சலூன் வாடிக்கையாளர்களை அதிகரிப்பதற்கான 6 சிறந்த வழிமுறைகள்
உலகத்தில் எந்த மூலையில் எந்தவித தொழில் செய்தாலும், மக்களுக்கு நீங்கள் செய்யும் தொழிலில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை கவர்ந்து உங்களது வாடிக்கையாளரை மாற்றும் போது மட்டுமே உங்களது தொழில் விருத்தியடையும். அதிலும் குறிப்பாக சிகை அலங்காரம், முக அலங்காரம் போன்ற அழகு சார்ந்த கலைகளில் ஈடுபடுபவர்கள் போட்டி மிகுந்த காலகட்டத்தில் பல்வேறு உத்திகளைக் கடைபிடித்து அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெறுவதைப் பற்றி சிந்திக்க வேண்டும். நீங்கள் அவ்வாறு சிந்திக்கக் கூடிய நேரத்தில் வருகின்ற ஐடியாக்கள் காலம் காலமாக பல நிறுவனங்களும் பல கடைகளும் பின்பற்ற கூடிய பழைய ஐடியாவாக இருந்தால் உங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. ஏனென்றால் இதே உத்திகளை தான் பல காலமாக அனைத்துக் கடைகளிலும் செயல்பட்டு வருவதால் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்வது இல்லாததோடு போட்டிகளும் இந்த முறையில் அதிகம். எந்த வகையான மார்க்கெட்டிங் ஐடியாவை பயன்படுத்தி உங்கள் சலூன் கடைக்கு அதிக வாடிக்கையாளர்களை வர வைக்க முடியும் என்பதை பற்றி சிந்திக்கும் போது உங்களுக்கு வரக்கூடிய அடுத்த ஐடியா சமூக வலைதளங்களை பயன்படுத்தி விளம்பர படுத்துவதாகும். இந்த சமூக வலைதளம் மூலமாக கிடைக்கும் வாடிக்கையாளர்களின் அளவு மிக குறைவு ஏன் என்றால் இந்த சமூக வலைதளங்களில் அதிகப்படியான மக்கள் அதிக அளவிலான கருத்துகளை பகிர்கின்றனர். இதனால் இத்தகைய சமூக வலைதளங்களில் நீங்கள் பகிர கூடிய தகவல்கள் உங்களது சமூகவலைதள பக்க நண்பர்களுக்கு கூட தெரியாமல் போவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
இவ்வாறு சோசியல் மீடியாவில் நீங்கள் பகிரும் கருத்துகள் சரியாக சென்றடைவதில்லை என்று கூறுவதனால் இதை நீங்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவதாக அர்த்தம் அல்ல, மாறாக இந்த சமூக வலைதளங்களில் பிரபலம் ஆவதற்கு ஒரு சில புது உத்திகள் உள்ளன. அந்த புதிய உத்திகளை பயன்படுத்தி மட்டுமே இன்றைய கூச்சல் நிறைந்த சமூகவலைதளங்களில் உங்களது சலூன் பற்றிய செய்திகளை வேகமாக ஒலிக்கச் செய்ய முடியும். அந்த வகையில் உங்களது சலூன் கடைக்கு புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான தனித்துவமான வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
-
சிகை அலங்காரம் மற்றும் அழகு போட்டிகள் நடத்த வேண்டும்
இந்த அழகுப் போட்டிகளைப் பற்றிய படங்கள் மற்றும் வீடியோக்கள் பலதரப்பட்ட மக்களிடையே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இத்தகைய அழகு சார்ந்த போட்டிகளில் நீங்கள் நடத்துவதன் மூலம் உங்களது சிகையலங்கார நிறுவனம் மிகவும் பிரபலம் அடைய வாய்ப்புகள் உள்ளது. இத்தகைய போட்டிகளை நடத்தும் அளவிற்கு உங்களுக்கு பெரிய முதலீடு இல்லாமல் இருந்தாலும் இத்தகைய போட்டியில் கலந்து கொள்ளும் மாடல்களுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்து உங்களது உங்களது கடை ப்ரமோஷன்க்கு பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்கும் மாடல்கள் வெற்றிபெறும் போது உங்களது சலூன் கடை பற்றிய விவரங்கள் அருகில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் பரவும்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் மாடல்களுக்கு மிகச் சிறந்த சிகை அலங்காரங்களை செய்து ராம்ப் வாக்கில் நடக்க விடும்போது பல்வேறு தரப்பட்ட மக்களின் மற்றும் பிரபலங்களின் கவனத்தை ஈர்க்க வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறாக அழகுப் போட்டியில் பங்கேற்கும் போது திறமையை வெளிக்காட்டி புது வாடிக்கையாளர்கள் பெறுவது மிகவும் முக்கியமான நடைமுறை விளம்பர உத்தியாகும். சாதாரணமாக உங்களது வீடியோ மற்றும் படங்களை பகிர்வது காட்டிலும் இத்தகைய அழகுப் போட்டிகள் நடத்தி அதன் மூலம் விளம்பரப்படுத்தி மக்களை சென்றடைவது பலன் அளிக்கும்
-
YouTube சேனல் ஒன்றை ஆரம்பியுங்கள்
யூட்யூப் இணைய தளமானது ஒவ்வொரு நாளும் 200 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் மிகப் பிரபலமான இணையதளமாக இருந்தாலும், மார்க்கெட்டிங் துறைக்காக பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அத இந்த யூட்யூபில் உங்களது சலூன் பற்றிய ஒரு சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் வாடிக்கையாளர் உங்களது மீது வைத்துள்ள நன்மதிப்பு, வாடிக்கையாளருக்கு நீங்கள் ஆச்சரிய பரிசு வழங்குவது போல் உள்ள வீடியோ, வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் அளிக்கும் புதுப்புது சிகையலங்கார வீடியோ போன்றவற்றை வித்தியாசமான முறையில் மக்களை கவரும் வகையில் எடிட்டிங் செய்து பதிவிட வேண்டும். இத்தகைய வீடியோ பதிவு செய்து அதை எடிட்டிங் செய்து பல விடுவதற்கான நேரம் உங்களுக்கு அதிகமானாலும், அதற்கேற்ற பலன் யூடியூப் மூலமாக கிடைக்கும்.
குறிப்பாக அன்றைய நேரத்தில் பிரபலமாக உள்ள நடிகர்களின் சிகை அலங்காரத்தை வாடிக்கையாளர்களுக்கு செய்வது போல வீடியோக்களை வெளியிடுவதன் மூலம் பலதரப்பட்ட இளைஞர்களின் மனதில் உங்கள் சலூன் கடை மனதில் பதிந்து விடும். சிகையலங்கார கலையைக் கற்றுத் தருவது போன்ற step-by-step சிகையலங்கார கலை நுணுக்கங்களை வீடியோ பதிவிட்டு வெளியிடுவதன் மூலம் உங்களது சிறப்பு பலதரப்பட்ட மக்களுக்கு சென்றடையும். இத்தகைய வீடியோக்களில் நீங்கள் வீடியோ குவாலிட்டி அதிகமாக கவனிக்காமல் அது எத்தகைய உண்மைத்தன்மையை வெளியிடுகிறது மக்களை எவ்வாறு கவரும் என்பதை மட்டும் பார்க்க வேண்டும்.
-
பிரபலமான இடங்களில் பெரிய அளவிலான விளம்பர பதாகைகள் வைக்க வேண்டும்
விளம்பரங்களுக்காக பதாகைகளை பயன்படுத்தும் முறை மிகவும் பழமையானது கருதப்பட்டாலும் இன்றளவிலும் இத்தகைய பதாகைகள் மூலம் மக்களிடம் சென்றடைவதற்கு ஒரு சிறந்த வழியாகவே உள்ளது. இந்த விளம்பரப் பதாகைகள் மூலம் அதிக மக்களின் கவனத்தை ஈர்ப்பது என்பதே நீங்கள் எந்த இடத்தில் இந்த பதாகைகளை வைக்கிறீர்கள் என்பது பொருத்து மாறுபடும். உடற்பயிற்சி கூடங்கள், நடன பள்ளிகள், போன்ற இடங்களில் அந்த நிறுவனத்தின் அனுமதி பெற்று அதன் உள்ளே அல்லது அதன் அருகே உள்ள பொது இடங்களில் வைக்க வேண்டும்.
