written by | October 11, 2021

புத்தக கடை வணிகம்

×

Table of Content


புத்தகக் கடைத் தொழிலைத் தொடங்கவும்

வியாபார உலகத்தில் புக் ஷாப் பிசினஸ் என்பதை ஒரு அறிவு ரீதியான தொழில் என்று குறிப்பிடலாம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி  சிறப்பான இடம் பெற்றுள்ள இன்றைய நிலையில் பிரிண்ட் மீடியா என்ற அச்சிடப்பட்ட நூல்கள் மற்றும் பத்திரிகைகள் ஆகியவற்றை படிக்கும் பழக்கம் பொதுமக்களிடையே குறைந்து வருவதாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் என்பது சமூக அளவில் குறிப்பிட்ட சதவிகித மக்களுடைய அன்றாட பழக்கமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. காரணம் வாராந்திர பத்திரிக்கைகள் மற்றும் மாதாந்திர பத்திரிக்கைகள் ஆகியவற்றுடன் புத்தக பதிப்பாளர்கள் வெளியிடக்கூடிய புதிய நூல்களும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிடத்தக்க அளவுக்கு விற்பனை கூடி வருகிறது.

ஸ்மார்ட் போன்  மற்றும்  கம்ப்யூட்டர் ஆகியவற்றின் காரணமாக டிஜிட்டல் முறையிலான வாசிப்பு  அதிகமாகி வருவதால் அச்சிடப்படும் புத்தகங்கள் விற்பனை குறைந்துவிடும் என்பதில் உண்மை இல்லை என்று புத்தக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது அச்சிடப்பட்ட புத்தகங்களை படிப்பதால் ஏற்படக்கூடிய தெளிவும், மனநிறைவும் டிஜிட்டல் வடிவிலான மின் புத்தகங்களில் இல்லை என்பது அவர்கள் கருத்தாகும். மேலும், புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகள் ஆகியவற்றிற்கான வாசகர்கள் எல்லா காலங்களிலும் இருப்பார்கள் என்பதை ஆங்காங்கே நடக்கக்கூடிய புத்தகத் திருவிழா நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பு வயதினரும் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை வாங்கிச் செல்வதை உதாரணமாக காட்டுகிறார்கள். 

வாசகர்கள் உலகம்

மின்  வடிவிலான புத்தகத்தின் விலை  அச்சு வடிவிலான புத்தகத்தின் விலையைவிட குறைவாக இருப்பினும், வேண்டிய இடத்தில்,  வேண்டிய நேரத்தில் கண்களுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் ஒரு புத்தகத்தை வாசிக்க முடியும். அதில் குறிப்புகளை எழுத முடியும். புத்தக ஆசிரியரிடம் கையெழுத்து பெற்று பத்திரமாக பாதுகாக்க முடியும். இந்த விஷயங்கள் டிஜிட்டல் முறையிலான புத்தகங்களுக்கு இல்லை என்பது நிதர்சனம். அதன் காரணமாக புத்தகங்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட உலகமும் அதற்கான வாசகர் வட்டமும் உலகம் முழுவதும் இருக்கவே செய்கிறது.  அச்சிடப்பட்ட ஒரு புத்தகம் தரக்கூடிய ஒரு நெருக்கமான தொடர்பை மின் நூல்கள் அளிக்க முடியாது என்பதையும் பலர் தெரிவித்துள்ளனர். 

இந்த மின்னணு யுகத்தில் கூட புக் ஷாப் பிசினஸ் என்பது தனக்குரிய இடத்தை இழந்து விடவில்லை. எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் புத்தகத்தைக் கையிலெடுத்துப் படிப்பதில் பல வசதிகள் உண்டு. உட்கார்ந்து படிக்கலாம், கொஞ்சம் சாய்ந்தவாறு படிக்கலாம், மேல் மாடியில், படிக்கட்டில், வயல் வரப்பில், பிரயாணத்தில் என்று எங்கும், எப்படியும் படிக்கலாம் என்ற சவுகரியங்கள் உண்டு. 

