written by | October 11, 2021

மருந்தியல் வணிகம்

ஈசியாக தொடங்கலாம் பார்மசி பிசினஸ்

பார்மஸி பிஸினஸ் அதாவது  மருந்தகம் என்பது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வரக்கூடிய தொழில் ஆகும். சமூக அளவில் மக்களால் மதிக்கப்படத்தக்க இடத்தில் இந்த தொழில் உள்ளது. மக்களுக்கு  உண்ணுவதற்கு உணவு இருந்தாலோ இல்லாவிட்டாலோ, உடலின் ஆரோக்கியத்தை காப்பாற்றிக்கொள்ளவே அனைவரும் விரும்புவார்கள்.  குறிப்பாக, மருந்துகளுக்கான ​​தேவை முன்னெப்போதையும் விட  இன்றைய காலகட்டத்தில் அதிகமாக உள்ளது. இந்திய மக்கள் தொகையில் வயதானவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்களின்  எண்ணிக்கை  20 சதவீதத்துக்கும் அதிகமாக  இருப்பதாக  தெரியவந்துள்ளது. அதனால், வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசியமான மருந்துகளை சேவை அடிப்படையில்  அளிக்க  மருந்தகங்கள்  அவசியமான ஒன்றாகும். 

எப்போதும் விற்பனை வாய்ப்புகளை கொண்டிருக்கும் தொழில்களில்  பார்மசி பிசினஸ்  ஒன்றாகும். ஒரு தொழில் முனைவோரிடம்  உள்ள குறைந்தபட்ச மூலதன முதலீடு மற்றும் இடவசதி ஆகியவற்றை கொண்டு பார்மஸி பிஸினஸ் தொடங்கி செய்து வர இயலும். இந்த தொழிலில் உள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், எந்த ஒரு பந்த் அல்லது ஊரடங்கு நடவடிக்கை காரணமாக கடையை மூட வேண்டிய அவசியம் ஏற்படாது. உதாரணமாக, சமீபத்திய கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக காரணமாக அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தாலும்கூட பார்மசி என்ற மருந்தகங்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருந்ததை நாம் அனைவரும் கவனித்திருப்போம். 

கவனிக்க வேண்டிய அம்சங்கள்

ஒரு மருந்தகத்தை  தொடங்குவதற்கு முன்னர்  சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.  அதில் முதலாவது,  ஏற்கனவே  குறிப்பிட்ட பகுதியில்  இரண்டுக்கும் மேற்பட்ட  கடைகள் இருக்கும் நிலையில், அங்கு தொழில் தொடங்குவது தேவையற்ற போட்டியை உருவாக்கும்.  அதனால், மருந்துக்கடைகள் குறைவாக அமைந்துள்ள வேறு பகுதியை தேர்ந்தெடுப்பது நல்லது.  

இரண்டாவதாக  மருத்துவர்களின் ஆதரவு அல்லது குறிப்பிட்ட மருத்துவமனையின் ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில்  பார்மசி பிசினஸை  தொடங்குவதும் பாதுகாப்பான  வழிமுறையாகும்.  

மூன்றாவதாக,  இன்றைய காலகட்டத்தில் மருந்துக்கடைகள் வாடிக்கையாளர்களுக்கு டோர் டெலிவரி சேவையை தருவது மிக அவசியம்.  கூடுதலாக,  ஆன்லைன் முறையில்  வாடிக்கையாளரின்  தேவைகளை அறிந்து அவர்களுக்கு டோர் டெலிவரி அளிப்பதும் சிறந்த வழியாகும்.  

பார்மசி படிப்பில் டிப்ளமோ பெற்றவர்கள் வங்கி கடன் பெற்றும் கூட இந்த தொழிலை துவங்கலாம். குறிப்பிட்ட  ஏரியாவில் பிஸினஸை  ஆரம்பிப்பதற்கு முன்னால் எவ்வகை மருந்துகள் அதிகமாக விற்கப்படுகின்றன  என்பது பற்றி தொழில்  ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டு  அதன் அடிப்படையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

