பிறந்தநாள் நிகழ்ச்சி தொழிலை தொடங்குவது எப்படி!
பெரும்பாலானோர் தங்களது வாழ்க்கையில் மிக முக்கியமான நாளாக கொண்டாடப்படுவதில் ஒன்று அவர்களின் பிறந்தநாள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் தங்களது பிறந்தநாளை பிரம்மாண்டமான முறையில் அவர்களது வசதிக்கு ஏற்றார் போல் கொண்டாடுவதை இப்போதுள்ள சூழ்நிலையில் பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு பிறந்தநாள் கொண்டாடப்படும் ஒவ்வொரு நபருக்கும் இடம், பொருள், ஆகக்கூடிய செலவு மட்டுமே மாறுமே தவிர அந்த நாளை மிகவும் சீரும் சிறப்புமாக கொண்டாட வேண்டும் என்பதில் அனைவரும் மிக கவனமாக இருப்பார்கள்.
இவ்வாறு தங்களது வாழ்க்கையில் மிக முக்கியமான நாளாக கொண்டாடப்படும் பிறந்தநாளில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்புமிக்கதாக மாற்ற வழிவகை செய்யும் வகையில் அந்த நாளை கொண்டாடுபவர்கள் அந்தப் பகுதியில் உள்ள மிகச்சிறப்பான பிறந்த நாள் விருந்து நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி கொடுக்கும் நிறுவனத்தை அணுகி தங்களது தேவைக்கு ஏற்றார்போல் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு ஆண்டுக்கு ஒருமுறை பிறந்த நாள் கொண்டாடுவது வாடிக்கையாக மட்டுமல்லாமல் கட்டாயமாக்கப்பட்ட ஒன்றாக இருந்து வரும் நிலையில் பிறந்த நாள் விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொடுக்கும் தொழிலானது இப்போதைய சூழ்நிலையில் மிக வேகமாக முன்னேறி வருவதோடு அதிக அளவு வருமானத்தையும் ஈட்ட வழிவகை செய்கிறது.
தனித்துவமான சிந்தனை, கடின உழைப்பு, குறிப்பிட்ட அளவு முதலீடு இவை மட்டும் இருந்தால் போதும் அற்புதமாக இந்த பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சி தொழிலை சிறப்பாக தொடங்கி வெற்றி கொடியை நாட்டலாம். மேலும் இதற்காக முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ கூட பணியாற்ற முடியும். ஒரு சிலர் நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டே பகுதிநேர வேலையாக இதுபோன்ற பிறந்த நாள் விருந்து நிகழ்ச்சி தொழிலை செய்து சாதித்து காட்டி இப்பொழுது பலருக்கும் முன்னோடியாக விளங்கி வருகின்றனர்.
இப்போதெல்லாம் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை தங்களது வீட்டில் நடக்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி போல அனைவரும் கொண்டாடி வரும் வேலையில் இதுபோன்ற பிறந்தநாள் நிகழ்ச்சி தொழிலை தங்களது ஆஸ்தான தொழிலாக எடுத்து நடத்தி குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் சில தொழில்களில் இந்த பிறந்தநாள் நிகழ்ச்சி தொழிலும் ஒன்றாக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சி தொழிலை வெற்றிகரமாக தொடங்க அடிப்படையான சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
பிறந்தநாள் நிகழ்ச்சி தொழிலைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுதல்!
பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்து தரும் தொழிலை தொடங்குவது கிட்டத்தட்ட ஒரு நிறுவனத்தை தொடங்குவது போலவே, இதில் நீங்கள் எந்த மாதிரியான சேவைகளை அளிக்க உள்ளீர்கள் என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதாவது முழு நிகழ்ச்சியையும் எடுத்து நடத்துவதா இல்லை அலங்காரங்கள், உணவு ஒப்பந்தம் உள்ளிட்ட தனித்தனி சேவைகளை வழங்க உள்ளீர்களா என்பதைப் பற்றி தெளிவாக முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு சேவைகளை தேர்ந்தெடுத்துக்கொண்டும் வெற்றிகரமாக இந்தத் தொழிலை நடத்தலாம்.