லாபகரமான புத்தக விற்பனை

சரியான மார்க்கெட்டிங் டெக்னாலஜி மூலம் புத்தக விற்பனையை நிச்சயம் வெற்றிகரமாக செய்ய முடியும் என்பதை பல தொழில் முனைவோர்கள்  மற்றும் புக் பப்ளிஷர்கள் நிரூபித்துள்ளார்கள். முந்தைய காலங்களைவிட தற்போது அச்சடிக்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், சர்வதேச அளவிலான தரத்தையும் புத்தகச் சந்தை எட்டி வருவதாக பல்வேறு பதிப்பாசிரியர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அச்சுப் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது என்பதற்கு புத்தகக் கண்காட்சிகளே அதற்குச் சாட்சி என்றும், தமிழ் புத்தகத் தயாரிப்பு சா்வதேச தரத்தை எட்டியுள்ளது என்பதும் பலருடைய கருத்தாகும். 

புக் ஷாப் பிசினஸ் தொடங்க நினைப்பவர்கள் கீழ்கண்ட அடிப்படையான விஷயங்களை கண்டிப்பாக மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

  • வெற்றிகரமான ஒரு புத்தக விற்பனையாளராக மாறுவதற்கு  சரியான இடத்தை தேர்ந்தெடுத்து பிசினசை ஆரம்பிக்கவேண்டும். வாடிக்கையாளருக்கு அணுகுவதற்கு சிரமமாக உள்ள இடங்கள் போதுமான தொழில் வெற்றியை தர இயலாது.  மேலும், வேறு புத்தக கடைகள் இல்லாத பகுதியில் தொழிலைத் தொடங்கினால் போட்டிகள் இல்லாமல் நல்ல முறையில் தொழில் நடைபெறும்.  சரியான இடத்தில் தொழிலை ஆரம்பித்தாலும் கூட நல்ல விளம்பரமும், அழகிய வெளித்தோற்றமும் தொழிலுக்கு அவசியமானது.
  • சனி, ஞாயிறு உட்பட, விடுமுறை தினங்கள் உட்பட அனைத்து நாள்களிலும் புத்தகக் கடை காலை 9 மணி முதல் இரவு 8.30 வரை திறந்திருக்கும் என்பது வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும் அம்சமாகும். அதற்கேற்ப  பணியாளர்களை அமர்த்திக் கொள்ளலாம்.
  • தொழில் நடக்கும் இடம் சம்பந்தப்பட்ட கார்ப்பரேஷன் அல்லது முனிசிபாலிட்டி  வரம்பிற்கு உட்பட்டதாக இருந்தால் அவர்களிடம் தக்க உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், தனிநபர் உரிமையாளர் அல்லது கூட்டு உரிமையாளர்கள் என்பதற்கேற்ப நிறுவன பதிவும் செய்து கொள்ள வேண்டும்.
  • புக் ஷாப் பிசினஸ் செய்பவர்கள் தங்களுடைய அனுபவத்தின்படி வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எந்த வகையான புத்தகங்களை விற்பனைக்கு வைக்க வேண்டும் என்பதில் சரியான முடிவு எடுக்க வேண்டும். குறிப்பிட்ட துறை சார்ந்த நூல்கள் அடிக்கடி விற்பனையாகும் என்ற நிலையில் அந்த துறை சார்ந்த நூல்கள் எளிதாக கிடைக்கும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.  மேலும்,  ஆன்மீகம், ஜோதிடம், யோகா, பக்தி போன்ற தலைப்புகளில் உள்ள புத்தகங்களை குறிப்பிட்ட ஒரு பகுதியில் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.  இலக்கியம், இலக்கணம், மொழிவளம் ஆகிய தலைப்புகளில் உள்ள புத்தகங்கள் ஒரே பகுதிகளில் இருக்கலாம். அறிவியல் புத்தகங்கள், மாணவர்களுடைய பாடம் சம்பந்தமான புத்தகங்கள் வேறு ஒரு பகுதியில் இருக்கலாம்.
  • புத்தக கடைக்கு எப்பொழுதும் ஒருவித அறிவு சார்ந்த தன்மை அவசியம். அதாவது, வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம், பல்வேறு புத்தக தலைப்புகள் பற்றிய அறிவு, புதிதாக வாடிக்கையாளர்  கேட்கக்கூடிய புத்தக வகைகளை தருவித்துக் கொடுப்பது, அழகிய வரிசைகளில் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பது, புத்தகங்களின் மீது தூசி துரும்புகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருப்பது, புத்தக அலமாரிகள் அதிகபட்சம் 5 அடி உயரத்திற்கு அமைந்திருப்பது ஆகிய விஷயங்களை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
