written by | October 11, 2021

மோட்டார் சைக்கிள் பாகங்கள் வணிகம்

×

Table of Content


இரு சக்கர வாகன உதிரிப்பாக விற்பனை கடை நிறுவுவதற்கான பொது நெறிமுறைகள்

இரு சக்கர வாகனம் சம்பந்தப்பட்ட வணிகத்தில் மிகவும் குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய ஒரு வணிகம் என்னவென்றால், இருசக்கர வாகன உதிரி பாகங்களை வாங்கி விற்கக்கூடிய கடை நடத்துவது ஆகும். மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் உள்ளவராகவும் புது புது இருசக்கர வாகனங்களின் சந்தை நிலவரத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் உள்ளவராக இருந்தால், உங்களது ஆர்வத்தையும் அறிவையும் பயன்படுத்தி இந்த இரு சக்கர உதிரிபாக விற்பனைக் கடையை தொடங்கி வெற்றி பெற முயற்சி செய்யுங்கள்.

இன்றைய நடைமுறை சூழலில் இருசக்கர வாகனங்களில் அதிகப்படியான மாடல்கள் மற்றும் ஹோண்டா, டிவிஎஸ், பஜாஜ் பலவிதமான முன்னணி நிறுவனங்களின் இரு சக்கர வாகனங்கள் வந்து விட்டன. மார்க்கெட்டில் ஏற்கனவே பல விதமான மாடல்கள் இருக்கின்ற போதும், சிறு சிறு மாற்றங்களுடன் ஆண்டாண்டு அறிமுகப்படுத்தப்படும் அனைத்து விதமான மாடல்களும் மக்களின் மத்தியில் வரவேற்பையும் பெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது. பெரும்பான்மையான மக்கள், இருசக்கர வாகனத்தில் நெடுந்தூர பயணங்கள் செய்வதை பெரிதும் விரும்புவது மட்டுமல்லாமல்; அத்தகைய நெடுந்தூரப் பயணத்தை பொழுதுபோக்காக வைத்துக் கொண்டு வருபவர்களும் உள்ளனர். குறிப்பாக குறைந்த கிலோ மீட்டர் தொலைவு உள்ள இடங்களுக்கு சென்று வர வேண்டுமென்றால் காரில் செல்லும் பழக்கத்தை விட இருசக்கர வாகனத்தில் செல்லும் பழக்கத்தையே பெரும் பணக்காரர்களும் பின்பற்றுகின்றனர். 

இத்தகைய இருசக்கர வாகனங்கள் இந்தியா போன்ற நாடுகளில் பிரபலமாக இருப்பதால் மட்டுமே, நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியும், தனிமனித அந்தஸ்து உயர்வும் படுவேகமாக நடைபெறுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. இத்தகைய சிறப்புமிக்க இருசக்கர மோட்டார் வாகனத்தை, பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் தங்களுடைய சொந்த உறவாகவே கருதிக்கொண்டு வாழ்கிறார்கள். தங்களுடைய தனிமனித வாழ்வாதாரத்திற்கு பெரிதும் கைகொடுக்கும் இந்த வகையான இருசக்கர வாகனத்தை பராமரிப்பதில், பெரிதும் சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இருசக்கர மோட்டார் வாகனங்களின் மேல் உங்களுக்கும் ஆர்வமும் அறிவும் இருந்தால் இத்தகைய பராமரிப்பிற்கும் தேவையான உதிரி பாகங்களை விற்கும் கடையை நடத்தினால் மிகச்சிறந்த லாபம் அடையலாம். இருசக்கர வாகன விருப்பம் உள்ளவராக இருக்கக்கூடிய உங்களுக்கு இதைவிட பெரிய திருப்தி அளிக்கக் கூடிய தொழில் வாய்ப்பு அமைந்து விடப்போவதில்லை. இருசக்கர வாகன மாடல்கள் மற்றும் அதன் உற்பத்தி மீது அதிகளவு நாட்டம் மற்றும் அறிவு இல்லாமல் இருந்தாலும் சிறந்த வழிகாட்டுதலின்படி ஒரு முதலீட்டாளர் இந்த தொழிலை செய்ய வாய்ப்பு உள்ளது. 

