தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கான பிசினஸ் ஐடியாக்கள்
இன்றைய காலகட்டத்தில் சிறந்த தொழில் முனைவோராக நிறைய பெண்கள் சாதனை புரிந்து வருகிறார்கள். குடும்ப சூழ்நிலை, குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பராமரிப்பு, கல்வி மற்றும் தொழில் பயிற்சி ஆகியவற்றின் அடிப்படையில் பெண்கள் தங்களுடைய பொருளாதார தேவைகளுக்காக யாரையும் நம்பி இல்லாமல் சுயமாகவே சம்பாதித்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அரசாங்கமும், சுய தொழில் செய்யக்கூடிய பெண்களுக்கு தொழில் பயிற்சிகளையும் அளித்து, அதற்கான வங்கிக்கடன் திட்டங்களையும் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற சூழலில் ஏராளமான சிறு தொழில்கள் தேசிய அளவில் செய்யப்பட்டு வருகின்றன. பெண்களுக்கான தொழில் வாய்ப்பு அதாவது பிசினஸ் ஐடியாஸ் ஃபார் உமன் என்ற அடிப்படையில் பெண்கள் ஈடுபட்டு வாழ்க்கையில் முன்னேறுவதற்கான தொழில் வகைகள் மற்றும் அவற்றை செய்வது பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.
ஓவியம் அல்லது சிற்ப படைப்புகள் தயாரிப்பு
இந்த தொழில் பிரிவு முற்றிலும் கலை உணர்வு சார்ந்த பெண்களுக்கான ஒன்றாகும். தற்போதைய கார்ப்பரேட் உலகத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய நண்பர்களுக்கான பிறந்த நாள் மற்றும் திருமண நாள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பரிசுப் பொருட்களை வழங்க விரும்புகிறார்கள். பொதுவாக பரிசுப்பொருள் என்றாலே கலை உணர்வு உடையதாக இருப்பதையே பலரும் விரும்புகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் வீடுகளில் உள்ள ஆள் பகுதிகளில் அழகான ஓவியங்களை மாற்றி வைப்பது நிறைய பேருடைய வழக்கமாக இருந்து வருகிறது. அதனால் ஓவியம் அல்லது சிற்பம் ஆகியவற்றை உருவாக்குவதற்கான பயிற்சிகளை குறுகிய காலம் பெற்றுக்கொண்டு அதனை சுய தொழிலா பெண்கள் தொடங்கி செய்து வரலாம். இந்த பயிற்சியை பெற விரும்புபவர்கள் அடிப்படையான கல்வித்தகுதி பெற்றிருந்தால் கூட போதுமானது. மாவட்ட தலைநகரங்களில் அமைந்துள்ள சுய தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் தனிப்பட்ட மகளிர் குழு அமைப்புகள் இதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் அளித்து வருகிறார்கள். ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல தொழில் வாய்ப்பாக இருக்கும்.
கற்பூரம் தயாரிப்பு
வீடுகள் மற்றும் கோவில்களில் சாதாரணமாக பயன்படுத்தக்கூடிய கற்பூரம் என்பதையும் சிறு தொழிலாக பெரும்பாலான இடங்களில் செய்து வரப்படுகிறது. பிசினஸ் ஐடியாஸ் ஃபார் உமன் என்ர நிலையில் குடிசை தொழிலான இந்த பிரிவை சுலபமாக வீட்டிலேயே செய்ய முடியும். இதற்கு தனிப்பட்ட முறையில் மூலப்பொருட்கள் வாங்குவது சிரமம் எதுவும் இருக்காது. நகரங்களில் அமைந்துள்ள நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய கற்பூர பொடி அல்லது கற்பூர கட்டி ஆகியவற்றை வாங்கி கற்பூரம் தயாரிப்பை மேற்கொள்ளலாம். இதற்கான இயந்திரம் கேம்பர் மெஷின் என்று சொல்லப்படுகிறது. ஆன்லைன் முறையிலும் கூட இந்த இயந்திரத்தை வாங்கிக் கொள்ளலாம். எளிய பட்ஜெட் கொண்ட இந்த எந்திரத்தில் கற்பூர கட்டி அல்லது பொடி ஆகியவற்றை போட்டு தேவையான அச்சுகளில் கற்பூரம் ஆக உருவாக்கி எடுத்து பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்ப வேண்டியதுதான். அனைத்து மளிகை கடைகளிலும் நிச்சயம் விற்பனை செய்யப்படும் கற்பூரம் என்பதால் விற்பனை வாய்ப்புக்கு பஞ்சம் இல்லை.