பிறந்தநாள் நிகழ்ச்சி தொழிலில் பல்வேறு வகையான சேவைகள் உள்ளன குறிப்பாக, நிகழ்ச்சி அலங்காரங்கள், வரவேற்பு அறை, உணவு ஒப்பந்தம், பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகள்,ஒலி அமைப்பு, புகைப்படம் மற்றும் வீடியோக்கள் என பல வகையான சேவைகள் பிறந்தநாள் நிகழ்ச்சி தொழிலில் உள்ளடங்கியுள்ளன. பிறந்தநாள் கொண்டாடுபவர்கள் பல்வேறு வயதினராக இருக்கும்போது ஒவ்வொரு வயதினருக்கும் அவர்களுக்கு தகுந்தார்போல் இந்த நிகழ்ச்சியை செய்து கொடுக்க வேண்டும். பெரும்பாலும் பிறந்த நிகழ்ச்சி என்பது பிறந்து ஒரு வருடம் ஆன குழந்தைகளுக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடுவது என்பது அனைத்துப் பெற்றோர்களிடமும் ஆர்வம் அதிகரித்து பெரும்பாலான இடங்களில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் முதல் பிறந்தநாளை வெகு விமர்சையாக மிகப்பெரிய பொருட் செலவிலும் அனைத்து உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து கொண்டாடுவதை இப்போதுள்ள தலைமுறைப் பெற்றோர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். குழந்தைகளின் முதல் பிறந்தநாளை தவிர பெரியவர்கள், இளைஞர்கள் என பலரும் 25வது பிறந்தநாள், 50வது பிறந்த நாள், 100வது பிறந்தநாள் இவ்வாறு வாழ்க்கையில் பல்வேறு வயதில் தங்களது பிறந்தநாளை மிக பிரம்மாண்டமாக பலரும் கொண்டாடி வருகின்றனர்.
இதில் குறிப்பாக முதல் பிறந்தநாள், ஐம்பதாவது பிறந்தநாள் மற்றும் நூறாவது பிறந்தநாள் இவைகள் மிக பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. நீங்கள் பிறந்தநாள் நிகழ்ச்சி தொழிலை தொடங்கும்முன் இதில் எந்த மாதிரி பிறந்தநாள் நிகழ்ச்சிகளை எடுத்து நடத்த உள்ளீர்கள் எதில் கை தேர்ந்தவர்கள் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்.
பிறந்தநாள் நிகழ்ச்சித் தொழிலில் உள்ள போட்டியை பற்றி நன்கு ஆராய்ந்து கொள்ளுதல்!
உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்றான பிறந்தநாள் நிகழ்ச்சி தொழில் என்பது இப்பொழுது பலராலும் தொடங்கப்பட்டு பரவலாக பல நிறுவனங்கள், பல இடங்களில் உருவாகியுள்ள நிலையில் நீங்கள் தொடங்கும் இடத்திற்கு அருகில் எத்தனை நிறுவனங்கள் இது போல பிறந்தநாள் நிகழ்ச்சி தொழிலை செய்துகொண்டுள்ளனர் எவ்வாறான முறையில் இதை கையாளுகின்றன என்பதைப்பற்றி மிக ஆழமாக ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ஆராய ஒரு வகையில் இணையதள வசதி பெரும் உதவியாக இருக்கிறது.
அந்த ஆய்வின் முடிவில் கிடைக்கும் தொழில் போட்டியாளர்கள் எவ்வாறு தங்களது தொழிலை வெற்றியுடன் நடத்திக்கொண்டிருக்கிறார்கள், அவை எந்த அளவிற்கு பெரிய நிறுவனம், யாரெல்லாம் அவர்களுக்கு வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் எதன் அடிப்படையில் எந்த அளவிற்கு கட்டணம் வசூலிக்கின்றன என்பதை பற்றி தரவாக ஆராய்ந்து கொண்டு பின் அதிலிருந்து தனித்துவமாக யோசித்து வாடிக்கையாளர்களை எப்படி கவர்வது, எப்படி ஆர்டர்களை எடுத்து வெற்றிகரமாக செய்து முடிப்பது என்பது பற்றி சக தொழில் போட்டியாளர்கள் இடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.