கடை அமைக்க தேர்ந்தெடுக்கும் இடத்தில் பார்க்க வேண்டிய அம்சங்கள் 

நீங்கள் இரு சக்கர மோட்டார் வாகன உதிரி பாகங்களை விற்கும் கடையை நிறுவ வேண்டும் என தீர்மானித்து விட்டால் ஒரு நல்ல நகரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் நிறுவ முயற்சிப்பதே முக்கியம் ஆகும். உங்கள் உதிரிப்பாக விற்பனை கடை மூலம் எந்த அளவு தொழில் வளர்ச்சியை அடையப் போகிறீர்கள் என்பதை தீர்மானிக்கக் கூடிய முக்கிய காரணியாக இந்த இடத்தை தேர்ந்தெடுக்கும் விஷயம் அமையும். உங்களது கடை நகரத்தில் உள்ள மக்கள் அனைவரும் வந்து போகும் இடத்திலும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலும் இருந்தால் மட்டுமே உதிரிபாக விற்பனையின் அளவு அதிகமாக இருக்கும். உங்களது கடைக்கு அருகிலேயே வேறு ஏதும் பிரபலமான இரு சக்கர மோட்டார் வாகன உதிரிபாக விற்பனை கடை இல்லாமல் இருப்பது மிகவும் நல்லது. ஏன் என்றால், என்ன தான் நீங்கள் மிகச் சிறந்த வியாபாரியாக இருந்தாலும் இத்தகைய உதிரிப்பாக விற்பனையில் நீங்கள் புதிதாக கடை ஆரம்பிப்பதால் ஏற்கனவே உள்ள கடையின் வாடிக்கையாளர்களை ஈர்ப்பது அவ்வளவு எளிதான விஷயமாக இருக்காது. இருசக்கர வாகன உதிரி பாகங்களை கொண்டு புது புது விதமான மாடல்களில் அலங்காரம் செய்து வைக்கப்பட்ட பொம்மைகளை பயன்படுத்தி மக்களை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். உங்களது கடையை ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அல்லது நகரத்தின் மையப் பகுதியிலுள்ள இருசக்கர வாகன ஓட்டிகள் பார்வையில் படும்படியான இடத்தில் அமைய வேண்டும். குறைந்த வாடகை மற்றும் வாடிக்கையாளர்களின் வாகன நிறுத்துமிடம் அருகில் உள்ள இரு சக்கர வாகன சரி செய்யும் மெக்கானிக் ஷாப் போன்றவற்றையும் கருத்தில் கொண்டு உங்கள் கடையின் இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.   

இந்தியாவில் இரு சக்கர மோட்டார் வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடை தொடங்க எவ்வளவு முதலீடு தேவை:

சொந்தக் கட்டிடத்தில் உங்களது இருசக்கர வாகன உதிரி பாகங்களின் கடையை திறக்க விரும்பினால் குறைந்தபட்சம் 10 முதல் 15 லட்சம் தேவைப்படும். உங்களுக்கு சொந்தக் கட்டிடம் இல்லை என்றால் வாடகை கட்டிடத்தில் கடையை நிறுவ விரும்பினால் உங்களது நகரத்தில் உள்ள ரியல் எஸ்டேட் தொழிலின் வேல்யு பொருத்து முதலீட்டுத் தொகையின் அளவு மாறுபடும். 

வாகனம் உதிரிபாகங்களை எங்கே வாங்குவது?

ஆன்லைனில் மிகவும் பிரபலமான b2b ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனையாளர்கள் இருக்கிறார்கள். இவர்களை அணுகி குறைந்த விலையில் உங்களது முதலீட்டிற்கு ஏற்ப உதிரி பாகங்களை வாங்கி விற்பனை செய்ய முடியும். நீங்கள் இந்த ஆன்லைன் முறையில் உதிரிபாகங்களை வாங்குவதால் உலகின் பல்வேறு தரப்பட்ட இடங்களில் சிறந்த தரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய உதிரிபாகங்களை கொள்முதல் செய்யும்போது விலையில் மட்டுமல்லாமல் தரத்திலும் சமரசமும் செய்யாமல் இருந்தால் மட்டுமே உங்களது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியும். 