  • புதிய புத்தகக் கடையாக இருந்தாலும் கூட ஒரு குறிப்பிட்ட பகுதியில் பல்வேறு தலைப்புகள் கொண்ட பழைய விற்பனைக்கு வைக்கலாம். காரணம்,  வாடிக்கையாளர்களின் தேவைகள் இதுதான் என்பதை  அவர்களே அறிந்திருக்க மாட்டார்கள். என்றோ ஒரு நாள் வாங்க வேண்டும் என்று நினைத்த புத்தகம் கண்ணில் படும் பொழுது எந்தவித முன் திட்டமும் இல்லாமல் அந்த நூலை வாங்கக்கூடிய சூழல் அமையும். மேலும்,  தற்போது வழக்கத்தில் அதிகமாக இல்லாத லெண்டிங் லைப்ரரி என்ற முறையில் பழைய புத்தகங்களை  வாசிப்பதற்கு என்று குறிப்பிட்ட  நாட்களுக்கு,  குறிப்பிட்ட கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு தரலாம். வாடிக்கையாளர்கள்  தொலைபேசி முறையிலோ அல்லது இணையதள வழியாகவோ புதிய நூல்களை கேட்டாலும் சரி பழைய நூல்களை கேட்டாலும் சரி அவற்றை டோர் டெலிவரி மூலம் அவர்களுக்கு விற்பனை செய்யலாம்.
  • குறிப்பிட்ட ஒரு தலைப்பை தேடி  வரும் அல்லது கேட்கும்  வாடிக்கையாளர்களுக்கு சம்பந்தப்பட்ட தலைப்பில் இருக்கக்கூடிய வெவ்வேறு பப்ளிஷரின்  புத்தகங்கள் பற்றிய தகவல்களை அளித்து அவர்கள் வாங்குவதற்கு ஏற்ற ஆலோசனைகளையும் அளிக்கலாம். மேலும், எந்த ஒரு புத்தகத்தையும் இல்லை என்று சொல்லக்கூடாது. குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சிக்காக மொத்தமாக புத்தகங்கள் வாடிக்கையாளர் வாங்கும்பொழுது அவர்களுக்கு கேட்கும் எண்ணிக்கையிலான புத்தகங்களை அப்போதே தர முடியாவிட்டாலும் கூட மீதமுள்ள புத்தகங்களை வீட்டிற்கே சென்று இலவச டெலிவரி அளிப்பது நல்லது. வாடிக்கையாளர் கேட்கிற புத்தகங்கள் இல்லை என்றாலும் ‘தேவைப்பட்டியலில்’ குறித்து வைத்துக் கொண்டு உடனடியாக அந்த புத்தகங்களை வாங்கி கொடுக்கலாம். அல்லது, மற்ற கடைகளில் வாங்கிக் கொடுப்பதன் மூலம் வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்துவது மட்டுமல்லாமல், விற்பனைக்கான கமிஷன் 20% பெறலாம்.
  • குறிப்பாக, மிக அரிதான, பதிப்பு நின்று போன, பல வருடங்களுக்கு முந்தைய புத்தகங்களை அதிக விலை கொடுத்தும் வாங்குவதற்கு புத்தக ஆர்வலர்கள் தயாராக இருப்பார்கள். அப்படிப்பட்ட புத்தகங்களைத் தேடிக்கொண்டு வந்து கொடுத்து, நம் தேடலுக்கு சர்வீஸ் சார்ஜ் தொகையைப் பெறமுடியும்.
  • புக் ஷாப் பிசினஸ் பற்றி லோக்கல் பத்திரிக்கைகளில் வாராவாரம் கண்டிப்பாக சிறிய அளவிலாவது விளம்பரம் தரவேண்டும். சம்பந்தப்பட்ட ஏரியாவில் நடக்கக்கூடிய கோவில் பண்டிகைகளில் புக் ஷாப் விளம்பரங்கள் அடங்கிய நோட்டீஸ் பிரிண்ட் செய்து கொடுக்கலாம். புக் ஷாப் பற்றி சமூக  வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் அடிக்கடி பதிவுகள் இட்டு வர வேண்டும். மிக முக்கியமாக கூகுள் மேப் மூலம் ஷாப்  அமைந்துள்ள பகுதியை குறிப்பிட்டு காட்ட வேண்டும்.  கடையின் பெயரில் இணையதளத்தை செயல்படுத்தி வரும் மிகவும் முக்கியம்.  
  • இந்த தொழிலில் அனுபவரீதியாக சில முடிவுகளை மேற்கொள்வது வெற்றிக்கு வழிகாட்டும். அதனால் ஒவ்வொரு நாளும் எந்த வகையான நூல்கள் அதிகமாக விற்பனையாகிறது என்பதை கவனித்து வர வேண்டும்.  புத்தகத்தை தேர்ந்தெடுத்த வாடிக்கையாளர்கள் அதற்கான விலையை செலுத்துவதற்கு அதிகப்படியான நேரம் ஆவதை விரும்ப மாட்டார்கள். அதனால், விற்பனைக்கு என்று கம்ப்யூட்டர் சாப்ட்வேர் அமைத்து அதன்மூலம் எளிதாக பில் போட்டு அளிக்க வேண்டும். இந்த தொழில்நுட்பம் மூலமாக எளிதாக விற்பனை பற்றிய மாதாந்திர வருடாந்திர விற்பனை அறிக்கைகளை எளிதாக பெற முடியும்.
  • புக் ஷாப் வெளிப்புறமாக ஒரு போர்டு வைக்கப்பட்டு அதில் பிரபலமான நூலாசிரியர்களின் புத்தகங்கள்  பற்றியும், அந்த நூல்களுக்கு அளிக்கப்படும் தள்ளுபடி  பற்றியும் தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்களின் கவனத்தை கவரும் வகையில் ஏதாவது ஒரு பொன்மொழி கூட எழுதி வைக்கலாம். 

