மொபைல் போன் விற்பனைக் கடையை எவ்வாறு தொடங்குவது
உலகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் மொபைல் போன் என்பது மிகவும் அடிப்படை தேவையாக மாறிவிட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து விதமான மக்களுக்கும் ஸ்மார்ட் போனும் அதன் செயல்பாட்டு முறையும் திருப்திகரமான வகையில் உள்ளது. பொழுதுபோக்கு ஊடகமாக உங்கள் அன்றாட வாழ்வில் நடைபெறக்கூடிய விஷயங்களை உலக தரப்பு மக்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இந்த ஸ்மார்ட்போன்கள் பயன்படுகின்றன. இவ்வாறாக மக்களிடம் ஸ்மார்ட்போன் மீதான நம்பிக்கையும் ஆர்வமும் அதிகரித்து இருப்பதால் அதிகப்படியான நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் தொழில் உற்பத்தி ஆரம்பித்துவிட்டன. அதிகப்படியான தொழிற்சாலைகள் இருப்பதால் ஜியோ போன்ற புதிய மொபைல் போன் நிறுவனங்கள் அதிகப்படியான சலுகைகளை வழங்கி மக்களிடம் பெரிய வரவேற்பு நடைபெறுகின்றன.
மொபைல் கடை இந்தியாவின் எந்த ஒரு மூலையில் திறந்தாலும் சந்தேகத்திற்கு இடமின்றி அது ஒரு நல்ல தொழில் முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஆனால் நடைமுறையில் மொபைல் கடை திறப்பு சராசரியையும் அதன் வெற்றியாளர்களின் சராசரியையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தங்கள் கடையை திறந்த ஓரிரு ஆண்டுகளில் மூடி விடுகின்றனர். 20% நிகர லாபம் கிடைத்தாலும், அவர்கள் இவ்வாறு ஓரிரு ஆண்டுகளில் கடையை மூடுவதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் சரியான பணப்புழக்கம் இல்லாமல் இருப்பதே ஆகும். குறைந்தபட்ச முதலீடும் குறைந்தபட்சம் அனுபவம் இருந்தால் மொபைல் கடையை திறந்து விடலாம் என்பதால் அதிகப்படியானவர்கள் புது புது மொபைல் கடைகளை திறக்க ஆர்வம் காட்டுகின்றனர். என்னதான் இந்த மாதிரி அதிகப்படியான போட்டி இருந்தாலும் பலவிதமான கருத்துகளை கணக்கில் கொண்டு சிறப்பாக செயல்பட்டால் மொபைல் கடையை லாபகரமாக நடத்திச் செல்ல முடியும்.
மொபைல் ஸ்டோரைத் திறந்து வெற்றியுடன் நடத்த சில அறிவுரைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
-
மொபைல் கடைக்கு உரிமம் பெறுங்கள்
ஒரு வருடத்திற்கு பத்து லட்சத்திற்கும் மேலான விற்பனையை ஓரிரு வேலையாட்கள் மட்டும் கொண்ட சிறிய ரக மொபைல் கடைகளில் இதை அடைய முடியும். வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாளராக (Limited Liability Partnership (LLP)எல்.எல்.