உடற்பயிற்சி கூடங்கள் நடனப்பள்ளி போன்ற உங்கள் தொழிலுக்கு சம்பந்தப்பட்ட இடத்தில் தொழில் செய்வோர் உடன் இணக்கமாக இருந்து அவர்களது தொழில் முன்னேற்றத்திற்கு நீங்களும் உங்களது தொழில் முன்னேற்றத்திற்கு அவர்களும் பங்களிப்பு கொடுக்க முடியும். மேலும் நீங்கள் விளம்பர பதாகைகள் பயன்படுத்தும் மாடல்கள் மிகவும் அழகான சிகை அலங்காரத்தை வெளிப்படுத்தி மக்களை கவரும் தேஜஸ் உள்ளவராக இருக்க வேண்டும்.
-
GMB – கூகுள் மை பிசினஸ் பதிவு செய்து பிரபல படுத்தவும்
கூகுள் மை பிசினஸ் வலைதளத்தில் கேட்கப்படும் தகவல்களை பதிவு செய்து உங்களது முகவரியை உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலம் அதிகபட்ச செலவுகள் இன்றி பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு உங்களது சலூன் கடை பற்றிய தகவல்கள் சென்று அடையும். அதுமட்டுமல்லாமல் சிறந்த சலூன் கடை, அருகில் உள்ள சலூன் கடை, போன்ற முக்கிய சொற்களை கூகுளில் தேடுபவர்களுக்கு உங்களது கடை முதலில் வரும்படி செய்வதால் அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெறுவீர்கள். இத்தகைய முக்கிய சொற்களைத் தேட நபர்களுக்கு உங்களது கடை முதல் தரவாக தெரியவைக்க பல்வேறுவகையான வாடிக்கையாளர்களின் நல்லபடியான ரிவ்யூ பெற்றிருப்பது அவசியம்.
இத்தகைய 5ஸ்டார் ரிவ்யூகளை வாடிக்கையாளர்களிடம் பெற்றுத் தருவது மட்டுமல்லாமல் இதற்குத் தேவையான மற்றும் சில நடவடிக்கைகளை செய்து ஜிஎம்பி லிஸ்டில் உங்களது கடையை முதன்மையாக கொண்டு வர சில எஸ்சிஓ ஏஜென்சிகள் செயல்பட்டு வருகின்றன. உங்களுக்கு இதில் அதிக அனுபவம் இல்லாமல் இருந்தாலும் அல்லது இதை செய்வதற்கான நேரம் இல்லாமல் இருந்தாலும் இத்தகைய எஸ்சிஓ ஏஜென்சியை அணுகி உங்களது கடையை ஜிஎம்பி பட்டியலில் முதன்மைப்படுத்த முடியும்.
-
புகைப்படங்கள் எடுப்பதற்காக தனியாக ஒரு இடத்தை சலூனில் வையுங்கள்
பெரும்பாலான மக்கள் சமூக வலைதளங்களை தங்களது அழகான போட்டோவை பதிவேற்றம் செய்து தங்களது நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் அதிகமான லைக்குகளை பெரும் தளமாகவே பயன்படுத்துகிறார்கள். உங்களது கடைக்கு வரும் அத்தகைய வாடிக்கையாளருக்கு அவர்கள் தங்களது சிகை அலங்காரத்தை முடித்த பிறகு ஒரு அழகான லைட்டிங் செய்யப்பட்ட இடத்தில் புகைப்படம் எடுத்து உங்களது கடை உள்ள இடத்தோடு படங்களை பதிவிட்டால் உங்களது கடைக்கு மிகுந்த உதவிகரமாக அமையும். இத்தகைய செயல்பாட்டிற்கு முதலில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் check-in பாயிண்டாக உங்களது கடை இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும். Check-in பாயிண்ட் சேர்ப்பது பற்றியான மேலும் தகவல்கள் அந்த இணையதளத்தின் வழிகாட்டியில் வழங்கப்பட்டுள்ளது.
