் ஒருமித்த கருத்து அவர்களுக்குள் ஏற்படவில்லை. மாநிலங்கள் தேவைப்பட்டால் வெளியே கடன் வாங்கிக்கொள்ளலாம். மேலும், கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி தேவைப்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு விரைவில் உரிய பதிலை அளிக்கும். மேலும், ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகை அளிப்பது தொடர்பாக மாநிலங்களுடன் எந்த பிரச்சனையும் இல்லை. உரிய காலத்தில் நிச்சயம் ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று 42-வது ஜி.எஸ்.டி கவுன்சில் மீட்டிங் நிகழ்வில் தெரிவிக்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.

அதன் பின்னர் நடந்த 43-வது ஜி.எஸ்.டி கூட்டத்திலும் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. இதனால், முடிவு எடுக்காமல் கூட்டம் நிறைவு பெற்றது. இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைவது இது 3-வது முறையாகும்.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.