பி) பதிவு செய்து உங்களது மொபைல் கடையை தொடங்குவதே நல்லது. பிற்காலத்தில் பெரிய முதலீட்டில் பெரிய இடத்தில் உங்களது கடையை நிறுவ விரும்பினாலோ அல்லது ஷாப்பிங் மால்கள் போன்ற இடங்களில் உங்களுடைய விரும்பினாலோ அல்லது அமேசான் ஸ்னாப்டீல் ஃபிலிப்கார்ட் போன்ற இ காமர்ஸ் வெப்சைட் மூலம் உங்களது தொழிலை விஸ்தரிக்க விரும்பினாலோ அல்லது தாங்களாகவே புதிய இ-காமர்ஸ் வெப்சைட் ஆரம்பித்து அதன் மூலம் விற்பனை செய்ய விரும்பினாலோ ஜிஎஸ்டி பதிவு பதிவு செய்வது முக்கியமான ஒன்றாகும். இந்த https://reg.gst.gov.in/registration வலைதளத்திற்கு சென்று உங்களது கடையின் ஜிஎஸ்டி எளிதாக பதிவு செய்ய முடியும். சீனா, இந்தோனேசியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து மொபைல் பாகங்களை இறக்குமதி செய்து அதை உங்கள் கடையில் விற்க விரும்பினால் உங்களுக்கு ஐ இ (IE) குறியீடு பெறுவது அவசியமாகும். இந்த இணையதள முகவரிக்கு சென்று https://dgft.gov.in/ IE குறியீடு பெறமுடியும்
-
மொபைல் கடைகளின் விற்பனை பற்றிய புரிதல் அவசியம்
உங்கள் ஏரியாவில் உள்ள அனைத்து விதமான மொபைல் விற்பனை மற்றும் மொபைல் பாகங்கள் விற்பனை கடை பட்டியலிடவும். மொபைல் போன் மட்டும் விற்பதன் மூலமாக நீங்கள் பெரிய லாபமும் வாடிக்கையாளரின் ஈர்ப்பையும் அடைய முடியாது. மொபைல் போன்களுக்கு தொடர்புடைய கேபிள்கள், சார்ஜர்கள், மெமரி கார்டுகள் மற்றும் பலவிதமான ஹெட்செட் போன்ற விற்பதைப் பற்றி கவனித்து தாங்களும் தங்கள் கடையில் எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அனைத்து விதமான மொபைல் மற்றும் மொபைல் சம்பந்தப்பட்ட பொருட்கள் கிடைக்கும் போது வாடிக்கையாளர் உங்களுக்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள். இவ்வாறு அதிக வாடிக்கையாளர்களைப் பெறுவதோடு மட்டுமல்லாமல் அந்த மொபைல் பாகங்களை விற்பது உங்களுக்கு அதிக லாபத்தைத் தரும். உங்கள் வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்றவாறு நீங்கள் எந்த விதமான விலையுள்ள மொபைல் போன் மற்றும் எந்த ரக போன் மற்றும் எந்த மாடல் போன் விற்பனை செய்யவேண்டும் என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்களுக்கு விருப்பப்பட்ட மொபைல் போனை தெரிந்துகொண்டு விற்பனை செய்வதன் மூலம் நீங்கள் அடுத்தடுத்து எந்த வகையான மொபைல் போன் வாங்கி வைத்துக் கொள்ளலாம் எளிதில் புலப்படும்.
-
உங்கள் தயாரிப்புகளை நன்கு அறிந்து கொள்ளுங்கள்
உங்கள் கடைக்கு வரும் அனைத்து வகையான மக்களுக்கும் மொபைல் பற்றிய தெளிவு இருக்கும் என்று நாம் சொல்ல முடியாது. அத்தகைய மொபைல் தொழில்நுட்ப அறிவு கம்மியாக இருக்கும் மக்களுக்கு நீங்கள் அதனுடைய விளக்கத்தை அவருக்கு புரியும் வகையில் எளிய நடையில் சொல்ல வேண்டும். அவ்வாறு எளிய நடையில் விளக்க வேண்டும் என்றால் உங்களுக்கு அதைப் பற்றியும் முழு புரிதலும் இருக்க வேண்டும். இரண்டு மூன்று கடைகளில் விசாரித்து விட்டு தங்கள் கடைக்கு வந்து மக்கள் அணுகும் போது நீங்கள் அவ்வளவு எளிதான நடை முறையில் விளக்கும் போது அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை கொண்டு உங்கள் கடையில் பொருட்களை வாங்குவார்கள்.