செல்பி எடுத்துக் கொள்வதற்காக பிரத்தியேக இடம் உங்களது சலூனில் இருக்கிறது என்று மக்களிடம் தெரியவந்தால் மிகப்பெரிய வளர்ச்சி மாற்றத்தை கண்கூடாக நீங்கள் காண்பீர்கள். உங்கள் சலூனுக்கு என்று குறிப்பிட்ட ஹாஷ்டேக் உருவாக்கி அதனை ட்ரெண்டிங் செய்வதன் மூலம் உங்கள் சலூன் ஐ அடுத்த இடத்திற்கு எடுத்து செல்ல முடியும். இவ்வாறாக உங்களது கடையின் பெயர் மற்றும் இருப்பிடம் பற்றிய தகவல்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ஒருவருக்கு குறிப்பிட்ட அளவிலான தள்ளுபடி அடுத்த முறை வழங்கப்படும் என்ற அறிவிப்புகளை வழங்கலாம். நீங்களாகவே உங்களது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை புகைப்படத்தை எடுத்து உங்களது வலைதளத்தில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். பல்வேறு வகையான சிகையலங்கார படங்களை எடுத்து அதை மொபைலில் டவுன்லோட் செய்யக்கூடிய அப்ளிகேஷன்களாக செய்யமுடியும்.
-
கட்டண விளம்பரங்களுக்கு செலவழியுங்கள்
எஸ்சிஓ முறையில் உங்களது சலூன் முதன்மை படுத்துவதற்கு நீண்ட நெடுங்காலமாக கூடும். ஆனால் இத்தகைய எஸ்சிஓ முறையில் அல்லாமல் குறிப்பிட்ட சொற்களை வைத்து தேடும் நபர்களுக்கு உங்களது சலூன் பெயரை தெரிவிக்கும் வகையிலான கூகுள் விளம்பரம் முறையை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தேடும் பொழுது உங்கள் பெயர் மட்டுமே கூகுள் வலைதளம் மூலமாக முதன்மைப்படுத்தும் அதில் இடப்படும் தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்கக்கூடிய வகையில் இருப்பது உங்கள் பொறுப்பாகும். இதே போன்று ஃபேஸ்புக் பேஜ், யூ டியூப், இன்ஸ்டாகிராம் பேஜ் போன்ற அனைத்து சமூக வலைதளங்களிலும் பல்வேறு தரப்பட்ட விளம்பர வாய்ப்புகள் உள்ளன. அதற்காக ஒரு சிறிய அளவிலான முதலீடு செய்து பல்வேறு தரப்பட்ட வாடிக்கையாளர்களின் மனதில் உங்களது சலூன் பற்றிய தகவல்களை சென்றடைய வைக்க முடியும்.
இதுமட்டுமல்லாமல் ரேடியோ தொலைக்காட்சி போன்றவற்றில் உங்களது சலூன் பற்றிய விளம்பரங்களை ஒரு 30 வினாடிகள் ஆவது ஒளி பரப்பும் வகையில் செய்ய வேண்டும். இவ்வாறு வானொலிகளில் நீங்கள் விளம்பரம் செய்வதே மக்களுக்கு புதிதாக இருப்பதால் உடனடியாக உங்களது சலூன் பற்றிய தகவல்கள் மனதில் பதியும். ஏனென்றால் பெரும்பாலும் நகை கடைகள் துணிக்கடைகள் போன்ற பெரிய பெரிய கடைகளில் விளம்பரங்களை பார்த்தும் கேட்டும் இருப்பவர்களுக்கு பற்றிய விளம்பரத்தை கேட்கும்பொழுது புதிதாக இருக்கும். இத்தகைய வானொலி மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்கள் உங்கள் சலூன் வளர்ச்சிக்கு பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.