காதுகளை சுத்தமாக்கும் பட்ஸ் தயாரிப்பு
இந்த தொழில் பிரிவும் எளிமையாக வீடுகளில் செய்யப்படக் கூடிய ஒன்றாக உள்ளது. இதற்கும் சிறிது காலம் பயிற்சிகளை பெற்றுக்கொள்ளலாம். இல்லாவிட்டால் ஆன்லைன் முறையில் அதுபற்றிய வீடியோ காட்சிகளை கவனமாக பார்த்து இந்த தொழிலை மேற்கொள்ளலாம். இதற்கு தேவையான சிறிய இயந்திரங்கள் சந்தையில் இருக்கின்றன. அவற்றை ஆன்லைன் முறையில் வாங்க முடியும். காதுகளை சுத்தம் செய்யும் பட்ஸ் தயாரிப்பில் மூலப்பொருட்கள் என்ற வகையில் தேவையான காட்டன் பஞ்சு, சரியான அளவுகள் கொண்ட பிளாஸ்டிக் குச்சிகள், பேக்கேஜ் செய்வதற்கான பொருட்கள் ஆகியவை இருந்தால் போதுமானது. குறைவான முதலீட்டில், எளிமையாக தயார்செய்து அருகில் உள்ள மளிகை கடைகள் மற்றும் மருந்து கடைகள் ஆகியவற்றுக்கு சப்ளை செய்யலாம். ஆண்டு முழுவதும் இதற்கான தொழில் வாய்ப்பு இருந்து வருகிறது.
தேங்காய் எண்ணெய் தயாரிப்பு
சிறு தொழில் பிரிவான இந்த தொழில் முயற்சி பெரும்பாலும் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்படுகிறது. நகர்புறங்களில் இதுபோன்ற ஆயில் வகைகளை தயார் செய்யும் நிறுவனங்கள் இருப்பதில்லை. காரணம், மூலப் பொருள்கள் அனைத்தும் விவசாய நிலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கிடைப்பதுதான். ஆனால் நகரமாக இருந்தாலும் கூட வீட்டிலேயே ஆர்கானிக் என்ற முறையில் தேங்காய் எண்ணெய் தயாரிப்பு மேற்கொள்ளலாம். தயாரிக்கப்படும் இடத்திலேயே இதுபோன்ற எண்ணெய் வகைகளை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு பெரிதும் விரும்புவார்கள். மேல்நாடுகளில் தேங்காயை உணரவைத்து எடுத்து இதற்காக உள்ள ஒரு இயந்திரத்தை வாங்கி வீடுகளில் அமைத்து உலர்ந்த தேங்காயை அவற்றில் இட்டு எண்ணெயை பிழிந்து எடுக்கலாம். இந்த நடைமுறையில் தேங்காய்எண்ணெய் தனியாகவும் அதன் கழிவுப் பொருளான புண்ணாக்கு என்பது தனியாகவும் கிடைக்கும். இரண்டும் சந்தை மதிப்பு கொண்டவையாகவே இருப்பதால் நிச்சயம் ஆண்டுதோறும் விற்பனை உத்தரவாதம்.
பிரியாணி தயாரிப்பு
உணவு வகை என்றாலே அதற்கான பிரத்தியேகமான சுவை என்பது அவசியம். சுவையாக உணவு தயாரிக்க கூடிய பெண்மணிகள் நிச்சயம் பிரியாணி தயாரிப்பு வாடிக்கையாளர்களுக்கு வர்த்தக அடிப்படையில் விற்பனை செய்தால் அது லாபகரமாக இருக்கும். பிசினஸ் ஐடியாஸ் ஃபார் உமன் வரிசையில் சுலபமாக வீட்டிலிருந்தபடியே அல்லது சிறிய ஒரு கடையை வாடகைக்கு எடுத்தும் கூட ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஈடுபடக்கூடிய வகையில் இந்த தொழில் இருக்கிறது. இதற்கு பெரிய அளவிலான உபகரணங்கள் வேண்டியது இருக்காது. பெரிய அளவிலான அடுப்பு, பிரியாணி தயாரிப்பதற்கான பாத்திரங்கள், கேஸ் சிலிண்டர் மற்றும் பேக்கிங் செய்வதற்கான அலுமினியம் ஃபாயில் கவர் ஆகியவையே பிரதானமான முதலீடுகள் ஆகும். அதன் பின்னர் பிரியாணிக்கான பிரத்தியேக அரிசி மற்றும் இதர மசாலா பொருட்கள் ஆகியவற்றை அவரவர்களின் கை பக்குவத்திற்கு ஏற்ப தயார் செய்து தொழிலை வெற்றிகரமாக செய்ய வேண்டியதுதான்.
உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு
சிற்றுண்டி என்பது பொதுவான இடை உணவுப் பழக்கமாக மக்களிடையே இருப்பதால் சிப்ஸ் வகைகளுக்கு என்றுமே வரவேற்பு இருக்கிறது. சிப்ஸ் விற்பனை என்பது வர்த்தக ரீதியில் நல்ல மதிப்பு கொண்டதாக இருக்கிறது. தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு இந்த பிரிவு நல்ல வாய்ப்பை அளிக்கிறது. அதற்கு ஏற்ப தற்போதைய எந்திரங்களும் அதி நுட்பமான செயல்பாடுகளை கொண்டதாக இருப்பதால், உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிப்பை அனைவரும் விரும்பும் வகையில், சுவையாக தயாரிக்க இயலும். சொந்த இடம் அல்லது வாடகை இடத்தில் உருளைக்கிழங்கு தோல் நீக்கும் இயந்திரம், உலர வைக்கும் இயந்திரம், உப்பு, காரம் சேர்க்கும் எந்திரம், பேக்கேஜிங் எந்திரம் ஆகியவை தொழிலுக்கான அடிப்படை உபகரணங்கள் ஆகும். கொள்முதல் செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளை தக்க முறையில் உலர வைத்து, பொறித்து எடுத்து, சிப்ஸ் எந்திரத்தில் எட்டு மசாலா பொருட்களுடன் பேக்கிங் விற்பனைக்கு அனுப்ப வேண்டியதுதான். இதற்கான வர்த்தக வாய்ப்பு பற்றி அனைவரும் அறிந்தது தான். வருடம் முழுவதும் சப்ளை செய்யும் வகையில் ஆர்டர் நிச்சயம் கிடைக்கும்.
பேப்பர் ஸ்ரெட்டர் பிசினஸ்
இந்தத் தொழில் கிட்டத்தட்ட போட்டிகள் இல்லாத தொழில் என்று குறிப்பிடலாம். பிசினஸ் ஐடியாஸ் ஃபார் உமன் என்ற அளவில் சற்று புதுமையான இந்த தொழில் முயற்சிக்கு பெரிய அளவிலான தொழில்நுட்பமோ, கல்வித் தகுதியோ, பெரிய முதலீடோ வேண்டியது இல்லை. இதற்கான உபகரணம் என்பது பேப்பர் ஸ்ரெட்டர் மிஷின் மட்டுமே. அதன் பின்னர் கொள்முதல் என்ற நிலையில் பழைய பேப்பர்களை வாங்க வேண்டும். அவற்றை அந்த மெஷினில் போட்டு இயக்கினால் துண்டுதுண்டாக நறுக்கப்பட்ட பேப்பர் வெளிப்புறம் வரும். அவற்றை கச்சிதமாக சேகரித்து கவர்களில் அடைத்து தொழிற்சாலைகளுக்கு அனுப்ப வேண்டியதுதான். அந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருட்களை பாதுகாப்பாக, அடிபடாமல் பேக்கிங் செய்வதற்கான பொருளாக இந்த துண்டு பேப்பர் பயன்படுகிறது. அதாவது தெர்மாகோல் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் விலை குறைவான இந்த துண்டு பேப்பர் மூலம் பொருட்களை அடிபடாமல் பேக்கிங் செய்து அனுப்பி வைக்க முடியும். குறிப்பாக ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு பாதுகாப்பாக பேக்கிங் செய்வதற்கு இந்த துண்டு பேப்பர்கள் அவசியமாக இருக்கின்றன. அதனால் நிச்சயமான தொழில் வாய்ப்பு இந்த பிரிவுக்கு உண்டு.