சமூக வலைதளங்களின் மூலம் சந்தைப் படுத்துதல்!
வாடிக்கையாளர்கள் தங்களது பிறந்தநாள் நிகழ்ச்சி தொழிலை சந்தைப்படுத்த வேண்டும் என முடிவு எடுக்கும் பொழுது உடனடியாக அவர்கள் தேர்ந்தெடுக்கும் மிக முக்கிய வழி சமூக வலைதளங்கள் அல்லது இணையதளத்தின் வழியாக அவர்களது பகுதிக்குள் எந்த நிறுவனம் தரமாக அனைத்து வேலைகளையும் செய்துதரும் நிறுவனம் என்பதை என்பதை பற்றி ஆராய்வார்கள். எனவே வாடிக்கையாளர்களின் நாடித்துடிப்பை கனகச்சிதமாக அறிந்துக்கொண்டு இப்போது பரவலாகும் அனைவராலும் பயன்படுத்தப்படும் பிரபலமான சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், லின்க்டுஇன், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் உங்களது பிறந்தநாள் நிகழ்ச்சி நிறுவனத்தின் பக்கங்களை உருவாக்கி உங்கள் நிறுவனம் வெற்றிகரமாக செய்து முடித்திருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தையும் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்க வேண்டும்.
இவ்வாறு நிறுவனத்தின் சுய பக்கங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரப்படுத்துவது மட்டுமல்லாது முகப்புத்தகம் உள்ளிட்ட பல சமூக வலைதளங்களில் பிறந்தநாள் நிகழ்ச்சி தொழிலுக்காகவே பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டு அதில் பிறந்தநாள் நிகழ்ச்சி தொழில் செய்யும் நபர்கள் உறுப்பினர்களாக இணைந்திருக்க அதுபோன்ற குழுக்களைத் தேர்ந்தெடுத்து இணைந்து கொண்டு அதிலும் உங்களது நிறுவனத்தை பற்றிய பதிவுகளை அடிக்கடி பதிவிடுவதன் மூலம் அவை மிக எளிதாக பலரையும் சென்றடைவதோடு நிறுவனத்தின் பெயரும் மிக எளிதில் பிரபலமாகி விடுகிறது.
பிறந்தநாள் நிகழ்ச்சி தொழில் நிறுவனத்தின் பெயரைத் தேர்வு செய்தல்!
முழுக்க முழுக்க கேளிக்கை மிகுந்த இந்தத் தொழிலில் வாடிக்கையாளர் தங்களின் பிறந்தநாளை நடத்திக் கொடுக்கும் நிறுவனத்தின் பெயரை வைத்தே பெரும்பாலான நேரங்களில் தேர்ந்தெடுக்கின்றனர். இந்நிலையில் உங்கள் நிறுவனத்தின் பெயரானது மிகவும் வித்தியாசமாக அதேபோல தொழிலுக்கு உகந்ததாகவும் பார்த்தவுடனேயே பிடிக்கும் வகையிலும் இருக்குமாயின் அவை அந்த தொழிலின் வளர்ச்சிக்கு மறைமுகமாக மிகப்பெரிய பங்காற்றுகின்றது.
அதே சமயம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறுவனத்தின் பெயரானது செய்யும் தொழிலை பிரதிபலிக்கின்ற வகையில் உருவாக்கப்பட்டிருக்குமாயின் அவை மிக எளிதாக பலரிடமும் சென்றடைவதோடு, நிறுவனத்தின் பெயரை பார்த்த உடனேயே இந்த நிறுவனம் பிறந்தநாள் தொழிலை தான் செய்கின்றது என வாடிக்கையாளர்கள் மிக எளிதாக புரிந்து கொள்வார்கள்.