-
கடையைத் திறக்கும் முன் செல்போன் வர்த்தக சந்தையை புரிந்து கொள்வது அவசியம்
மொபைல் போன் கடை திறப்பது இந்தியாவில் திறப்பது லாபகரமான தொழிலாக இருந்தாலும் ஏற்கனவே லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்ற மொபைல் போன் நிறுவனங்களைப் பற்றி தெரிந்து கொள்வது மிக முக்கியமாகும். அவ்வாறு தெரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் உங்களுடைய முதலீட்டை மொபைல் கடையில் இடுவது நல்லது. எக்காரணத்தைக் கொண்டும் உங்களது முழு சொத்தையும் பணயமாக வைத்து மொபைல் போன் மட்டுமில்லாமல் எந்த ஒரு தொழிலும் செய்யாமல் இருப்பது நல்லது. போட்டியாளர்கள் மற்றும் உங்களது பட்ஜெட்டை சரியாக கணித்து புதிய மொபைல் கடை ஆரம்பிப்பதன் மூலம் வெகுநாட்களுக்கு சிறப்பாக செயல்பட முடியும்.
-
மொபைல் கடை உரிமையாளருக்கு உள்ள தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்
ஒரு மொபைல் கடைக்கு உரிமையாளராக இருக்க வேண்டுமென்றால் உங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் எவ்வாறு அணுகுவது நடைமுறை சந்தையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை எவ்வாறு புரிந்து கொண்டு செயலாற்றுவது போன்ற நுணுக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்
புதிய முயற்சியை தொடங்க தேவையான திட்டங்கள் மற்றும் அதற்கேற்ற செலவுகள் பற்றிய அறிவும் சட்ட ரீதியாக ஏற்படக்கூடிய சிக்கல்களை எதிர்கொள்ள அறிவும் துணிச்சலும் இருக்க வேண்டும்.
-
சரியான ஊரை தேர்வு செய்ய வேண்டியது அவசியம்
தொழில் போட்டி குறைந்த மற்றும் மொபைல் போன்களுக்கான தேவை அதிகமாக உள்ள ஊரை தேர்வு செய்து அங்கே உங்களது மொபைல் கடையை நிறுவ வேண்டும். நீங்கள் மொபைல் கடை வைத்திருக்கும் இடத்திலுள்ள மக்களின் பொருளாதார நிலையைப் பொருத்து அவர்களுக்கு மொபைலை வாங்கும் ரசனை வேறுபடும்.
-
கடை அலங்காரம் சிறந்த முறையில் அமைய வேண்டும்
ஒரு நல்ல மொபைல் கடை அமைப்பதற்கு குறைந்தபட்சம் சுமார் 150 சதுர அடி இடம் தேவை. அலங்கார விளக்குகள் கேமராக்கள் கண்டிஷன்கள் போன்றவை உங்கள் மொபைல் கடைக்கு அவசியமாக இருக்கும். சிறந்த மரவேலைப்பாடு மற்றும் கண்ணாடி வேலைபாடுகளுடன் அடங்கிய கவுன்டர்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வண்ணங்களில் அமைக்க வேண்டும். கடைக்கு முன்பு அலங்கார விளக்குகள் அமைத்து இரவு நேரங்களில் மக்கள் அனைவருக்கும் பிரகாசமாக தெரியும் படி வைக்க வேண்டும்.
-
அனைத்து வகையான பண பரிமாற்றம் தேவை
போன்பே, கூகுள், அமேசன், கிரடிட் கார்ட், டெபிட் கார்ட் இவ்வாறு அனைத்து விதமான பணப் பரிமாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைக்க வேண்டும். இஎம்ஐ முறையில் உங்களது மொபைல் போனை விற்கும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு இஎம்ஐ முறையை செயல்படுத்துவதால் அதிகப்படியான வாடிக்கையாளரை உங்கள் மொபைல் கடைக்கு கொண்டு வரமுடியும். வாடிக்கையாளர்களுக்கு பணம் கட்ட உதவி செய்த சலுகைகள் வழங்க வேண்டும் அவ்வாறு இல்லாமல் நீங்கள் கண்டிப்பாக இருந்தால் அதிக வாடிக்கையாளர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள்.