உதிரிபாகங்கள் விற்பனை கடையை நடத்த என்னென்ன அனுமதி சான்றிதழ்கள் தேவை:

கார்ப்பரேஷன் கடை நடத்த அனுமதி சான்றிதழ் மற்றும் இந்திய அரசின் வரி கட்டுப்பாட்டு நடைமுறையிலுள்ள ஜிஎஸ்டி எண்  இந்த இரண்டும் கண்டிப்பாக தேவை. இவைகள் அல்லாமல் ஒரு பெரிய நிறுவனத்தின் கீழ் உதிரிபாக விற்பனையின் வியாபார உரிமத்தை பெற்று கடையில் விற்பதால் உங்களுடைய வணிகம் சிறந்து விளங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இத்தகைய வியாபாரத்திற்காக நீங்கள் அந்த ஹீரோ ஹோண்டா டிவிஎஸ் போன்ற நிறுவனங்களுக்கு ஒரு மிகப்பெரிய தொகையை டெபாசிட்டாக கட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது. 

 

இரு சக்கர வாகனத்தின் உதிரி பாக விற்பனை தொழிலை ஆரம்பிக்க என்னென்ன திறமை இருப்பது அவசியம்:

நீங்கள் ஏற்கனவே இந்த மாதிரியான இருசக்கர வாகன மெக்கானிக் கடையில் அதே உதிரிப்பாக விற்பனை கடையில் பணியாற்றிய அனுபவம் இருந்தால் இந்த தொழிலை நடத்தி சீராகக் கொண்டு செல்வதற்கு நல்ல உதவிகரமாக இருக்கும். இது மட்டுமல்லாமல் இது சார்ந்த படிப்புகளை மேற்கொண்ட இளைஞர்களும் இத்தகைய உதிரிப்பாக விற்பனை கடையை திறந்து வெற்றிகரமாக நடத்த வாய்ப்பு உள்ளது.

இரு சக்கர உதிரிபாக விற்பனையில் அதிகமாக விற்கும் பாகங்கள்:

  • ஸ்பார்க் பிளக்
  • ஆயில் பில்டர்
  • பிரேக் லைனிங்
  • கியர் செட் 
  • செயின் செட்
  • இருக்கை கவர்
  • ஹெல்மெட்
  • அலங்கார பொருட்கள் 
  • ஹெட்லைட்கள்
  • பின்புற விளக்குகள் 
  • இன்டிகேட்டர் விளக்குகள் 
  • ஒலிப்பான்கள் 
  • ஆக்சிலேட்டர் கேபிள்
  • உராய்வு தடுக்கப் பயன்படும் எண்ணெய் 
  • இயந்திர எண்ணெய்
  • பக்கவாட்டு கண்ணாடி
  • முன் மற்றும் பின்புற பம்பர்கள்

இத்தகைய பாகங்கள் தவிர்க்க முடியாத இருசக்கர வாகன உதிரிபாகங்கள் ஆக இருக்கின்றன. உங்களது இருசக்கர உதிரிபாக விற்பனை கடையில் இத்தகைய முக்கிய பாகங்களில் அல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட பாகங்கள் ஒவ்வொரு பிராண்ட் மற்றும் மாடல்களை பொறுத்து வேறுபடும். உங்களது முதலீடு மற்றும் இடம் குறைவாக இருந்தால் அனைத்து விதமான மாடல்களின் பிராணிகளுக்கும் அனைத்து விதமான உதிரிபாகங்கள் கடையில் இருப்பு வைத்து இருப்பது சாத்தியமில்லை. ஆதலால் இருசக்கர வாகன விற்பனையில் ஏதேனும் ஒரு உட்பிரிவில் அனைத்துப் பொருட்களும் விற்பவராக இருத்தல் அவசியம். எடுத்துக்காட்டாக, உங்களது கடையில் அனைத்து மாடல்களின் இருசக்கர வாகன இயந்திரங்கள் தொடர்பான அனைத்து வகையான உதிரிபாகங்கள் கிடைக்கும் என்ற தகவலை பரப்ப வேண்டும். இதேபோல் மற்ற பிரிவுகளான வீழிங் டயர் டியூப் போன்ற உட்பிரிவுகள் சம்பந்தப்பட்ட உதிரிபாகங்களை விற்று சிறந்த பெயர் பெற முடியும். 