சட்ட வரையறைகள்

  • மருந்து சேமிப்பு, விற்பனை மற்றும் பாதுகாப்பாக மருந்தளித்தல், மருந்து மற்றும் ஒப்பனைப்பொருள் சட்டம் ஆகியவற்றின்கீழ் மருந்து மற்றும் ஒப்பனைப் பொருட்களின் இறக்குமதி, உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றை முறைப்படுத்தும் சட்டம்.
  • மருந்துக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் மருந்து விற்பனை, வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் சட்டம்
  • மருந்தியல் சட்டத்தின் கீழ் மருந்தியல் தொழிலை முறைப்படுத்தும் சட்டம். மருந்தியல் தொழில் மற்றும் நடைமுறைகளை முறைப்படுத்தும் சட்ட நடைமுறைகளை பார்மஸி பிசினஸில் ஈடுபடும் தொழில் முனைவோர் அறிந்திருப்பது அவசியமானது.

முதலீடு

ஒருவரது சொந்த ஊர் அல்லது நன்றாக பழக்கப்பட்ட ஏரியாவில் சொந்தமாக  இடம் இருந்தால் அருமை.  இல்லாவிட்டால்  கடையை வாடகைக்கு  எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கும். அடுத்ததாக ஆரம்ப நிலை சரக்குகளை கொள்முதல் செய்வதற்கான முதலீடு,  கடையின் உட்புறமாக அமைக்கப்பட வேண்டிய அலமாரி வகைகள், முன்பக்க ஷோகேஸ் அமைப்புகள், ஏ.சி வசதி மற்றும் ரெப்ரிஜிரேட்டர், அதற்கு தகுந்த யு.பி.எஸ் அமைப்பு  போன்ற உள்கட்டமைப்பு களுக்கான செலவுகள்,  தேவையான விற்பனை பிரதிநிதிகள்,  டெலிவரி பையன்கள்  போன்ற விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.  தடுப்பூசிகள், சீரம், இன்சுலின் ஊசி, சில மாத்திரைகள் ஆகியவற்றை ரெப்ரிஜிரேட்டரில் வைத்து பாதுகாக்க வேண்டும்.  பார்மசி பிசினஸ் தொடங்க முயற்சி செய்பவர்கள்  அவர்களது சந்தேகங்களை மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்ளாமல் பல ஆண்டுகளாக தொழில் செய்து வருபவர்களிடம் ஆலோசனை கேட்டு தெளிவடைவது மிக முக்கியம். 

மருந்தாளுனர்

தொழில் தொடங்குபவரே பி.பார்ம் அல்லது  எம்.பார்ம் பட்டம்  பெற்று பார்மசிஸ்ட்  அதாவது மருந்தாளுநர்  ஆக இருப்பது பல விஷயங்களில் நல்லது. காரணம் ஒரு பார்மசிஸ்ட் என்பவர் பார்மசி பிசினஸில் முழுநேரமாக செயல்படுவது  மிக அவசியமான ஒன்றாகும்.  அவ்வாறு இல்லாவிட்டால்  பார்மசிஸ்ட்  ஒருவரது தகுதிச் சான்றிதழ் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டியதாக இருக்கும்.  மேலும், கடையில் விற்பனை செய்யப்படும்  மருந்துகள் அனைத்தும்  அவரது ஒப்புதலின் அடிப்படையில் சட்டப்படி  விற்பனை செய்யப்பட வேண்டும் என்பதே மருந்து கட்டுப்பாட்டு துறையின் விதிமுறையாகும்.

போதிய இடவசதி

பார்மசி பிசினஸ்  என்ற மருந்தகம் அல்லது  அதற்கான மொத்த விற்பனை நிலையம்  தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 10 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட  கடைக்கான வாடகை ஒப்பந்தம் அல்லது  சம்பந்தப்பட்ட வளாகத்தின் உரிமையாளர் சான்று  அவசியமானதாகும்.  விற்பனை செய்யப்படும் முறையானது ஒருங்கிணைந்த சில்லறை  மற்றும் மொத்த விற்பனை என்ற நிலையில் இருந்தால் சுமார் 15 சதுர மீட்டர்  இடம்  தேவையானதாக இருக்கும்.  கூடுதலாக மக்கள் எளிதாக வந்து செல்வதற்கு ஏற்ற வகையிலும்,  வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்ற வசதி கொண்டதாகவும் மருந்தகத்தின் சுற்றுப்புறம் அமைந்திருப்பதை கவனித்துக்கொள்ள வேண்டும்.