இட்லி மாவு பிசினஸ்
பிசினஸ் ஐடியாஸ் ஃபார் உமன் என்ற வரிசையில் ஆண்டு முழுவதும் வருமானம் தரக்கூடிய தொழில் பிரிவுகளில் இதுவும் ஒன்று. இந்த தொழிலில் முதலீடுகள் என்பது கிரைண்டர்கள் மற்றும் தரமான அரிசி ஆகியவையே. இதற்கான வர்த்தக வாய்ப்பை ஒரு தொழில் முனைவோர் தன்னுடைய வீட்டு வாசலிலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். ஏனென்றால் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லக்கூடிய இன்றைய காலகட்டத்தில், இல்ல தலைவியின் பணிச் சுமையைக் குறைக்கும் விதத்தில் ரெடிமேடாக கிடைக்கக்கூடிய தரமான இட்லி மாவு என்பது நிச்சயம் வர்த்தக மதிப்பை கொண்ட நுகர்பொருள் ஆகவே உள்ளது. தரமான அரிசி மற்றும் உளுந்து ஆகியவற்றின் மூலம் மிகச் சரியான பக்குவத்தில் தயாரித்து,பேக்கிங் செய்து அல்லது வாடிக்கையாளரின் வீட்டு பாத்திரத்தில் ஊற்றப்பட்டு விற்பனை செய்யப்படும் இட்லி மாவு என்பதை உணவகங்கள் கூட வாங்கிச் செல்கிறார்கள் என்பது ஆச்சரியமான செய்தியாகும். ஆர்வம் கொண்ட பெண்மணிகள் வீட்டிலேயே ஒரு பகுதியில் சிறிய அளவில் இந்த தொழிலை ஆரம்பித்து செய்து லாபம் ஈட்ட முடியும்.
சமூக ஊடக நிர்வாகம்
இந்த தொழில் பிரிவு சற்று நவீன அணுகுமுறை கொண்டதாகும். அதாவது, பல தனியார் மற்றும் பொது தொழில் நிறுவனங்கள் அவர்களுக்கான சமூக வலைதள பக்கங்களை சரியான முறையில் கவனித்து, வாடிக்கையாளர் உடைய பதிவுகளுக்கு ஏற்ற பதில் அளிப்பதற்கு தகுந்த நேரம் ஒதுக்க முடியாத நிலையில் இருப்பார்கள். அவர்களுக்கான அல்லது குறிப்பிட்ட நிறுவனங்களுக்கான பெயர்களில் செயல்பட்டு வரக்கூடிய சமூக வலைதளங்களை சோசியல் மீடியா மேனேஜ்மென்ட் என்ற முறையில் நிர்வகித்து வருவது நவீன தொழில் முயற்சியாக உள்ளது. அதற்காக படைப்பாற்றல் உள்ளவர்களின் துணையை சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை தேடுகிறார்கள். இந்த துறையில் பெரிய முதலீடு என்பது எதுவும் இல்லை. குறுகிய கால பயிற்சி பெறுவதன் மூலமாக இந்த தொழில் பிரிவில் தனக்கான ஒரு முத்திரையை கூறு தொழில்முனைவோர் பெற இயலும்.
கால்மிதி தயாரிப்பு
இந்த தொழில் பிரிவும் வாடிக்கையாளர்களை கவரக்கூடிய ஒன்றுதான். பிசினஸ் ஐடியாஸ் ஃபார் உமன் என்ற நிலையில் நகர்ப்புற குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இந்த தொழிலுக்கான வர்த்தக வாய்ப்பை எளிதாக உருவாக்கி கொள்ள முடியும். ரக்ஸ் என்று சொல்லப்படும் கால்மிதிகள் எல்லோருடைய வீட்டு வாசலிலும் போட்டு வைத்திருப்பார்கள். காலிலுள்ள மண்ணை அதில் தட்டிவிட்டு வீட்டுக்குள் செல்வது பொதுவான வழக்கம். அன்றாடம் வீட்டு உபயோகம் என்ற நிலையில் இதற்கான வர்த்தக வாய்ப்பு ஆண்டு முழுவதும் உள்ளது. இந்த தொழிலில் ஈடுபட விரும்புவோருக்கு எம்பிராய்டரிங் செய்யக்கூடிய அடிப்படை திறமை இருந்தால் போதுமானது. தையல் கடைகளில் கிடைக்கக்கூடிய துண்டு துணிகளை சேகரித்து எடுத்து வந்து அவற்றை இணைத்து, ஸ்வெட்டர் பின்ன கூடிய ஊசி மூலம் சதுரம், வட்டம் மற்றும் நீள் வட்டம் ஆகிய வடிவங்களில் பின்னலாக வடிவமைப்பு செய்ய வேண்டும். ஒருவருடைய கற்பனை நிறத்திற்கு ஏற்ப நிறங்களையும், டிசைன் வகைகளையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் ரக்ஸ் என்ற கால்மிதி நிச்சயம் விரைவான சந்தை மதிப்பை பெற்றுத்தரும்.