கடைக்கு தேவையான மார்க்கெட்டிங் – விளம்பரம்: 

தொழில் முன்னேற்றத்திற்கு பாரம்பரிய சந்தைபடுத்துதல் மற்றும் நவீன டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்று இரண்டு வகையான மார்க்கெட்டிங் முறைகள் கையாளப்படுகின்றன. இந்த இரண்டு வகையான மார்க்கெட்டிங் முறையை பயன்படுத்தி உங்கள் உதிரிப்பாக விற்பனை தொழிலில் சாராம்சத்தை மக்களிடம் அடிக்கடி கொண்டு செய்ய வேண்டும். உங்கள் உதிரிபாக விற்பனை கடை சிறப்பம்சத்தை மக்கள் வாய்மொழியாக மற்றும் சமூக வலைதளங்களில் பலமுறை பேசி பகிரும்போது மட்டுமே உங்களுக்கு சிறந்ததொரு தொழில் வளர்ச்சி ஏற்படும். 

உங்கள் கடைக்கு வைத்திருக்கும் பெயர் சம்மந்தமாக ஒரு இணையதளத்தை உருவாக்கி அது பல தரப்பட்ட சமூக வலைதள பக்கங்களை இணைத்து உங்கள் கடையில் வழங்கப்படும் அவர்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். பழங்காலங்களில் இத்தகைய மார்க்கெட்டிங் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி மட்டுமே சார்ந்து இருந்தது ஆனால் இன்றைய நவீன காலகட்டத்தில் பல விதமான இணையதள வளர்ச்சிக்கு பிறகு மார்க்கெட்டிங் முறையில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அத்தகைய வலைதள வளர்ச்சியைப் பயன்படுத்தி உங்களது உதிரிப்பாக விற்பனை கடையின் தொழில் முன்னேற்றத்திற்கு ஒரு ஊன்றுகோலாக அமைத்துக் கொள்ளலாம்.

மார்க்கெட்டிங் இருக்காங்க நேரடியாக செலவிடுவது மட்டுமல்லாமல் உங்களது கடைக்கு அருகில் உள்ள அனைத்துவித இருசக்கர வாகன மெக்கானிக் அழைத்து அவர்கள் விருந்தோம்பல் வைத்து உங்களது கடையில் பொருட்களை வாங்கிக்கொள்ள அவர்களது வாடிக்கையாளர்களுக்கு சிபாரிசு செய்யுமாறு கேட்டுக் கொள்ள வேண்டும். அவ்வாறு அத்தகைய மெக்கானிக்கின் சிபாரிசு மூலமாக வரும் வாடிக்கையாளர்களின் விற்பனை அடிப்படையில் அவருக்கு தக்க சன்மானம் ஆகவோ பரிசுப் பொருளாக வழங்கி மகிழ்விப்பது மூலம் நீங்கள் உடனடி தொழில் வளர்ச்சியை பெற முடியும்.  

ஏற்கனவே பிரபலமாக இருந்த இரு சக்கர மோட்டார் உதிரிபாக விற்பனை கடைகள் தற்போது நிர்வகிக்க ஆளில்லாமல் மூடப்பட்டு இருக்குமேயானால், அத்தகைய கடையை தேர்ந்தெடுத்து புதுப்பித்து திறக்கும் போது  உங்களுக்கு பெரும்பாலான முதலீடு மற்றும் விளம்பர செலவு குறைவாக இருக்கும். பிரபலமாக இருக்கும் கடையில் வேலை செய்யும் திறமையான வேலையாட்களை தக்க சன்மானம் வழங்கி, உங்களது கடையில் பணியமர்த்தி அவர்கள் மூலம் கிடைக்கும் புது வாடிக்கையாளர் உங்கள் உதிரிபாக கடைக்கு வர வைப்பதோடு மட்டுமல்லாமல் உங்களது பணிச் சுமையும் ஓரளவு குறைந்து இருக்கும். 

தங்களது இருசக்கர வாகனத்தை விற்க முனைபவர்களிடமிருந்து சரியான தகவல்களை பெற்று செகண்ட் ஹேண்ட் வண்டி வாங்கும் ஆர்வம் உள்ள மற்ற வாடிக்கையாளர்களுக்கு தனி வகையான லாப நோக்குடன் இல்லாமல் தகவல் தெரிவித்து இரண்டு பேரது நன்மதிப்பையும் பெறுவதன் மூலம், உங்கள் இருசக்கர வாகன உதிரிப்பாக விற்பனை கடைக்கு நிரந்தர வாடிக்கையாளர்களாக ஆக்க முடியும். 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.