அவசியமான ஆவணங்கள்

பார்மசி பிசினஸ் தொடங்க தேவையான ஆவணங்கள்  மற்றும் விதிமுறைகள் ஆகியவை இந்திய அளவில்  சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஏற்ப  வெவ்வேறு நடைமுறைகளில் அமைந்திருக்கின்றன. பொதுவாக, இந்திய அளவில்  மருந்துப்பொருட்கள்  விற்பதற்கான உரிமம்  பெறுவதற்கு  அவசியமான ஆவணங்கள் பற்றி கீழே பார்க்கலாம். 

  • என்ன காரணத்திற்காக பார்மசி பிசினஸ் தொடங்கப்பட உள்ளது என்ற தகவல்களை ஒரு கவரிங் லெட்டர் மூலம் தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பத்துடன் அளிக்கப்பட வேண்டும்.
  • பரிந்துரை செய்த வடிவத்தில் மருந்தக உரிம விண்ணப்ப படிவம்.
  • விண்ணப்பத்தாரர் பெயர், பதவி மற்றும் கையொப்பம் அடங்கிய கவரிங் லெட்டர்.
  • உரிமத்தை பெறுவதற்கான வைப்புத்தொகை செலுத்திய சலான்.
  • பரிந்துரை  செய்த வடிவத்தில் அறிவிப்பு வடிவம்
  • கடை அமைந்துள்ள வளாகத்தின் புளூபிரிண்ட்  மற்றும்  தரை தளத்தின் ப்ளூபிரிண்ட்.
  • கடையின் உரிமையை காட்டும் பத்திரம் .
  • மருந்துக்  கடை உரிமையாளர் அல்லது பார்ட்னர்கள் இருந்தால்  அவர்களது அடையாள சான்று மற்றும் புகைப்படங்கள்.
  • வாடகை கடை  என்றால் அதற்கான  வாடகை ஒப்பந்தம்
  • பார்ட்னர்ஷிப் அதாவது கூட்டு வணிகம் என்றால் அதற்கான ஒப்பந்தம் மற்றும் ஜி.எஸ்.டி பதிவு செய்யப்பட்டதற்கான சான்று.
  • பதிவு செய்யப்பட்ட மருந்தாளுனர், தகுதி வாய்ந்தவர் மற்றும் குற்றமற்றவர்  என்பதற்காக  உறுதிச் சான்றிதழ்.  அத்துடன் உரிமையாளர்  மற்றும் பங்குதாரர்கள்  ஆகியோர் குற்றமற்றவர்கள்  என்பதற்கான உறுதிச் சான்றிதழ்
  • பதிவு செய்யப்பட்ட மருந்தாளுனர் பணி நியமனக் கடிதம்.

ஆகிய சான்றுகளுடன் மாவட்ட டிரக் இன்ஸ்பெக்டர்  அதாவது மருந்து ஆய்வாளர் அலுவலகத்தில், மருந்து கடை அனுமதிக்கான விண்ணப்பத்தை நேரில் அளிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை அரசின் இ-சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.  அல்லது இணைய தளங்களின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். 

ஆன்லைன் சேவை

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மளிகை, மருந்து பொருட்கள்கள்  உள்ளிட்ட நுகர்வோர் பொருட்களை  ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து, அவற்றை ஹோம் டெலிவரியாக பெறுவதை விரும்புகிறார்கள்.  மேலும் சமீபத்திய பெரும் தாக்கமான கொரோனா  வைரஸ்  காரணமாகவும் மக்கள் நேரடியாக கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்க விரும்பாமல் ஆன்லைன் முறைகளில் ஆர்டர் செய்து பொருட்களை பெற்றுக் கொள்கிறார்கள்.  இனிவரும் காலங்களில் ஆன்லைன் முறையிலான தொழில்முறை நடவடிக்கைகள் பரவலாக இருக்கும் என்பதால் அதற்கு தகுந்தாற்போல் தொழில் முனைவோர்கள் தங்களது வர்த்தக நடவடிக்கைகளை இணையதளம் மூலமாக செயல்படுத்திக் கொள்வது அவசியமானது. 