-
நன்றாக விளம்பரபடுத்துதல் அவசியம்
உள்ளூர் வாடிக்கையாளர்கள் மூலமாகவே உங்களது மொபைல் கடையில் அதிகமான வணிகம் நடைபெறும். ஆகவே அனைத்து வகையான உள்ளூர் வாடிக்கையாளர்களும் உங்கள் கடையை பற்றிய அறியஆங்காங்கே விளம்பரப் பலகைகளும் வைத்தல் மூலமாகவும் துண்டுப்பிரசுரங்கள் வழங்குவதன் மூலமும் செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுப்பதன் மூலமாகவும் ஏற்கனவே உங்களிடம் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் புதிய சலுகைகளை தொடர்ந்து தெரிவித்துக் கொண்டிருக்க வேண்டும். எங்கு பார்த்தாலும் மக்கள் அனைவரும் உங்கள் மொபைல் கடையைப் பற்றி பேசுமாறு வைக்க வேண்டும்.
-
அதிகமாக விற்கும் தயாரிப்புகளில் முதலீடு செய்யுங்கள்
மொபைல் போன்களின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் அதற்கு முதலீடுகளை குறைத்துக்கொண்டு மிகச்சிறியவிலை உள்ள பொருட்களான இயர்போன், பவர் பேங்க், ஸ்கிரீன் காட், ஹெட் போன், மொபைல் போன் கவர், ப்ளூடூத் ஹெட்செட், வாங்கி விற்று அதே விதமான லாபத்தைப் பெற வேண்டும். இவ்வாறு விற்க கூடிய பொருட்களின் விலையை புத்திசாலித்தனமாக நிர்ணயித்து மற்றும் இணையான தள்ளுபடி பொருள் வழங்கி மக்களை கவர வேண்டும். இவ்வாறு உள்ள மொபைல் பொருட்களுக்கு அதிகமான விலை வைத்து விட்டால் மக்கள் விரும்ப மாட்டார்கள்.
-
கடையில அனைத்துவிதமான சரக்குகளையும் நிர்வகிக்க வேண்டும்
உங்கள் கடைக்கு வந்தால் அனைத்து விதமான மொபைல் போன் பிராண்டுகளும் அதற்கேற்ற பொருட்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை வாடிக்கையாளர்கள் மனதில் வர வேண்டும். ஏதேனும் ஒரு பொருளின் ஸ்டாக் குறைந்தால் அந்தப் பொருளின் சப்ளையர் உடனடியாக அணுகி சரக்கு நிலவரத்தை சரி செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் ஏதேனும் ஒரு மொபைல் போனை விரும்பி கேட்டால் அவுட் ஆப் ஸ்டாக் என்ற பதிலை எந்த நாளும் கூறக்கூடாது.
-
மொபைல் விற்பனைக்கு பின்னரும் வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் ஆதரவு தரவேண்டும்
உங்களிடம் வாங்கிய பொருட்கள் ஏதேனும் குறைபாடு அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை வந்தால் நீங்கள் தட்டிக் கழிக்காமல் அவர்களுக்கு ஏற்ற உதவியை செய்து கொடுக்க வேண்டும். உங்களிடம் வாங்கிய போனுக்கான முழு தார்மீக பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு அவர்கள் போனில் உள்ள பிரச்சினையை சரிசெய்து கொடுக்க முழு மனதுடன் முற்பட வேண்டும். கோரிக்கை முறையில் அந்த சர்வீசுக்கு பணம் கேட்டால் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்கள் அந்த மொபைல் சர்வீசுக்கு பணம் கொடுக்கக் கூடும்.