பிறந்தநாள் நிகழ்ச்சி தொழிலில் வளர்ச்சி அடைய திட்டம் தீட்டுதல் !
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி என்பது அது சரியான வகையில் திட்டமிட்டபடி நகர்த்தும்போது எதிர்பார்த்த நிலையை மிக விரைவிலேயே அடைந்துவிடலாம். தொழில் போட்டியாளர்களிடமிருந்து வேறுபட்டு வித்தியாசமாக அதேசமயம் தனித்துவமாக நிறுவனத்தை நடத்துவது எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு வகையான சேவைகளையும் குறிப்பிட்ட சில சலுகைகளையும் அவ்வப்போது அளிப்பதன் மூலம் அவை தொழிலின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகின்றது.
குறிப்பாக பிறந்த நாள் நிகழ்ச்சியில் மொத்தமாக அனைத்து சேவைகளையும் ஒரு வாடிக்கையாளர் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கும் பொழுது அதில் முடிந்த அளவிற்கு கட்டண சலுகை அளிப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைவதுடன் அடுத்த முறையும் தேடி வருவார்கள்.
பிறந்தநாள் நிகழ்ச்சி தொழில் செய்ய உபகரணங்கள் வழங்குபவர்களின் முக்கியமான தொடர்புகளை பெறுதல்!
பிறந்தநாள் நிகழ்ச்சியை நடத்துவதற்கு தேவையான அனைத்து பொருட்களும் நாம் வெளியிலிருந்தே பெரும் நிலையில், அதற்குத் தேவையான உபகரணங்களை செய்யும் நபர்களிடம் இணக்கமான நட்பை ஏற்படுத்திக்கொண்டு தொடர்புகளை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு பலப்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் தேவையான நேரத்தில் தேவையான உபகரணங்கள் எந்த தாமதமும் இன்றி தரமானதாகவும் விலை மலிவாகவும் பெற இதுபோன்ற தொழில் சார்ந்த நபர்களின் தொடர்புகள் மிக அவசியமாகும்.
பிறந்தநாள் நிகழ்ச்சி தொழிலில் முறையான வழிமுறைகளை பின்பற்றுதல்!
பிறந்தநாள் நிகழ்ச்சி தொழில் தொடங்க ஒரு சில முறையான வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இதில் முதன்மையானவை நிறுவனத்தின் பெயரை பதிவு செய்தல், இப்போது அரசு கொண்டுவரப்பட்டுள்ள வரி சீர்திருத்தத்தின் படி ஜிஎஸ்டி வரி வசூலிக்க படுவதால் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் பெறும்போது கட்டாயம் ஜிஎஸ்டி வரியை இணைத்து பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கடுத்து நிறுவனத்திற்கு என தனி வங்கி கணக்கை ஆரம்பித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து வகையான தொழில் சார்ந்த பணப்பரிமாற்றங்களும் இந்த வங்கிக் கணக்கின் மூலமே செய்யப்பட வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் தேவையில்லாத குழப்பங்களையும் பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும். அதேசமயம் வாடிக்கையாளரிடம் இருந்து முன் பணத்தை கட்டாயம் பெற்றுக்கொண்டு பின் பிறந்தநாள் நிகழ்ச்சி வேலைகளை ஆரம்பிப்பது பாதுகாப்பான முறையாகும்.
பிறந்தநாள் நிகழ்ச்சி தொழிலைத் தொடங்க இதற்கான தனி படிப்பு என்பதெல்லாம் தேவையில்லை நல்ல படைப்பாற்றல், தொடர்பு திறன் மற்றும் தொழிலை பற்றிய அடிப்படையான புரிதல், மூல தந்திரம் இவை மட்டும் இருந்தால் போதும் பிறந்தநாள் தொழிலை மிகப் பிரமாதமாகவும் வெற்றிகரமாகவும் குறைந்த முதலீட்டிலும் அதிக லாபத்துடன் நடத்தலாம்.