இன்சுலின் உள்ளிட்ட பிற ஹார்மோன் அடிப்படையிலான மருந்துகள் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் சேமிப்பிடத்தில் பராமரிக்க வேண்டியிருப்பதால், சில மணி நேரங்களுக்குள் ஹைபர் லோகல் டெலிவரி மூலமாக வழங்குவது சிறந்த வழியாக இருக்கும். மேலும், அருகில் உள்ள தங்கும் விடுதிகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களுக்கு மருந்தகத்தின் விசிட்டிங் கார்டுகளை கொடுத்து வைத்திருப்பது நல்லது. அதன் மூலம் அவர்களது  அவசர உதவி, திடீர் தேவைகள் ஆகியவற்றுக்காக தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும். பெரும்பாலும் இரவு நேரங்களில் தொடர்பு கொள்ளும்போது மருந்தக சேவையில் இருப்பவர்கள் தங்களது சொந்த சங்கடங்களை கவனிக்காமல் பணி புரிய வேண்டிய சூழலும் ஏற்படக்கூடும். 

அரசு உதவியுடன் பார்மசி பிசினஸ்

உள்நாட்டில் தயாரிக்கப்படும் மருந்து, மாத்திரைகள் ஏழை எளிய மக்களுக்குக்கு குறைந்த விலையில் கிடைக்க வேண்டும்  என்ற அடிப்படையில் பிரதான் மந்திரி ஜன் ஆஷாதி யோஜனா திட்டத்தின் கீழ் ‘ஜன் அவுஷதி’ எனும் மலிவு விலை மருந்தகங்களை மத்திய அரசு  செயல்படுத்தி வருகிறது.  பொருளாதார ரீதியாக தாழ்ந்த ஏழை மக்கள் பயன் பெறும் வகையில் அரசு மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் ஜெனரிக் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது இந்த மருந்தகம் தொடங்குபவர்களுக்கு ரூ.2.5 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொதுத்துறை மருத்துவ நிறுவனங்களுக்கான பணியகம் (Bureau of Pharma PSUs of India -BPPI) என்ற அமைப்பு, ‘ஜன் அவுஷதி’  என்ற மக்கள் மருந்தகம் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. குறைந்த லாபத்தில் மருந்துகளை விற்பனை செய்யும் இந்த பார்மசி பிசினஸை தனி நபரோ அல்லது நிறுவனமோ எவ்வாறு ஏற்று நடத்தலாம் என்ற  தகவல்களை இங்கே காணலாம்.

  • மருத்துவர்கள், பதிவு செய்யப்பட்ட மருத்துவத் தொழில்முறை வல்லுநர்கள்  அல்லது B.Pharm, D.Pharm பட்டம் பெற்றவர்கள் மருந்தகங்களை தொடங்கலாம்.
  • தனிநபர்கள் பார்மஸி பட்டம் பெற்றிருப்பவர்களைப் பணியில் அமர்த்தியும் மருந்தகங்களைத் துவங்கலாம்.
  • தனிநபர்கள் அரசு மருத்துவமனை வளாகங்களில் மருந்தகங்களை ஆரம்பித்து நடத்தி வரலாம்.  அல்லது தங்களது பகுதிகளில் கச்சிதமான இடத்தில் மருந்தகங்களை தொடங்கி நடத்தலாம். 

தொடங்கப்பட்ட மருந்தகம், BPPI மென்பொருளுடன், இணையம் மூலம் இணைந்திருப்பதன் மூலம் ரூ 2.5 லட்சம் வரை ஊக்கத்தொகை பெறக்கூடிய வாய்ப்பு உண்டு. மருந்தகம் ஆரம்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பட்டியல் இனத்தினருக்கு மேற்கூறிய ஊக்கத்தொகை உள்ளிட்ட ரூ 50,000 மதிப்புடைய மருந்துகள் அரசால் வழங்கப்படும். பார்மசி படிப்பை முடித்துள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பை  பயன்படுத்தி சுயதொழில் செய்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். அரசின் இந்த திட்டத்தின் கீழ் பார்மசி பிசினஸை தொடங்க விரும்புபவர்கள் www.janaushadhi.gov.in என்ற இணைய முகவரிக்குச் சென்று, தகவல்களை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.