யூஸ்டு புக் ஷாப் பிசினஸ்

நகரப்பகுதிகளில் புதிய புத்தகங்களுடன் சற்று பழைய புத்தகங்களையும் அதாவது கல்வி சம்பந்தமான புத்தகங்களை விற்பனைக்கு வைக்கலாம். போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள், கல்லூரி தேர்வுகளுக்கான நூல்கள் உள்ளிட்ட பாடத்திட்டங்கள் சம்பந்தமான புத்தகங்களை வைத்திருந்தால் மாணவர்கள் நிச்சயமாக அவற்றை வாங்கிச் செல்வார்கள். மேலும், கல்லூரிகள் சுற்றிலும் அமைந்துள்ள  சிறிய நகரங்களில் இந்த வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். அது போன்ற நகரங்களில் நமது வசதிக்கேற்ப தரைத்தள இடமாக ஒரு நல்ல கட்டிடத்தை தேர்வுசெய்து தொழிலை தொடங்கலாம். ஆரம்பத்தில், குறைந்தபட்சமாக ரூ.50 ஆயிரம் முதலீடு கூட போதுமானதாக இருக்கும். தேவைக்கேற்ப படிப்படியாக அந்த முதலீட்டை அதிகப்படுத்திக் கொள்ளுவது அவசியம்.

மாணவ வாடிக்கையாளர்கள்

பிரதான வாடிக்கையாளர்களாக இருக்கப்போவது கல்லூரி மாணவ, மாணவியர்கள் என்பதால் சம்பந்தப்பட்ட நகரத்தில்  அமைந்துள்ள கல்லூரிகளில் நடத்தப்படும் பாடத்திட்டங்களை அறிந்துகொண்டு,  அவை சம்பந்தமான  அனைத்து வகையான புத்தகங்களையும் கொள்முதல் செய்து விற்பனைக்கு வைக்கலாம். இன்ஜினீயரிங், எம்.பி.பி.எஸ் போன்ற டெக்னிகல் படிப்பு தொடர்பான புத்தகங்கள் தவிர, இலக்கியம், வரலாறு போன்ற அனைத்துத் துறை புத்தகங்கள் பற்றியும் ஓரளவு அறிந்து வைத்திருப்பதோடு புத்தக ஆசிரியர்கள் பற்றியும் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். பெரும்பாலும், பழைய புத்தகங்களை பெரிய நகரங்களில் மொத்தமாக சேகரிக்க முடியும். அதுபோன்ற சேகரித்து வைக்கப்பட்ட புத்தக கிடங்குகள் பெருநகரங்களில் ஆங்காங்கே இருப்பதை காணமுடியும். அந்த இடங்களுக்கு சென்று  மொத்த கொள்முதல் ஆக புத்தகங்களை வாங்கி  வந்து விற்பனை செய்யும் பொழுது  நிச்சயம் அது லாபகரமாக இருக்கும்.  நாளடைவில் புக் ஷாப் பிசினஸ் விரிவடையும் பொழுது வாடிக்கையாளர்களே தங்களிடமுள்ள பழைய புத்தகங்களை கொண்டு வந்து தருவார்கள். அவற்றையும் கொள்முதல் செய்து விற்க முடியும்.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.